கடவுள் – கடவுள் தன்மை
இரண்டாவது அணுகுமுறை உங்கள்
அனுபவத்திலிருந்து ஒன்றை யூகம் செய்ய
முடியும். இதுவும் தர்க்க சாஸ்திரத்தில், தர்க்க நெறிமுறைகளில் காண்கிற
குறிப்புகளில் இருக்கிறது. இது பிரமாணங்கள் என்று வடமொழியில் சொல்வார்கள்.
அணுகுமுறை அல்லது ஒன்றை காண்பதற்கான முயற்சி என்கிற வகையில் பொருள்
கொள்ளப்படுகிறது. ஆக, காட்சியின் வழியாக பார்ப்பது. காட்சி என்பது நீங்கள் புலன்
வழியாக உணர்கிற எல்லாமும் காட்சி பிரமாணங்கள் தான் என்று தர்க்க சிந்தனையாளர்கள்,
தர்க்க அறிவாளிகள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த வகையில் பார்க்கிற
ஒன்று.
இரண்டாவது ஒன்றை உங்கள் மன அனுபவத்தின்
வழியாக அனுமானிப்பது. ஒன்றை சரி என்றோ தப்பு என்றோ உங்கள் யூகதையின் வழியாக அனுமானிப்பது.
சாலையில் நடந்து செல்கிறீர்கள். அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிற உதாரணம் தான்.
புதிதாக நான் சொல்வதற்கில்லை என்றாலும் நான் உங்களுக்கு நினைவூட்டும் வகையாக இதை சொல்கிறேன்.
ஒரு பாம்பை பார்க்கிறீர்கள். பாம்பு வளைந்து,
நெளிந்து சாலையில் கிடக்கிறது. நீங்கள் பாம்பு என்று உணர்ந்துவிட்டிர்கள். வேகமாக பின்வாங்குகிறேர்கள்.
நீண்ட நேரம் அதை பார்த்துக் கொண்டே இருக்கிற போது அது பாம்பு அல்ல கயிறு என்று காண
முடிகிறது. இப்பொஅது பாம்பு போலவும் கயிறு போலவும் இருக்கிற யூகத்தின் வழியாக ஒன்றை
சரி என்றும் தவறு என்றும் பார்க்க முடியும். அதில் முடிவு செய்ய முடியும். அதற்குள்
ஒன்றை தேட முடியும். இது திரிபாக பார்ப்பது. இதுவும் தர்க்க சாஸ்திரங்களில் தர்க்க
நெறிமுறைகளில் காணப்படுகிற குறிப்புகள்.
ஒன்று முதலில் சொன்னது - கட்சியின் வழியாக,
உணர்தலின் வழியாக, அவயங்களின் வாழியாக பார்க்கிற சரி. இரண்டாவது யூகத்தின் வழியாக பார்ப்பது.
மூன்றாவது நீங்கள் உறுதியாக சொல்ல முடியும். இது தான். இப்படித்தான் இருக்கிறது என்று
உங்கள் அனுபவ சாட்சியாக, உங்களினுடைய கடந்த காலத்தினுடைய அனுபவத்தின் வழியாக உறுதியாக
அறுதியிட்டு சொல்ல முடியும். இது மூன்றாவது. இந்த மூன்று வழிகளில் சரியான ஒன்றை நீங்கள்
கண்டுபிக்க முடியும் என்று நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம். இந்த மூன்றுக்கு அப்பாற்பட்ட
ஏதாவது ஒன்று நீங்கள் செய்கிற போது அது சரியா தவறா என்று முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா
என்று நீங்கள் தேடுவதற்கு மிகவும் சாத்தியம் குறைவாக இருக்கிறது. மிகமிக அரிதாகவே நீங்கள்
உங்கள் அறியாத பகுதியில் சரியான ஒன்றை செய்கிறோமா இல்லையா என்பதை காண்பதற்கு வழியே இல்லை. மிகக் குறைந்த அளவே
அதில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் திருக்குறள் வகுப்பில் திருக்குறள் பற்றி பேசுகிறபோது ஏன் தர்க்க நெறிமுறைகளை பேச வேண்டும் என்று உங்களுக்கு கேள்வி வரலாம். அதில் ஒரு செய்தி இருக்கிறது. திருக்குறளை ஏன் வாழ்வியலுக்கு பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லி வருகிற இடம் அதுதான். அதில் ஒரு செய்தி இருக்கிறது. தர்க்க நெறிமுறைகளின் படி திருக்குறளில் கூட யார் ஒரு பொருளைப் பற்றி நீங்கள் கேள்விப்படுகிற போது ஒரு பொருளை பற்றி நீங்கள் உணர்ந்து கொள்கிற போது அது சரிதானா என்று அதனுடைய மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
மெய்ப்பொருளை எப்படி காண்பது என்பதற்கான முறையை
நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாம் செய்வது மெய்ப்பொருளோடு காண்பதற்கான
வழிமுறைகள் இதுதான். ஒன்றை காட்சியின் வழியாக பார்ப்பது, திரிபின் வழியாக, யூகங்களின்
வழியாக பார்ப்பது, பின்னர் நமது அனுபவத்தின் வழியாக அறுதியிட்டு முடிவு செய்வது என்று
சரியான ஒன்றை பார்ப்பதற்கு நம் சிந்தனை எல்லைக்குள் இருந்து பார்க்க, முடிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இப்போது அடுத்த சிக்கல் என்னவென்றால் நாம் சிந்தனை கடந்து ஒன்றை சரி அல்லது தவறு என்று
பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்றால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தர்க்கவியல்
பேசுகிற சிந்தனையாளர்கள், ஆன்றோர் பெருமக்கள் நமக்கு செல்லுகிறார்கள். அவர்கள் என்ன
சொல்கிறார்கள். நீங்கள் பார்க்கிற வழியாக, திரிபுகளின் வழியாக, யூகங்களின் வழியாக அல்லது
உங்களது அனுபவ குறிப்பின் வழியாக திட்டவட்டமாக சரியானதை சரி என்றும் பிழையானதை பிழை
என்றும் முடிவு செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் உங்கள் அனுபவத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்கிறபோது அதை எவ்வாறு முடிவு
செய்வது என்றால் உங்களுக்கு முன் இந்த வாழ்க்கை முறையை செம்மையாக வாழ்ந்திருக்கிற ஆன்றோர்
பெருமக்களினுடைய சான்றுகளை ஆசான்களினுடைய சான்றுகளை பின்பற்றுவதன் வழியாக அவர்களின்
வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதன் வழியாக சரியான ஒன்றை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் செய்வது சரியா தவறா என்று பார்த்துக் கொள்ள முடியும் என்று ஒரு வழிமுறையை சொல்கிறார்கள்.
ஒருவேளை
ஏன் இந்த நான்காவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் அல்லது நான்காவது ஒன்று இருக்கிறது
என்பதை நாம் ஏன் பரிசீலிக்க வேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும். பேச வேண்டும் என்று
கூட நமக்கு கேள்வி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான துல்லியமான செய்தி என்னவென்றால் நீங்கள் மூன்று
என்பதில் மறுப்பதற்கில்லை. எல்லோரும் ஏற்றுக் கொள்வோம். உதாரணமாக எனக்கு கண்ணில் சில
பிழை இருக்கிறது. நோய்க் கூறு இருக்கிறது என்றால்
நான் ஒரு காட்சியை சரியாக பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. எனது காது மடல்களில் காதுக்குள்
இருக்கிற உள் உறுப்புகளில் நுண்ணுறுப்புகளில் செம்மையான வேலை நிகழ்வதற்கு வாய்ப்பில்லை
என்றால் சிறப்பான சத்தத்தின் வழியாக நான் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு குறைவு. என் தோள்களில் மதமதப்பும் தோள்களினுடைய பரப்பில் நோயுற்றிருந்தால் என்னால்
உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு குறைவு. என் காய்ச்சல் காலத்தில் ஒரு நல்ல நறுமணத்தை,
துர்நாற்றத்தை கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு குறைவு. இப்படி காண்பதில் பிழை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நான் நான்காம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்
ஐந்தாம் வகுப்பு பாடம் குறித்து ஒரு கேள்வி
எழுகிறது என்றால் நான் அனுமானிக்கத் தான் முடியும். யூகம் செய்து பதில் சொல்லலாம். யூகம் செய்து பதில்
சொல்கிற போது அதில் பிழை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என் அனுபவத்தின் வழியாக
சொல்கிறேன் என்றால் இதே அனுபவம் இன்னொருவருக்கு ஏற்படுகிற போது அந்த அனுபவத்தின் வழியாக அவர் என்னை
விட சிறப்பாக ஒன்றை கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு அமைந்து விடக்கூடும் என்பதும் ஒரு நிஜமான
நிலை.
ஆகவே இந்த மூன்று நிலைகளில் ஒரு எல்லை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நிலைகளில்
ஒரு எல்லையிலிருந்தே நான் சரி தவறு என்பதை பார்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் ஒரு வேளை
நான் சரியாகவும் செல்வதற்கு வாய்ப்பியிருக்கிறது. தவறாகவும் செல்வதற்கு வாய்ப்பியிருக்கிறது
என்பதால் தர்க்க நெறியாளர்கள் நான்காவது ஒன்றை முன்வைக்கிறார்கள். இந்த நான்காவது ஒன்று
என்னவென்றால் உங்களுக்கு தெரியாத ஒன்றை, நீங்கள் காணாத ஒன்றை உங்களுக்கு முன்பு வாழ்ந்த
உங்களது முன்னோர்களும் ஆசான்மார்களும் ஆசிரியர்களும்
சிந்தனையாளர்களும் அதைப் பற்றி குறிப்பு கொடுப்பார்கள் என்றால் கொடுத்திருப்பார்கள்
என்றால் அவற்றை பின்பற்றி கொள்ளலாம் என்று தர்க்க நெறியாளர்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.
இப்போது திருக்குறளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். வாழ்வியல் நூலாக ஏன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு
விடை கிடைத்துவிட்டது. நான் செய்கிற வேலை சரியானதுதானா என்று காண்பதற்கு இருக்கிற எல்லை
கடந்திருக்கிற வேலைகளில் திருக்குறள் எவ்வாறு உதவி செய்யும் என்பதை புரிந்து கொண்டால்
திருக்குறளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது. ஏன் பயன்படுத்துகிறோம் என்றெல்லாம் நாம்
குழப்பம் இல்லாமல் செல்ல முடியும். இப்போது ஒருவருக்கு பயம் வருகிறது. பயம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு தடுமாற்றம் வருகிறது.
ஒரு மன சங்கடம் வருகிறது. அவர் கண்டுகொள்ளாத ,இதுவரை கண்டிராத எல்லையில் இருந்து அந்த
மன சங்கடம் வருகிறது என்றால் என்ன செய்வது. ஒருவருக்கு குழப்பம் வருகிறது. அவர் இதுவரை
பார்க்காத பகுதியில் இருந்து குழப்பம் ஏற்படுகிறது என்றால் என்ன செய்வது என்பதற்கு
நாம் தர்க்க நெறிமுறைகளின் படி அவைகளை ஆய்வுக்குட்படுத்த முடியும். ஆய்வாளர்கள் சொல்கிற
கருத்துக்களை கேட்க முடியும். ஆனால் அதைவிட எளிமையாக திருவள்ளுவர் போன்ற ஒரு சிறந்த
வழிகாட்டுதலின் வழியாக, மறை நூலின் வழியாக, செம்மைப்படுத்தப்பட்ட செய்திகளின் வழியாக
நான் எனக்கு ஏற்பட்டு இருக்கிற குழப்பத்தை, எனக்கு ஏற்பட்டிருக்கிற சங்கடத்தை, பதற்றத்தை
நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்று வாய்ப்பிருப்பதால் நாம் நான்காவது தர்க்க நெறிமுறைகளின்
அடிப்படையில் திருக்குறளை நம் வாழ்விற்கு வழிகாட்டுகிற நூலாக பின்பற்றிக் கொள்வது தவறு
ஏதும் இல்லை என்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
திருக்குறளை பின்பற்றுவது தவறு என்று சொல்வதற்கான
தைரியம் யாருக்கும் கிடையாது. என்றாலும் தவறேதும் இல்லை என்பதற்குரிய ஆதாரங்களை நான்
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வாழ்வை செம்மையாக வாழ்வதற்கும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் நமக்கு தெரியாத பகுதிகளில்
இருந்து வருகிற ஏற்ற இறக்கங்களை மென்மையாகவும் வன்மையாகவும் புரிந்து கொண்டு கடந்து
செல்வதற்கும் திருக்குறள் ஒரு மாபெரும் கலங்கரை விளக்கு போல நமக்கு வழிகாட்டுகிறது
என்பதுதான் நான் சொல்ல வருகிற செய்தி.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment