மிர்தாதின் புத்தகம் பற்றிய புரிதல்
சமகாலத்தில்
இருக்கிற அந்த இளைஞன் மலைக்கு கீழே உள்ள கிராமத்தில் மலையை சுற்றி இருக்கிற நகரங்களில்
இருக்கிற பல மனிதர்களை மெய்யியல் கோட்பாடு பேசுகிற, மெய்யியல் கோட்பாடை புறக்கணிக்கிற
பல மனிதர்களைக் கண்டு மேலே நகர்ந்து வந்தவர். அந்த இளைஞனுக்கு பின்னால் இருக்கிற சமூகப்
பின்புலம் எல்லாமும் எப்படிப்பட்டது என்பதை மிர்தாதின் புத்தகம் அறிந்து வைத்திருப்பது
போன்று அவரோடு அந்த புத்தகம் பேசிக் கொண்டிருக்கிறது.
புத்தகம் பேசுகிறது
என்றால் புத்தகத்தின் வழியாக மிர்தாத் பேசிக் கொண்டிருக்கிறார். மிர்தாதின் புரிதல்
இந்த புத்தகத்தை வாசிக்கிற ஒரு நபர் எவ்வாறான நபராக இருக்கிறார் என்கிற பார்வையோடு
இருக்கிறது என்பதை என்னால் தனிப்பட்ட முறையில் பார்க்க முடிகிறது. மிர்தாத் ஒரு கட்டுரையை,
ஒரு ஆய்வு நூலை உருவாக்கி இருக்க முடியும். இந்த மிர்தாதின் புத்தகத்திற்குள் மிர்தாத்
என்கிற அந்த மெய்யியல் வழிகாட்டி மெய்யியலை போற்றுகிற, முன்னிறுத்துகிற, அன்பை போதிக்கிற
வழிகாட்டி ஆய்வு குறிப்புகள் போல், சமன்பாடு குறிப்புகள் போல் நிறைய கோட்பாடுகளை பரிந்துரையாக
வைத்திருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யவில்லை.
மிர்தாதின்
புத்தகம் வேறு சில நபர்களுக்கு வழி காட்டுவது போலவும் அங்கு இருக்கிற சீடர்களுக்கு
வழி காட்டுவது போலவும் படிக்கிற ஒருவருக்கு உதவி செய்வது போலவும் அமையப்பட்டிருக்கிறது.
மிர்தாத் புத்தகத்தை வாசிக்கிற போது ஒரு மனிதன் நன்றாக வாழ வேண்டுவதற்கு என்ன செய்ய
என்ற கேள்வியை நேரடியாக சொல்லி அந்த கேள்விக்கு மிர்தாதே பதில் சொல்வது போன்ற ஒரு கேள்வி
பதில் புத்தகமாக அது அமையவில்லை. மிர்தாதின் புத்தகத்திற்குள் மிர்தாத் வேறு நபர்களோடு
பேசுகிறார். அந்த வேறு நபர்கள் யார் என்றால் இந்த
சமூகத்தினுடைய களைப்பான பகுதிகளில் இருந்து விடுபட்டவர்கள். இந்த சமூகத்திற்குள்
இருக்கிற சிக்கலான தன்மைகளிலிருந்து விடுபட்டவர்கள். சமூகம் முன் வைத்திருக்கிற எல்லா
கேளிக்கைகளையும் புறம் தள்ளி மெய்யியலை தேடிக் கொண்டிருக்கிறவர்கள்.
யார் ஒருவரும் எப்படிப்பட்ட நபராகவும் இருக்கலாம். ஆனால் அவரோடு ஒரு மெய்யியல் வழிகாட்டி பேசுகிறபோது அவர் சமூகப் பின்புலத்தோடு மெய்யியல் வழிகாட்டியை பார்ப்பதற்கும் காண்பதற்கும் காத்திருக்கலாம். ஆனால் மெய்யியல் வழிகாட்டி எப்போதும் சுயநினைவோடு செயல்படும் தன்மை உள்ளவர்கள். எப்போதும் விழிப்புணர்வோடு இருக்கிற தன்மை உள்ளவர்கள். அவர்கள் தம் பரிந்துரையை தம் வழிகாட்டலை எப்போதும் விரயம் செய்வதில்லை. எனவே மிர்தாத் ஒரு சமூகப் பின்பலம் கொண்ட மனிதனை சந்திக்கிற போது அவனுக்காக பேசுவதில்லை. அவனுக்கு பேசுவதற்கு உதவியாக அவன் புரிந்து கொள்வதற்கு உதவியாக அவன் என்கிற சமூகப் பிம்பங்கள் அவனை இயக்குவதன் வழியாக அந்த தடுமாற்றங்களை உடைப்பதற்கு உதவியாக மிர்தாத் தாம் முன் வைத்திருக்கிற தாம் முன் நிற்கிற துறவிகளோடு பேசுகிறார். துறவிகள் முழுவதும் சமூகத்திலிருந்து விடுபட்டவர்கள். சமூகத்திலிருந்து விடுபட்டவர்கள் என்பது முக்கியமானதாக சொல்வதற்கு காரணம் அவர்கள் சமூகத்தை கடந்து விடுபட்டவர்கள். சமூகத்தில் இருக்கிற எந்தவிதமான சிக்கலையும் அவர்கள் சுமந்து வரவில்லை. சமூகம் வைத்திருக்கிற எந்த கோட்பாட்டிற்குள்ளும் அவர்கள் சிக்கி தவிக்கவில்லை. சமூகம் வைத்திருக்கிற எல்லா பொருளாதார சிக்கல்களையும் உடைத்து பேசியவர்கள். எல்லா லவ்கீக வாழ்க்கைகளையும் கடந்து வந்தவர்கள். எல்லாவற்றையும் அனுபவமாகவும் செயல்பாடாகவும் அதன் வழியாக படிப்பினைகளை பெற்றுக் கொண்டவர்களாகவும் இருக்கிற துறவிகள் மத்தியில் மிர்தாத் பேசுகிறார். இப்படித்தான் மிர்தாதின் புத்தகம் வழிகாட்டு துவங்குகிறது.
மிர்தாதின்
புத்தகத்தை நீங்கள் படிக்கிற போது மிர்தாத் உங்களோடு பேசுவதாக உங்களுக்கு தோன்றுக்கூடும்.
மிர்தாதின் கருத்துக்கள் அன்று உங்கள் அடுப்பங்கரையில் கொதித்து போன பாலுக்கு பொருந்துவதாக
உங்களுக்கு தோன்றுக்கூடும். நிச்சயமாக உங்களுக்கு கொதித்து சிந்திய பாலிற்காக மிர்தாத்
பேசவில்லை. மிர்தாத் முன் கேட்டுக் கொண்டிருக்கிற பலரும் கொதித்த பாலை கடந்தவர்கள், கொதிப்பை கடந்தவர்கள்,
பாலாக இல்லாமல் இருப்பவர்கள். உங்கள் பாலிற்கும் அவர்கள் கேட்கிற கேள்விக்கும் நிறைய
வேறுபாடு இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக மிர்தாத் அப்படியான உரையாடலை தொடர்ந்து
செய்து கொண்டே இருக்கிறார். இந்த புத்தகத்தை படிக்கிற வாய்ப்புள்ள பலரும் இத்தகைய சிக்கலோடு
இருப்பதை நான் பார்க்கிறேன். இதை சிக்கல் என்றே நான் கூறுகிறேன். ஏனென்றால் ஒரு புத்தகம்
படிக்கிற போது அந்த புத்தகம் நமக்கு ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்கிறது என்று தோன்றுகிற
மனப்பிறழ்வு, மன சிக்கல் எல்லோருக்கும் இருக்கிறது. புத்தகம் எப்போதும் உங்களுக்கான
ஒன்றை சொல்லிக் கொண்டே இருப்பதில்லை. நீங்கள் புத்தகத்தை தேடுகிற போது உங்கள் தேடல்
நிஜமாக இருக்கும் என்றால் புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும். ஆனால் புத்தகத்தின் வேலை
குறிப்பாக மெய்யியல் புத்தகத்தின் வேலை உங்களுக்கு வழி காட்டுவதல்ல. மிர்தாதின் புத்தகம்
இந்த வழிகாட்டும் கோட்பாடை இன்னும் துல்லியமாக
நிறுத்தி வைத்திருக்கிறது.
மிர்தாதின்
புத்தகம் இந்த வழிகாட்டும் வேலையை இன்னும் நேர்த்தியாக நெறிப்படுத்தி வைத்திருக்கிறது.
அத்தகைய தன்மையோடு மிர்தாத் பேசுகிறார். ஆக மிர்தாதை நீங்கள் கேட்கிறபோது, மிர்தாதை
வாசிக்கிறபோது புரிதல் என்பது என்ன என்று மிர்தாத் சொல்கிறபோது உங்கள் புரிதலுக்கு சொல்ல்வது போன்று
தெரியும். பணம் என்பது என்ன என்று மிர்தாத் சொல்லுகிற போது உங்கள் பணத்தை சொல்ல்வது
போன்று தெரியும். காலம் என்பது என்ன என்று மிர்தாத் சொல்கிற போது நீங்கள் நம்புகிற
காலத்தை சொல்வது போன்று தெரியும். இவையேல்லாமும் நீங்கள் நம்புகிற, நீங்கள் பார்க்கிற,
நீங்கள் பின்பற்றுகிற எவற்றிற்கும் பொருந்தாது. மிர்தாத் சொல்வது, தன்னைத்
தேடிய, தன்னை இழந்த, தன்னை அனுபவமாக பார்த்த துறவிகளுக்கு சொல்லுகிறார்.
முதல்முறையாக
மிர்தாத் துறவிகள் மத்தியில் பேசுகிறார். நீங்கள் எப்போது தன்னை இழந்த துறவியாக, தன்னைப்
பின்பற்றாத துறவியாக, தன்னை ஒப்படைத்த துறவியாக நீங்கள் மாறுகிறீர்களோ அப்போது உங்களுக்குள்
எழுகிற காலம் குறித்த கேள்வியும் பணம் குறித்த கேள்வியும் மரணம் குறித்த கேள்வியும்
மிர்தாதின் முன் நிற்கிற போது மிர்தாத் சொல்லுகிற
அப்போதைய பதில் உங்களுக்கான பதில். அது உங்களுக்கான பதில் என்பதை விடவும் தன்னைத் துறந்தவருக்கான
பதில். தன்னை விடுவித்து கொண்டவருக்கான பதில். தன்னை ஒப்படைத்துக் கொண்டவருக்கான பதில்.
இப்படித்தான் மிர்தாத் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதை முதன்மையாக நாம்
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் மிர்தாத் நான் என்று குறிப்பிடுகிற போது நான் என்ற சொல்லை மிர்தாத் விளக்கி
சொல்கிற போது இந்த குறிப்பு குறித்து பேசிக் கொண்டிருக்கிற போது படிக்கிற பலரும் இந்த
உரையாடலை கேட்ட சிலரும்கூட என்னோட பேசியது
மிர்தாதினுடைய புத்தகம் தனக்கே சொல்வது போன்று இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார்கள்.
நிச்சயமாக மிர்தாதின் புத்தகம் உங்களுக்காக சொல்லப்பட்டது அல்ல. ஒருவேளை நீங்கள் துறவியின்
எல்லையை தொட்டிருந்தால் மிர்தாத் முன்னிருக்கிற துறவிகள் போல் நீங்கள் அமர்ந்திருந்தால்
மிர்தாதின் முன்னே அமர்ந்து கேள்வி கேட்கிற துறவியுனுடைய உள்ளடக்கம் உங்களுக்கும் பொருந்தும்
என்றால் அப்போது மிர்தாத் உங்களுக்காக பேசியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
இல்லாதபோது ஒரு குறிப்பிட்ட விலை குறித்து மிர்தாதின் புத்தகம் என்கிற செய்தி குறிப்பை வைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்கள் அலமாரியில்
இருக்கிற மொழி அகராதியை போலத் தான் இருந்து கொண்டே இருக்கும். மிர்தாதின் புத்தகம்
மொழி அகராதி அல்ல. எப்போது மிர்தாதின் புத்தகம் மிர்தாதின் புத்தகமாக மாறுகிறது என்றால்
மிர்தாதின் புத்தகத்தை வாசிக்கிற ஒருவர் மிர்தாத் முன் நிற்கிற துறவி போல் தம்மை மாற்றிக்
கொள்கிறாரோ அப்போதே மிர்தாதின் புத்தகம் ஒரு முழுமையான வழிகாட்டும் நெறி நூலாக மாறுகிறது. மிக முக்கியமான பகுதியாக நான் உங்களோடு இவற்றை பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment