Thursday, February 25, 2021

EDUCATION PART - 4 l கல்வி பகுதி - 4

                                                     கல்வி 

www.swasthammadurai.com


கல்வி என்பது எத்தகைய தன்மையோடு இருக்க வேண்டும்? என்று ஒருபுறம் பேச வேண்டியிருக்கிறது. பேசிக் கொண்டு இருக்கிறோம். அது முழுவதும் பாடத்திட்டங்களும் போதனா முறைகளும் பற்றிய உரையாடல் வடிவம். ஆனால் கல்வி என்பது பாடத்திட்டங்களும் போதனா முறைகளும் ஒருபுறம் இருக்க, கல்வியை சமூகத்தில், பள்ளிக்கூடங்களில்,  கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிற, வடிவமைத்து கொடுக்கிற ஒரு செயல் - நாம் பேச வேண்டியிருக்கிறது. கல்வி பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் போதிக்கப்படுகிற ஒரு போதனா முறையைக் கொண்டிருப்பதாக இன்று நாம் பார்க்க முடிகிறது. இதில் ஒரு முரண்பாடு என்னவென்றால் குழந்தைகள் எப்படி வேண்டுமென்றாலும் கற்பார்கள்; அவர்கள் அறிவு விசாலமானது என்று சொன்னாலும்கூட, எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடங்களுக்குள் அடைபட்டு விடவேண்டும் என்று நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு முயற்சி செய்யப்படுகிறது.

ALSO READ:EDUCATION - PART - 3 கல்வி - பகுதி - 3

ஒரு குழந்தைக்கு அறிவு இருக்கிறது. அந்தக் குழந்தை எப்படி வேண்டுமென்றாலும் தனது அறிவை விரிவு செய்து கொள்ளும். அந்தக் குழந்தைக்கு தேவையானவற்றை அது தானாக தேடிக்கொள்ளும் என்று நாம் சிலாகித்துக் கொண்டாலும் கூட அந்தக் குழந்தையை பள்ளிக்கூட சுவர்களுக்குள் அடைத்து விட வேண்டும் என்கிற பெரும் முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது என்பது ஒருபுறம் உரையாடவேண்டியது. ஆக, பள்ளிக்கூடங்கள் தவிர்த்து கற்றுக் கொள்வதற்கு அனுமதி கிடையாது. சொல்லப்படுகிறது, பள்ளிக்கூடம் இல்லாமல் கற்றுக் கொள்ளலாம். வீடுகளில் கற்றுக்கொள்ளலாம். விளையாட்டு மைதானங்களில் கற்றுக்கொள்ளலாம். விளம்பரங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்,  எப்படி வேண்டுமென்றாலும் கற்றுக் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு குழந்தைக்கு சொல்லப்பட்டாலும் கூட அது ஒரு சமாளிப்பு சாதுரியமாகவே இருக்கிறது.

ALSO READ:EDUCATION PART - 2 l கல்வி பகுதி - 2

ஏனென்றால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடங்களுக்குள் இருந்துதான் கற்க வேண்டும் என்பதை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளை பள்ளிக்கூட சுவர்களுக்குள் அடைத்து வைத்து கற்கவேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்று எப்போதெல்லாம் நான் பேசுகிறபோது நான் எதிர்கொள்கிற எதிர்வினை "அப்டியே அப்ப விட்ரலாமா?" என்பதாகத்தான் இருக்கிறது. "குழந்தைகளை அப்டியே விட்டுடலாம்னு சொல்றீங்களா?" "அப்டியே விட்டுடலாம்னு சொல்றீங்களா?" என்பது ஒரு பொறுப்பற்ற தன்மைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் கருதுவதுபோலவும் அந்த பொறுப்பற்ற தன்மைக்கு நான் உதவி செய்வது போலவும் அவர்கள் எனை நோக்கி இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை எதிர் கொள்கிறபோது நான் மனதிற்குள் நினைத்துக் கொள்வது உண்டு. முன்னாள் இந்தச் செய்திகளை பேசுகிறபோது முன்னாள் பதில் சொல்லிய காலம் உண்டு. இப்போது மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு. நீங்கள் பள்ளிக்கூடத்தில் தேடித் தேடி சேர்த்த குழந்தைகள் எல்லாம் என்ன படித்து விட்டார்கள் என்று? அப்படி யோசித்தாலும் கூட தேடித்தேடி படித்த குழந்தைகள், தேடித்தேடி பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகள் படித்த படிப்பிற்கும் நான் சொல்வது போல் படிக்கிற குழந்தைகளின் படித்த படிப்பிற்கும், வேறுபாடு என்பது வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.

ALSO READ:EDUCATION - PART 1 l கல்வி - பகுதி 1

பள்ளிக்கூடங்கள் அப்படி தீர்மானிப்பதில்லை. இது கற்கும் போதனா முறைகளில் உள்ள உரையாடல் களம். அதைத் தனியாகப் பேசவேண்டும். என்ன போதிக்க வேண்டும்? எவ்வாறு போதிக்க வேண்டும்? எப்படி இந்த சிந்தனையை பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டும்? என்பதற்கு ஒரு பாடத்திட்டம் தயார் செய்யப்படுகிறது. அந்த பாடத்திட்டங்களில் என்ன இருக்கிறது? அந்த பாடத்திட்டங்கள் எதை நோக்கியதாக இருக்கிறது? என்பது கல்வியில் பேசப்பட வேண்டிய ஒரு சிக்கல். இன்று கல்வி குறித்து பேசுகிற ஒவ்வொருவரும் ஒன்று பாடத்திட்டம் பற்றி பேசுகிறார்கள், அல்லது பாடத்திட்டங்கள் உருவாக்குகிற குழுக்கள் பற்றி பேசுகிறார்கள், அல்லது பாடத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும். அதற்கு என்ன சாத்தியம் இருக்கிறது? என்கிற சாத்தியக் கூறுகள் பற்றி பேசுகிறார்கள். இது பாடத்திட்டத்தைப் பொருத்தவரை பேசிக் கொள்கிற பகுதி. மேலும், இது மட்டும் தான் கல்வியா? என்றால் சற்று விரிவாக பேச வேண்டும் என்று பேசுகிறவர்கள் குழந்தையினுடைய உளவியல் சார்ந்து பேசுகிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குள் அடைபட்டுக்கொண்டு பாடத்திட்டத்தைக் கற்கலாமா? பாடங்களைக் கற்கலாமா? அல்லது பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்து மரத்தடியில் பாடங்களைக் கற்கலாமா? விளையாட்டு முறையில், பொருட்களைப் பயன்படுத்தி, கருவிகளைப் பயன்படுத்தி பாடங்களைக் கற்கலாமா? கற்பித்தல் முறை பற்றி பாடத்திட்டங்கள் இருக்கிற சாதுரியமான கற்றல் முறை பற்றி பேசுவது கல்வி பற்றிய ஒரு உரையாடலாக இருக்கிறது.

                                                                தொடரும்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...