அதிகாரம் 1 / குறள் 1 (அகர முதல்)
திருவள்ளுவர் கடவுளை அறிமுகப்படுத்துகிறார்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு" என்று.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே
உலகு - இது குறள்.
அகரம் என்பது எழுத்துக்களுக்கு முதன்மையானது.
எல்லா மொழிகளிலும் முதன்மையான சொல்லை உயிர்ச் சொல்லை, உயிரெழுத்தை அகரத்திலிருந்து
துவங்குவது என்பது மொழியியல் மரபு. மொழி அகரத்தில் இருந்த துவங்குகிறது. எல்லா சொற்களுக்குள்ளும்
எல்லா எழுத்துக்களுக்கும் அகரத்தின் சாயல் இருப்பதுண்டு. அகரம் வெறுமனே துவக்க எழுத்தாக
இருப்பதில்லை. உயிர் எழுத்தாக இருப்பதில்லை. ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் ஒரு உயிர்க்
குறிப்போடு இருக்கிறது. அது எல்லா மொழிகளிலும் உயிர்க்குறிப்பில்லாத எழுத்துக்களை,
சொற்களை உருவாக்கிவிட முடியாது. இது ஒரு மொழியியல் பகுப்பாய்வு. மெய்யெழுத்துக்களும்
உயிர் எழுத்துக்களும் இணைந்து உயிர்மெய் எழுத்துக்களாக வெளிப்படுகிற மொழியியல் கோட்பாடுகளின்
வழியாக ஒரு எழுத்தை உருவாக்குகிற போது, ஒரு எழுத்தை பார்க்கிறபோது, ஒரு எழுத்தை உச்சரிக்கிற
போது அந்த எழுத்திற்குள் சாரமாக உயிர் எழுத்து குடியிருக்கும் என்கிற பொருளில் வள்ளுவர்
‘அகரம்’ எல்லா எழுத்துக்களுக்கும் முதன்மையானது என்று குறிப்பிடுகிறார்.
எல்லா எழுத்துக்களுக்குள்ளும் உயிர் போல அகரம்
இருக்கிறது. அகரம் எல்லாம் எழுத்துக்களுக்குள்ளும் இருப்பது போல, இறைவன் கிழக்கத்திய
மரபு முன்வைக்கிற கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறது என்று அடுத்த அடியை சொல்கிறார்
‘ஆதி பகவன்’ என்ற சொல்லுக்குள் ஆதி என்பது முதன்மையானது. ஆதாரமானது. பகவன் என்கிற சொல்லை ‘பகு+வ்+அன்’ என்று மொழியியல்
பிரிவாக, மொழியியல் ஆய்வின் அடிப்படையில் மூன்று தனி சொல்லாக பிரித்து பொருள் கொள்ள
முடியும். ஆதி, பகு, வ், அன். ‘ஆதி பகவன்’
என்கிற சொற்களை ‘ஆதி, பகு, வ், அன்’ என்று பிரித்து பொருள் கொள்கிற ஒரு வாய்ப்பு, அழகு
வள்ளுவர் பயன்படுத்திய மொழியில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
பகு, வ், அன். பகு - என்றால் பிரிந்து விரவி
கிடப்பது. பிரிந்து இருப்பது என்ற பொருள். பகுத்தல் என்பது பிரித்து வைத்தல். பகுத்தல் என்பது
விரவச் செய்தல். பகிர்ந்து கொடுத்தல் என்ற பொருளோடு மிக நெருக்கமான தொடர்புடைய சொல்.
பகு என்பது பிரித்தல். கலந்து இருத்தல், விரவி இருத்தல் என்கிற தன்மையில் ஆதி எல்லா
உயிர்களிலும் உலக உயிர்களிலும் விரவி இருக்கிறது.
இந்த உலகிற்கு முதன்மையான ஒன்று, இந்த உலகிற்கு ஆதாரமான ஒன்று எல்லா உயிர்களிலும்
உலகம் முழுவதும் இருக்கிற எல்லா உயிர்களிலும் பரவி இருக்கிறது, படர்ந்து இருக்கிறது,
விரவி இருக்கிறது. அதுவே கடவுளாக இருக்கிறது என்று கடவுள் வாழ்த்தினை துவங்குகிறபோது வள்ளுவர் இவ்வாறு துவங்கி வைக்கிறார்.
இந்திய சமூகத்தில், தமிழ் சமூகத்தில் இந்த
சொற்களுக்குள் இருக்கிற ஆழமான பொருளை பார்க்கிறபோது கடவுள் பற்றி இருக்கிற பல முரண்பாடுகளும்
கேள்விகளும் காணாமல் போகிறது. எல்லா சொற்களுக்குள்ளும் உயிர் அசை, உயிர்க் குறிப்பு,
உயிர் எழுத்து அகரமாக நின்று எவ்வாறு ஒலிக்கிறதோ அதைப்போல உலகில் உள்ள எல்லா உயிர்களுக்குள்ளும்
ஆதாரமான ஒன்று, முதன்மையான ஒன்று, ஆதியான ஒன்று கலந்து இருக்கிறது, விரவி இருக்கிறது.
அதுவே அந்த ஒன்று என்று கடவுள் வாழ்த்து பகுதியில்
முதல் குரலாக திருவள்ளுவர் வைத்திருக்கிறார்.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு’
எல்லா எழுத்துக்களுக்குள்ளும் எல்லா சொற்களுக்குள்ளும்
எல்லா சொற்றொடர்குள்ளும் எல்லா பத்திகளுக்குள்ளும் எழுத்துக்களின் ஒளிக் குறிப்பாக
ஒளிக் குறிப்பின் மையமாக இருக்கிற உயிர் அசைவு ,உயிர் சொல், உயிர் ஒளி குறிப்பு விரவி
இருப்பது போல உலகில் இருக்கிற எல்லா உயிர்களுக்குள்ளும்
ஆதி ஒளிந்து இருக்கிறது. ஆதி பரவி இருக்கிறது. ஆதி விரவி இருக்கிறது. ஆதியே எல்லா உயிர்களாகவும்
இருக்கிறது. இது உலகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது என்று கடவுள் வாழ்த்தில் முதல்
செய்யுளில் துவங்குகிறார். இது கடவுள் அருள்பாளிப்பது கடவுள் பற்றிய பல்வேறு கருத்தக்கங்களை,
முரண்பாடுகளை செய்திக் குறிப்புகளை விவரிப்பதற்கும் மறுப்பதற்கும் பொருத்தமானதாகவும்
இருக்கிறது. அதே வேளையில் கடவுள் குறித்த, படைப்பு குறித்த தேடுகிற ஒரு மனிதனுக்கு
யாருக்கெல்லாம் படைக்கிற கற்பனையும் முயற்சியும்
இருக்கிறதோ அந்த கற்பனையும் முயற்சியும் அவருக்குள் இருக்கிற ஆதியிலிருந்து துவங்குகிறது
என்கிற குறிப்போடு வள்ளுவர் கடவுள் வாழ்த்தினுடைய முதல் செய்யுளை வைத்திருக்கிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே
உலகு. எல்லா சொற்களுக்குள்ளும் உயிர் அசைவு ஒளிக் குறிப்பாக இருப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் உலகில் இருக்கிற எல்லா உயிர்களுக்குள்ளும்
ஆதியின் அசைவு படர்ந்து இருக்கிறது. பகுக்கப்பட்டு இருக்கிறது. விரவி இருக்கிறது. கலந்து
இருக்கிறது.
…தொடர்ந்து பேசுவோம்....
No comments:
Post a Comment