ஜான் ஹோல்ட் - கல்வி - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
ஜான் ஹோல்ட் போன்றதொரு கல்வியாளர் இந்த காலகட்டத்தில் மிகுந்த அவசியத்திற்குரியவராக இருக்கிறார், வாசிப்புக்குரியவராக இருக்கிறார். ஜான் கோல்ட் என்பவர் என்னவான நபராக இருக்கிறார் என்று எனக்கு எதுவும் தெரியாது. ஜான் ஹோல்ட் எங்கு பிறந்தார் என்று வாய்மொழியாக நான் கேள்விப்பட்டதை தவிர அவருடைய பிறப்பு வரலாறு எனக்கு தெரியாது. ஆனாலும் கூட ஜான் ஹோல்டினுடைய எழுத்துக்களை நான் படிக்கிற போது அவர் பள்ளிக்கூடங்களுக்குள்ளும் மாணவர்கள் மீதும் சில விமர்சனங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்வது புதுமையானதாக பார்க்க முடிகிறது. அவர் பெரும் மதிப்பு மிக்கவராக நான் பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் அவர் அமைப்புகளை, பள்ளிக்கூட நிறுவன செயல்பாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு குழந்தைகளினுடைய இயல்பை நோக்கி ஏதாவது செய்து பார்க்க முடியுமா? என்ற பரிந்துரையை நமக்கு முன் வைக்கிறார்.
ALSO READ:
ஜான் ஹோல்டினுடைய
நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகளினுடைய தோல்வி குறித்து குழந்தைகள் கற்றுக்
கொள்வது குறித்த செயல்பாடுகளும் அவரது புத்தகங்களில் முன்பு எழுதிய புத்தகங்களில் ஆவணங்களில்
பார்க்க முடிகிறது. கணக்குப் பாடத்தை எவ்வாறு படிக்க வேண்டும்? கணக்கு பாடத்தில் இருக்கக்கூடிய
சிக்கல்களை எவ்வாறு புரிந்து கொள்வது? என்றெல்லாம் கூட அவர் குழந்தைகளினுடைய பள்ளிக்கூட
நலம் குறித்த உரையாடல்களையும் செய்து பார்த்திருக்கிறார். இப்படி வேறுவேறு அனுபவங்களை
செய்து பார்த்ததின் விளைவாக ஜான் ஹோல்ட் புதிய அணுகுமுறைகளை, யுக்திகளை கண்டுபிடித்து
மீண்டும் அவையெல்லாம் பயன்படவில்லை என்று புரிந்து கொண்டதன் விளைவாக என்னவோ எவ்வாறு
குழந்தைகள் கற்கின்றனர்? என்றொரு புத்தகத்தைப் படைக்கிறார். அந்தப் புத்தகம் முழுவதும்
நாள்குறிப்பு போல அடுக்கப்பட்டு இருக்கிறது.
குழந்தைகளை,
குழந்தைகளுக்கு செய்து பார்த்த பரிசோதனைகளை, குழந்தைகளுக்கு வழங்கிய ஆலோசனைகளை நாள்
குறிப்பு போல ஒவ்வொரு நாளும் இன்னன்ன வேலை செய்யப்பட்டதென்று ஆவணப்படுத்திக் கொண்டே
அந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கிறார் ஜான் ஹோல்ட். இத்தகைய ஆய்வு முறையில் அவர் கல்விக்
கூடத்திற்குள்ளும் கல்விக் கூடத்திற்கு வெளியேயும் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர்?
எவ்வாறு பார்க்கின்றனர்? எவ்வாறு படிக்கின்றனர்? எவ்வாறு கற்றுக் கொள்கின்றனர்? எவ்வாறு
செய்து பார்க்கின்றனர்? என்ற வேறுவேறு தளங்களில் குழந்தைகள் பற்றிய பல்வேறு செய்திகளை,
புரிதல்களை வெளிப்படுத்துகிறார்; பதிவுசெய்கிறார்; ஆவணப் படுத்துகிறார். இந்த அணுகுமுறை
மற்ற கல்வியாளர்களினுடைய அணுகுமுறையை விடவும் சற்று இதமானதாகவும் முன்னுரிமை பெற்றதாகவும்
இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
ALSO READ:
சமகாலத்தில்
ஜான் ஹோல்ட் வாழ்ந்த காலத்தை விடவும் சமகாலத்தில் இருக்கிற கல்வி நெருக்கடி, குழந்தைகளின்
மீதான நெருக்கடி என்ற தளத்தில் நாம் பார்க்கிறபோது ஜான் ஹோல்டினுடைய அணுகுமுறை மற்ற
கல்வி பரிந்துரைகளை விடவும் தேர்வு, தேர்ச்சி, குழந்தையினுடைய வளர்ச்சி விகிதம், இவற்றையெல்லாம்
வேறு கோணத்தில் மாற்றிப் பார்க்கிறது. குழந்தைகளை இலக்குகளுக்காக தயார் செய்யக் கூடாது
என்று பரிந்துரைக்கிற பதிவுகளாக எனக்குத் தோன்றுகிறது. அந்தவகையில் ஜான் ஹோல்டினுடைய
புத்தகங்கள் வழியாக சேகரிக்கப்பட்ட கருத்துக்கள் பின்னாளில் அவர் இறுதியாக தீர்மானித்து
வைத்திருக்கிற, புத்தகங்களின் வழியாக பார்க்கிறபோது பள்ளிக்கூடங்களும் குழந்தைகளும்
எவ்வாறு இருக்கின்றன? எவ்வாறு தொடர்புகொள்கின்றனர்? என்கின்ற தளத்தில் ஒரு புதிய பார்வையை
புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.
அந்தவகையில்
ஜான் ஹோல்டினுடைய பதிவுகள் நம் உரையாடலுக்குரியதாக இந்த உரையாடல் முழுவதும் எவ்வாறு
குழந்தைகள் கற்கின்றனர் என்ற புத்தகத்தை ஒட்டி பேசிப் பார்க்கலாம் என்று இந்த உரையாடலை
நாம் துவங்குகிறோம். இன்று இந்த சமூகம் காண்கிற கல்விச் சாலையின் நிலைகளையும் கல்விச்சாலை
ஏற்படுத்துகிற குழந்தை மீதான நெருக்கடிகளையும். எல்லோரும் எவ்வாறு பார்க்கிறார்கள்?
இந்த சமூகம் முழுவதும் எவ்வாறு அது பார்க்கப்படுகிறது? என்று நமக்கு முழுமையான பரிமாணம்
தெரியவில்லை. ஒவ்வொரும் பள்ளிக்கூடங்களை போற்றுதலுக்குரிய இடமாக பார்க்கிற வழக்கமும்
இந்த சமூகத்தில் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் ஏதாவது செய்து குழந்தையை மேம்படுத்தி
விட்டால் போதும் என்கிற ஒரு நிதானமான மனநிலையும் இந்த சமூகத்தில் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள்
பயன்படப் போவதில்லை நாம் வீட்டிலிருந்தே குழந்தைகளை படிக்க வைத்துக்கொள்ள முடியும்
என்கிற மனோபாவமும் இந்த சமூகத்தில் பார்க்க முடிகிறது. குழந்தைகள் படித்தால் படிக்கட்டும்
இல்லை என்றாலும் பரவாயில்லை என்று குழந்தைகளுக்கு இசைவாக ஏதாவது செய்தால் போதும் என்று
குழந்தைகளையும் தன்னையும் இணைத்துக் கொள்கிற பெற்றோர்கள் பார்வையும் இந்த சமூகத்தில்
பார்க்க முடிகிறது.
தொடரும்...
No comments:
Post a Comment