குளியல் நலம்
உரையாடல் ஒன்று
குளியல் நலம் என்கிற பொருள் குறித்து இன்றைய வகுப்பு நடைபெற இருக்கிறது.
மிக முக்கியமான உடல்நலம் குறித்த செயல்பாடுகளில் குளியல் என்பது உரையாடப்படுவதற்கு, பேசிப் பார்ப்பதற்கு அவசியம் இல்லாத நிலையில் இருக்கிற ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றாலும்கூட உடல் நலம் என்பது குளியல் நலத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையது என்று மருத்துவ பார்வையில் நாம் இந்த வகுப்பை செய்கிறோம்.
ஒவ்வொரு மனிதனும் அவனுக்குரிய உடல் நலத்தை எவ்வாறு பேணிக் கொள்வது என்பதற்கான விரிந்துபட்ட செயல்களும் செயல்பாடு குறித்தான விவரங்களும் செயல்பட்ட அனுபவங்களும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
அந்தவகையில் ஒரு தனி மனிதனின் நலம் குறித்த பார்வையில் குளியல் என்பது என்ன? குளியலுக்கு பின்னால் இருக்கிற வெவ்வேறு பார்வைகள் என்ன? நாம் என்று புரிந்து கொள்வதற்கு பேசிப் பார்ப்பதற்கு இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாக இந்திய சமூகத்தில், இந்திய சமூகம் வைத்திருக்கிற செயல்பாடுகளில் குளியல் குறித்தான விவரங்கள் மருத்துவம் சார்ந்து இருக்கின்றன. மரபார்ந்த மருத்துவங்களில் ஒரு மனிதன் ஆணாக இருந்தால் எவ்வாறு குளிக்க வேண்டும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குளிக்க வேண்டும்? நோய் வாய்ப்பட்ட காலங்களில் அவரது குளியல் முறை எப்படி இருக்க வேண்டும்? ஆரோக்கியமான நாட்களில் அவரது குளியல் முறை எவ்வாறு இருக்க வேண்டும்? இவை பெண்களுக்கும் பொருந்தும் படியான குளியல் முறையாக, செயல்பாட்டு முறையாக உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளும் முறையாக இருக்கிறது என்கிற செய்திகளும் தகவல்களும் நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு இருக்கிறோம். பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இந்த செயல்பாடுகளில் நமக்கு இருக்கிற செய்திகளை பொருத்த அளவில் இந்த செயல்பாடுகளும் அது குறித்து
இருக்கிற விவரங்களும் இந்த சமூகத்தில் பயன்பாட்டில் இருக்கிற பயன்பாட்டு வடிவங்களும் கூட எந்த அளவில் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமோ அதன் அளவில் தொடர்ந்து நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
சான்றாக மரபு மருத்துவத்தின் படி ஒரு ஆண்மகன் தன் ஆரோக்கியத்தை மேன்மையாக வைத்துக்கொள்வதற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஒரு பரிந்துரை இருக்கிறது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட நாளின் போது எழுந்து உடல் முழுவதும் மருத்துவம் பரிந்துரைக்கிற நல்லெண்ணையை தேய்த்துக் கொண்டு குளித்தால் அவரது உடல் உஷ்ணம், உடல் சூடு தணிந்து இயல்பான சூடோடு அவர் ஆரோக்கியமாக இருக்க முடியும். நலமாக இருக்க முடியும் என்று மருத்துவ பரிந்துரை சொல்கிறது.
இப்படியான உதாரணம் பெண் குழந்தைகளுக்கும் தரப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளும் எவ்வாறு இருக்க வேண்டும்? எந்த தினங்களில் அவர்கள் குளிக்கலாம்? அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான குளியல் முறைகள் என்ன என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இது மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் ஒரு மாத்திரை உண்பது போல, ஒரு சூரணம் எடுத்துக் கொள்வது போல உள் மருந்தாக ஒரு நலம் குறித்து முயற்சி செய்வதுபோல புற மருந்தாக இவற்றை பார்க்கிற பார்வை இன்று நம்மிடம் இருக்கிறது.
மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் நீங்கள் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் இந்த நோய் சரியாகும் என்று பரிந்துரைப்பார் என்றால் அதை மருத்துவ பரிந்துரையாக ஏற்றுக்கொண்டு எத்தனை நாளைக்கு அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்கிற மனோபாவம் நாம் பார்க்கிறோம். இந்த மனோபாவம் ஒரு மனிதனுக்கு அடர்த்தி ஆகிக்கொண்டே இருக்கிறது என்பதையும் பார்க்கிறோம்.
மெய்யாகவே மருத்துவ பரிந்துரையாக தான் மனித வாழ்க்கை முறை உருவாகிவிட்டது என்கிற அளவிற்கு மிக இறுக்கமான வாழ்வியலையும் மருத்துவத்தையும் வாழ்வதற்கே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு மனித சமூகம் தன் சிந்தனையை சுருக்கிக் கொண்டே வருகிறது.
மருத்துவம் என்பது வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாது, பிரிக்க முடியாதது என்கிற உரையாடல் இன்னொருபுறம் நடந்து கொண்டே இருக்கிறது. என் பார்வையில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது செம்மையான வாழ்வியலுக்குள் மருத்துவம் ஒளிந்திருக்கிறது. நீங்கள் மருத்துவத்தை வாழ்வியலாக பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. நீங்கள் மருத்துவத்தை வாழ்வியலாக பார்க்கத் துவங்கினீர்கள் என்றால் நீங்கள் கையில் வைத்திருக்கிற உங்களுக்கு தெரிந்திருக்க மருத்துவத்தை விடவும் வேறு ஒரு மருத்துவம் உங்களுக்கு கிடைக்கிற போது வேறொரு புரிதல் உங்களுக்கு வருகிறபோது அல்லது உங்கள் கையில் இருக்கிற மருத்துவம் உங்களுக்கு வேலை செய்யவில்லை என்று உணர்வு வருகிறபோதெல்லாம் உங்கள் மருத்துவத்தின் மீதான மரியாதையை நீங்கள் குறைத்துக் கொள்வீர்கள்.
எனவே மருத்துவத்தை நீங்கள் வாழ்வியலாக புரிந்து கொள்ளக்கூடாது. மருத்துவம் வாழ்வியலானது அல்ல. ஆனால் செம்மையான வாழ்வியல் மருத்துவத்தை உள்ளடக்கியது என்கிற உண்மையிலிருந்து இந்த கருத்தை நீங்கள் பார்க்கவேண்டும். இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு செம்மையான வாழ்வியலில் இருந்து உங்கள் மருத்துவத்தை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்றால் செம்மையான வாழ்வியலில் இருந்து உங்கள் மருத்துவத்தை நீங்கள் போற்றுவீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்வியல் கொடுக்கிற ஆரோக்கியம் மருத்துவத்தின் வழியாக வெளிப்படும். அவருக்கு மருத்துவம் என்றும் நீங்கள் பெயர் வைத்துக் கொள்ளலாம். வேறு பெயரும் உங்களுக்கு மகிழ்வை தரக்கூடிய வேறு பெயரும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவம் வாழ்வியல் சார்ந்தது அல்ல. வாழ்வியலுக்கு உரியது அல்ல என்கிற நிதானத்தை, நடுநிலையை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
...தொடர்ந்து பேசுவோம்...
ALSO READ : VARMA / வர்ம மருத்துவம் - பகுதி - 3
ALSO READ : VARMA / வர்ம மருத்துவம் - பகுதி -2
No comments:
Post a Comment