படைப்பு – படைப்பாளி - வாசகர்
மிர்தாதின் புத்தகத்தை நீங்கள் ஆர்வத்தோடு வாசிக்க வேண்டும். நீங்கள் ஆழமாக வாசிக்க வேண்டும். மிர்தாதின் புத்தகத்தை ஆழத்தோடும் ஆர்வத்தோடும் வாசிப்பதற்கு அடிப்படையான இந்த இரண்டு புரிதலும் உங்களுக்கு அவசியமாகிறது. ஒன்று உண்மையிலேயே படைப்பு என்பது என்ன? இன்னொன்று உண்மையிலேயே படைப்பாளர் என்பவர் யார்?
படைப்பாளர் என்கிற வார்த்தையை சம காலத்தில் திருவிவிலியத்திலும் குர்ஆனிலும் பின்பற்றப்படுகிற மறை செய்யுள்களில், மறைநூல்களில், மறை குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.இறைவன் உலகத்தை படைத்தார். படைப்பாளன் அளவற்ற அன்புடையோன், நிகரற்ற இரக்கம் உடையவன் என்று படைப்பாளனை கூறுகிற குறிப்புகள் குர்ஆனில் இருக்கிறது.
படைப்பாளன் என்பவன் யார் என்று நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் குர்ஆனின் அடிப்படையில் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கிற போது படைப்பாளன் என்பவன் இறைவன். படைப்பாளன் என்பவன் இறைவன் என்று நாம் அளவுகோலாக வைத்திருந்தால் இங்கு இருக்கிற படைப்பாளர்கள் யாவரும் இறைவனுக்கு அல்லது இறைவன் என்று மறுக்கப்படுகிற அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிற விவாதத்திற்கு எவ்வளவு பொருந்துவார்கள் என்பது கேள்விக்குறி. ஆனால் படைக்கிற படைப்பாளி என்பவர் யார் என்று நீங்கள் புரிந்து கொள்ளாமல் மைக்கேல் நைய்மினுடைய மிர்தாதின் புத்தகத்தை அவ்வளவு எளிதாக படித்து விட முடியாது.
ஆயிரக்கணக்கான பெரும் கதையாடல்களை நீங்கள் பார்க்க முடியும். படிக்க முடியும். வாழ்வில் நெடும் பயணம் செல்கிற போது வாழ்க்கை முழுவதும் இலக்கியவாசிப்பு செய்கிற போது வாழ்வெல்லாம் நீங்கள் புத்தகங்களின் வழியாகவே நீங்கள் உங்கள் காலத்தை கடத்தி விட்டாலும் கூட, நல்ல படைப்பாளர் யார் என்று உங்களுக்குப் புரிந்திருந்தால் ஒற்றை படைப்பு உங்களுடைய வாசிப்பின் நோக்கத்தை நிறைவு செய்துவிடும். நீங்கள் வாசிக்கிற ஒற்றைப்படைப்பு,உங்களை சந்திக்கிற ஒற்றைப் படைப்பாளி உங்கள் வாழ்வினுடைய வாசிப்பின் எல்லா எல்லைகளையும் எல்லா இலக்குகளையும் கடந்து நிறைவு செய்கிற வேலையை செய்துவிடுவார். அத்தகைய வல்லமையை, அத்தகைய புரிதலை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு மிக அடிப்படையாக நீங்கள் துவங்க வேண்டிய இடம் படைப்பு என்பது என்ன? படைப்பாளி என்பவர் யார்? படைப்பு என்பது பிரபஞ்சத்தின் மௌனத்தை, இருத்தலின் குறிப்பை எழுத்துக்களின் வழியாக பரிமாறுகிற ஒன்றாக இருக்க வேண்டும்.
சமூகத்தின் நிலையை படைக்கிற, சமூகத்தின் கதைகளைப் படைக்கிற என்று படைப்பு குறித்து வித விதமான இலக்கண குறிப்புகளை நாம் பார்க்க முடியும். திரைப்படங்களை எடுத்துக் கொள்கிறோம். நாடகங்களை எடுத்துக் கொள்கிறோம். இன்ன பிற இலக்கிய வடிவங்களை எடுத்துக் கொள்கிறோம். எல்லாமும் சமூகத்தின் கண்ணாடி என்று தம்மை பிரதிபலித்துக் கொண்டு முன் நிற்கின்றன.
ஒரு திரைப்படத்தை பற்றி விமர்சனம் பேசினால் ஒரு மேடை கலையைப் பற்றி விமர்சனம் பேசினால் அவர்கள் சொல்கிற குறிப்புகள் சமூகத்தில் என்ன நடக்கிறதோ அவற்றை கண்ணாடி போல் படைப்புகள் பிரதிபலிக்கின்றன என்பதை நம் முன்னால் சொல்கிறார்கள். நமக்கு அது ஏற்புடையதாக இருப்பது போன்று அவர்கள் அழுத்துகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் சொல்கிற விமர்சனம் நியாயமானது அல்ல. உண்மையானதும் அல்ல.
படைப்பு என்பது அப்படியானது அல்ல. காலம் கடந்து இன்று காட்டப்படுகிற சமூக கண்ணாடி நாளை மாறிவிடும். ஆக இது நிரந்தரமில்லாத சமூகக் கண்ணாடி. நிரந்தரம் இல்லாத சமூக கண்ணாடி நல்ல படைப்பு அல்ல. அது ஒரு படைப்பு. நிரந்தரம் இல்லாத சமூக கண்ணாடி போல் இருக்கிற படைப்பு. நல்ல படைப்பு என்பது காலத்திற்கும் நிற்பது. எல்லா காலத்திற்கும் நிற்பது.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். எல்லா காலத்திலும் எழுத்திற்கு அகரம் முதன்மையானது. உலகிற்கு இறைவன் முதன்மையானவன். இதில் ஏதாவது காலம் கடந்து கண்ணாடி போல் பார்க்கிறபோது கற்காலத்தில் எழுத்துகளுக்கு வேறு ஒன்றும் உலகிற்கு வேறு ஒன்றும் முதன்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. இனி வருகிற எதிர்காலத்தில் எழுத்துக்கு வேறொன்றும் மனிதர்களுக்கு பூமிக்கு வேறொன்றும் முதன்மையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லா காலத்திற்கும் எப்பொழுதும் எழுத்துக்களுக்கு முதன்மையானது அகரம். இந்த உலகத்திற்கு முதன்மையானது இறை. இந்த சொல் எப்போதும் மாறுவதில்லை. இது காலத்தின் கண்ணாடி அல்ல. இது பண்பாட்டை பிரதிபலிப்பது அல்ல. இது சமகாலத்தில் உரையாடப்படுகிற உரையாடல்களை ஒருங்கிணைத்து சொல்லப்படுவது அல்ல. இது படைப்பு. இது பேருண்மை.
எப்போதும் யாரும் எந்த பண்பாட்டிலும் எந்த சூழலிலும் எந்த நிலையிலும் இருந்து இதை வாசிக்கிற போது சாலப் பொருத்தமாக பொருந்தி வருகிற கோட்பாடு. இப்படித்தான் படைப்புகள் இருக்க வேண்டும். இதை தான் படைப்பு.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment