Monday, June 5, 2023

மிர்தாதின் கையில் இருக்கிற தீப்பந்தத்தில் உங்கள் அறிவு ஒளியை பற்ற வைத்துக் கொள்ளுங்கள் -சிவ.கதிரவன்//உரையாடல் -3

                                                 மிர்தாதின் புத்தகம்

www.swasthammadurai.com


மிர்தாதின் புத்தகம் அப்படி ஒரு உள்ளடக்கத்தோடு தான் நமக்கு அறிமுகம் ஆகிறது. மிர்தாதின் புத்தகத்தின் சாராம்சமான செய்திகளை ஒரு கதையாடல் போல் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தமிழ் சூழலில் மிர்தாதின் புத்தகம் நிறைய பதிப்புகள் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய பதிப்புகள் செய்யப்பட்டு அது பரவலாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தமிழ் சூழலில் இப்போதும் அது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிற புத்தகமாக இருக்கிறது. இந்த புத்தகத்தின் தமிழ் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் மிகச்சிறந்த பேரழகு மிர்தாதின் புத்தகத்திற்குள் இருக்கிற சிக்கலான ஆன்மீக மறை சார்ந்த மொழி செல்வாக்கை சிறிதும் பிறழாமல் ஐயா புவியரசின் மொழிபெயர்ப்பு மிகுந்த மரியாதைக்குரியதாக இந்த புத்தகத்திற்குள் வெளிப்படுகிறது.

ஒருதேரோட்டியின் கவனம்’ என்கிற வார்த்தையை கூறுவார்கள். தேரோட்டியின் கவனம் என்பது தேரில் பூட்டப்பட்டிருக்கிற குதிரையின் மீது உள்ள கவனமாக மட்டுமில்லாமல் தேரைச் சுற்றி, தேரின் சக்கரங்களில், தேரின் வேகம் இவரின் கையில் வைத்திருக்கிற அந்த கட்டுப்படுத்தும் கயிறு என்று ஒரு பன்முகத்தன்மையோடு பயணப்பட வேண்டிய குறியீடாக தேரோட்டியை குறிப்பிடுவார்கள்.

மிர்தாதின் புத்தகத்தை மொழி பெயர்க்கிற  பெரும்பணியில் ஐயா புவியரசின் கவனம் ஒரு தேரோட்டியின் கவனம் போலிருக்கிறது. எந்த இடத்திலும் எந்த புழுதிக்கும் அந்த தேர் நின்றுவிடவில்லை. எந்த பழுதும் அந்த தேருக்குள் ஏற்படாத வண்ணம் இந்த பயணம் நடந்து கொண்டே இருக்கிறது. உரிய நேரத்தில் குதிரைகளுக்கு இளைப்பாறுதல் தரப்பட்டிருக்கிறது. உரிய நேரத்தில் குதிரைகள் சக்கரங்கள் வேகமாக இழுத்து சுழட்டப்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு சாகசத்தை இலகுவாக செய்யத் தெரிந்த தேரோட்டி போல மிர்தாதின் புத்தகத்தை நேர்த்தியாக எழில் மிகுந்த, வனப்பு மிகுந்த மகிழ்வோடு இந்த புத்தகத்தை அவர் படைத்திருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார் என்பது மிகுந்த நன்றியோடு நாம் ஐயா புவியரசு அவர்களை போற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் நன்றியும் போற்றுதலும் அவர்களுக்கு நியாயமானது. அவர்களுக்கு செய்யப்பட வேண்டியது.

ஒரு தத்துவ நூலை இவ்வாறு மொழிபெயர்த்து சொல்வது அவ்வளவு எளிமையானது அல்ல. இந்தியச் சூழலில் இயேசு கிறிஸ்துவின் உடைய திருவிவிலியம் மொழிபெயர்ப்பிற்கு வந்தபோது பெரிய  மொழியியல் பதட்டத்தை சந்தித்தது. இந்தியச் சூழலில் இருக்கிற சமயங்கள் தெய்வத்தை ஒன்றாக புரிந்து வைத்திருக்கின்றன.

 இயேசு கிறிஸ்துவினுடைய சமயப் பின்புலம், இந்தியச் சூழலுக்கு நேர் முரணானது. இயேசு வருகிறார் என்று இந்திய சூழலில் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இந்தியச் சூழலில் கடவுள் எப்போதும் இருப்பவர். எப்போதும் இருக்கிற கடவுள் வருகிறார், வந்திருக்கிறார், சென்று விடுவார் என்று பேசுவது என்பது கருத்தியல் முரணாக இருக்கிற ஒரு ஆன்மீக மொழிபெயர்ப்பு சண்டை நிகழ்ந்து இருக்கிறது. திரு விவிலியம் இந்திய சூழலில், தமிழ் சூழலில் மொழிபெயர்க்கப்பட்ட போது. அப்படி நேர் எதிரான சாகசமான பகுதிகளில் கூட ஐயா புவியரசின் மொழிபெயர்ப்பு என்பது மிகுந்த நுட்பத்தோடு, மிகுந்த அழகியலோடு, லாவகத்தோடு நமக்கு படைக்கப்பட்டிருக்கிறது.

 அது ஒரு பருகுவதற்கு காத்திருக்கிற, யாவருக்கும் தயாராக இருக்கிற நீரோடை போல புத்தகம் முழுவதும் விரித்து வைத்திருக்கப்பட்டிருக்கிறது. மிர்தாதின் புத்தகம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. மிர்தாதின் புத்தகம் குறித்த ஒவ்வொரு பகுதியும் தொடர்ந்து உரையாடலாக நாம் செய்ய முடியும். செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு கதையை துவங்கி முடிப்பது போல மிர்தாதின் புத்தகம் முடியாது. ஒரு நீளமான பெருங்கதையாடல் அது. அந்த பெருங்கதையாடலுக்குள் பயணிக்கிற ஒவ்வொருவரும் மிர்தாதின் கையில் இருக்கிற வெளிச்சத்தில், கையில் இருக்கிற நெருப்பு பொறியில் உங்களுக்கு தேவையான அறிவுச்சுடரை பற்றவைத்துக் கொள்ள முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மிர்தாதின் பரிந்துரையும் அதுதான். அவர் கையில் இருக்கிற தீப்பந்தத்தில் உங்களுக்கு தேவையான அறிவு ஒளியை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பேசுவோம்....

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...