கல்வி – இலக்கும் இலக்கணமும்
மெக்காலே கல்வி
முறை பற்றி
பேசாதவர்களே கிடையாது.
கல்வி பற்றி
பேசுகிற எல்லோரும்
மெக்காலே கல்வி
முறை பற்றி
பேசுகிறார்கள்.
1800களில் வெளியிடப்பட்ட
சாசனங்கள் கம்பெனிகளினுடைய
(கிழக்கிந்திய கம்பெனிகள்)
நிர்வாகத்தினுடைய உள்ளடக்கங்களை
மையமாக வைத்து
கல்வியை வரையறுத்தனர்.
இப்படி கல்வி
விரிகிறது. இந்த
கல்வியினுடைய நோக்கம்
ஒரு மனிதனினுடைய
பதற்றத்தை, பயத்தை,
அச்சத்தை, தவிப்பை
நீ அரசாங்கத்திற்கு
வேலை செய்தால்
உன்னால் பயமில்லாமல்
தவிப்பில்லாமல் இருக்க
முடியும் என்று
உள்ளடக்கமாக வைத்த
ஒன்றை நான்
பார்க்கிறேன். அப்படித்தான்
அவை வடிவமைக்கப்பட்டிருப்பதாக
நான் பார்க்கிறேன்.
தொடர்ந்து கல்வி முறைக்குள் இருக்கிற எல்லாம் முயற்சிகளும் அத்தகைய முயற்சியாகவே இருந்திருக்கின்றன. இன்னும் ஒரு முக்கியமான செய்தியை குறிப்பை நான் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகிறேன். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் ஆங்கிலேயனாக ஆனால் ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியனாக இருக்கும் ஒருவனை உருவாக்க வேண்டும் என்பது மெக்காலே அரசியல் சாசனத்தினுடைய உட்குறிப்பு. ஏறத்தாழ 200க்கு அதிகமான பக்கங்களை உள்ளடக்கமாக சரியாக சொல்ல வேண்டும் என்றால் 267பக்கங்கள் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. அப்படி உள்ளடக்கமாக ஒரு நிர்வாகத்திற்கு ஆதரவாக அதே இடத்தில் இந்தியாவில் நடத்தப்படுகிற நிர்வாகத்திற்கு ஆதரவாக, இந்தியனாக இருக்கிற ஒருவர் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மெக்காலே ஒரு சாசனத்தை மெக்காலே உருவாக்குகிறார். அந்த மெக்காலேயினுடைய கல்வி உருவாக்கத்திற்குள், சாசன உருவாக்கத்திற்குள் படித்துப் பார்க்கிறபோது முழுக்க அதனுடைய நோக்கம் கல்வியை பறைசாற்றுவதோ, கற்றலை உருவாக்குவதோ, கற்றலினுடைய விளைவுகளை பிரமிக்க வைப்பதோ, ஒரு மனிதனுடைய குறைந்தபட்ச அச்சத்தை போக்குவதோ என்றெல்லாம் இல்லாமல் அங்கே ஒரு அரசாங்கம் நடக்கிறது. அந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒரு நபரை உருவாக்க வேண்டும். அந்த அரசாங்கத்தினுடைய ஆதரவு நபராக அவர் இருக்க வேண்டும். அறிவால் ஒரு ஆங்கிலேயராகவும் நிறத்தால், குணத்தால், இனத்தால் இந்தியனாகவும் இருக்கிற ஒரு நபரை உருவாக்குவது அன்றைய கல்வியினுடைய வடிவமாக முயற்சியாக இருந்தது. அப்படித்தான் மெக்காலேயினுடைய கல்வி உருவாக்கப்பட்டது. அந்த உருவாக்கத்தின் வழியாகவே அங்கு இன்றும் மாணவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்கிற ஒரு விமர்சனமும் நாம் கேட்கிறோம். இதற்கு நோக்கம் நீ அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கிறபோது, அரசாங்கம் சொல்கிற வேலையை செய்கிறபோது, உன்னால் நிச்சயமாக வளமாக, நலமாக இருக்க முடியும் என்கிற பிரச்சாரத்தை ஒரு அகவுணர்விற்கு எதிராக, அகவுணர்விற்கு மாற்றாக சமூகம் முன் வைக்கிறது.
நான் அகவுணர்வில்
பதற்றமாக இருக்கிறேன்.
என் பதற்றத்தை
போக்கிக் கொள்வதற்கு
இந்த அரசாங்கம்
உதவி செய்யும்
என்ற ஏக்கத்தோடும்
நம்பிக்கையோடும் நான்
நகர்கிற நபராகவும்
இருக்கிறேன் என்பது
உண்மை. என்
பதற்றமும் அச்சமும்
நீங்கி வளமான
மகிழ்வான வாழ்வை
வாழ வேண்டும்
என்ற விருப்பம்
எனக்குள் எப்போதும்
இருக்கிறது. எல்லா
குழந்தைகளுக்கும் இன்று
இருப்பது போல்
எல்லா நபர்களுக்கும்
இன்று இருப்பது
போல் எப்போது
வாழ்ந்த மனிதனுக்கும்
பதற்றமும் பிரமிப்பும்
மலைப்பும் இருந்து
கொண்டே இருக்கிறது.
இவற்றை யார்
நீக்குவார்கள்? இன்று
என்னிடம் கேட்டால்
நான் ஒரு
நல்ல வணிகம்
செய்து இந்த
பதற்றத்தை நீக்கிக்
கொள்வேன். நிறைய
பணம் சேர்த்து
நீக்கிக் கொள்வேன்
என்று நான்
சொல்ல முடியும்.
ஒரு நூறு
ஆண்டுகளுக்கு முன்பு
இந்த பதற்றத்தை
நீக்குவதற்கு வேறொரு
சாத்தியத்தை சமூகம்
வைத்திருக்கிறது. அப்படி
ஒரு சாத்தியம்
அரசு வேலை.
ஆங்கில அரசாங்கத்தினுடைய
வேலை. ஆங்கில
அரசாங்கத்தில் வேலை
பார்த்தோம் என்றால்
எனக்கு தரப்படுகிற
கல்வியின் வழியாக
நான் ஆங்கில
அரசாங்கத்திற்கு வேலைக்கு
செல்ல முடியும்
என்கிற உண்மையில்
இருந்து அது
நகர்வதற்கு முயற்சிக்கிறது.
ஆனால் அதற்குள்
இருக்கிறாக அக
உணர்வு என்
பதற்றம் அரசாங்கத்திற்கு
ஆங்கில அதிகாரி
போல் நான்
படித்துக் கொண்டால்,
ஆங்கில அதிகாரி
போல் நான்
நகர்ந்து கொண்டால்,
இருந்து கொண்டால்
நான் பதற்றம்
இல்லாமல் மகிழ்வான
வளமான வாழ்க்கை
வாழ முடியும்
என்கிற உள்ளுணர்வின்
தீனியாக கல்வி
அன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது
என்பதை நாம்
பார்க்க முடியும்.
தொடர்ந்து ஆண்டு
கணக்கில் இந்த
ஆய்வு தொடர்ந்து
நடக்கிறது. ஆண்டு
கணக்கில் மனிதனினுடைய
பதற்றங்கள் களைப்பாகி
களைப்பாகி மாறிக்கொண்டே
இருக்கின்றன. ஆனால்
உள்ளடக்கமாக இருக்கிற
அதிர்வு மாறாமல்
இருப்பதினால் வெவ்வேறு
வகைப்பட்ட கல்வி
முறைகள் வந்து
கொண்டே இருக்கின்றன
என்பதை நாம்
பார்த்துக் கொண்டே
இருக்கிறோம். இந்திய
சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற
கல்வி முறை
என்று நாம்
தனியாக ஏதும்
பிரிப்பதற்கில்லை. எல்லா
கல்வி முறையும்
மனிதனுடைய குழந்தைகளினுடையஅதிர்வை,
அகவுணர்வை வேறொன்றாக
மாற்றி அறுவடை
செய்கிற வேலையோடு
துவங்கப்பட்டிருக்கின்றன. பின்னாளில்
அதிகாரம் மையத்திற்கும்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்
இறையாக மாறுகிற
ஆபத்தை நாம்
பார்க்க முடியும்.
இந்த பதற்றத்தை
அறுவடை செய்கிற
வரிசையில் கார்ப்பரேட்
நிறுவனங்களும் பெரும்
தொழில் பூங்காக்களும்
வந்து கொண்டிருக்கிறன
என்று நாம்
ஒப்பிட்டு பார்க்க
முடியும். என்றாலும்
கூட கல்வி
துவக்க காலத்தில்
இருந்து பார்க்கிற
போது கல்விக்குள்
நகர்கிற எல்லாமும்
ஆண்டு குறிப்போடு
பட்டியலிட முடியும்.
ஒரு புத்தகத்தை
படித்துப் பார்க்கிறபோது,
ஒரு வரலாற்று
குறிப்பை படித்து
பார்க்கிற போது
எனக்கு ஏற்பட்ட
அனுபவங்களை பார்த்த
நூல்களை வரிசை
பட்டியலை ஆண்டு கணக்கில்
குறிப்பாக தர
முடியும். அவ்வளவு
விவரங்களும் கல்வி
என்ன செய்து
கொண்டிருக்கிறது என்பதை
பார்க்கிற முகாந்திரத்தோடு
அமைந்திருக்கின்றன.
பின்னாளில் கல்வி
இந்தியச் சூழலில்
வளர்கிற போது
இந்தியச் சூழலை
வெளிச்சம் போட்டு
காட்டுகிற சமூக
வாய்ப்பு, பதிவு
செய்கிற வாய்ப்பு வரலாற்றிற்கு
அமைந்தது. இந்தியச்
சூழலில் ஆங்கில
அதிகாரிக்கு எதிராக,
ஆங்கில அரசாங்கத்திற்கு
எதிராக ஒரு
விரிவான வளர்ச்சி
போக்கை, விரிவான
போராட்டப் போக்கை முன்னெடுக்கிற
ஒரு தலைமைத்துவத்தில்
இருந்த காந்திய
வாழ்க்கை முறை
சுய சார்பான கல்வியை
முன்வைத்தது. அப்படியான
சுய சார்பான
கல்விக்குள் ஒரு
மனிதனின் பதற்றம்,
நீ வெளியில்
அதிகமாக எதிர்வினை
புரியாத போது
வெளியில் ஏற்படுகிற
எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்கிற போது
உனது பதற்றமும்
நிதானமும் வாழ்வும்
வளமையும் அடர்த்தியாகும்
என்று பதற்றமும்
நிதானமும் நீங்கிப்
போகும் என்று
காந்தி புதிய
கோட்பாடை பதற்றமான
குழந்தைகளுக்கு முன்
வைக்கிறார்.
அவர் அகிம்சையின்
பெயரால் முன்வைக்கிறார்.
நீ எவ்வளவு
அடித்தாலும் வாங்கிக்
கொள்ளக்கூடிய அனுபத்தோடு
முன் வைக்கிறார்.
மீண்டும் மீண்டும்
உங்களை தாக்குகிற
போது நீங்கள்
உறுதியாக நின்று
அந்த தாக்குதலை
எதிர் கொள்கிற
போது அவரது
அடர்த்தியான வன்முறை
போக்கு நிலை
குளையும் என்கிற
உளவியல் சாராம்சத்தோடு
நீங்கள் தரப்படுகிற
எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்வீர்கள் என்றால்
தரப்படுகிற எல்லாவற்றையும்
வாங்கி கொள்வீர்கள்
என்றால் எதன்
மீதும் எதிர்வினை
செய்ய மாட்டீர்கள்
என்றால் உங்கள்
பதற்றம் நீங்கும்.
உங்கள் பயம்
நீங்கும். உங்கள்
மலைப்பு நீங்கும்.
உங்கள் வாழ்வும் வளமும்
பெற வாய்ப்பு
இருக்கிறது என்ற
நோக்கத்தோடு, என்ற
அடிப்படையோடு காந்தி
ஒரு கல்வி
முறையை முன்
வைக்கிறார். அவர்
பின்னாளில் வாழ்க்கை
முறையை பெரிய
ராமராஜ்யம் என்று
வரையறுத்ததாக குறிப்புகள்
இருக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின்
பரலோக ராஜ்ஜியம்
போல காந்தியினுடைய
வாழ்வியல் இலக்கு
ராமராஜ்யமாக இருந்தது
என்று காந்தியை
பற்றி விவரிப்பவர்கள்
சொல்வதுண்டு. இப்போதும்
சொல்வதுண்டு. 1800களில்
19ஆம் நூற்றாண்டின்
இறுதியில் காந்தியும்
அன்னிபெசன்ட் அம்மையாரும்
கல்வி குறித்து
பேச துவங்கிறார்கள்
என்பது வரலாற்றின்
வழியாக நாம்
அறிய முடிகிறது.
இந்த வரலாற்றின்
வழியாக நாம்
பார்க்கிற செய்தி
காந்தி முன்வைத்த
இந்த அகிம்சை
அடிப்படையிலான பின்பு
அதன் நீட்சியாக
சுயசார்பு தன்மை
அடிப்படையான கல்வி
முறையாக மாற்றமடைகிறது.
இத்தகை மாற்றத்தில்
என்ன சாராம்சம்
இருக்கிறது என்று
புரவயமாக பார்த்தால்
கல்வி ஆறு
வயதில் முதல்
பதினாறு வயது
உள்ளவர்கள் வரை
தரப்பட வேண்டும்;
சரி தரப்பட
வேண்டும். தொடக்கக்கல்வி
கண்டிப்பாக தாய் மொழியில்
இருக்கப்பட வேண்டும்;
சரி இருக்கப்பட
வேண்டும். ராட்டை
உட்பட பள்ளி
மாணவர்கள் வாழ்வியல்
தொழில் ஒன்றை
வாழ்வியல் தொழில்
என்பது அவன்
பதற்றத்தை போக்குகிற ஒன்றாக இருக்கிறது என்ற
அம்சத்தில் வாழ்வியல்
தொழில் ஒன்றை
இணைத்துக் கொள்ள
வேண்டும் கல்வியில்
என்று காந்தியடிகள்
கல்விக்கான இந்திய
வடிவம் குறித்து
கல்வி மாநாட்டில்
1937இல் உரையாடலில்
இத்தகைய அம்சங்களோடு
உரையாடப்படுகிறது. ராட்டை
உட்பட பள்ளியில்
மாணவர்கள் வாழ்க்கைத்
தொழில் ஒன்றை
கற்றுக் கொள்ள
வேண்டும். தன்
சொந்த காலில்
மிக முக்கியமான
குறிப்பை இந்த
வார்தா கல்வி
மாநாடு சொல்லியது.
கல்வி குறித்து
வர்தாவின் மாநாடு
சொன்ன முக்கியமான
குறிப்பு- தன்
சொந்த காலில்
நிற்க, சுய
கட்டுப்பாடு மிக்க
குழந்தைகளை உருவாக்குவது
கல்வியின் நோக்கம்.
சொந்தக்காலில் ஏன்
ஒருவன் நிற்க
வேண்டும். சொந்த
காலில் நிற்பதற்கு
காந்தியின் நேரடியாக
முன் நின்ற
காரணம் ஆங்கிலேயரினுடைய
அடிமையாக தேசத்தினுடைய
நிர்வாகத்தை நாம்
எதிர்கொள்ள வேண்டும்
என்று இருந்த
அச்சத்தை உடைக்கிற
தன் சுயமரியாதை.
இன்னொன்று அகிம்சையின்
வழியாக எல்லாவற்றையும்
ஏற்றுக் கொள்கிற
ஒருவன், தனக்குள்ளே
ஒன்றை செய்து
பார்க்கிற ஒருவன்,
தனக்குள்ளே உள்வாங்கிக்
கொள்கிற ஒருவன்
என்கிற ஒருவனை
உருவாக்குவது. இப்படியாக கல்வி
அகத்திலே இருக்கிற
பதற்றத்தை போக்குகிற
சிறிய எல்லைக்குள்
தன் முயற்சியை
செய்து பார்க்கிற
ஒன்றாக காந்தியை
கல்வி முறை
ஒன்றை முன்
வைத்தது. இந்த
ஒன்று மிக
முக்கியமான அக
உருவாக்கம் சார்ந்தது.
இதுவரை நிகழ்ந்த
கல்வி மாற்றங்கள்
எல்லாமும் தொழில்
புரட்சி வழியாக
குரு, சிஷ்யன்
வழியாக வேறு
வேறுபட்ட சமூக
காரணிகளின் வழியாக
பின்னப்பட்டிருந்தாலும் ஒரு
அகவுணர்வை எதிர்ப்பில்
இருக்கிற ஒரு
மனிதனினினுடைய உணர்வை
தகர்க்கிற ஒரு
நுட்பமான ஒரு
சின்ன அதிர்வான
பகுதியை செய்வதற்குரிய
துவக்கமாக காந்தியை
கல்வி முறை
சில அம்சங்களை
உள்ளடக்கமாக வைத்திருந்தது
என்பதை நான்
பார்க்கிறேன். இது
என்னுடைய தனிப்பட்ட
குறிப்பு தான்.
அப்படித்தான் காந்தி
செய்தாரா என்று
தெரியவில்லை. ஆனால்
ஒரு மனிதனினுடைய
தேவை, ஒரு
மனிதனினுடைய தத்துவார்த்தமான
பார்வையில் பார்க்கிற
போது மனிதனினுடைய
பெரு விருப்பம்
எனது பதற்றமும்
எனது நடுக்கமும்
நீங்குவதற்கு நான்
சுய சார்பாக
இருந்தால் பரவாயில்லை
என்று எண்ணத்
துவங்குவதற்கு அடிகோலியது
அது அல்லது
அந்த எண்ணத்திற்கு
ஒரு வரையறை
செய்தது காந்தியினுடைய
ராட்டை கேள்வி.
பின்னால் வினோபா
வரை இதன்
நீட்சி கிராமம்
கிராமமாக கல்விக்கூடங்களை உருவாக்குவதற்குள்
சுயமரியாதையாக சுயமாக
இயங்கிக் கொள்பவராக
ஒரு மனிதன்
இருக்க வேண்டும்
என்று உள்ளடக்கமாக
வைத்திருக்கிற கல்வி
முறையை இந்த சமூகம்
பார்த்தது. இதற்கு
அடிப்படையான காரணம்
ஒரு மனிதனுடைய
மன அதிர்வு,
மனிதனுடைய ஏக்கம்,
மனிதனுடைய பிரம்மாண்டம்
குறித்த மலைப்பு.
சமூகத்தோடு எவ்வாறு
உரையாடப் போகிறோம்,
உறவாடப் போகிறோம்
என்கிற தவிப்புத்தான்
இவற்றையெல்லாம் உருவாக்கி
வைத்திருக்கிறது, வளர்த்திருக்கிறது
என்று வரலாற்றின்
வழியாக நான்
படித்துக் கொள்கிறேன்
என்பதை உங்களோட
பகிர்ந்து கொள்கிறேன்.
…தொடர்ந்து பேசுவோம்…
No comments:
Post a Comment