Pages

Thursday, June 20, 2024

நீத்தார் பெருமை - பகுதி 1 - சிவ.கதிரவன்

 

நீத்தார் பெருமை   

www.swasthammadurai.com

       

திருக்குறளினுடைய உரையாடலில் தொடர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிற அதிகார வரிசையில் தற்போது நீத்தார் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த உரையாடலில் நீத்தார் பெருமைக்காக நாம் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சம் கூடுதல் காலம் தான். ஏனென்றால் நீத்தார் பெருமை குறித்து நாம் பேசுவதற்கு ஒரு தயக்கமும் ஒரு அச்சமும்  இருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்ன காரணம் என்றால் நீத்தார் என்பவர் யார் என்று  உரையாசிரியரினுடைய  உரையைப் படிக்கிற போது மிகுந்த வியப்புக்குரியதாக இருக்கிறது. யாரைக் குறிப்பிட்டு நீத்தார் என்று வள்ளுவர் பெருந்தகை உரை செய்கிறார். அதிகாரம் படைக்கிறார் என்ற வியப்பும் வினாவும் ஒருபுறம். அதேபோலவே இன்று நீத்தார் பெருமைக்கு பொருத்தமாக இருக்கிற மனிதர்களை நாம் எங்கிருந்து காண்பது? எவ்வாறு பொருத்தி பேசுவது? என்றெல்லாம் கூட நமக்கு பெரிய யோசனை, சிந்தனை வந்து கொண்டே இருந்தது. அந்த வகையிலேயே நாம் கொஞ்சம் துல்லியமான செயல்பாடாக இருக்கிற,  வடிவமாக இருக்கிற பெருமைகளை  துறவு பூண்டோரின் பெருமையாக  சுருக்கி விடாமல், நான் துறவு பூண்டோர் என்று அதற்குரிய விரிவான செய்தியை நான் சொல்கிறேன். ஏனென்றால் துறவு, துறவிகள் என்பதற்கு சமூகத்தில் சமகாலத்தில் வேறொரு வடிவம் இருக்கிறது. இந்த வடிவத்தின் பார்பட்டு துறவையும் துறவிகளையும் நாம் குறிப்பிட்டு அவர்களே  நீத்தார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று நாம் பேசினோம் என்றால் அந்த உரையாடலில் நமக்கு வேறொரு குழப்பம் வந்துவிடும் என்கிற அச்சமெல்லாம் கூட நீத்தார் பெருமையை பேசுவதற்கு ஒரு காலத்தை எடுத்துக் கொள்ளும்படி செய்து விட்டது.

நண்பர்களே நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்திற்குள் நாம் செல்கிறபோது அந்த அதிகாரத்தில் நமக்கு நீத்தார் என்பவர் யார்? அவரின் குண நலன்கள், பண்புகள், வெளிப்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் அவசியமாகிறது.

வள்ளுவரின் வார்த்தையின்படி,  நீத்தார் என்பது அல்லது நீத்தார் என்கிற சொல்லின் பொருள் என்பது துறவியர் என்று உரையாசிரியர்களால், மொழி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகின்றன. அறிவு மிகுந்த உரையாசிரியர்களினுடைய மூல உரையை, பொழிப்புரையை படிக்கிற போது துறவியரின் பெருமை என்கிற அடிப்படையில் நீத்தார் பெருமையை படிக்கிற போது இன்றைய வாழ்விற்கு இன்னும் நெருக்கமாக பொருத்தி சொல்ல வேண்டுமென்று ஒரு  சிந்தனை இருந்து கொண்டே இருக்கிறது என்னுள். அந்த வகையிலேயே நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் நாம் படிக்கிற போது நீத்தார் என்பவர் யார் என்பது குறித்து ஒரு தெளிவான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஒரு பொருளை வேண்டாம் என்று சொல்வது ஒரு வகை. நமக்கு ஒரு பொருள் மீது விருப்பம் இருக்கிறது அல்லது மறுப்பு இருக்கிறது. அந்த விருப்பதிலிருந்து மறுப்பிலிருது நாம் செயல்படுகிறோம் என்பது பொதுவான மனித நடைமுறை. எல்லா மனிதர்களும் இப்படியான செயல்பாட்டு குணம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் ஒவ்வாரு மனிதரும் ஒரு பொருளை விரும்புபராக, மறுப்பவராக, அமைதியாக இருப்பவராக சொல்ல முடியும். இந்த வகையான மனிதர்களை பார்த்தவர்களுக்கு, இந்த வகையான மனிதர்களோடு பழகியவர்களுக்கு, இந்த வகையான மனிதரைப் போலவே தம் வாழ்வை வாழ்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீத்தார் என்பவர் யார் என்று புரிந்து கொள்வது கடினமான ஒன்று. னென்றால் நமக்கு தெரிந்த ஒன்றை புரிந்து கொள்வது எளிமையானது. உங்களுக்கு ஒரு அனுபவம் இருக்குமென்றால் அவற்றை புரிந்து கொள்வது உங்களுக்கு எளிமையானது. ஒன்றை பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள் என்றால் அதைப் பற்றி பேசுவதும் அதற்குள் புதிய விளக்கங்களை உங்களுக்கு சொல்லிக்கொடுப்பதும் எளிமையானது. அந்த வகையில் துறவு அல்லது துறவியர் என்று ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் சொல்லித்தர வேண்டுமென்றால் துறவின் இலக்கணங்களை உஙகளுக்கு விளக்கி சொல்ல வேண்டுமென்றால் அது சாதாரண மனிதரினுடைய விருப்பு, வெறுப்பு என்கிற அடிப்படையில் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்போருக்கு துறவு பற்றி சொல்வதென்பது சாவாலான ஒன்றாக நான் நினைக்கிறேன்.

நீத்தாரின் பெருமை என்றவுடன் துறவியரின் பெருமை என்று நாம் கடந்து போவதை விடவும் மிக முக்கியமானதாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி நினைக்கிறபடியால் நீத்தார் பெருமை என்று நாம் நீத்தாரினுடைய பெருமையை புரிந்து கொள்வதற்கு இதுவரை நக்கு அனுபவம் இல்லாத ஒன்றை புரிந்து கொள்ள போகிறோம் என்கிற அடிப்படையில் உங்களுக்கு ஒரு முன் தயாரிப்பு வேண்டியிருக்கிறது. இதுவரை உங்களுக்கு கிடைக்காத, பார்க்காத, சுவைக்காத ஒன்றை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள், பேசி பார்க்க போகிறோம் என்று பார்க்கிற போது அந்த அடிப்படையில் நீத்தார் பெருமையை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

னென்றால் துறவு என்பது நான் முன்னமே சொன்னது போல மனிதர்களுக்கு பழக்கம் இல்லாதது. அறிமுகம் இல்லாதது. ஆக துறவு என்பது என்ன என்றவுடன் நமக்கு எல்லாவற்றையும் விட்டுட்டு செல்வது என்று ஒரு பொதுவான பழக்க மொழி இருக்குறது. தன் வீட்டை விட்டுவிட்டு செல்வது, தன் குடும்பங்களை விட்டு செல்வது, அல்லது தான் சேர்த்து வைத்திருக்கிற செல்வதை விட்டு செல்வது. இன்னும் தனக்குள் இருக்கிற கோதாபங்களை விட்டு செல்வது, தான் ஆசைப்பட்டு கேட்கிற எல்லாவற்றையும் விட்டு செல்வது என்று தன்னோடு தொடர்பு கொண்டிருக்கிற உணர்வாகவும் உறவாகவும் சிந்தனைகளையும் தொர்பில் இருக்கிற எல்லாவற்றையும் ஒருவர் புறக்கணித்து செல்கிறார் என்றால் அந்த புறக்கணிப்பு துறவின் இலக்கணமாக சொல்லப்படுகிறது. பின்னாளில் சொல்லப்படுகிற அல்லது நவீன துறவு பற்றி பேசுகிற துறவின் இலக்கணம் என்பது எல்லாவற்றையும் கொண்டாடுவது அல்லது எதையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வது, எல்லாவற்றின் மீதும் ஆசை கொண்டு சேர்த்து வைத்து கொள்வது என்றெல்லாம் துறவிற்கு புதிய புதிய இலக்கணங்கள் வந்துவிட்டன. அது ஒரு புறம் இருக்கிறது.

ஆனால் துறவு என்று தமிழ் இலக்கணத்தில், இலக்கியத்தில், சமூகத்தில் சொல்லப்படுவது ஒன்றை ஒரு மனிதன் கைவிடுவது. ஒன்றை ஒரு மனிதன் புறக்கணிப்பது. ஒன்றை ஒரு மனிதன் மறுப்பது என்கிற இலக்கணத்தின் அடிப்படையில் துறவு இருந்து வருகிறது. துறவினுடைய மெய்யான பொருள் இந்த அம்சத்திலேயே இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். உண்மையிலேயே இது துறவு தானா. ஒரு மனிதன் ஐம்பது, அறுபது வயதில் தன்னை சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டிற்குள் சென்று விடுகிறார் என்றால் அவர் துறந்து விடுகிறார். அவர் துறவியாகி விடுகிறார் என்றாகிவிடுமா.

...தொடர்ந்து பேசுவோம்...


No comments:

Post a Comment