மன அழுத்தம் பற்றிய புரிதல்
நீங்கள் தூங்குகிற போது உங்கள் மனம், நீங்கள்
விழித்திருக்கிற போது உங்கள் மனம் என்று ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்று சொன்னால்
நீங்கள் வழக்கமாக இருக்கிற எல்லாவற்றிற்குள்ளும் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னால்
மனம் உங்களை ஒன்றுமே செய்யாது. நீங்கள் வழக்கத்தை மீறி இருக்கிற ஒரு பகுதிக்குள் பயணிக்க முயற்சிப்பீர்கள் என்று சொன்னால் உங்கள் மனம் கேள்விகளை
எழுப்பும். இது சரிதானா என்று கேட்கத் தோன்றும் உங்களுக்கு. உண்மையிலேயே இது பயன்படுமா
என்று கேள்வி கேட்பீர்கள். இவையெல்லாமும் மனம் உங்களை வழிநடத்துகிற அல்லது மனதின் பின்
நீங்கள் செல்லுகிற வழக்கமான பாதை. இந்த வழக்கமான பாதையில் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள்.
வழக்கமான பாதையின் பாற்பட்டே நீங்கள் செல்லுகிறீர்கள். இவற்றை உருவாக்குவதும் இவற்றின்
படி உங்களை நகர்த்துவதும் நீங்கள் விலகிச் செல்கிற போது உங்களை நெறிப்படுத்துவதும்
உங்கள் மனம் தான் என்று நீங்கள் கண்டு கொள்கிற போது மனம் எழுப்புகிற, மனம் வழிகாட்டுகிற
எல்லாவற்றிலுமிருந்து நீங்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
மனம் சொல்வதை நீங்கள் கேட்பது என்பது மிக நெருக்கமாக
உங்கள் காதுக்கும் உள்ளே வந்து நடத்தப்படுகிற ரகசியமான உரையாடல். வெளியிலிருந்து மனம்
சொல்வதைக் கேட்பது என்பதும் மனம் சொல்வதை இனி நான் கேட்கப் போவதில்லை என்பதும் சாத்தியம்
இல்லாத ஒன்று. மனம் தான் உங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. செயல்படுத்த உந்துகிறது
என்று நான் சொல்வதற்கான ஆதாரம் நீங்கள் வழக்கத்தை விட்டு மாறுவீர்கள் என்று சொன்னால்
பதட்டத்திற்கு உள்ளாவீர்கள். உங்களில் யார் ஒருவர் உங்கள் வழக்கம் மாறுகிறபோது பதட்டம்
இல்லாமல் இருக்கிறீர்களோ அவர் மட்டுமே மனம் சொல்வதை கேட்பதில்லை என்று பொருள். இதைக்
கேட்டுக் கொண்ட பலரும் எப்போதுமே மனம் சொல்வதை கேட்பதில்லை என்கிற புதிய வழக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டதும் உண்டு. அது அப்படியான
பொருத்தப்பட்டிற்கு வராது. ஒன்று மனம் சொல்வதை தொடர்ந்து கேட்பது அல்லது மனம் சொல்வதை
தொடர்ந்து கேட்பதில்லை என்று முடிவு செய்து கொண்டு மனம் சொல்வதைக் கேட்பதில்லை என்ற
புதிய வழக்கத்தை உண்டாக்குவது. இதுவும் மனம் செய்கிற விளையாட்டு.
மனம் என்பது வழக்கங்களை சேகரித்து வைத்து உங்களை வழி நடத்துகிற நெறிப்படுத்தும் ஒரு கருவி. இந்தப் புரிதலில் இருந்து பார்க்கிறபோது மட்டுமே மனம் எப்போது அழுத்தப்படுகிறது. உங்கள் மனம் எப்போது பதட்டத்திற்குள்ளாகிறது. உங்கள் மனம் எப்போது சிதறடிக்கப்படுகிறது. உங்கள் மனம் எப்பொழுது சிதைவிற்குள்ளாகிறது என்கிற உரையாடலை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய பார்வையோடு ஒரு உரையாடல் அவசியமாகிறது. நவீன கால மனிதர்களுக்கு மனதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான நேரமும் நிதானமும் குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. சமூகம் முழுவதும் மிகுந்த பரபரப்பான வழக்கம் இருப்பதால் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கவனிப்பதற்கு ஒரு பெரிய தயக்கமும் தாமதமும் உருவாகிறது. இது பரபரப்பு உருவாக்குகிற உப விளைவு. இந்த பரபரப்பும் வேகமும் புதிய நவீன யுத்திகளும் கருவிகளும் நம்மில் உருவாக்கி இருக்கிற மிக முக்கியமான உபவிளைவு நாம் நிதானம் குறைந்தவர்களாக, நம்மை கவனிக்கிற நிதானம் குறைந்தவர்களாக மாறிப் போயிருக்கிறோம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். தத்துவம் பேசுகிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மறை நூல்கள் பேசுகிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். விஞ்ஞானம் பேசுகிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படி எல்லா தரப்பு மனிதர்களும் முரண்பட்ட நேரெதிரான மனிதர்களும் ஏற்றுக் கொள்கிற ஒரு ஒற்றை கூற்று - நவீனம் வளர்கிற போது நவீனம் நம்முள் இருக்கிற நிதானத் தன்மையை குறைத்து இருக்கிறது என்கிற கூற்றை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த கூற்று நிஜமும் கூட. அவர்கள் ஏற்றுக் கொள்வது என்பது கற்பனையாக ஏற்றுக் கொள்வதல்ல. நிதானம் குறைந்த ஒரு சமூகத்தை நவீனம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்கிற கூற்று நிஜமும் கூட. இந்தக் கூற்றின் அடிப்படையில் வாழ்கிற ஒரு சமூகம் நிதானமாக இல்லாத போது, நிதானமாக இல்லாத நிலையில் மனம் குறித்து ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு பெரிய மெனக்கெடல் தேவைப்படுகிறது. இது தனி உரையாடல்.
நிதானத்திற்கும் மனதை கவனிப்பதற்குமாக இருக்கிற
உரையாடல் என்பது தனி. முதன்மையாக நாம் இன்று சிந்தித்துக் கொண்டிருக்கிற பகுதி என்பது
மனம் வழக்கத்திலிருந்து இயங்குகிறது. உங்கள் மனம் வழக்கத்திலிருந்து இயங்குகிற பாதையிலிருந்து
எப்போதெல்லாம் நீங்கள் விலகி நிற்கிறீர்கள் என்று பார்க்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள்
அழுத்தத்திற்கு உள்ளாவதாக உணர்வீர்கள்.
உங்களது தேர்வுத்தாளை நீங்கள் உங்கள் ஆசிரியரிடம்
வைத்துவிட்டு திரும்புகிறபோது உங்கள் தேர்வுத்தாளை உங்கள் ஆசிரியர் இதுவரை எடுத்து
பாராட்டி, திருத்தி உங்களுக்கு திரும்ப கொடுத்து இருப்பார். இது வழக்கமாக இருக்கும். முதல் மூன்று மாதங்கள்,
நான்கு மாதங்கள் அவ்வாறு உங்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் புதிதாக உங்கள் ஆசிரியர்
உங்கள் தேர்வுத்தளை உங்கள் கண்முன் கிழித்து எரிகிறார் என்றால் உங்களால் தாங்க முடியாது.
இது வழக்கத்திலிருந்து ஏற்படுகிற புதிய பாகம். இது வழக்கத்தில் இல்லை. உங்கள் தேர்வுத்தாள்
பாராட்டப்படவில்லை. உங்கள் தேர்வுத்தாள் புறக்கணிக்கப்படுகிறது. உங்கள் தேர்வுத்தாள்
கிழித்தெரியப்படுகிறது. இந்த வழக்கமில்லாத ஒன்றை பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சிக்கு
வாய்ப்பு இருக்கிறது. இதுதான் அழுத்தம் துவங்குகிற இடம்.
உங்கள் வீட்டில் இருக்கிற, உங்களை சுற்றி இருக்கிற
பலரும் நண்பர்களும் உறவுகளும் பெற்றோரும் சகோதர சகோதரிகளும் கூட, உங்கள் உறவுகளும்
கூட எப்போதும் உங்களோடு நல்ல நிலையில் உரையாடிக் கொண்டிருக்கிற போது ஏதோ ஒரு நேரத்தில்
நீங்கள் விரும்புகிற, வழக்கமில்லாத ஒரு வடிவத்தில் அவர் உரையாடல் வடிவம் மாற்றம் பெறும்
என்றால் நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகிற சூழலை பார்ப்பீர்கள். நீங்கள் நெருக்கடிக்கு
உள்ளாவீர்கள். இது மன சிதைவு அல்லது மன அழுத்தம் என்று நீங்கள் பேர் வைக்க கூடும்.
வழக்கமாக இருக்கிற ஒரு சூழல் மாற்றம் அடைவதற்குள்ளாகும்
என்றால் மாற்றத்திற்கு நகரும் என்றால் இந்த மாற்றத்தை, இந்த நகர்வை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாது
என்கிற நிஜத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் உங்களுக்கு மன அழுத்தம் வாய்ப்பே இல்லை.
மன அழுத்தம் என்பது ஏதோ உங்களை ஒன்று அழுத்துவதாக புரிந்து கொள்ள வேண்டியதற்கில்லை.
மன அழுத்தம் என்பது உங்கள் மனம் வழக்கமாக பயணப்படுகிற, வழக்கமான பாதையிலிருந்து இன்றைய சூழல் வேரொன்றாக இருக்கிறது என்பதை நீங்கள்
பார்க்கிறபோது மன அழுத்தமாக, மனப்பதற்றமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இது நிஜமாகவே
மனம் வழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறது. வழக்கத்திலிருந்து விலகி நிற்கிறது என்பதான
புரிதல். இவற்றை என்ன செய்வது.
உண்மையிலேயே எனக்கு வழக்கமாக இருக்கிற பாதையிலிருந்து
என் மனம் பதட்டத்தை சந்திக்கிறது என்று நீங்கள் உணரத் தொடங்குகிற போது என்ன செய்வது.
இதை ஏன் இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் இந்த சிந்தனைக்கான விடை. மனம்
அழுத்தமாக இருக்கிறது என்பதல்ல நாம் வந்து நிற்கிற இடம். மனம் அழுத்தமாக இருப்பதை எவ்வாறு
கடந்து செல்வது. புதிய ஒன்றை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. புதிய பாதையில் பயணிப்பதற்கு
என் மனம் பதற்றம் அடைகிற போது ஏன் மீண்டும் என்னால் சமநிலைக்கு வர முடியவில்லை என்கிற
வினா மிக முக்கியமானது. நீங்கள் எப்போதெல்லாம் உற்சாகமாக இருப்பீர்கள் எப்போதெல்லாம்
எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நீங்கள் உற்சாகமாக இருந்த காலகட்டத்தை
நினைவுபடுத்தி பார்ப்பீர்கள் என்று சொன்னால் இந்த உற்சாகத்திற்கு பின்னால் இருக்கிற
ஆற்றல் செழுமை மிக முக்கியமானது. நீங்கள் ஆற்றல் செழுமையோடு இருப்பீர்கள் என்று சொன்னால்
எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் உற்சாகமாக இருக்கிறபோது ஆற்றல் செழுமை வருவதில்லை.
ஆற்றல் செழுமை எப்போதும் உங்களிடம் இருக்கிறது. உடலளவில் ஆற்றல் செழுமை, மன அளவில்
ஆற்றல் செழுமை, உயிர் சக்தி அளவில் ஆற்றல் செழுமை என்று ஆற்றல் செழுமை குறித்த வேறுவேறு
துறை சார்ந்த உரையாடல்கள் இருக்கின்றன.
ஆனால் ஆற்றல் செழுமையாக இருக்கிறபோது உங்களால்
உற்சாகமாக இருக்க முடியும் என்பது ஒரு பொதுவான உற்சாகத்திற்குரிய விதி. நீங்கள் ஆற்றலோடு
இருக்கிறீர்கள். நான் மீண்டும் மீண்டும் இப்படி ஒரு உதாரணத்தை பகிர்ந்து கொள்வதுண்டு.
பல உரையாடல்களில் நான் இவற்றை நண்பர்களோடு பேசுகிற போது சொல்லி இருக்கிறேன்.
ஒரு இளைஞனும் யுவதியும் முழுக்க காதல் உணர்வோடு
ஒரு நெடுஞ்சாலையில் மிக வேகமாக ஒரு வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள். ஒரு மோட்டார் பைக்கை
ஓட்டிச் செல்கிறார்கள். ஓட்டி செல்கிறபோது அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவர்கள் முன்
ஒரு பெரிய வாகனம் ஒன்று குறுக்கே வருகிறது. அந்த இளைஞனும் யுவதியும் வினாடி தாமதிக்காமல்
அந்த வாகனத்திற்கு இடையே புகுந்து செல்கிற வேகத்தை கொண்டவர்களாக புகுந்து செல்கிறார்கள்.
இதே காட்சியில் வயது முதிர்ந்த ஒருவர், மாத இறுதியில் பணத்திற்கு தடுமாறுகிற ஒருவர்
அந்த வாகனத்தை ஓட்டி செல்கிற நிலையில் இருக்கிற போது எதிரே வாகனம் குறுக்கே வரும் என்றால்
அந்த வாகன ஓட்டியோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பார். ஆனால் இளைஞனும் யுவதியும் அவ்வாறு
செய்வதில்லை. இந்த இரண்டிற்குமான இந்தக் காட்சி இரண்டிற்குமான உள்ளே இருக்கிற மிக முக்கியமான
வேறுபாடு அவர்கள் உள்ளத்தில் இருக்கிற உற்சாகமும் பேரன்பும். அந்த இளைஞனும் யுவதியும்
துள்ளலோடு, உற்சாகத்தோடு, முழுக்க ஆற்றல் பொங்கலோடு வேகமாக வாகனத்தை ஒட்டி செல்கிறார்கள்.
குறுக்கே வாகனங்கள் வருவதைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான சங்கடமும் இல்லை. அதை தடையாகவே,
பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை. புகுந்து செல்கிறார்கள். இதற்கு மிக முக்கியமான
காரணம் ஆற்றல் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.
இன்னொரு புறத்தில் அங்கு வந்திருக்கிற வயது
முதிர்ந்தவர். மாத இறுதியில் அவருடைய பொருளாதார சிக்கலில் உழன்று கொண்டிருப்பவர், ஆற்றல்
மிகுதியோடு இருப்பதற்கு வாய்ப்பில்லாத தோரணையோடு
இருப்பவர் அங்கு வாகனத்தோடு மிகுந்த நெருக்கமாக நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டிற்குமான மிக முக்கியமாய் நாம் காணக்கூடிய
வேறுபாடு ஆற்றல். நீங்கள் எப்போதெல்லாம் ஆற்றல் மிகுதியோடு இருக்கிறீர்களோ அப்போதெல்லாம்
உற்சாகமாகவே இருப்பீர்கள். அப்போது உங்கள் தேர்வுத் தாள்கள் பாராட்டப்படுவது குறித்தும்
தேர்வு தாள்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் உங்களுக்கு கவலை இருக்காது. நீங்கள்
மிக உற்சாகமான ஆற்றலோடு, உங்களுக்கு தேர்வு முடிவுகள் தெரிந்து விட்டன. நீங்கள் தான்
முதன்மையான மாணவராக, முதன்மையான நபராக இருப்பீர்கள் என்ற முடிவு உங்களுக்கு தெரிந்திருக்கிறது.
அது உங்களுக்கு ஒரு உற்சாகம் தருகிறது என்ற அக உற்சாகம் உங்களுக்குள் இருக்கும் என்றால்
ஒரு தேர்வு முடிவு குறித்த புதிய செய்தி உங்களுக்குள் தெரிந்திருக்கும் என்றால் உங்கள்
தேர்வுத்தாள் புறக்கணிப்பது குறித்து எந்தவிதமான கவலையும் இருக்காது.
ஆக,
நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது உங்களுக்குள் இருக்கிற ஆற்றலை மேன்மையாக வைத்திருப்பதற்கான
ஏற்பாடு ஆற்றல் இருக்கிறபோது நீங்கள் எவ்வாறு இருப்பீர்கள் என்பது குறித்தான ஒரு போதுமான
புரிதல். ஆற்றில் குறித்து உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும் என்றால் ஆற்றல் நிரம்பி
இருக்கிற போது நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்றால்
ஆற்றல் இருக்கிறபோது மனம் வழக்கமாக பயணிக்கிற பாதையில் இருந்து விலகிச் செல்வதை நீங்கள் தேர்வு
செய்பவராக மாறிவிடுவீர்கள். நீங்கள் மிகுந்த ஆற்றலோடு இருக்கிறபோது நீங்கள் வழக்கம்
போல் நடப்பதில்லை.
துள்ளி குதிப்பது நிகழ்ந்துவிடும்.
நீங்கள் மிகுந்த ஆற்றலோடு இருக்கும்போது நீங்கள் வழக்கம் போல் உண்பதில்லை. புதிய ஒன்றை தேர்வு செய்து
உண்பதற்கு முயற்சிப்பீர்கள்.
சமைப்பதற்கு முயற்சிப்பீர்கள்.
நீங்கள் ஆற்றலோடு இருக்கிறபோது எல்லாமும் வழக்கத்தை விட்டு வெளியில் செல்வதாக மாறிவிடும்.
அப்போது நீங்கள் தியானம் குறித்து கவலைப்படும் நபராக இருக்கமாட்டீர்கள். நீங்கள் அப்போது செய்தித்தாள்
படிக்காத ஒன்றைக் குறித்து வருத்தப்படுகிற நபராக இருக்கமாட்டீர்கள். இது எல்லாமும்
உங்களுக்குள் பொங்கி வழிகிற ஆற்றலை பார்க்கிற நிலையில் நிகழ்வது.
ஆக,
எந்தவிதமான மன வழக்கமும் உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்றால் அதற்குக் காரணமாக
இருப்பது உங்களுக்குள் இருக்கிற ஆற்றல் குறித்த பார்வையும் ஆற்றலை செம்மையாக பராமரிப்பதற்குரிய
முயற்சியும் நிகழ்கிற போது இவை எல்லாமும் சீரான நிலையில், நிதானமான நிலைக்கு வந்து
சேரும் என்பதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.
ஆற்றலோடு இருக்கிறவர்கள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள். புதிய ஒன்றை வரவேற்பதற்குரிய
தைரியத்தோடு இருக்கிறார்கள்.
ஆற்றலோடு இருப்பவர்கள் புதிய ஒன்றை செய்து பார்ப்பதற்குரிய தைரியத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் மனம் பயணிக்கிற
வழக்கமான பயணத்தை,
வழக்கமான பயணப்பாட்டை இடறி விட்டு புதிய ஒன்றை தேர்வு செய்வதற்குரிய மிகுந்த உற்சாகத்தோடு
உள்ளவர்களாக தொடர்ந்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து
பேசுவோம்...
No comments:
Post a Comment