பாயிரம்
திருக்குறளினுடைய வரிசைப்படி கடவுள் வாழ்த்து,
வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று தான் அமையப் பெற்றிருக்கும். இந்த நான்கு பாயிர
அதிகாரங்களை நீங்கள் படித்து, அதன்படி மனப்பாடம் செய்ய வேண்டும் என்பது கூட உங்களது விருப்பம் தான்.
படித்து பொருள் புரிந்து அதன்படி உங்களது
வாழ்வில் நகர்த்துவீர்கள் என்றாலும்கூட போதுமானது. அறன் வலியுறுத்தலில் ஒரு பாடல்.
அறன் வலியுறுத்தல் என்பது வாழ்விற்குரிய வாழ்வை செம்மையாக வாழ்வதற்குரிய பகுதி. அறன்
வலியுறுத்தல் என்பதில் ஒரு கருத்தை வைக்கிறார். இந்த மொத்த புத்தகத்தினுடைய சாரமாக
இருக்கிறது என்பதை முன்னமே நாம் பேசி
இருக்கிறோம் இந்த முன்னுரையை. பாயிரம் என்பது இந்த மொத்த புத்தகத்தினுடைய ஒரு
அறிமுகம் என்பதை நாம் முன்னமே பேசியிருக்கிறோம்.
முன்பே பேசி இருக்கிற அடிப்படையில் அதை
மீண்டும் நினைவூட்டி உங்கள் வாழ்வியலை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு நான்கு அதிகாரங்களை செய்வீர்கள்
என்றால் போதும் என்று நான் மீண்டும் சொல்வதற்கு சில காரணங்களை சொல்கிறேன். சில
செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
மனதில்
சோர்வு ஏற்படுகிற போது என்ன செய்வது? மனதில் கலக்கம் ஏற்படுகிற போது என்ன
செய்வது? என்று பார்த்தோமென்றால் தமிழ் கூறுவது போல் நீங்கள் வாழ்வீர்கள் என்றால்
மனதில் கலக்கம் கிடையாது. பயம் கிடையாது. மேற்கு உலகம் செல்வாக்கு செலுத்திய பிறகு
அறிவியல், விஞ்ஞான நூல்களின் வழியாக மனிதர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை
கண்டுபிடித்ததற்கு பிறகு அதன் வழி அவர்களுடைய உள தத்துவ தேடலும் புறவியல்
வளர்ச்சியும் ஒரு இடைவெளியை கண்ட பிறகு மனிதர்களுக்கு குழப்பமும் பயமும் அச்சமும்
தொடர்ந்து வேறுவேறு மொழிகளில் சொற்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால்
ஒரு அறத்தை ஒரு மனிதன் பின்பற்றுகிறபோது அவனுக்கு எப்போதும் கலக்கம் வருவதற்கு
வாய்ப்பில்லை.
அறநூலை, அறக்கோட்பாடை ஒருவன்
பின்பற்றுகிறான் என்றால் அவனுக்கு எப்போதும் கலக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை. பயம்
வருவதற்கு வாய்ப்பில்லை. உதாரணமாக நான் எல்லா நண்பர்களிடமும் சொல்வதுண்டு. தமிழ் சொல்வது
போல் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மேலோனாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மேலோர் என்பவர்
யார்? அவ்வை பெருமாட்டி சொல்கிறார். பாரதியார் சொல்கிறார். மேலோர் நீதி உயர்ந்த
மதிக்கல்வி. நீதியும் உயர்ந்த மதியும் கல்வியும் நிறைந்த அன்பும் உடையவர்கள்
மேலோர்கள்.
பாப்பா பாட்டிலே பாப்பாவுக்கு மகாகவி
பாரதி இந்த வரியை சொல்லுவார். நீங்கள் மேலோராக வாழவேண்டும் என்றால் நீதியும்
உயர்ந்த மதியும் கல்வியும் அதற்குரிய நிறைவும் பண்பாக பலனாக அன்பும் உங்களுக்கு
இருக்கும் என்றால் நீங்கள் மேலோர்.
நீங்கள் மேலோர் என்று கருதி கொண்டிருக்கிற எந்த ஒன்றும் உங்களுக்கு உங்களை மேலோராக
மாற்றுவதற்கு இல்லை. நீங்கள் சிறந்த உயர் குடியில் பிறந்திருக்கலாம் பிறப்பால்.
மிகப் புனிதமான கடவுளை நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கலாம். மிகப்பெரிய சமூக
பாரம்பரியத்தோடு நீங்கள் தொடர்பில் இருக்கலாம். உங்கள் உடன் இருப்பவர்கள் பெரும் சீமான்களாகவும்
சீமாட்டிகளாகவும் இருக்கலாம் என்றாலும் கூட அவ்வை பெருமாட்டி சொன்னது போல இட்டார்
பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் என்று
அவ்வை பெருமாட்டியும் மகாகவி பாரதியும் சொல்வது தமிழின் செய்திகளை சொல்கிறார்கள்.
தமிழ் அப்படித்தான் மேலோர், கீழோரை வகுத்து
வைக்கிறது. திருவள்ளுவர் ஒரு இடத்தில் யார் உயர்ந்தவர், யார் பிறர் என்று வரையறுக்கிறார். பின்னாளில் நான் உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன். தமிழ் சொல்கிறது - இட்டார் பெரியோர். பெரியவர் என்பவர் இட்டார்.
கொடுப்பவர், தருபவர். நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிரம்பி இருப்பவர்கள் மேலோர்
என்று தமிழ் சொல்கிறது. அந்த வகையில் நீதியும் உயர்ந்த மதியும் கல்வியும் அன்பும்
உங்களுக்கு இருக்குமென்றால் நீங்கள்
மேலோராவீர்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் யாரும் சொல்ல முடியாது.
நிச்சயமாக அதில் மாற்றுக் கருத்தே வாய்ப்பில்லை. வாழ்வியல் என்பது இதுதான். இந்த மாற்று கருத்து இல்லாத
வாழ்வியலை தமிழ் கூறும் வாழ்வியலை நீங்கள்
பின்பற்றுவீர்கள் என்று சொன்னால், நாம் பின்பற்றுவோம் என்று சொன்னால் எந்த
விதத்திலும் நமக்கு அச்சமோ தடுமாற்றமோ வாழ்வியலோ வாழ்வியலுக்குள் இருக்கிற
நெருக்கடியோ வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
எந்த குழப்பமும் இல்லை. நான் நண்பர்களோடு சொல்வதுண்டு. என்னிடம் கேட்பார்கள்.
நல்லா இருப்பதற்கு என்ன செய்வது? திருக்குறள் படியுங்கள். நீங்கள் நலமாய் இருக்க
வேண்டும் என்று விரும்பினால் நலமாய் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டு
கொண்டிருப்பீர்கள் என்றால் நீங்கள் நலமாக உயர்வாக மாற வேண்டும் என்று தேடிக்
கொண்டிருப்பீர்கள் என்றால் மிகச் சிறந்த வழிகாட்டும் நூல் திருக்குறள். அப்படி ஒரு
வாழ்வியல் கருத்துக்களை பொக்கிஷமாக தமிழ் கூறும் பதட்டம் இல்லாத வாழ்வியலை,
அச்சமில்லாத வாழ்வியலை, நமக்கு எடுத்துக்காட்டுகிற மறைநூல் தமிழிலே நிரம்ப
இருக்கின்றன. திருக்குறள் முதலில் இருக்கிறது.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
உச்சி மீது வான்இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
பிச்சை வாங்கி உண்ணுகின்ற வாழ்கை வந்த போதிலும் அச்சமில்லை - என்றெல்லாம் பாரதி அச்சம் இல்லாமல் வாழ்வதற்கு
என்ன செய்திருப்பான் என்று நாம் அந்த வாழ்வியலுக்குள் தேடிப் பார்க்கிறபோது பாரதி
போன்ற பெரும் கவிஞர்களினுடைய வாழ்வியலுக்குள் தேடிப் பார்க்கிறபோது அவர்களே அதற்கு
விடை சொல்கிறார்கள். நீதி உயர்ந்த மதி
கல்வியோடு பாரதி இருக்கிறபோது அவர் யாரை கண்டு அஞ்ச வேண்டும். நீதி உயர்ந்த
மதி கல்வி அன்பு நிறைந்திருக்கிறது. அவர் வீட்டில் இருக்கிற, வீட்டில் வந்து போகிற
குருவிகளுக்கு கடைசியாக வாங்கி வைத்திருந்த அரிசியை தூவி விளையாடுகிற பேரன்பு
கொண்ட பாரதிக்கு அந்த பேரன்பிற்கு பின்னால் இருக்கிற நீதிக்கும் உயர்ந்த மதிக்கும்
கல்விக்கும் எங்கிருந்து துன்பம் வந்து விடப் போகிறது என்பது தமிழ் வாழ்வியல்
பாரதி வழியாக நமக்கு சொல்லி வைக்கிறது. இந்த எளிமையான வாழ்வியலினுடைய ஒரு ஆதார
முடிச்சாக வள்ளுவரினுடைய திருக்குறள் இருக்கிறது. பாரதியே வள்ளுவரே சொல்கிறார்.
நான் பாரதி பற்றி கூடுதலாக பேச வேண்டும் என்ற திட்டத்தோடு நான் இந்த உரையாடலை தொடங்கவில்லை என்றாலும் இது உங்களோடு பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. பாரதியே சொல்கிறார் இந்த தமிழ்
சமூகத்தில் வள்ளுவனை புகழ்கிறார். பாரதி எல்லோரையும் பாராட்டுகிற பெரும் பேரன்பு
கொண்ட கவிஞர். வள்ளுவரைப் புகழ்ந்து தள்ளுகிறார். வள்ளுவரை இந்த உலகிற்கு தமிழ்
கொடுத்திருக்கிறது. வள்ளுவரிடம் இருந்து பேரறிவு கற்றுக் கொண்டிருக்கிறார் பாரதி.
வள்ளுவரிடமிருந்து கற்றுக் கொண்ட அறிவு என்ன? தமிழ் என்ன? வாழ்வியல் குறிப்பு என்ன?
என்று நாம் பாரதியை படிக்கிற போது, பாரதி
சொல்லுகிற வள்ளுவரினுடைய சாறு, வள்ளுவம் தருகிற சாறு, பாரதி சொல்லுகிற சாறு பாரதி
வழியாக வெளிப்படுகிற போது நீதி உயர்ந்த மதி கல்வி என்று வெளிப்படுகிறது, அன்பு
என்று வெளிப்படுகிறது.
ஆக வள்ளுவத்தினுடைய சாறாக பாரதி சொல்லுவது
பாரதி சொல்லுகிற வள்ளுவத்தினுடைய வேர்
இந்த நீதியும் உயர்ந்த மதியும் கல்வியும் அன்பும் தான். இதுதான்
திருக்குறள் முழுவதும் இருக்கிறது. இதை வாழ்விலாக நாம் பின்பற்றுகிற போது நீதியை,
நிறைந்த மதியை, கல்வியை, அன்பை, வாழ்வியலாக ஏற்றுக்கொள்கிற போது பின்பற்றுகிற போது
நிச்சயமாக நமக்கு துயரம் துளியும் கிடையாது. நான் ஆரூடம் சொல்வதாக யாரும் கருதி கொள்ள வேண்டாம்.
நிச்சயமாக கிடையாது. மகிழ்ச்சி என்பது உங்களுக்கு பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே
இருக்கிற தொடர் விளைவாக இருக்கும். இது நம்பிக்கை குறிப்பும் அல்ல. இது ஒரு இயல்பு.
நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. எதற்கும் சோர்ந்து போக வேண்டியது இல்லை.
எதற்கும் கலங்கி நிற்க வேண்டியது இல்லை. அப்படி ஒரு வாழ்வியலை, வாழ்வியல் குறிப்பை
வள்ளுவர் தம் புத்தகம் முழுவதும் வைத்திருக்கிறார். அதில் முதல் நான்கு
அதிகாரத்தில் அதற்குரிய முன்னுரை குறிப்பை தந்திருக்கிறார்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment