Monday, July 10, 2023

கல்வி – இலக்கும் இலக்கணமும் - உரையாடல் 2// சிவ.கதிரவன்

                                     கல்வி – இலக்கும் இலக்கணமும்

www.swasthammadurai.com


ஒரு குழந்தை படிக்கிற போது என்ன நிகழ்கிறது. நீ ஏன் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம் அல்லது சமூக சமூகம் வலியுறுத்துகிறது. ஏன் அதிகமாக பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சமூகம் வலியுறுத்துகிறது. உன்னை சுற்றி அதிக நபர்கள் இருக்க வேண்டும் என்று சமூகம் வலியுறுத்துகிறது. இவை எல்லாமும் நாம் சரி என்று ஏற்றுக் கொள்கிறோம். ஒரு மனிதன் சரி என்று ஏற்றுக் கொள்கிற எல்லாமும் கல்வியினுடைய இலக்காக இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஒரு மனிதனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இது வேண்டுமா என்றால் வேண்டும். ஒரு மனிதனைச் சுற்றி நிறைய உறவுகள் இருக்க வேண்டும். வேண்டுமா என்றால் வேண்டும். ஒரு மனிதன் செலவு செய்வதற்கு, வாழ்வை மென்மையாகவும் வளமையாகவும் வாழ்வதற்கு அவனுக்கு பணம் அவசியமாகிறது. அவசியமாகிறதென்றால் அவசியமாகிறது. ஒருவன் கேள்வி கேட்டு தன்னை ஆய்வு செய்து கொள்வதற்கு ஒரு கருத்தாக்கம் வேண்டி இருக்கிறது. ஆமாம் வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனுக்கு வேலை வேண்டி இருக்கிறது. வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகாரம் வேண்டி இருக்கிறது. வேண்டி இருக்கிறது. ஒரு மனிதன் சமூகத்தால் அங்கீகரிப்படுவது தொடங்கி அழகு, கவனம், ஆளுமை, சரியான பாதையில் செல்லுதல் என்று வேறுவேறு விவரங்கள் அவனுடைய மலைப்பை, அவனுடைய பயத்தை, அவனுடைய பதற்றத்தை தின்று அதற்கே தீனியாக மாறுகிற அம்சங்களோடு அமைந்திருக்கின்றன என்பதை நாம் பார்ப்பதன் வழியாக மட்டுமே கல்வி என்ன செய்வது என்பதை கண்டு கொள்ள முடியும்.

ஒரு மனிதனுக்குள் இருக்கிற இத்தகைய மலைப்பையும் இத்தகைய அதிகார வேட்கையையும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற தன்மையையும் தன்னை சுற்றி நிறைய நபர்கள் இருக்க வேண்டும் என்கிற தேவையையும் தனக்கு இருக்கிற கலக்கத்தை நீக்கிக்  கொள்வதற்கான ஆய்வு முறை நமக்குள் வேண்டும் என்கிற தன்மையையும் உள்ளடக்கமாக கொண்டு ஒரு கருத்தாக்கத்தை வடிவமைத்தோம் என்றால் சமூகம் வடிவமைத்து வெற்றி பெறுகிறது என்றால் அதற்குப் பெயர் கல்வி.

நம் குழந்தைகள் முன் வைக்கிற, பெற்றோர் முன் வைக்கிற கல்விக்காக பரிந்துரைக்கின்ற எல்லா பரிந்துரைக்குள்ளும் இருக்கிற ஒற்றை மறைந்திருக்கிற வடிவம் இந்த ஒன்றுதான்.

உங்கள் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். ஒரு குழந்தை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் கல்வி கற்க வேண்டும். உங்கள்  குழந்தையை சுற்றி அதிக நபர்கள் மகிழ்ச்சிக்குரிய நபராக உங்கள் குழந்தை மாறி அதிக நபர்களை இணைத்து கொள்ள வேண்டும் என்றால் கல்வி கற்க வேண்டும். உங்களுக்கு உரிய அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டுமென்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். உங்களுக்குள் இருக்கிற பேதைமைகள் நீங்க வேண்டுமென்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். உங்கள் பயமும் கலக்கமும் போக வேண்டுமென்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். உங்களை அழகாக, அறிவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். நீங்க கவனமாக செயல்பட வேண்டும் என்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். நீங்கள் ஆழமாக நட்பு பாராட்ட வேண்டும் என்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும். உங்களோடு ஒருவர் இணைந்து கொள்வதற்கும் ஒரு உறவை நீங்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும் உரிய புத்திசாலித்தனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கல்வி கற்க வேண்டும் என்று உங்கள் மனதில் இருக்கிற, ஒரு குழந்தையின் மனதில் இருக்கிற, ஒரு சமூகப் பிரஜையின் மனதில் இருக்கிற வேட்கையை, அறியாமையை, பதற்றத்தை போக்கிக் கொள்வதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் ஒரு தேவை ஏற்படுகிற போது நம் முன் சமூகம் வைத்திருக்கிற மிக முக்கியமான பொக்கிஷமாக கல்வி மாறி இருக்கிறது என்பதை நாம் தவிர்க்கவே முடியாமல் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையிலேயே கல்வி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இன்று நவீனமாக இருக்கிற எல்லா அரசு, எல்லா தனியா கல்வி முறைகளும் இயங்குகிற இயங்குமுறை இதைச் சுற்றி தான் இருக்கிறது என்பதை நான் அப்பட்டமாக பார்க்கிறேன். ஒரு பெரிய பள்ளிக்கூடம் அல்லது ஒரு பெரிய கல்லூரி ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் இருக்கிற படித்து வருகிற ஒரு மாணவன் அவன் மனதளவில் என்னவாக வெளிப்பட்டு வெளி வருகிறார் என்று பார்க்கிற போது நான் நிறைய படித்து இருக்கிறேன். சரி, நிறைய படித்து இருக்கிறீர்கள். பின்பு, இந்த படிப்பை கொண்டு வேறு ஒரு நல்ல வேலைக்கு  செல்வேன். நல்ல வேலைக்கு செல்வதன் வழியாக சமூகம் என்னை மதிப்புக்குரியதாக பார்க்கும். பார்ப்பதன் வழியாக, நான் உயர்ந்தவனாக மாறிக் கொள்வேன். மாறிக் கொள்வதன் வழியாக, என்னுள் இருக்கிற பயமும் என்னுள் இருக்கிற பதற்றமும் நீர்த்துப்போகும் அல்லது காணாமல் போகும். நான் பயமில்லாத, பதற்றம் இல்லாத, நிதானமான மனிதனாக வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து முழு படிப்பையும் படித்து முடித்த இளைஞன் வெளியில் வருகிற போது நம்புகிற சொல்லுகிற வாக்கியமாக இவை அமைந்திருக்கின்றன.

இப்படியான வாக்கியங்களை படிப்பின் வழியாக, வேலையின் வழியாக, கல்வியின் வழியாக ஒரு வரலாற்று ஆவண குறிப்புகளை திரட்டுபவர் என்கிற மோகத்தில் வழியாக, காதலின் வழியாக, அங்கீகாரத்தின் வழியாக தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன என்பதை நாம் பார்க்கத்தான் வேண்டி இருக்கிறது. இப்படித்தான் கல்வியினுடைய சாராம்சம் இன்று நம்முன் காணக் கிடைக்கிறது.

நாம் பார்க்கிற கல்வி முறைக்குள் இருக்கிற மென்மையான நீரோட்டம் இப்படியானதாகத்தான் இருக்கிறது. இவற்றை கல்வி என்று போற்றுவது எவ்வளவு சரியானது என்பதை தேடுகிற போது எல்லா கல்வி முறைகளும் இவற்றை மையப்படுத்தியே இருக்கின்றன.

ஒரு மனிதன் ஏன் படிக்க வேண்டும்? வேலைக்கு படிக்க வேண்டும். ஒரு மனிதன் ஏன் படிக்க வேண்டும்? நான் சொன்ன எல்லா காரணங்களும் இவற்றில் பொருந்தும். இன்னும் புதிய காரணங்களும் இவற்றிற்குப் பொருந்தும். என் குழந்தையை நான் நன்றாக வளர்க்க வேண்டும் என்று ஒரு பெற்றோர் விரும்புகிறார். அந்த பெற்றோரின் சமூக கடமைகளில் இருந்து அந்தக் குழந்தை முறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று அந்த பெற்றோர் விரும்புகிறார். இந்த சமூக கடமைக்குள் அந்த பெற்றோரின் கனமான பகுதிகளும் அந்த பெற்றோரின் மனதில் இருக்கிற அடர்த்தியான தேவைகளும் உள்ளடக்கமாக இருக்கிறது என்பது ஒரு புறம். அவை உள்ளடக்கமாக இருக்கின்றன என்பது ஆழமான வேறொரு பேசு பொருள். அது இல்லாமல் அந்த குழந்தை ஒரு கல்வியை எப்போது ஏற்றுக் கொள்கிறது. ஒரு குழந்தை ஒரு கல்வியை எப்போது தனக்கானதாக அனுமதித்துக் கொள்கிறது என்று பார்க்கிற போது அந்தக் குழந்தை இந்த சமூகத்தில் வெற்றி பெற வேண்டும் என்று மலைக்க துவங்குகிற போது இந்த சமூகத்தில் வாழ்ந்தாக வேண்டும் என்று தடுமாற துவங்குகிற போது யார் முதலில் கை நீட்டுகிறார்கள் என்றால் கல்வி முறை முதலில் கை நீட்டுகிறது.

எனக்கு பயமாக இருக்கிறது, என்ன செய்வது, என் அப்பாவோடு எப்படி உரையாடுவேன். ஏன் உன் அப்பாவோடு உரையாடுவதில் இவ்வளவு தயக்கம் என்று கேட்டீர்கள் என்றால் என் அப்பா நன்றாக படிக்க வில்லை என்றால் என்னை அடிப்பார். இந்த உறவு என்னை விட்டுப் போய்விடும் என்று அச்சமாக இருக்கிற போது எனக்கு பயமாக இருக்கிற போது இந்த உறவு என்னோடு இருக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்வது? நீ நன்றாக படிக்க வேண்டியது தானே. நீ நல்லா படிச்சா எல்லாரும் உன் பக்கத்துல இருக்க போறாங்க’ என்று சொல்லப்படுகிறது. நீ நன்றாக வேலை பார்த்தால் எல்லோரும்  உன்னை போற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது. நீ வேலை பார்ப்பதற்கும் எல்லோரும் உன்னுடன் இருப்பதற்கும் அடிப்படையாக நீ செய்ய வேண்டியது படித்துக்கொள். வெற்றி பெறு; படித்துக் கொள், வெற்றி பெறு; என்று மீண்டும் மீண்டும் கல்வி குறித்து ஒரு பெரிய வேலையை இந்த சமூகம் செய்து கொண்டே இருக்கிறது என்பதைப் பார்ப்பதும் இந்த சமூகத்திற்கு பின்னணியாக இந்த சமூகத்தின் உள்ளடக்கமாக சமூக செயல்பாட்டினுடைய உட்கருத்தாக கல்வி என்கிற மறைபொருள் மறைந்துள்ளது என்பதையும் நாம் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது. தவிர்க்க முடியாமல் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படி கல்வியினுடைய துவக்க கால ஆய்வில் இருந்து துவங்குகிற போதும் கல்வியின் தற்கால நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கிற போதும் மனித பதற்றம் நீங்குகிற போது கல்விக்கு வேலை இல்லை. ஒரு மனிதன் எப்போது அதிகாரம் வேண்டாம் என்று நினைக்கிறானோ அவன் படிக்க வேண்டியது இல்லை. ஒரு மனிதன் எப்போதும் வெற்றி பெற வேண்டாம் என்று  கருத துவங்குகிறானோ அப்போது அவன் படிக்க வேண்டியதில்லை. ஒரு மனிதன் எப்போது எனக்கு வேலை வேண்டாம், காதல் வேண்டாம், அங்கீகாரம் வேண்டாம், சுற்றம் வேண்டாம், நான் எனக்கு போதுமானவன் என்று நிறைவுறத் துவங்குகிறானோ, நினைக்கத் துவங்குகிறானோ அவனுக்கு கல்வியும் கல்வி கூடமும் அவசியம் இல்லாத  பொருளாக ஆகின்றன என்பது மட்டுமல்ல. அவையெல்லாம் சுமையாக மாறி விடுகின்றன.

நீங்கள் ஒவ்வொருவரையும் சுய பரிசீலனையாக செய்து பார்க்க முடியும். எனக்கு கல்வி வேண்டாம் என்று நீங்கள் துவங்க வேண்டாம். எனக்கு அதிகாரம் வேண்டாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த சமூகம் முன் வைக்கிற எந்த ஒன்றையும் நீங்கள் கற்றுக் கொள்ள மாட்டீர்கள். கற்றல் வேண்டாம் என்று முடிவு செய்வீர்கள். எனக்கு பணம் வேண்டாம் என்று முடிவு செய்தால் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ள அவசியமில்லை என்று முடிவு செய்வீர்கள். எனக்கு சுயமாக இருக்க முடியும் என்று நீங்கள் புரிந்து கொள்ளத் துவங்கினால் உங்களுக்கு கல்விக்கூடங்கள் பயன்படாது. எல்லாவற்றையும் பேதமையோடு ஏற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களுக்கு கல்வி முறையும் கல்விக்கூடமும் பயன்படாது. ஆகவே கல்வி முறையும் கல்விக்கூடங்களும் அவசியமாக இருப்பதற்கு நீங்கள் பயந்த நபராக பதற்றமான நபராக மலைக்கின்ற நபராக இருக்க வேண்டும் என்பது முதன்மையான கல்விக்கான தகுதி. இத்தகைய முதன்மையான கல்விக்கான தகுதியை கண்டுபிடித்த கல்வி முறைகள் தொடர்ந்து இத்தகைய பயத்தையும் பதற்றத்தையும் தொடர்ந்து தக்க வைக்கிற முயற்சியோடு வளர்ந்து இருக்கின்றன என்பதும் ஒரு ஆச்சரியமான வியப்பான, உண்மையாக கல்வி சாலைகளுக்குள் கல்வி வரலாற்றிகுள் நான் பார்க்கிறேன்.

கல்வி வரலாற்றிகுள் பார்க்கிறபோது திண்ணைப் பள்ளிகள் வந்திருக்கின்றன. குருகுல பள்ளிகள் வந்திருக்கின்றன. இஸ்லாமிய சமூக வளர்ச்சிக்கு பிறகு பள்ளிவாசல்கள் கல்விக்குரிய இடங்களாக இருந்திருக்கின்றன. இப்படி நிறைய கல்வியை போற்றுகிற இந்திய சமூகத்தில் விளைந்திருக்கிற எல்லா விளைச்சலுக்குள்ளும் ஒரு மனிதன் சமூகத்தோடு பொருந்துகிற மனப் போராட்டத்திற்குகான தேவையை தீர்த்து வைக்கிற முயற்சியாகவே கல்வி இருந்திருக்கின்றன என்பதை வரலாற்றின் வழியாக வெளிப்படையாக பார்க்க முடியும். இதற்கு இணையான வேறொரு பக்கத்தில் ஆன்மீகம் என்று சொல்லப்படுகிற பகுத்தறிவிற்கு உள்ளாகாத அல்லது பகுத்தறிவு என்று கருதப்படுகிற ஒரு கல்வி ஆய்வுகளும் தனியே நடத்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன என்பது தனியான வாதம். ஆனால் சமூகம் முன் வைக்கிற, சமூகம் பதிவு செய்து வைத்திருக்கிற வரலாற்று ஆவணங்களின் பெரும் குறிப்புகளை பார்க்கிறபோது எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிற ஒற்றை சமரசம் இல்லாத நிலைப்பாடு ஒரு மனிதனை சமூக பதற்றத்தை விளக்குவதாகவும் விளக்கிய பின்பு மீண்டும் அவற்றை பற்றிக் கொள்வதற்கான வேறொரு பதற்றத்தை மையமாக வைத்திருப்பதாகவும் கல்வி அமைந்திருக்கிறது. அப்படித்தான் கல்வி வரலாறு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குரு சீடர் உறவு முறையில் கல்வி அப்படி இருக்கிறது.  குருவைக் கண்டு பயப்படுவது என்று துவங்கி எல்லாவற்றையும் எப்படி பார்ப்பது என்பதற்கான போதனா முறைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

நவீன கல்வி முறையில் அல்லது கல்வி முறையில் மறுபரிசீலனைக்கு வரவேண்டும் என்று பார்க்கிறபோது என்று பார்க்கப்படுகிற போது உருவாக்கப்படுகிற கல்வி திட்டங்களும் கூட இத்தகைய கல்விக்குரிய சாராம்சங்களோடு பதற்றத்துக்குரிய சாராம்சங்களோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்க முடியும். இது கல்வி முறைகள் மீது வைக்கப்படுகிற விமர்சனம் என்று யாரும் புரிந்து  கொள்ள வேண்டாம். நான் கல்வி முறைகள் மீது வைத்திருக்கிற விமர்சனமாக இவற்றை சொல்லவில்லை. கல்வி கடந்து வந்திருக்கிற எதார்த்தமான வளர்ச்சி முறைக்கு ஆதாரமாக இருக்கிற  நிலை இது. ஆதாரமாக இருக்கிற மனப்பதற்றம் இது. ஆதாரமாக இருக்கிற மனிதனின் அக உணர்வு இதுதான். இந்த மனிதனுடைய அக உணர்வு கல்விக்குள் வளர்ந்து வருகிற போது கல்வியை ஒட்டி வளர்ந்து வருகிற போது இந்த மன உணர்வை கல்வி பற்றிக் கொள்கிற போது நடந்த எல்லா வளர்ச்சி முறைகளும் ஒன்றை ஒன்று விடா வண்ணம் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாத அளவிற்கு விரவியிருக்கின்றன. இது கல்வி மீதான விமர்சனம் அல்ல. கற்றல் முறைகள் மீதான விமர்சனங்கள் அல்ல. இவை எல்லாமும் நிஜமானது. இவை இப்படித்தான் வளர்ந்து இருக்கின்றன என்பதற்கான எனது கண்ணோட்டம் இது. நான் இப்படித்தான் கல்வி வளர்ந்து இருக்கிறது என்று பார்க்கிறேன்.

சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எதுவும் வேண்டாம் என்பவனுக்கு குருவும் வேண்டாம். சிஷ்யனும் வேண்டாம். கல்வி முறையும் வேண்டாம். திண்ணைப் பள்ளியும் வேண்டாம் என்பது நிஜம். ஆனால் கல்வி முறையும் திண்ணைப் பள்ளியும் குருவும் சிஷ்யனும் பயமும் அதிகாரமும் வேண்டும் என்று நினைக்கிற ஒருவனுக்கு இது எல்லாமே அவசியமாகின்றன என்பதை நான் பார்க்கிறேன்.

ஒரு மனிதனின் அக உணர்வில் ஏற்படுகிற பதற்றத்தின் வழியாகவே ஒரு மனிதன் கல்வியை நாடுகிறான். கல்வியை நாடுகிற ஒரு மனிதனுக்கு அக உணர்வை போக்குவதும் தொடர்ந்து வேறு ஒரு அக உணர்வில்  அழுத்தத்தை மையப்படுத்துவதும் கல்விக்கு சாத்தியமானதாக இருந்திருக்கிறது. நிலையாகவும் இருந்திருக்கிறது. அப்படித்தான் கல்வி முறை காலம் காலமாக வளர்வதற்கு துவங்கி இருக்கிறது நண்பர்களே.

                    .…தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...