வாசிப்பின் நோக்கம்
அன்பிற்குரியவ்ர்களே!
ஒரு சந்திப்பு குறித்து, ஒரு உரையாடல் குறித்து அதன் நோக்கங்கள் மீதான ஒரு விரிவான கதை பேசிப் பார்க்கவேண்டும் என்கிற தன்மையில் நாம் இன்று சந்தித்திருக்கிறோம்.
இன்று நாம் தேர்ந்தெடுத்து இருக்கிற உரையாடலின், கதையாடலின் நோக்கம் என்ன? என்பது குறித்து நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியத்தின் பேரில் நான் இதை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ஸ்வஸ்தம் வாசிப்பிற்கான ஒரு தளத்தை வலியுறுத்துகிறது. ஸ்வஸ்தத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் அடிப்படையில் வாசிப்பிற்கு உட்படுபவர்களாக தன்னை உட்படுத்திக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வாசிப்பு என்பது அறிவு உலகம் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிற வேளையில் அந்த உலகத்தின் திசை வெளியில் நாம் பொருந்துகிறோமா, இல்லையா என்பதை பார்த்துக் கொள்வதற்கான ஒரு அடிப்படை கருவி. வாசிப்பிற்கான நோக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம். ஏன் வாசிக்கிறோம்? யார் வாசிக்கிறார்கள்? எவற்றை வாசிக்கிறார்கள்? எதன் பொருட்டு வாசிப்பு நிகழவேண்டும்? என்பது குறித்தான உரையாடல்கள் தனியாக செய்யப்பட வேண்டும் என்றாலும் கூட ஒவ்வொரு தனி மனிதனைச் சுற்றி இந்த உலகத்தின் வேகம் எவ்வாறு இருக்கிறது? இந்த உலகம் எந்த திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது? எத்தனை விதமான மனிதர்களும் சிந்தனை முறைகளும் கண்டுபிடிப்புகளும் யுக்திகளும் அரசியல் கோட்பாடுகளும் மத கோட்பாடுகளும் ஒரு தனி மனிதனைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பார்ப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இருக்கிற ஒற்றைச் சன்னல் வாசிப்பு தான்.
வாசிப்பை பொருத்தவரை நீங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்கி நோக்கத்திலும் சமகாலத்தில் நிகழ்கிற செய்திகளை, இலக்கியங்களை, ஊடக செய்திகளை, பயன்படுகிற அல்லது பயன்படாத தகவல்களை செய்துகொண்டாலும் கூட அது வாசிப்புதான் என்பது வாசிப்பின் மிக எளிய வரையறை. என்றாலும் ஒரு மனிதன் வாசிப்பதற்கு மிக முக்கியமான. தேவை இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.
இன்றைய உலகில் பொருளாதாரமும் நவீனமும் (நவீனம் என்றால் விஞ்ஞான வளர்ச்சி) சமூகம் எட்ட முடியாத அளவிற்கு, சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தன்னுடைய கைகளை நீட்டி இருக்கிறது. விரித்து இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் விமானத்தில் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊரிற்கு சில மணி நேரங்களில் பயணித்து இருப்பான் என்று நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த மனிதனுக்கு பயணிக்க முடியும் என்கிற கற்பனை கூட இருந்திருக்காது. வேறொரு கிரகத்தில் நிகழ்கிற நிகழ்ச்சிகளை தான் இருந்த இடத்திலேயே இருந்து பார்த்துக்கொள்ள முடியும் என்கிற சாத்தியம் ஒரு தனி மனிதனுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவும் இன்று சாத்தியமாய் இருக்கிறது.
ஒரு சிறிய குழந்தையின் கையில் உலகின் மிகப்பெரிய அரசியல் விவாதமும் மதக் கோட்பாடுகளும் கதைகளும் கூட பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கிடைத்திருக்கிறது.
ஆக, வாசிப்பு என்பது நோக்கங்களை குறுகி வைத்திருக்கிற தன்மையோடு இல்லை. சமூகத்தோடு ஒரு மனிதன் தன்னை பொருத்திக் கொள்வதற்கு, தான் வாழ்கிற உலகில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு, தான்
எதை தேர்வு செய்கிறோம், தேர்வு செய்ய வேண்டாம் என்கிற அரசியல் எல்லாம் கடந்து ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் சமூகத்தோடு ஏற்பட்டிருக்கிற அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் பேசிப் பார்ப்பதற்கு எல்லாமும் அடிப்படையான ஒன்று வாசிப்பு. வாசிக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்க வேண்டும். அற நூல்களை வாசிக்க
வேண்டும். இலக்கங்களை வாசிக்க வேண்டும். வாசிப்பதற்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வலியுறுத்தலின் பெயரிலே நாம் வாசிப்பை கொண்டாடுகிறோம். வாசிப்பு
என்பது மிக அவசியமான ஒரு செயல்பாடாக நாம் பார்க்கிறோம்.
ஸ்வஸ்தம் மதுரை என்கிற இந்த நிறுவனத்தில் இந்த அமைப்பில் வாசிப்பு என்பது இன்று வரவேற்புக்குரியதாக இருக்கிறது. எல்லா மனிதனும் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பில்லை. தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு மனிதனுக்கு தெரிந்த அனுபவம் இன்னொரு மனிதனுக்கு அதே கோணத்தில் தெரிவதற்கு வாய்ப்பில்லை என்கிற சூழலில் ஒரு மனிதன் தனக்குத் தெரிந்தவற்றை பதிவு செய்து வைத்திருக்கிற பதிவை வாசிப்பதன் மூலம் அனுபவம் பெறாவிட்டாலும் கூட இப்படி ஒன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது, நிகழ்ந்து
இருக்கிறது என்கிற
கோணத்தில் ஒருவர் அந்த தகவலை தெரிந்து கொள்ள முடியும். இந்த தெரிதல் அந்த தெரிந்து கொள்கிற மனிதனுக்கு தம்மை செம்மைப்படுத்திக் கொள்ளவும் அல்லது சீர்படுத்திக் கொள்ளவும் உதவியானதாக இருக்கும் என்கிற தன்மையில் வாசிப்பு அவசியம் என்று ஸ்வஸ்தம் கருதுகிறது.
அந்த வகையில் வாரம் ஒரு முறை வாசிப்பு குறித்த ஒரு உரையாடலை தாம் வாசித்திருக்கிற தாம் இந்த வாரத்தில் படித்திருக்கிற புத்தகங்கள் பற்றி இங்கிருக்கிற நண்பர்கள் கலந்துரையாடுகிறார்கள் என்கிற செய்தியின் மீது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாம் அவ்வாறு கலந்துரையாட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த நூலகத்தை உருவாக்கி இருக்கிறோம். உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்.
நிறைய நண்பர்களும் ஆதரவாளர்களும் பெற்றோர்களும் நம்மீது நம்பிக்கை கொண்ட அன்பு கொண்ட பலரும் இந்த நூலகத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிற நிகழ்வுகளை அனுபவங்களை நாம் பார்க்கிறோம். இவை எல்லாமும் நமக்கு சொல்வது நாம் நம்பிக்கைக்குரியவர்களாக மதிப்பிற்குரியவர்களாக அன்பிற்கு பாத்திரமானவர்களாக மாறிக் கொண்டு இருக்கிறோம் என்பதுதான். இத்தகைய மாற்றம் எங்கிருந்து வந்தது என்பதில் எனது சொந்த அனுபவம் வாசிப்பதன் வழியாக பெரும் வெற்றியை இது தந்திருக்கிறது.
இந்த மதிப்பையும் இந்த அன்பையும் நம்மை சுற்றி இருக்கிற நண்பர்கள் நம் மீது வைத்திருக்கிற நம்பிக்கையும் நாம் பெற்றதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று வாசிப்பு. அந்த வகையிலேயே எப்போதும் எனக்கு வாசிப்பதன் மீது மரியாதை உண்டு. இந்த தன்மையோடு நாம் வாசிப்பு தொடர் நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு இன்று துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
...தொடர்ந்து வாசிப்போம்...
No comments:
Post a Comment