குழந்தைகள் விரைந்து குணமடைகின்றனர்
குழந்தைகள்
இயற்கைக்கு மிக நெருக்கமாகவே பிறக்கிறார்கள். இயற்கையாகவே பிறக்கிறார்கள். இன்றைய மருத்துவ
விஞ்ஞானமும் சமூக மாற்றமும் குழந்தையின் பிறப்பை சற்று மாற்றி அமைத்து இருக்கிறது என்று
நாம் பார்க்க முடிகிறது என்றாலும் கூட குழந்தையின் பிறப்பு என்பது வழிப்பட்டவகையில்
வேறுபட்டிந்தாலும் நகர்ந்திருந்தாலும் தரத்தின் அளவில் குழந்தைகள் இயற்கையாகவே இருக்கின்றன.
குழந்தையின்
பேறுகால நிகழ்வில் ஏற்படுகிற நவீன முயற்சிகளும் நவீன மாற்றங்களும் தற்போது ஏற்பட்டவைதான். கிறிஸ்துவ மார்க்கத்தில் ஒரு கதை இருக்கிறது.
கன்னி
மரியாளுக்கு குழந்தை நேரடியாக உருவானது என்று அந்த கதை சொல்லுகிறது. ஒரு கன்னிப் பெண்
தாயாகிறாள். கன்னிப் பெண் கருவுருகிறாள் என்பது விஞ்ஞானத்திற்கு புறம்பானது. ஆனாலும்
கூட இயேசு கிறிஸ்து மனித உலகில், மனித குலத்தில் இருக்கிற ஒரு மனிதனால் உருவாக்கப்பட்டவர்
அல்ல. நேரடியாக கருவானவர் என்று கிறிஸ்துவத்தில் ஒரு நம்பிக்கையும் கதையாடலும் உண்டு.
மகாபாரதத்தில் குந்தி தேவியின் மகனான கர்ணனும் அப்படியான தன்மையோடு நேரடியாக சூரிய பகவானிடம் இருந்து கருவுற்ற கதையை மகாபாரதம் வைத்திருக்கிறது. இவையாவும் புதினமாகவும் மறை கதையாடலாகவும் நாம் பார்த்தாலும் கூட நான் பார்ப்பது குழந்தையை உருவாக்குகிற குழந்தைக்காக முன்னெடுக்கிற இயற்கையின் செயல்பாடாக இதை புரிந்து கொள்ள முடியும் என்று இந்த கதைகளை வேறொரு கோணத்தில் நான் பார்க்க முயற்சிக்கிறேன்.
ஒரு
கடவுளால் நேரடியாக இயேசு கிறிஸ்துவை உருவாக்கி விட முடியும் கிறிஸ்துவ தர்க்கத்தின்
அடிப்படையில். கிருஷ்ண பரமாத்மாவால் நேரடியாக
கர்ணனை சூரிய பகவானின் உதவி இல்லாமல் உருவாக்கி விட முடியும் கடவுளின் தர்க்கத்தின்
அடிப்படையில். ஆனாலும் கூட கடவுள்கள் குழந்தையின்
வடிவிலேயே பிதாமகன்களை உருவாக்குவதற்கு காரணம் எந்த மனிதனை விடவும் குழந்தைகள்
இயற்கையாக, இயல்பாக, இயங்குகிற வாய்ப்புள்ளவர்கள். சாத்தியம் உள்ளவர்கள். அந்த நுட்பம்
அறிந்தவர்கள் என்ற பார்வையிலேயே கடவுள்களும் கூட குழந்தையின் வடிவிலேயே தமது பயணத்தை
துவங்குகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். அத்தகைய நெருக்கமான இயல்புடையவர்கள் குழந்தைகள்.
இந்த இயல்பை நாம் புரிந்து கொள்வதின் வழியாக நமது நலத்தை மிக எளிமையாக புரிந்து கொள்ளவும்
இருக்கிற நலத்தை தக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சாத்தியம் இருக்கிறது.
ஒரு
குழந்தையை நீங்கள் வெறுமனே நோக்குங்கள். எந்த முன்முடிவும் இல்லாமல் குழந்தையின் இயல்பை
பார்க்க வேண்டும். குழந்தைகள் உண்பதை பார்க்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதை பார்க்க
வேண்டும். குழந்தைகளுக்கு நலம் இயல்பாக இருப்பதற்கும் நலம் கெடாமல் இருப்பதற்கும் வாய்ப்பாக
அமைவது அவர்களுக்கு சமூக சாயல் ஏதும் கிடையாது.
குழந்தையால்
வலது கையில் கழிவு நீரையும் இடது கையில் பருப்பு உணவையும் சேர்த்து உளப்புகிற வெகுளித்தனம்
இருக்கிறது. இந்த வெகுளித்தனம் நலத்திற்கு மிக முக்கியமானது என்று உளவியல் மருத்துவங்கள்
இப்போது ஆய்வு செய்யத் துவங்கியிருக்கின்றன. நீங்கள் எப்போதெல்லாம் வெகுளியாக இருக்கிறீர்களோ
எப்போதெல்லாம் முன்முடிவு இல்லாமல் இருக்கிறீர்களோ எப்போதெல்லாம் மன அமைதியோடு இருக்கிறீர்களோ
அப்போதெல்லாம் உங்கள் நலம் கெடுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்று மேல்
நாட்டு ஆய்வுகள் ஆவணப்படுத்தி வருகின்றன.
சிரிப்பு
பற்றி செய்யப்படுகிற ஆய்வுகளில் நீங்கள் சிரிக்கிற போது உங்கள் உடலில் இருக்கிற தளர்வு
சக்தி, நீங்கள் தளர்வாக இருக்கிறபோது வெளிப்படுகிற சிரிப்பு இவை இரண்டும் உங்கள் உடல்
ஆரோக்கியத்தை சில நூறு ஆண்டுகளுக்கு நீடிக்கும் வல்லமையுடையவையாக இருக்கின்றன என்று
ஆய்வுகள் செய்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஆக இயல்பாக இருப்பதும் வெகுளியாக இருப்பதும் முன்முடிவுகள்
இல்லாமல் இருப்பதும் கூட நலத்திற்கு மிக முதன்மையானது என்று மருத்துவ நுட்பம் முன்வைக்கிறது.
இது மருத்துவ நுட்பத்தின் முன்வைப்பாக நாம் கடந்து விட முடியாது. நலமாக இருக்க வேண்டும்
என்று விரும்புகிற ஒவ்வொருவரும் வெகுளித்தனத்தோடு இருக்கவேண்டும் என்பது அவசியம். நீங்கள்
ஒரு செய்தி குறித்து, ஒரு நிகழ்வு குறித்து, கடந்த கால நினைவு குறித்து உங்களுக்குள்
ஏதாவது ஒன்றை கருத்தியலாக சுமந்து கொண்டு வருவீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு குணமடைவதற்கு
வாய்ப்பு மிகக் குறைவு. நீங்கள் தொடர்ந்து நோயாளியாகவே இருக்கிற சாத்தியத்தைப் பெற்றவராக
மாறிவிடுவீர்கள். நேற்றைய பொழுதை நேற்றோடு இறக்கி வைக்கிற மிக உன்னதமான பண்பு நோய்களுக்கு
வழி கொடுக்காத ஒன்று. நேற்று ஒருவரோடு நீங்கள் சண்டை இடுகிறீர்கள். நேற்று ஒருவரோடு
நீங்கள் முரண்பட்டு இருக்கிறீர்கள். சென்ற வாரம் ஒருவரோடு காயம்பட்டு இருக்கிறீர்கள். காயம் ஏற்படுத்தி
இருக்கிறீர்கள். சென்ற மாதம் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சண்டை. சென்ற வருடம்
உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் மோதல். இப்படி ஏதோ ஒரு கசப்புணர்வை சென்ற வாரத்தில்,
சென்ற மாதத்தில், சென்ற வருடத்தில் இருந்து நீங்கள் சுமந்து கொண்டு வருவீர்கள் என்று
சொன்னால் எப்போதெல்லாம் அந்த ஆசிரியரை பார்க்கிறீர்களோ, எப்போதெல்லாம் அந்த விரோதம்
கொண்டவரை பார்க்கிறீர்களோ, எப்போதெல்லாம் அந்த முரண்பட்டவர்களை பார்க்கிறீர்களோ அப்போதெல்லாம்
உங்கள் இதயத்துடிப்பு பன்மடங்காவதையும் அப்போதெல்லாம் உங்கள் நரம்பு நாளங்கள் வெடிப்பது
போன்ற உணர்வையும் நீங்கள் உணர்வீர்கள். இவையெல்லாம் நோயின் அறிகுறி என்று நவீன மருத்துவம்
வகைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த நவீன மருத்துவத்தின்
வகைப்பாட்டின் வழியாக நீங்கள் பார்க்கிறபோது உங்கள் இதயத் துடிப்பின் அதிகரிப்பும்
உங்கள் நரம்பு நாளங்களின் வெடிப்பு மட்டும் காரணம் அல்ல. இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது
நீங்கள் சுமந்து வந்திருக்கிற, சுமந்து வைத்திருக்கிற கடந்தகால முரண்பாடுகளும் காயங்களும்
அவை ஏற்படுத்தி வைத்திருக்கிற நினைவுகளும்.
இந்த
நினைவுகளும் காயங்களும் அவை உண்டாக்கி வைத்திருக்கிற சிக்கல்களும் உங்களை தொடர் நோயிலே
தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு எதுவென்றால் உடனடியாக
நீங்கள் வெகுளித்தனத்தோடு அணுகுவது. உடனடியாக வெகுளித்தனத்தோடு இயங்குவது. உடனடியாக
வெகுளித்தனத்தை ஏற்றுக்கொள்வது. இத்தகைய வெகுளித்தனங்கள், வெகுளித்தனமான மனநிலை குழந்தைகளிடம்
இருப்பதை நீங்கள் காண முடியும்.
நேற்று
சண்டையிட்ட இரண்டு குழந்தைகள் இன்று கட்டிப்பிடித்துக்கொண்டு உருளுவதை நீங்கள் பார்க்க
முடியும். நேற்று முரண்பட்ட இரண்டு குழந்தைகள் இன்று தோல் மீது கை போட்டுக்கொண்டு நடந்து
செல்வதை நீங்கள் பார்க்க முடியும்.இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு இயல்பானது என்று நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் மீண்டும்
உங்கள் பார்வையில் பிழை என்றே நான் பரிந்துரைக்கிறேன். பிழை என்றே நான் கருதுகிறேன்.
ஏனென்றால் இந்த பார்வைக்கு பிழை என்று நான் சொல்லுவதற்கு காரணம் இது குழந்தைகளின் இயல்பு
அல்ல வெகுளித்தனத்தின் இயல்பு. வெகுளியாக இருக்கிற
ஒருவரால் மட்டுமே நேற்றைய நிகழ்வை நேற்றோடு விட்டுவிட முடியும். வெகுளியாக இருக்கிற
ஒருவரால் மட்டுமே நேற்றைய முரண்பாடை நேற்றோடு விட்டுவிட முடியும். வெகுளித்தனத்தை சுமந்து கொண்டிருக்கிற ஒருவரால்
மட்டுமே இன்றைய வாழ்வை இனிதாக வாழ்வதற்கு வாய்ப்பு உருவாக்கவும் வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ளவும் சாத்தியம் இருக்கிறது. இந்த வெகுளித்தனத்தை புறந்தள்ளிவிட்டு ஒரு மனிதரால்
ஆரோக்கியமாக இருக்க முடியாது என்பது உடல் அளவிலும் உளவியல் அடிப்படையிலும் சொல்லப்படுகிற
மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற பேருண்மை. இந்த அம்சத்தில் நாம் குழந்தைகளிடம் இருந்து
கற்றுக்கொள்வதற்கு செய்திகளை குழந்தைகள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எந்த
குழந்தையும் கடந்த காலத்தை சுமந்து கொண்டு வருவதில்லை. எந்த குழந்தையும் கடந்த காலத்தோடு
உறவாடி சிக்கிக் கொள்வதில்லை.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment