பள்ளிக்கூடங்களுக்குள்
கல்விக்குள் ஆசிரியரினுடைய பங்கு என்ன?
கற்பிப்போர், கல்வியை போதிக்கவரின் மனநிலை பற்றி யாரும் பேசுவத் போல் தெரியவில்லை. ஏனென்றால் கல்வியை போதிப்பவர்கள், போதனையாளர்கள், ஆசிரியர்கள், கல்விச் சாலையில் பணிபுரிகிற பணியாளர்கள், கல்வியைத் தொழில் போல் பார்க்கிற சமூக நடைமுறையைப் பார்க்க முடிகிறது. அவர்கள் சங்கம் எல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். சங்கம் வைப்பது தொழிற்சாலைக்குப் பொருத்தமானது. ஆசிரியர்களுக்கு அது எவ்வளவு உதவி செய்யும் என்பது ஆசிரியர் என்கிற கருத்தாக்கத்தில் இருந்து விவாதிக்கப்பட வேண்டியதாக நான் நினைக்கிறேன். சங்கங்கள் அமைத்து ஒரு தொழிற்சாலை போல பள்ளிக்கூடங்களில் இயங்கிக் கொண்டு, ஒரு இயந்திரத்தை உற்பத்தி செய்வது போல குழந்தைகளை இயக்குகிற மனோபாவத்தின் குறியீடாக ஆசியர்களினுடைய வெளிப்பாடு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
ALSO READ:EDUCATION PART - 4 l கல்வி பகுதி - 4
இன்று
நாம் பேசப் போகிற பகுதி பள்ளிக்கூடங்களுக்குள் கல்விக்குள் ஆசிரியரினுடைய பங்கு என்ன?
என்பது தான் இன்றைய உரையாடலினுடைய மையப்பொருள். ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும்?
என்பது கல்வியில் மிகுந்த முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் திருப்திகரமான,
உயர்வான, பெருமதிப்பைப் பெற்ற ஆசிரியர்கள் வாழ்ந்த காலம் என்று ஒன்று இருந்ததாக இன்று
பார்க்கிறோம். இன்றைய ஆசிரியர்கள் மீது பொதுவாக சமூக மனநிலை ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது.
அது ஆசிரியர்களை பெருமதிப்பு கொண்டவர்களாக பார்ப்பதில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.
இதற்கு காரணம் ஆசிரியர்களினுடைய சிக்கலான பகுதிகளா? அல்லது சமூகம் ஒன்றை இவ்வாறு தவறாக
பார்க்கிறதா? என்பதல்ல இன்றைய விவாதம்.
ALSO READ:EDUCATION - PART - 3 கல்வி - பகுதி - 3
ஆசிரியர்களினுடைய
பணி கல்வியை போதிப்பதில் என்ன? அப்படி போதிக்கிற பணியில் இன்று ஆசிரியர்களினுடைய பங்களிப்பு
என்ன? என்பது தான் நாம் இன்று பேச வேண்டும் என்று நான் பார்க்கிறேன்.ஏனென்றால் ஆசியர்கள்
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதுவதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து
இருப்பதில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை. ஒரு “சங்கம்” என்கிற வார்த்தை “இணைந்திருப்பது” என்கிற பொருளில் வழங்கப்படுகிறது.
“சத்சங்கம்” என்கிற சொல் சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிற ஒரு சொல். “சத்சங்கம்” என்பது
“நல்ல சந்திப்பு” “நல்லோர்களினுடைய சேர்க்கை” என்று நாம் அதைப் பார்க்க முடியும். அப்படித்தான்
அந்த சமஸ்கிருத வழக்கு விளக்கம் கொடுக்கிறது.
அது சொல் வழக்கு. அந்த சொல் வழக்கிலிருந்து பார்க்கிறபோது சங்கம் என்பது இணைந்திருப்பதாக
ஒரு பொருளில் வழங்கப்படுகிறது.
ALSO READ:EDUCATION PART - 2 l கல்வி பகுதி - 2
அந்த
வகையில் அனைவரும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நேரடியாக
ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்ட வடிவத்தை தொழிற்சாலைகளினுடைய
தொழிலாளர்களின் நலனை மீட்டெடுக்கும் ஒரு போராட்ட வடிவத்தை மேற்கத்திய தொழிற்புரட்சி
பிதாமகர்கள் கார்ல் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் மாதிரியான அறிவுஜீவிகள் அறிவித்துக் கொடுக்கிற
வகையில் ஒரு தொழிற்சாலைக்குள் சங்கம் கட்டுவதுபோல் ஆசிரியர்கள் சங்கம் கட்டுகிறார்கள்
என்பதையும் பார்க்க முடிகிறது. அது பள்ளிக்கூடங்களை தொழிற்சாலைகளாக பார்த்தால் மாணவர்களை
என்னவாக பார்க்கிறார்கள்? என்கிற கேள்வியை எழுப்புகிறது. இது ஒருபுறம். அந்த வகையில்
கல்வி போதனை, போதிக்கின்ற ஒரு மனிதனுடைய இயல்பு. இதன் மையப்பட்ட கருத்தாக்கத்தில் நாம்
பேசிக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் மிகுந்த உணர்ச்சிவசப்படக் கூடிய கருத்தாக இந்த
தொழிற்சாலை, சங்கங்கள், தனி மனித உரிமை மீறல் என்கிற வார்த்தைகள் சமூகத்தில் சிக்கியிருக்கிறது.
ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களை தொழிற்சாலைகள் போல் பார்க்கிறார்கள் என்றால் அவர்கள் சங்கம்
அமைத்துக் கொள்ள முடியும். தங்களை தொழிலாளர்கள் போலவும் பள்ளிக்கூடங்களை தொழிற்சாலைகள்
போலவும் பார்க்கிற ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை என்னவாக பார்க்கிறார்? என்று ஒரு கேள்வி
இருக்கிறது. இந்த வகையில், ஒரு போதனையாளரின் போதிக்கின்ற முதன்மை பொறுப்பு என்ன? போதனை
செய்வதில் அவர் பெற்றிருக்கிற, அவர் ஏற்றுக் கொள்கிற, முதன்மையான பொறுப்பு என்ன? என்பதுதான்
கல்வி என்கிற தலைப்பில் நாம் பேச வேண்டியிருக்கிறது.
தொடரும்...
No comments:
Post a Comment