குழந்தைகள் அக உலகம்
குழந்தைகள் குறித்த உரையாடல், கற்றல் நிகழ்வுகள்,
குழந்தைகள் குறித்து நாம் எதிலும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற அறிவார்ந்த முயற்சி
என்ற பல்வேறு வகைகளில் குழந்தைகளை ஒட்டி, குழந்தைகளின் வளர்ப்பு முறை ஒட்டி வெவ்வேறு
வகையான உரையாடலை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
குழந்தைகள் என்பவர் யார் என்று நாம் ஒரு உரையாடலை
செய்து பார்க்கிற போது இவர்தான் குழந்தை என்று வரையறுத்து சொல்வதற்குரிய எல்லா அம்சங்களும்
பெரியவர்களுக்கும் பொருந்துகிறது. இவர்களெல்லாம் பெரியவர்கள் என்று வரையறுக்கிற பல்வேறு
சங்கதிகள் குழந்தைகளிடமும் இருக்கிறது.
ஆக, குழந்தைகள் என்பவர்கள் யார் என்று ஒரு பொதுத்தளத்தில் ஒரு விவாதத்தை உருவாக்குகிற போது, பேசுகிறபோது அங்கே கிடைக்கிற பதில்கள் குழந்தைகளை ஒவ்வொரு தனிநபரும் எவ்வாறு பார்க்க விரும்புகிறாரோ, பார்க்க வேண்டும் என்று கருதுகிறாரோ அந்த வகையிலேயே குழந்தைகள் வெளிப்படுகிறார்கள் அல்லது குழந்தைகள் முன் வைக்கப்படுகிறார்கள் என்கிற எதார்த்தத்தை பார்க்க முடிகிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு அனுபவம். எனது பேராசிரியர் யாருக்கெல்லாம் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று கேட்டுவிட்டு கையை உயர்த்த சொன்னார். நாங்கள் எல்லோரும் அனேகமாக வகுப்பறை முழுவதும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று கையை உயர்த்தியவர்கள் இருந்தோம். அப்போது அவர் கையை உயர்த்தியுடன் சரி எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்லலாம். சொர்க்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை உங்கள் கையில் இருக்கிற வெள்ளைத் தாளில் நிரப்பி கொடுங்கள் என்றார். ஒவ்வொருவரும் வேகவேகமாக பட்டியலை எழுதினோம். அடுக்கி அவரது மேசையில் கொண்டு சேர்த்தோம். பட்டியல் முழுவதையும் பேராசிரியர் படித்து பார்த்தார். வளமான காடுகளும் மலைகளும் என்ற ஒருவர் எழுதியிருந்தார். நீண்ட செழிப்பான நதி வேண்டும் என்று ஒருவர் எழுதியிருந்தார். உயரமான கட்டிடங்களும் அதில் நானே நிர்வாகம் செய்யும் அளவிற்கு நிர்வாக திறனும் உடையவனாக என்று ஒருவர் எழுதியிருந்தார். பெற்றோருடன் வாழ வேண்டும் என்று ஒருவர் எழுதியிருந்தார். இப்படி விதவிதமான சொர்க்கம் குறித்த ஒரு 28, 30 வகையான பட்டியலை என் பேராசிரியர் மேஜை மீது வைத்திருந்தார்.
இந்த கேள்வியின் நோக்கம் அல்லது சொர்க்கம்
பற்றி அவர் பேசுவதற்கான நோக்கம் என்னவென்று எங்களுக்கு தெரியாது. அவர் கேட்டவுடன் எழுதி
பட்டியலை அவர் மேசை மீது வைத்தது நடந்தது. நண்பர்களே அவர் அந்த பட்டியலை முழுவதும்
வாசித்து விட்டு யாரும் இதில் எழுதாதவர்கள் உண்டா என்று கேட்டார். ஒரே ஒரு பெண், வகுப்பில்
இருந்த பெண் தோழி மட்டும் எழுதவில்லை என்று பதில் அளித்தார். மற்ற அனைவரும் பட்டியலை
இரண்டு பக்கத்திற்கு, மூன்று பக்கத்திற்கு எழுதியவர்கள் கூட உண்டு. முழுவதையும் படித்துவிட்டு
இந்த பட்டியலுக்குள் இருக்கிற ஒரு ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு
எதுவெல்லாம் இன்று கிடைக்கவில்லையோ அதுவெல்லாம் வேண்டுமென்று சொர்க்கத்தில் பட்டியலிட்டு
இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு ஒரு பதிலளித்தார். இதுதான் குழந்தைகள் பற்றி நமக்கு
இருக்கிற பார்வை. இப்படித்தான் குழந்தைகளை இந்த சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது
என்று நான் நினைக்கிறேன்.
உண்மையிலேயே குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும்
என்று நாம் விரும்புகிறோம் என்றால் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிற
விருப்பத்தின் அடிப்படையிலேயே குழந்தைகள் மீது ஒருவிதமான அழுத்தம் தரப்படுவதாக அல்லது
பிம்பம் உருவாக்கப்படுவதாக நான் பார்க்கிறேன் நண்பர்களே.
தொடர்ந்து குழந்தைகள் பற்றிய உரையாடல், புத்தக
வெளியீடு, குழந்தைகள் சார்ந்து இருக்கிற சார்பு நிலை சார்ந்த ஆவணங்கள் எல்லாவற்றையும்
பார்க்கிறபோது குழந்தைகள் இவ்வாறு தான் இருக்கிறார்கள். குழந்தைகள் அவ்வாறு தான் இருக்கிறார்கள்
என்ற முன் முடிவுகளை இந்த சமூகம் அவர்கள் முன் கொட்டி விடுகிறது. இந்த சமூகத்தின் சார்பாக குழந்தைகளை
கற்பவர்கள் இருக்கிறார்கள். சமூகத்திற்காக குழந்தைகளை கற்பவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்காக
குழந்தைகளை கற்பவர்கள் இருக்கிறார்கள் என்று குழந்தைகளை கற்பவர்கள் தனி வகையாக நாம்
பிரிக்க முடியும்.
குழந்தைகள் என்று ஒரு வரையறையை யார் முன் வைத்தாலும்
அவர் குழந்தையை பற்றி என்ன விரும்புகிறார் என்பதிலிருந்தே அந்த வரையறை துவங்குவதாக
நான் பார்க்கிறேன். ஒரு பெரிய புத்தகத்தை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எனக்கு.
குழந்தைகள் குறித்த, குறிப்பாக கல்வி குறித்த தமிழகத்தில் இருக்கிற பல்வேறு ஆவணங்களை
சேகரித்து தயாரிக்கப்பட்ட புத்தகம் அது. அந்த புத்தகம் முழுவதும் குழந்தைகளை மையப்படுத்தப்பட்ட
புத்தகம். புத்தகம் முழுவதும் கல்வி குறித்தான வரலாற்று ஆவணங்களை, கல்வியாளர்களுடைய
பெரும் பெரும் தொகுத்து ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கிற புத்தகம் அது. இந்த புத்தகம் முழுவதும் நிரம்பி வழிகிற செய்திகளும்
ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிற தொகுப்புகளும் குழந்தைகளைப் பற்றிய ஆவணமாக எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்
கூறினார்கள். குழந்தைகளினுடைய கற்ற, குழந்தைகளினுடைய செழுமை, குழந்தைகளினுடைய எதிர்காலம்,
குழந்தைகளுக்கும் சமூகத்திற்குமாய் இருக்கிற
உறவு, குழந்தைகள் என்னவெல்லாம் செய்யவிருக்கின்றன. என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது
என்று அதற்குள் இருக்கிற முரண்பாடுகள் குழந்தைகள் உளவியல் என்று குழந்தைகளை சுற்றி
இந்த சமூகம் என்ன கருதிக் கொண்டிருக்கிறதோ, என்ன கருதி வந்திருக்கிறதோ, என்னவெல்லாம்
செய்ய வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறதோ எல்லாவற்றையும் உரையாடுகிற ஒரு பெரும்
ஆவண தொகுப்பு.
அந்த தொகுப்பின் வழியாக பார்க்கிற போது, பேசுகிறபோது
குழந்தைகள் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று சில கல்வி முறைகள இந்த வரலாறு வகுத்து
வைத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகளுக்கு கல்வி முறையை புகட்டுவது
எவ்வாறு என்பது குறித்து உளவியல் ஆய்வாளர்களினுடைய அரும்பெரும் பணி பதிவு செய்யப்பட்டிருப்பதை
பார்க்க முடிகிறது. குழந்தைகளும் கல்விக்கூடங்களும்
கல்வி கூடத்திற்குரிய குழந்தைகளை உருவாக்குவது எப்படி? குழந்தைகளுக்குரிய கல்வியை உருவாக்குவது
எப்படி? என்ற உரையாடல்களும் சட்டபூர்வமான நடவடிக்கைகளும் எவ்வாறு தொகுக்கப்பட்டிருக்கின்றன,
செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறித்தான ஒரு பகுதியும் அந்த புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கிற நாடுகள் மீது வளர்ந்த
நாடுகள் குழந்தைகள் மீது வைத்திருக்கிற பார்வை என்ன, குழந்தைகளுக்காக உருவாக்கி வைத்திருக்கிற
கல்வி முறை என்ன, உலகம் முழுவதும் அறிவில் நிரம்பி வழிகிற பள்ளிக்கூடங்களும் கல்வி
சாலைகளும் பல்கலைக்கழகங்களும் குழந்தைகளை மையமாகக் கொண்டு இயங்குகிற இயங்கும் முறை
என்ன. கல்வியை மையமாக கொண்டு இயங்குகிற இயங்கு முறை என்ன என்றெல்லாம் அந்த புத்தகம்
ஆவணப்படுத்தி இருந்தது. இன்னும் இந்தியாவில் இருக்கிற கல்வி முறை வளர்ந்து வந்த பாதை, இந்தியாவைச் சுற்றி கல்வி முறைகளில் இந்தியா பெற்றுக்
கொண்ட அனுபவம் என்ற வகையில் முழுக்க கல்வி குறித்து பேசப்பட்ட புத்தகமாக இருந்தாலும் கூட அது குழந்தைகள்
குறித்து பேசப்படுகிற புத்தகமாக இருக்கிறது
என்ற ஒரு பிம்பத்தோடு அந்த புத்தகம் எனக்கு அறிமுகமானது நண்பர்களே.
இந்த புத்தகத்தின் வழியாக நானும் இந்த புத்தகம்
முழுவதும் வாசிப்பதற்கான பெரும் முயற்சியோடு வாசித்து முடித்த பின்பு குழந்தைகளை மையமாக
வைத்து எழுதப்பட்ட புத்தகமாக எனக்கு ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. குழந்தைகளோடு முரண்படுகிற
புத்தகமாக அது இருந்தது. அந்த புத்தகத்தில் குழந்தைகள் என்னவாக மாறுவதற்கு கல்வி வேலை செய்கிறது என்று ஒரு இடம்
வருகிறது. அல்லது குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுப்பதன் வழியாக அந்த குழந்தையை இன்னும்
மேன்மையானவராக மாற்ற முடியும் என்று ஒரு இடம் வருகிறது.
குழந்தையினுடைய அக உலகம் குறித்து, உளவியல்
குறித்து ஆய்வு செய்கிற பல்வேறு கல்வி முறைகளை
முன்வைத், கல்வி முறைகளினுடைய ஆவணங்களை கல்வி முறைகளினுடைய கருத்தாக்கங்களை முன்வைத்து சில பட்டியல்களை அந்த
புத்தகம் முன்வைத்திருந்தது. வகைப்படுத்தியிருந்தது. அப்படி வகைப்படுத்தி இருக்கிறபோது
மதிநுட்பம், விருப்ப ஆற்றல், இறை நம்பிக்கை, தனி மனிதனுக்கு இடையே இருக்கிற உரையாடல்,
உறவாடல், அறிவுத் தேடல், மேன்மையான மனிதன், புத்திசாலியான மனிதன் என்று ஒரு சில பட்டியலை
கல்வி முறைகளுக்குரிய அடிப்படை தகுதிகளாக, கல்வி முறைகளுக்குரிய அடிப்படை விவரங்களாக
கல்வி முறைக்கு தேவையான செழுமைப்படுத்தப்பட்ட குறிப்புகளாக அந்த புத்தகம் சிலவற்றை
முன் வைத்தது. ஒவ்வொன்றும் வேறுவேறு காலகட்டங்களில் வேறுவேறு அமைப்பு முறையில் சமூக
மாற்றங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து எடுத்து
வைக்கப்பட்ட முயற்சியை இந்த புத்தகம் பட்டியலிட்டிருக்கிறது.
விருப்பாற்றல் என்பதை கிரேக்க கல்வி முறையில்
எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்தவ கல்வி முறையில் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மேற்கத்திய, ஐரோப்பிய கல்வி முறையில் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற வெவ்வேறு வகையான பார்வையிலும் கூட அந்த புத்தகத்தை
ஆய்வாளர் பட்டியலிட்டியிருந்தார். அந்த புத்தகத்திற்குள்
அப்படியான ஒரு வகைமையைத் தொகுத்திருந்தார்.
எனக்கு அந்த புத்தகத்தை படித்தவுடன் வந்த கேள்வி
- மதிநுட்பம் என்பதற்கும் குழந்தைகள் என்பதற்கும் இடைவெளி இருக்கிறதா என்பது எனக்கான
கேள்வியாக தோன்றியது. குழந்தைகள் மதிநுட்பம்
மிக்கவர்களா, இல்லையா. மதிநுட்பம் மிக்கவர்கள் என்றால் மதிநுட்பம் குறித்த ஒரு உரையாடலை
செய்ய வேண்டும் என்றால் மதி நுட்பத்தில் இருந்து ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்றால்
அது குழந்தைகளுக்கு பழகக் கூடியதா, இருப்பிலே இருப்பதா என்று கேள்வி வருகிறது. மதி
நுட்பம், இறை நம்பிக்கை, இறை நம்பிக்கைக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கிற தொடர்பு
என்ன? இடைவெளி என்ன? குழந்தைகள் அறிவாற்றல்
மிக்கவர்களா, இல்லையா? இப்படி உலகம் முழுவதும் இருக்கிற கல்வி முறையானது உலகம் முழுவதும்
இருக்கிற நடைமுறையானது கல்வியினுடைய பாதை முழுவதும் கடந்து வந்த வரலாற்று ரீதியிலே
பார்க்கிற போது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட, உருவாக்க வேண்டும் என்று நினைக்கப்பட்ட,
விரும்பப்பட்ட கல்வி முறைகளுக்குள் சில பட்டியல்களை சில வகைகளை இந்த சமூகம் தொகுத்து
வைத்திருக்கிறது. இந்த சமூகம் அடைகாத்து வைத்திருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment