Sunday, June 18, 2023

குழந்தைகள் அக உலகம் - உரையாடல் 5 // சிவ.கதிரவன்

                                                 குழந்தைகள் அக உலகம்

www.swasthammadurai.com


ஒரு குழந்தை படைத்த பொருட்களை எல்லாம் கிழித்து எறிகிறது என்பதை சாமுவேல் ஹானிமேனிடம் அழைத்துச் சென்று கேட்டோம் என்றால் சாமுவேல் ஹானிமேன் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து கிழித்து எறிகிற குணம் யாருடைய குணம் என்று ஆய்வு செய்கிறார். கிழித்து எறிகிற குணத்தினுடைய ஒரு மிருகத்தை அவர் கண்டுபிடிக்கிறார். அந்த மிருகத்தினுடைய அடிப்படையிலிருந்து ஒரு மருந்தை தேர்வு செய்கிறார். அந்த மருந்தை வீரியப்படுத்துகிறார். அந்த மருந்தை வீரியப்படுத்திய பின்பு அந்த குழந்தைக்கு தேவையான அளவு அந்த மருந்தை குழந்தைக்கு புகட்டுகிறார். அந்த குழந்தை தன் கையில் இருக்கிற கிழித்து எறிகிற தன்மையை கைவிடுகிறது.  இது சாமுவேல் ஹானிமேனினுடைய  உளவியல் பார்வை. இது பகுப்பாய்வு.

ஆக, ஒரு குழந்தை கிழித்து எறிந்தால் எறியட்டும் என்று நான் முடிவு செய்து தாள்களை கொடுத்துக் கொண்டே இருப்பது என்பது ஒரு அணுகுமுறை என்றால், கிழித்து எறிகிற ஒரு பொறுப்பின்மையை பேசி பார்க்கிற வேறொரு உளவியலை மறுப்பதா, ஏற்பதா என்ற ஒரு கேள்வியை நாம் கவனமாக பார்க்க வேண்டியிருக்கிறது. என் குழந்தை எப்போதும் கையில் இருக்கிற எல்லாவற்றையும் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு பெண்மணி  குழந்தையை அழைத்து வந்தார். நான் எனக்கு மேலாக வைத்தியம் பார்க்கிற எனக்கு மேலாக வைத்தியத்தில் மிகச் சிறந்த நபராக இருக்கிற ஒரு வைத்தியரிடம், அவர் ஹோமியோபதி நிபுணர். அவரிடம் அனுப்பினேன். போட்டு உடைப்பது தான் அந்த குழந்தையினுடைய எல்லா விளையாட்டுத்தனமும். போட்டு உடைக்கிறது, போட்டு உடைக்கிறது. என்ன கொடுத்தாலும் போட்டு உடைத்து விடும்.  அப்படி போட்டு உடைக்கிற குழந்தையாக இருக்கிற அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு நான் பரிந்துரை செய்த அந்த நிபுணரிடம் அவர்கள் சென்றபோது அவர்கள் அந்த குழந்தையோடு உரையாடினார்கள். இருவரும் ஒரு மையத்தை கண்டுபிடித்து சில மருந்துகளை அந்த குழந்தைக்கு அவர் பரிந்துரைத்தார். என் பார்வையில் அந்த குழந்தை போட்டு உடைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் அவர் அந்த குழந்தைக்கு அந்த மருந்தை கொடுத்தவுடன் அந்த குழந்தைக்கு போட்டு உடைக்கிற கோளாறு மட்டுமல்ல. போட்டு உடைக்கிற குணம் மட்டுமல்ல. அந்த குழந்தையினுடைய சளி தொந்தரவு சரியாகி இருக்கிறது.  அந்தக் குழந்தையினுடைய தோள்களில் இருந்த வெண் புள்ளிகள் மாறத் தொடங்கி இருக்கிறது. அந்த குழந்தையினுடைய மலஜல கழிப்பு நிலை மாறத் தொடங்கி இருக்கிறது. அந்த குழந்தையினுடைய சுவாசம்  சீராக தொடங்கி இருக்கிறது. இவை எல்லாமும் கலந்த ஒன்றாக ஒரு மருந்தை தேர்வு செய்து அந்த நிபுணர் அந்த குழந்தைக்கு பரிந்துரைத்தார். என் பார்வையில் அந்த குழந்தையை அப்படியே விட்டு  விட வேண்டும் என்று நிறுத்திக் கொண்டிருந்தால் அந்த குழந்தையினுடைய வெண்புள்ளியை, அந்த குழந்தையினுடைய சுவாசக் கோளாறை, அந்த குழந்தையினுடைய மலஜல பிரச்சனையை எங்கிருந்து துவங்குவது, எவ்வாறு சரி செய்வது?  இப்படியான வெவ்வேறு வகைப்பட்ட அம்சங்களோடு ஒரு குழந்தையை பார்க்க வேண்டியிருக்கிறது என்கிற தன்மையில் குழந்தைகளைப் பற்றிய  புரிதலும் உரையாடலும் நமக்கு அவசியமாகிறது நண்பர்களே.

அந்த வகையில் குழந்தை பற்றிய பார்வை என்பது ஒற்றை புள்ளியில் நிறுத்துவதும் விரிவாக பேசுவதுமாக ஒரு முடிவிலிருந்து பார்ப்பதற்கில்லை. அவசியம் ஏற்படும் என்றால் வெவ்வேறு அம்சங்களில் அவற்றை உரையாடி பார்ப்பது தேவையாகிறது. அவசியம் இல்லாத காலங்களில் அல்லது மீண்டும் வேறொரு அவசியம் ஏற்படும் என்றால் ஒற்றை புள்ளியில் குழந்தைகளைப் பற்றி நாம் நிறுத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ஒரு குழந்தை பற்றிய  பார்வை என்பது நமக்குள் அசைந்து கொண்டே இருக்கிற ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...