ஆசு+இரியர்=ஆசிரியர்(அழுக்குகளை களைபவர்)
இந்த சமூகத்தில் காண்கிற ஒவ்வொருவரும் சிறந்த மனிதாபிமானமிக்க, கருணைமிக்க, அன்பு பொழிகிற ஒருவரை, மனித குண்த்தில் சிறந்த ஒருவரை தன்னை பாதித்த ஆசிரியராக கூறிக்கொள்கிறார்கள். நானும் கூட அவ்வாறு தான் கூறிக் கொள்ள முடிந்தது. கல்வியில் என்னை அறிவு சார்ந்து இயங்க வேண்டும் என்று தூண்டியதில் இவையெல்லாமும் ஒரு தனி மனிதனுடைய ஒரு மனிதாபிமான குணங்கள் மட்டுமே மையப்பட்ட இயக்கமாக இருக்கிறது. அந்த வலியுறுத்தலில், அந்த அக்கறையில் ஒரு மனிதனின் செம்மையான பகுதி வெளிப்படுகிறது. ஆனால் கல்வியை இன்னொரு மனிதனுக்குக் கடத்துகிற ஒரு பணி ஆசிரியர் பணி. அத்தகைய ஆசிரியர் பணிக்குள் மனிதாபிமானம் ஒட்டி இருக்கிற ஒரு மனிதன் வேலை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ALSO READ:MEDICATION - HOME REMEDIES - வீட்டு வைத்தியம்
ஆனால் இந்த மனிதாபிமானம் ஒட்டி இருக்கிற மனிதனுக்குள்
கல்வியை கடத்துகிற வேறு ஒரு சிறப்புக் கூறு இருந்தாக வேண்டுமென்று நான் விரும்புகிறேன்,
நம்புகிறேன். அப்படியான கூறு என்ன? அந்தக் கூறு பெற்ற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள்
ஆசிரியர்களாக இருக்கிறார்களா? என்றெல்லாம் நாம் பார்க்கவேண்டி இருக்கிறது. ஒருவேளை
அப்படியான ஆசிரியர்களை நாம் சந்திக்க முடியவில்லை என்றால் சிறந்த மனிதர்கள் இப்போது
இருக்கிற வாய்ப்பில் ஆசிரியராக இயங்க சாத்தியம் இருக்கிறது. அவர்கள் ஆசிரியருக்கு,
ஆசிரியர் பணிக்கு போதுமானவர்களாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகக்கூடும். ஏனென்றால்
மனிதர்கள் எல்லோரும் சமூகம் உயர்வாக மதித்து வைத்திருக்கிற மனிதர்கள் எல்லோரும் ஒருவருக்கு
உதவி செய்ய முடியும். அவர்கள் எல்லோரும் ஆசிரியராக முடியுமா என்றால் கல்வி அதை அனுமதிக்கிறது
என்றால் நாம் அதில் காரசாரமாக உரையாட வேண்டி இருக்கிறது. அல்லது கல்வியால் இத்தகைய
மனிதாபிமானம் பெற்ற மக்களை உருவாக்க முடியும் என்றால் கல்வி கற்ற எல்லா ஆசிரியர்களும்
உங்களை பாதிக்க வில்லை.
உங்கள்
பள்ளிக்கூடத்தில், நீங்கள் படித்த காலத்தில், உங்கள் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில்,
நீங்கள் படித்த காலத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை கடந்து வந்திருப்பீர்கள். எல்லா
ஆசிரியர்களும் உங்களை பாதிக்கவில்லை. எல்லா ஆசிரியர்களுக்கும் கல்வி இருந்தது.
எல்லா ஆசிரியர்களுக்கும் கல்வி பற்றிய முனைவர் பட்டம் கூட அவர்கள் பெற்றிருக்கக்கூடும்.
ஆசிரியருக்கான உரிய சிறப்பு பயிற்சிகளையும் தேர்ச்சிகளையும் அவர்கள் அடைந்திருப்பார்கள்.
ஆனாலும்கூட சிறப்பு பயிற்சிகளையும் முனைவர் பட்டங்களையும் விடவும் மனிதாபிமானமிக்க
ஏதோ ஒன்று உங்களை அசைக்கிறது. கல்விக்கும் மனிதாபிமானத்திற்கும் சற்று தூரம் இருக்கிறது.
இந்த தூரங்களை பற்றி பேசுவதன் வழியாக மட்டும்தான் சிறந்த கல்வியை ஒரு மாணவனுக்கு கடத்துகிற
ஒரு நபரை நாம் கண்டுபிடிக்க முடியும். சிறந்த கல்வியை ஒரு மாணவனுக்குள் விதைக்கிற ஒரு
நபரை நாம் கண்டுபிடிக்க முடியும். தமிழில் ஆசிரியர் என்று ஒரு சொல் இருக்கிறது. தமிழில்
ஆசிரியர் என்கிற ஒரு சொல்லும் மாணாக்கர் என்கிற ஒரு சொல்லும் உங்களுக்கு அறிமுகப்படுத்த
வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று ஆசிரியர்களை ஆசிரியர்கள் என்று நாம் சொல்வதில்
பெரிய சிக்கல் பார்க்க முடிகிறது.
ALSO READ: காந்திய சிகிச்சை முறை
ஒவ்வொரு
ஆசிரியரும் மாணவர்களை அணுகுகிற விதத்தில் விதவிதமான தமது பார்வையை செலுத்துகிறவர்களாக
இருக்கிறார்கள். ஒரு சாமானிய எளிய ஒரு மாணவன் அரிய
பாடங்களை கற்றுக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படுகிற போது அந்தத் தடுமாற்றத்தை களைவதில்
ஆசிரியரின் பங்கு முதன்மையானது. அவர்களின் பட்டமும் அவர்கள் வாங்கி வைத்திருக்கிற சேர்த்து
வைத்திருக்கிற எல்லா அறிவும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற ஒரு ஆழமான அக்கறையும்
நேசிப்பும் ஆசிரியர்களுக்குள் இருக்க வேண்டும். ஆசு இரியர் என்கிற இரண்டு சொற்களின்
சேர்மானம் ஆசிரியர் என்கிற சொல் உருவாகிறது. தேவை இல்லாததை, அழுக்குகளை ஆசு என்றால்
தேவையில்லாத அழுக்குகள் இரியர் என்றால் களைபவர் என்று தமிழ் பொருள் கூறுகிறது. தேவையில்லாதவற்றை,
அழுக்கானவற்றை ஒருவரிடமிருந்து நீக்குகிற ஒருவர் ஆசிரியர் என்று ஆசிரியரைப் பற்றியான
விளக்கம் தமிழில் பொருள் சொல்லப்படுகிறது. அப்பொழுது தேவையில்லாததை களைகிற ஆற்றல்மிக்க
நபராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் என்ற சொல் வலியுறுத்துகிறது. மாணாக்கர்
என்கிற ஒரு சொல் இருக்கிறது எனது தந்தை ஆசிரியர். எனது தந்தையோடு பேசுகிறபோது மாணாக்கர்
என்கிற சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தி விளக்கம் சொல்லியது என் தந்தைதான். மாணாக்கர்
என்றால் மாண்பான, மேன்மையான, மாண்பு - என்கிற
வேர்ச்சொல்லிலிருந்து மாணாக்கர் என்கிற சொல் உருவானதாக என் தந்தை எனக்கு விளக்கம் அளித்தார்.
மாண்பு பெற்றுக்கொள்வதற்குத் தகுதியானவர் மாணாக்கர் என்று அவர் அந்தப் பொருளை விளக்கி
சொன்னார்கள்.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
ஒரு ஆசிரியரைத்
தேடி பள்ளிக்கூடத்திற்குள் வருகிற ஒரு மாணவர் மாண்பை பெற்றுக்கொள்கிறவராக வருகிறார்.
என்ன செய்தேனும் அவருக்கு மாண்பை தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்பும் அக்கறையும் அந்த
ஆசிரியருக்கு இருக்க வேண்டும் என்கிற சாராம்சத்தில் அந்தச் சொல் உருவாக்கப்பட்டுள்ளது
என்று எனது தந்தையார் எனக்கு விளக்கம் அளித்தார். மாணாக்கர் என்கிற சொல்லுக்குள் இருக்கிற
செம்மையான செரிவான பொருள் இது. மாண்பைப் பெற்றுக் கொள்பவர், மாண்புக்குத் தகுதியாக
தன்னை உருவாக்கிக் கொள்பவர் என்று மாணாக்கர் என்ற சொல்லுக்கு அர்த்தம், பொருள். இன்று
தமிழ் பள்ளிக்கூடங்களில் கூட மாணாக்கர் என்ற சொல் நீக்கப்பட்டு, வழக்கொழிந்து மாணவர்
என்ற சொல் வழக்கத்திற்கு வந்திருக்கிறது. மாண்பு, அவர் என்றும் கூட அந்த சொல்லை பொருள்
கொள்ள முடியும் என்றும் எனது தந்தையார் எனக்கு நாங்கள் உரையாடியபோது என்னோடு பேசிக்
கொண்டிருந்த கதை இது. மாண்பைப் பெற்றுக் கொள்கிற ஒரு குழந்தையை மாண்புக்குத் தயாராக
இருக்கிற ஒரு குழந்தையை என்ன செய்தேனும் அந்த குழந்தைக்குள் மாண்பை தந்துவிட வேண்டும்
என்கிற அக்கறை ஒரு ஆசிரியருக்கு இருக்கும் என்றால் அந்த ஆசிரியர் வன்முறையிலோ, வன்மமான
இயக்கத்தையோ பெற்றவராக இயங்க முடியாது. அது ஆசிரியரினுடைய அடிப்படைக் குணத்தை மாற்றி
அமைத்து விடும் இந்தப் புரிதல்.
ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)
ஒரு மாண்பை
பெற்றுக்கொள்வதற்காக உங்களை சந்திக்க ஒருவர் வருகிறார் என்றால் அவருக்கு எப்போதும்
மாண்பு பெற்றுக் கொள்வதற்கு சாத்தியம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் என்றால்
நீங்கள் அசைகிற ஒவ்வொரு அசைவும் அவருக்கு மாண்பாக விளையும் என்று உங்களால் உறுதி சொல்ல
முடியும் என்றால் ஒரு ஆசிரியராக நீங்கள் இருக்கிற போது அந்தக் குழந்தைக்கு மாண்பைப்
பெற்றுக்கொள்வதற்கு எல்லா தகுதியும் இருக்கிற அந்த குழந்தைக்கு நீங்கள் நடத்துகிற,
நீங்கள் அசைகிற, நீங்கள் பேசுகிற எந்த ஒரு குறிப்பும் மாண்புக்குரியதாக மாற்றப்படும்.
மாண்புக்குரியதாக விளையும். இத்தகைய அக்கறையும் பொறுப்பும் இந்தப் புரிதலில் இருந்து
கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு நுட்பமான இரண்டு வார்த்தைகளும் கல்வி குறித்து
மிக நெருக்கமாக வழக்கத்தில் இருக்கிற வார்த்தைகள். ஒன்று ஆசிரியர், இன்னொன்று மாணாக்கர்.
இந்த இரண்டு வார்த்தைக்கும் இடையே இருக்கிற பிணைப்பு போதனா முறைகளில் மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்தது. ஏனென்றால் கல்வி என்பது அரசுக்கும் கொள்கைக்கும் இருக்கிற சிக்கலாக பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிற சிக்கலாக பார்க்கப்படுகிறது. அரசுக்கும்
மாணவர்களுக்கும் இருக்கிற சிக்கலாக பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் பொருளாதார
வளர்ச்சிக்குமாக இருக்கிற சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் பேசவேண்டிய
பகுதியாக இருந்தாலும் கூட கல்வியில் போதனா முறையின் கூர்மை மிகுந்த முக்கியமானது.
எந்த வகையான
பாடத்திட்டத்தையும் கூட ஒரு ஆசிரியர், புரிதல் உள்ள ஆசிரியர் செம்மையான மாணவருக்கு
கடத்தி விட முடியும் என்கிற சாத்தியம் அந்த இரண்டு உறவுக்குள் இருக்கிறது. ஆசிரியர்
மற்றும் மாணாக்கர். மாணாக்கர் மற்றும் ஆசிரியர். இந்த இரண்டும் பிணைந்த ஒரு உறவானது
கல்வி போதிக்கிற போதனா முறைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. போதனா முறை எவ்வாறு
இருக்கிறது என்பதிலிருந்தே கல்வியின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் பார்க்க
முடியும். இன்றும் மரியம் மாண்டிசோரி என்கிற ஒரு அம்மையார் போதனா முறையின் வழியாகவே
அவர் மரியாதைக்குரியவராக பார்க்கப்படுகிறார். அவர் முன்வைக்கிற எல்லாவிதமான கல்வியும்
எல்லாவிதமான பாடத்திட்டமும் உடன்பட்டவர்களும் இருப்பார்கள்; முரண்பட்டவர்களும் இருப்பார்கள்.
ஒரு கல்வி முறையை ஏற்றுக் கொள்பவர்களும் இருப்பார்கள். மறுப்பவர்களும் இருப்பார்கள்.
அதன் மீது கருத்து சொல்பவர்களும் விமர்சனம் சொல்பவர்களும் கூட இருப்பார்கள். ஆனால்
மாண்டிசோரி முன்வைக்கிற போதனா முறை அனேகமாக உலகம் முழுவதும் நற்பெயர் பெற்றது.
உலகம் முழுவதும் கல்வி கற்க வேண்டும். கல்வி கற்றுக்
கொடுக்க வேண்டும் என்று விரும்புகிற, தேடுகிற அனைவருக்கும் மாண்டிசோரி பற்றி செய்தி
தெரியும்போது அவர் மதிக்கப்படுபவராகவும் மாண்டிசோரி மரியாதைக்குரியவராகவும் மாறிப்
போகிறார். காரணம் அவர் முன்வைத்த போதனா முறை. மரியம் மாண்டிசோரியினுடைய போதனா முறை,
அவர் முன்வைக்கிற கல்வித் திட்டத்தினுடைய மொத்த சாராம்சத்தையும் அழகானதாக இலக்கியம்
போல் மாற்றிவிடுகிற தன்மை இருக்கிறது. இந்தப் போதனா முறை கல்வியில் முக்கியமானது. இந்த
போதனா முறைக்குப் பின்னால் ஆசிரியரும் மாணாக்கரும் என்கிற இரண்டு வார்த்தைக்கு இடையே
இருக்கிற உறவு முக்கியமானது. இத்தகைய தன்மையிலிருந்து கல்வி அணுகப்பட வேண்டும். கல்வியினுடைய
போதனா முறை எவ்வாறு செம்மையாக கட்டமைக்கப்படுகிறதோ உருவாக்கப்படுகிறதோ அதிலிருந்துதான்
ஒரு கல்வியினுடைய தரமான விளைச்சல் வெளிப்படும் என்பது ஸ்வஸ்தத்தின் நாட்டம். நம்பிக்கை.
No comments:
Post a Comment