Saturday, May 15, 2021

HEALTH நலம் எனப்படுவது - பகுதி 4

 

நலம் எனப்படுவது - பகுதி 4

www.swasthammadurai.com


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நிமிடத்திலும் கூட நான் நலமாக வேண்டும்; நான் உன்னதமாக இருக்க வேண்டும்; நான் பரவசமாக வாழவேண்டும் என்கிற உந்துதல் அவரை இயக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த இயக்கத்தின் வழியாக அவர் ஏதாவது ஒரு சார்புநிலை நிகழ்வை தேர்வு செய்கிறார். தன்னைச் சுற்றி நிகழ்கிற ஏதாவது ஒரு நிகழ்வில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அந்த இணைப்பின் வழியாக தான் நலமாக பரவசமாக இருக்க முடிகிறது என்று நம்புகிறார். மீண்டும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நிகழ்வு நிறைவுக்கு வருகிறது. அந்த நிகழ்வின் நிறைவில் மீண்டும் அவருக்கு நலம் குறித்தான பற்றாக்குறை ஏற்படுகிறது. மீண்டும் அந்த நிகழ்வைத் தொடர்ந்து வேறொரு அனுபவத்தை அவர் சார்ந்திருக்கிறார். இவ்வாறு சார்பு நிறைந்த ஒரு வாழ்க்கையை அவர் உருவாக்கிக்கொள்வது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

ALSO READ:HEALTH PART 2

ஆனால் நலம் அப்படி சார்பு நிகழ்பு வழியாக வருவது இல்லை. நலம் இன்னும் ஆழமானது. சார்புகள் வழியாக நலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று நான் திடமாக பார்க்கிறேன். சார்பு நிகழ்வுகள் வழியாக நலம் உருவாக்க முடியும் என்றால் ஏற்கனவே நீங்கள் ஈடுபடுத்திக் கொண்ட ஒவ்வொரு நிகழ்வும் உங்களுக்கு நலத்தை பலப்படுத்தி இருக்க முடியும். உங்களுக்குள் இருக்கிற பலம் குறைந்த பகுதிகளை அவை நிறைவு செய்திருக்க முடியும். இது எதுவும் நிகழாத போது அனுபவமாக பார்க்கிற ஒன்று சார்பு நிகழ்வுகள் வழியாக நலம் சாத்தியமில்லை. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து சார்பு நிகழ்வுகளை தேர்வு செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்றால் எது உங்களை சார்பு நிகழ்வுகள் நோக்கி நகர்த்துகின்றது? என்று பார்க்கவேண்டிய ஒரு நேர்மையான உரையாடல், விசாரணை அவசியப்படுகிறது.

ALSO READ:HEALTH PART 3

நீங்கள் உங்களுக்குள் பயந்து தவிக்கிற தவிப்பை தவிர்த்துக்கொண்டு உங்களை கொண்டாட்டமாக மாற்றுகிற ஒரு சார்பு நிகழ்வை தேர்வு செய்கிறீர்கள். நீங்கள் அமைதியாக ஒரு இடத்தில் இருக்கிறபோது இந்த பரிசோதனை செய்து பார்க்க முடியுமா என்று உங்களுக்கு ஒரு பரிசோதனை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் இந்தப் பரிசோதனையை செய்து பார்க்க முடியும் என்றால் நீங்கள் செய்து பார்க்கலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிற போது அமைதியாக நீங்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிற போது உங்களிடம் இருக்கிற எல்லா தொலைத்தொடர்பு சாதனங்களையும் ஒரு 20, 25 நிமிடங்கள் அணைத்துவிட்டு மௌனமாக கண்களைமூடி அமர்ந்திருக்க முடியும் என்றால் நீங்கள் நலத்திற்கு மிக பக்கத்திலிருக்கிற ஒரு நபராக எடுத்துக்கொள்ள முடியும்.

ALSO READ:சொர்க்கம்

அந்த நேரத்தில் நீங்கள் வேறு ஒன்றை சிந்திக்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் பழைய நினைவுகளை அசைபோட்டு பார்க்கலாம். அந்த இருபது நிமிட நேரத்தில் உங்களுக்கு தூக்கம் வரலாம். ஆனாலும் ஒரு இருபது நிமிடம் எந்தத் தொலைத் தொடர்பும் இல்லாமல், எந்த இரைச்சலும் இல்லாமல் ஒரு மௌனமான காலமாக நீங்கள் கடக்க முடியும் என்றால் அதில் ஏற்படுகிற அசௌகரியங்களை உங்களால் காண முடியும் என்றால் நீங்கள் நலத்தை மிக விரைவில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளவர்களாக புரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் ஒரு இருபது நிமிட மௌனத்திற்குள் உங்களை குறித்து உங்களுக்கு இருக்கிற அழுத்தமான பகுதிகளை நீங்கள் காண்பீர்கள். தவிப்பான பகுதிகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை அச்சமூட்டுகிற, உங்களைக் கேள்வி கேட்கிற பகுதிகளை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்குள் இருக்கிற இந்த முரண் நீங்கள் பார்ப்பதற்குத் தயங்குகிற இந்த முரண் நீங்கள் சந்திப்பதற்கு மயங்குகின்ற இந்த முரண் உங்களை நலத்தை நோக்கி நகர்த்துவதற்கு உதவி செய்யும். நீங்கள் வெறுமனே அமைதியாக இருக்கிற இந்த இருபது நிமிடத்தில் உங்கள் முன் எழுப்பப்படுகிற உங்கள் கேள்வி உங்களை அச்சமூட்டுவதாக இருக்கும் என்றால் அந்த அச்சத்தில் இருந்து உங்களை விலக்கிக் கொள்வதற்காக உங்களை தப்பித்துக்கொள்ளும் முயற்சியாக நீங்கள் வேறு ஒரு திரைப்படத்தையோ ஒரு கேளிக்கையையோ நாடுகிற நிகழ்வை நீங்கள் பார்க்க முடியும்.

ALSO READ:HEALTH PART -1 நலம் எனப்படுவது...

இந்த இருபது நிமிட மௌனம் உங்களுக்குள் ஏற்படுகிற ஒவ்வொரு மாற்றமும் உங்களை நல்ல திசையில் நகர்த்துவதற்காக ஏற்படுவது. இதுவரை நீங்கள் வாழ்ந்து வந்த ஒரு வழக்கத்திற்கு எதிராக அவை இருக்கக் கூடும். இந்த சமூகம் உங்களுக்கு கற்பித்துக் கொடுக்கிற கற்பனைகளுக்கு மாற்றாகவும். கூட இருக்கக்கூடும், இவற்றை உடைத்துக் கொள்கிற, குறைந்த பட்சம் இவற்றை நேர் கொண்டு பார்க்கிற ஒரு தைரியமும் ஒரு துணிச்சலும் உங்களை நலத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும். இந்த துணிச்சல் பிற்பகுதியில் நலமாக மாற்றமடையும். இந்த மௌனத்தை உருவாக்குங்கள் அதைப் பயிற்சியாக மேற்கொள்ளுங்கள். பயிற்சி உங்களுக்கு துணிச்சலை கொடுக்கும்போது அதற்கு வரவேற்பு செய்யுங்கள். நலம் உங்கள் பக்கத்திலேயே இருப்பதை நலத்திற்குள் நீங்கள் இருப்பதை நலமாகவே இருப்பதை வெகு விரைவில் கண்டு கொள்ள முடியும்.

                                                                                                தொடரும்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...