Thursday, October 21, 2021

YOGA

                                                      

                                                                  யோகா

www.swasthammadurai.com


யோகா என்பது ஒரு முழுமையான அறிவியல்.

 யோகா மருத்துவத்துறையை சார்ந்ததா? இல்லையா? என்பதான விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் மனிதகுலத்திற்கு பதஞ்சலி அளித்த ஒரு மாபெரும் பரிசு யோகா அறிவியல்.

யோகா அறிவியல் பொதுவாக தற்கால சமூகத்தில் வெறும் ஆசனமாகவே அறியப்பட்டு வருகிறது. இந்தந்த ஆசனங்கள் இந்தந்த நோய்களை தீர்க்க வல்லவை என்று தன்னளவில் ஒவ்வொரு யோகா ஆசிரியர்கள் தன் அனுபவப் பகிர்கதலாக இருக்கின்றன. அதனைத் தாண்டி இன்னும் ஆழமான பகுதியாகவே யோகா அறிவியல் இருக்கிறது. அப்படியானால் இது மருத்துவம் சார்ந்தது அல்ல என்றால் யோகா என்றால் என்ன? இது யாருக்கானது?

அன்றாட வாழ்வில் நம் எண்ணம் ஒருபுறமும் சொல் ஒருபுறமும் செயல் ஒரு புறமுமாக முரண்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒரு சமநிலையில் வாழ்வதற்கான ஒரு திறவுகோலே யோகா.

யோகா செய்வதற்கான தகுதி, யோகா என்ற யோகா அறிவியலுக்குள் அந்த மார்கத்திற்குள் பயணிப்பதற்கான தகுதி என்பது அன்றாட வாழ்க்கையில் பொருள் சேர்க்கும் ஒரு நவீன மனிதனுக்கானதா என்றால் அந்த நவீன மனிதன் அந்த பயணத்தில் நுழைவதற்காக பெரிய மெனெக்கெடல் செய்ய வேண்டி உள்ளது. வெறும் உடல் அசைவு மட்டுமே, வெறும் ஆசனங்கள் மட்டுமே யோகா என்ற கருத்தை இன்னும் நாம் ஆழமாக பயணிக்கும் பொழுது உடைபட்டு போவதை காணலாம்.

அப்படியானால் யோகா எங்கே தொடங்குகிறது? எவரொருவர் தன் உடலும் மனமும் ஒத்திசைவோடு யாருக்கெல்லாம் இயங்குகிறதோ அப்படியான ஒரு பக்குவப்பட்ட மனிதரே இதற்குள் பயணிக்க முடிகிறது.

பதஞ்சலி இதற்குள் ஒரு எட்டு படிநிலைகளைக் கூறியுள்ளார். முதல் படியான எவற்றை செய்ய வேண்டும்? எவற்றை செய்யக்கூடாது? என்ற நெறிமுறைகளை கடந்த பின்னே ஒருவர் உடல் அசைவான ஆசனங்களை செய்ய முடியும். அனுபவமாக எவற்றை செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகளையும் எவற்றை செய்யக்கூடாது என்கிற விதிமுறைகளையும் ஒருவர் இலகுவாகக் கடந்து விட்டார் என்றால் ஆசனங்களை பயிற்சியாக செய்ய வேண்டிய தேவையே இல்லாமல் அவர் எந்த ஒரு ஆசனத்தைச் செய்தாலும் அது அவருக்கு இலகுவாகவும் சிரமமில்லாமலும் சுகமாகவும் இருப்பதையே அனுபவமாகப் பார்க்க முடியும்.

எவற்றை செய்ய வேண்டும்? எவற்றை செய்யக்கூடாது? என்ற கருத்தை விவாதத்தில் வைக்கும்போது சமூக ஒழுக்கத்தின் படி எவற்றை செய்ய வேண்டும்? எவற்றை செய்யக்கூடாது? என்பதாக நாம் மாற்றிப் பொருள் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பதஞ்சலி இவ்வாறு கூறி இருப்பாரா? சமூக ஒழுக்கம் பேசி இருப்பாரா? இல்லை தனிமனித மேம்பாட்டிற்கான ஒழுக்க முறைகளைக் கூறி இருப்பாரா? என்பதெல்லாம் ஒவ்வொருவரும் தன் சொந்த அனுபவத்தில் கண்டறிய வேண்டிய உண்மையாகவே இருக்கிறது. உண்மையேப் பேச வேண்டும். அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக முதல் பாடமே அவ்வாறாகத் துவங்குகிறது.

முதல் பாடத்தில், முதல் படிநிலையில் தேர்வானவரை அதுவே அடுத்த படிநிலைக்கு அழைத்துச் சென்றுவிடும். இதில் மிகக் கடுமையான பயிற்சியாக வெறும் ஆசனப் பயிற்சிகளை மட்டுமே செய்வது என்பதை நாம் இன்னும் யோக அறிவியலுக்குள் அனுபவிப்பதை தடைசெய்யும். தான் கொண்டிருக்கும் அனைத்து நம்பிக்கைகளையும் அனைத்து கருத்துக்களையும் உடைத்துப் பார்க்கத் தெரிந்த தன்னையே ஒரு கண்ணாடியாகப் பார்க்க முடிந்த மனிதருக்கு யோக அறிவியல் பெரிதாக உதவக் காத்திருக்கிறது. அம்மாதிரியான மனிதர்களுக்கு யோகம் உதவ முடியும்.

ALSO READ: YOGA - SPINAL CORD / முதுகுத்தண்டுவடமும் ஆசனமும்


2 comments:

  1. யோக அறிவியல் குறித்த நல்ல அறிமுகம் ஐயா. நன்றி 🙏🏻.

    ReplyDelete
  2. Slot Search - DrmCD
    Slot Search - Slot Search is a casino and 강릉 출장안마 content 오산 출장샵 provider that provides its users with the opportunity to bring back, 밀양 출장안마 back 삼척 출장안마 and 동해 출장마사지 bring back nostalgic gaming to the  Rating: 3 · ‎2 reviews

    ReplyDelete

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...