Tuesday, March 16, 2021

EDUCATION PART - 6 A TEACHER WHO INFLUENCED US

 

                        நம்மை பாதித்த ஒரு ஆசிரியர்

www.swasthammadurai.com


நாங்கள் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிற போது ஒரு விவாதம் வந்தது. நீங்கள் மதிக்கத்தக்க ஒரு ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? என்று அந்த விவாதம் துவங்கியது. ஒவ்வொருவரும் ஆசிரியரினுடைய பெயரை, நமக்கு நினைவில் இருக்கிற பெயரை சொன்னோம். பகிர்ந்து கொண்டோம். அப்போது எனக்கு ‘என் முதல் ஆசிரியர்’ என்று நான் படித்த புத்தகம் ஒன்று நினைவுக்கு வந்தது. தமிழகத்தில் இருக்கக்கூடிய இலக்கியவாதிகளும் அரசியல் பிரமுகர்களும் கூட தன் வாழ்வில் தன்னை மாற்றிய ஆசிரியரினுடைய பங்கு குறித்து பதிவு செய்த நினைவுகள் எல்லாவற்றையும் நான் அந்த உரையாடலில் பகிர்ந்து கொண்டேன். அந்த உரையாடலினுடைய மையப்பொருள் ஆசிரியர்.

ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)


நம்மை மாற்றிய, நம்மை பாதித்த ஒரு ஆசிரியர் எல்லோருக்கும் இருக்கக்கூடும். அந்த ஆசிரியர் எவ்வாறானவராக இருந்தார்? என்பதை ஒரு முறை சொல்லுங்கள் என்று அந்த விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தன்னை பாதித்த ஆசிரியரைப் பகிர்ந்து கொண்டோம். என் ஆசிரியர் எனக்கு உணவு இல்லாத காலங்களில் உணவளித்தவராக இருந்தார் என்று ஒரு நண்பர் கூறினார். ஒருவர், எனது ஆசிரியர் எனக்கு இரவு நேரங்களில் தனது அறையில் என்னை உடன் படுக்க வைத்து எனக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். நான் பள்ளியில் கட்டணம் செலுத்தாத போது அவரது சொந்த பணத்தில் இருந்து கட்டணம் செலுத்தி எனது படிப்பை தொடர்வதற்கு உதவி செய்தார் என்று விதவிதமான காரணங்கள் அங்கு உரையாடப்பட்டது. இந்தக் காரணங்கள் எல்லாமும் ஒரு ஆசிரியரினுடைய தன்மையிலிருந்து நாம் ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் இது எல்லாமும் அதிகமான மனிதாபிமானம் சார்ந்த காரணங்கள்.

ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)

ஒரு நல்ல மனிதனுக்கு இந்த சமூகம் என்னென்ன வரையறை வைத்திருக்கிறதோ அந்த வரையறைக்கு பொருந்துகிற மனிதர்களாக அந்த உரையாடலுக்குள் வந்த ஆசிரியர்களை காண முடிந்தது. அன்பாக இருக்கவேண்டும் என்று சமூகம் சொல்கிறது. அன்பாக இருக்கிற ஒரு மனிதர், தன் அன்பை வெளிப்படுத்துகிற போது பள்ளிக்கூடத்தில் வெளிப்படுத்திய நினைவை தன் ஆசிரியர் மீது ஏற்றி ஒரு நண்பர் சொன்னதை பார்க்க முடிந்தது. கருணையோடு இருக்கிற ஒரு நபர், செழுமையாக இருக்கிற ஒரு நபர், மிகுந்த நம்பிக்கை அளிக்கிற ஒரு நபர் இப்படியான நம்பிக்கையும் கருணையும் செழுமையும் உயிர்ப்பும் தெளிவும் நிறைந்த ஆசிரியர்களை நாங்கள் சந்தித்ததாக ஒவ்வொருவரும் எங்கள் அனுபவத்தில் பகிர்ந்து கொண்டோம்.

ALSO READ:குழந்தை(CHILD)

இது ஆசிரியரினுடைய பிரத்தியேக குணமா? அல்லது சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற ஒரு மனிதனின் ஆக்கபூர்வமான குணமா? என்று நாம் பார்க்கிற போது இது மனிதனுக்கு இருக்கிற ஒரு அடிப்படையான குணம். இந்த குணத்தில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு நல்ல மனிதர் ஆசிரியராக இருக்க முடியும். அல்லது ஆசிரியராக இருப்பவர்கள் நல்ல மனிதராக இருக்க வேண்டும். எல்லாராலும் ஆசிரியராக ஆக முடியாது என்ற ஒரு அனுபவத்தை உங்களை பாதித்த ஆசிரியர்கள் கொடுத்திருப்பார்கள். உங்கள் ஆசிரியர், உங்களை பாதித்த ஒரு ஆசிரியர் மிகுந்த மரியாதையோடு  நீங்கள் அணுகுகிற ஒரு ஆசிரியர், எப்போதும் நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் நினைவுபடுத்திக் கொண்டும் இருக்கிற உங்களது ஆசிரியர் இந்த சமூகம் வைத்திருக்கிற மிக உயர்ந்த மரியாதைக்குரிய  குணங்களில் ஏதாவது ஒன்றை அல்லது மொத்தமாக எல்லாவற்றையும் கூட பெற்றவராக இருப்பார். இந்த சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற, மேன்மை என்று கருதுகிற, உயர்வு என்று கருதுகிற, ஒரு குணத்தையோ மொத்தமாக எல்லா குணங்களையும் கூட  உங்கள் ஆசிரியர் உங்களை பாதித்த ஆசிரியர் உள்ளே வைத்திருப்பவராக இருப்பார். இந்தச் சமூகம் ஒரு மனிதனுக்கு அந்த வரையறையை வைத்திருக்கிறது. அந்த உயர்வான, மேன்மையான குணங்களை ஒரு மனிதனின் இலக்கு குணங்களாக, ஒரு மனிதன் வந்து சேரவேண்டிய, ஒரு மனிதனுக்கு பெரும் பேறு கிடைக்க வேண்டுமென்றால் எதெல்லாம்  பெற வேண்டும் என்று இலக்காக வைத்திருக்கிற குணங்களில் எல்லாவற்றையும் வகைப்படுத்தி பார்த்து வைத்திருக்கிறது. அப்படி வகைப்படுத்தி வைத்திருக்கிற குணங்களில் ஏதாவது ஒன்றை உங்களைப் பாதித்த ஆசிரியர் வைத்திருப்பார். இது மனிதனுக்கான குணம். இதில் ஆசிரியர்களுடைய பங்கு, ஒரு ஆசிரியர் ஏற்படுத்துகிற பாதிப்பு என்பது மனிதாபிமான குணத்திலிருந்து வெளிப்படுகிறதே தவிர போதனை முறையில் அது என்ன வேலை செய்கிறது? என்று நம்மால் தெளிவாக பார்க்க முடியவில்லை.

ALSO READ:குழந்தையின் மொழி

எந்த மனிதனும், நீங்கள் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தாகத்தோடு இருக்கிற போது உங்களுக்கு தண்ணீர் கொண்டு தருகிற ஒரு மனிதனுக்கும் உங்கள் வகுப்பறையில்  நீங்கள் தண்ணீருக்காக காத்திருந்தபோது உங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்த ஒரு ஆசிரியரினுடைய குணத்திற்கும் கருணை அடிப்படையில் எந்த பேதமும் பார்க்க முடியாது. எந்த வேறுபாடும் கிடையாது. அது மனிதனுக்கு இருக்கக்கூடிய கருணை. இதை கடந்து உங்களது ஆசிரியர் போதனை முறையில் என்ன செய்தார்? அல்லது போதனை முறைகளில் உங்களுக்குள் இருக்கிற ஏதோ ஒரு மையப்புள்ளியில் அதிர்வுகளையும் மாற்றத்தையும் உண்டாக்கி உங்களை கலைத்துப்போட்ட ஒரு நிகழ்வு, கலைத்துப்போட்ட பேராளுமை என்று யாராவது இருந்தால் அவர்கள் சிறந்த ஆசிரியர்களாக நாம் கொண்டாட முடியும். அப்படியான ஆசிரியர்கள் நான் உரையாடிப் பார்த்ததிலிருந்து பார்க்க முடியவில்லை.

                                                                        தொடரும்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...