வாழ்விற்கு உதவும் அறிவு
![]() |
எந்த
இடத்திலும் அவர் மாணவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிற தொய்வான உரையாடலை, தொய்வான
உள்ளடக்கத்தை கொண்டு அவரது உரையாடலை கொண்டு செல்லவில்லை. மிகுந்த மதிப்பிற்குரிய நபர்களோடு
பேசுகிற அதே உண்மையான மெய்யான நகர்வாக உரையாடலுக்கு
பதில் அளிக்கிறார். உரையாடலை கொண்டு செல்கிறார். இன்னொரு புறம் மாணவர்கள் என்றவுடன்
மிகுந்த கருணையோடு பார்க்கிற சமூக மனநிலை இருக்கிறது.
குழந்தைகள் என்றவுடன் மிகுந்த கருணையோடு பார்க்கிற சமூக மனநிலை இருக்கிறது. இந்த சமூக
மனநிலையிலிருந்து குழந்தைகள் எப்போதும் சுட்டித்தனமாக, விளையாட்டாக, அறியாமை கொண்டவர்களாக
மீண்டும் மீண்டும் வாய்ப்பை உருவாக்குவதற்கு தேவை உள்ளவர்களாக இப்படி எல்லாம் இருப்பார்கள்
என்கிற சமூக பார்வை இருக்கிறது. அப்படியான
பார்வையோடும் அப்படியான தளர்வு நிலையோடும் கிருஷ்ணமூர்த்தியினுடைய உரையாடல்
என்பது கட்டமைக்கப்படவில்லை.
தொடர்ந்து மிகுந்த நேர்மையோடு, மிகுந்த துல்லிய தன்மையோடு அவரது உரையாடல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மிகுந்த துல்லிய தன்மையோடு நகர்கிறது. மிகுந்த நேர்மையான தரத்தோடு நகர்கிறது. இந்த தரமும் துள்ளிய தன்மையும் உயர்வாக கருதப்படுவதற்கு, பார்க்கப்படுவதற்கு நான் முன்வைக்கிற காரணம் கிருஷ்ணமூர்த்தியினுடைய பார்வை என்பது இந்தக் கேள்விக்கு பின்னால் இருக்கிற சமூக மனச்சிக்கலை உடைத்து உரையாடுகிறது. இந்த கேள்வியை தொடுப்பவரினுடைய அறியாமை குறித்தோ, பின்புலம் குறித்தோ கிருஷ்ணமூர்த்தியினுடைய பார்வை எப்போதும் இருப்பதில்லை இருந்ததில்லை என்கிற காரணமே இந்த உரையாடலை இவ்வளவு மரியாதைக்குரிய உரையாடலாக மாற்றி இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன்.
இந்த
உள்ளடக்கத்தினுடைய மேன்மையை சுட்டி கட்டுவதற்கு
நான் விரும்புகிற காரணம் என்னவென்றால் இந்த உரையாடலில் பங்கேற்கிற குழந்தைகள், பங்கேற்கிற
பெரியவர் இவர்களினுடைய இந்த காட்சி ஒரு புறம். அப்படியே இந்த காட்சியை ஒதுக்கி வைத்து
விட்டு ஒரு குழந்தையோடு இந்த சமூகத்தில் இருக்கிற நான் உட்பட எல்லோரும் என்கிற அளவில்
சமூகத்தில் இருக்கிற யாவரும் ஒரு குழந்தையோடு உரையாடுகிறபோது குழந்தைக்கு அதீத அறிவு உள்ளது போன்ற வடிவமும் அல்லது குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது
என்பது போன்ற வடிவமும் இன்னும் இரண்டிற்கும் அப்பாற்பட்டு மூன்றாவதாக குழந்தைகள் அவர்களாகவே வளரட்டும் என்கிற வடிவமும் புதிதான கலவையோடு இருப்பதை
நாம் பார்க்கிறோம்.
இத்தகைய
குழந்தைகள் குறித்த பலகீனமான செய்திகளில் பலகீனமான நடைமுறைகளில் நாம் இந்த உரையாடலை
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி இருக்கிறது. குழந்தைகள் இந்த உலகில் அறியாமையோடு பிறக்கிறார்கள்
அல்லது எல்லாமும் அறிந்து பிறக்கிறார்கள் என்கிற வாதத்தில் குழந்தைகளை வைத்து உரையாடுவதற்கு
முன்பு இந்த வாதத்தை துவங்குவதற்கு முன்பு ஒரு குழந்தையை நான் எவ்வாறு பார்க்கிறேன்
என்று பார்ப்பதற்குரிய “நான் எவ்வாறு பார்க்கிறேன்” என்று நான் திருத்தமாக அந்த செய்தியை நான் அழுத்தி சொல்ல விரும்புகிறேன். “நான் எவ்வாறு
பார்க்கிறேன்” என்று எண்ணில் இருந்து துவங்குகிற ஒரு பார்வையோடு ஒரு குழந்தையை பார்ப்பதன்
வழியாகவே ஒரு சிறந்த பார்வையாளனாக, குழந்தைகளோடு உரையாடுகிற, என்னை தவிர்த்து வேறு
ஒருவரோடு உரையாடுகிற ஒரு உரையாடல் தரம், உரையாடல் மேம்பாடு நிகழ வாய்ப்பிருக்கிறது.
நான்
ஒருவரோடு உரையாடுகிறேன். நான் ஒருவரை பார்க்கிறேன். நான் ஒருவரோடு உறவாடுகிறேன் என்று
பார்க்கிறபோது உரையாடலை, உறவாடலை துவங்குகிற போது அவரின் பாற்பட்ட முடிவுகளிலிருந்து
பேசுவது தொடர்ந்து சமூக விளைவாக, சமூக நிலைப்பாடாக எல்லா மனிதர்களுக்குள்ளும் அவர்
அறியாமலே இருக்கிற அதிர்வு நிலையாக இருப்பதை நான் பார்க்கிறோம். இவை அல்லாமல் எதிரே
இருக்கிற ஒருவரை கணக்கில் கொள்ளாமல் அவரோடு உரையாடுவதற்கு முன்பு அவரின் அதிர்வு என்னை
என்ன செய்கிறது? நான் ஏன் இவ்வாறு இவற்றில் வினையாற்றுகிறேன். ஏன் இவ்வாறு இவற்றைப்
பார்க்க முனைகிறேன் என்று பார்த்து பார்த்து தன்னை உரசிப் பார்க்கிற, மேம்படுத்திக்கொள்கிற
ஒரு விளைவின் தேவை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அப்படியான ஒரு தேவையோடு இயங்க வேண்டி
இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்விற்கு உதவும்
அறிவு என்கிற புத்தகத்தை நாம் எடுத்துக் கொண்டு பேசுவதற்கு மிக முக்கியமான காரணமாக
நான் கருதுவது இந்த புத்தகத்தின் வழியாக ஜே. கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பது
அல்ல. என்ன சொல்ல வருகிறார் என்பது அல்ல. இந்த குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை படித்துக் கொள்வதற்காக அல்ல. நாம் குழந்தைகளை
எவ்வாறு நடத்துகிறோம் என்பதை சீர் செய்து கொள்வதற்கானது அல்ல. இவை மூன்றிற்கும் இவை
போன்ற சமூக மனநிலைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இந்த புத்தகத்திற்குள் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள
வேண்டியிருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவது போல சரியான ஒன்று, உண்மையான ஒன்று
தனியாக எப்போதும் இருப்பதில்லை அவை எண்ணமும் செயலும் எண்ணமும் செயலுமாக நகர்கிற நகர்வு.
சரியான ஒன்றை நீங்கள் முடிவு செய்து கொண்டு சரியான ஒன்றை முடிவாக வைத்துக் கொண்டு இயங்கி
நகர்ந்து விட முடியாது. சரியான ஒன்று என்பது என்ன என்பதிலிருந்து துவங்குகிறபோது அது
உங்களின் உள்ளே இருந்து துவங்குகிறது என்கிற பார்வையோடு சரியான ஒன்றை நாம் புரிந்து
கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த புரிதலின் அடிப்படையில் நம் எதிரே உரையாடுகிறவர் மாணவரா,
பெரியவரா என்பதை கணக்கில் வைக்காமல் நாம் ஒன்றை எவ்வாறு பார்க்கிறோம். நான் ஒன்றை எவ்வாறு
பார்க்கிறேன் என்று பார்வையை துவங்குகிற தேவை இருக்கிறது. அந்தத் தேவையின் அடிப்படையிலேயே
ஒவ்வொரு தனி மனிதனையும் நாம் சரியாக பார்க்க முடியும். தன்னைப் பார்ப்பதின் வழியாகவே
நாம் இன்னொருவரை சரியாக பார்க்க முடியும் என்று
நாம் புரிந்து கொள்ள முடியும். அவற்றை அனுபவத்தின் வழியாக பார்க்க முடியும்.
இந்த
வகைப்பட்ட பார்வை, இந்த வகைப்பட்ட உரையாடல், இந்த வகைப்பட்ட மேம்பாட்டு நிலை ஒரு குழந்தையோடு
உரையாடுகிற போது நமக்கு ஏற்படுகிறதா? நமக்குள்
இருக்கிறதா என்பதை கிருஷ்ணமூர்த்தியின் வழியாகவும் எனது தனிப்பட்ட பார்வையின் வழியாகவும்
நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்படி ஒன்று நமக்கு இருக்கிறதா. ஒரு
குழந்தையைப் பற்றி பேசுகிறபோது ஒரு குழந்தையின்
அக உரையாடல், அகநிலை என்பது எவ்வாறு நம்மால் பார்க்கப்படுகிறது. ஏன் இரண்டு மூன்று
நபர்கள் ஒரு குழந்தையை பார்க்கிறபோது இரண்டு மூன்று நபர்கள் வெவ்வேறு கோணங்களில் அந்த
குழந்தையை பார்க்கிறோம். இது நிகழ்கிறது இது ஒன்று. ஒரு வகுப்பறையில் அல்லது ஒரு மைதானத்தில்
ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த குழந்தை ஒரு செயலை செய்கிறது. அந்த குழந்தை ஒரு செடியின் இலைகளை பறித்து விளையாடுகிறது.
இப்படி ஒரு காட்சி. இந்த காட்சிக்குள் அந்த குழந்தையின் விளையாட்டு துடுக்குத்தனங்களை
பார்க்கிற மூன்று நபர்கள் ஒருவர் அந்த குழந்தையினுடைய
செயல்பாட்டை அப்படியே அனுமதிக்கிறார். ஒருவர் அந்த செயல்பாட்டினை தடுப்பதற்கு நாகரீகமான
மென்மையான உரையாடலை துவங்குகிறார். இவற்றை இவ்வாறு செய்யக்கூடாது தெரியுமா, இவற்றை
இவ்வாறு பறிக்கக் கூடாது தெரியுமா, எவ்வளவு அழகாக வளர்ந்து இருக்கிறது என்பதை பார்க்க
முடிகிறதா என்று நாகரீகமாக, மென்மையான ஒன்றை அந்த குழந்தையோடு அந்த செடியை குறித்து
ஒரு உரையாடலை துவங்குகிறார். மூன்றாவது நபர் அந்த செடியை பறிக்க கூடாது என்று கராரான
செயலை கராரான தாக்குதலை அந்த குழந்தை மீது நிகழ்த்துகிறார். இந்த மூன்று நபர்களும்
வேறு வேறாக தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கு என்ன மூன்று காரணங்கள் அவர்களுக்குள்ளே
இருக்கிறது என்பதுதான் நாம் செய்ய வேண்டிய விவாதம்.
அந்த
குழந்தை செடியை பறிக்கலாமா, செடியை பறிக்காமல் இருக்கலாமா, செடியை பறிப்பது குறித்து
அந்த குழந்தைக்கு போதுமான புரிதல் வந்திருக்கிறதா என்பதெல்லாம் ஒருபுறம் தனியாக வைத்துவிட்டு
அந்த குழந்தையோடு பேசுவதற்கு முன்பு மூன்று
வேறு வேறு கூறுகளில் இருந்து மனிதர்கள் வெளிப்படுகிறார்கள். இந்த மூன்று கூறுகளும்
ஏன் மூன்று விதமாக இருக்கிறது. எது இந்த ஒரே காட்சியை மூன்று விதமாக பார்ப்பதற்கு தனித்தனி
மனிதர்களை தனித்தனியாக தூண்டுகிறது என்ற ஒரு வேறுபட்ட உளவியலை அகமனப்பார்வையை நாம்
பார்க்கிறபோது காட்சியில் குழந்தைகள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சரியாக பார்க்க
முடியும். அப்படித்தான் ஜான் ஹோல்ட் பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன். அப்படித்தான்
கிருஷ்ணமூர்த்தி பார்க்கிறார். அப்படித்தான் மரியம் மாண்டிசோரி அம்மையார் பார்க்கிறார்.
இன்னும் ஆழமாக தத்துவத்தை பார்த்த பலரும் குழந்தைகளை
அப்படித்தான் பார்க்கிறார்கள். அவர்களை முதலில் பார்த்திருக்கிறார்கள். தம்மை குறித்து
அவர்களுக்கு ஒரு முறையான நெறிப்படுத்தப்பட்ட போதுமான ஒரு பார்வை இருக்கிறது. இந்தப்
பார்வையின் பாற்பட்டே அவர்கள் பார்க்கிற பொருளின் மீது அவர்கள் வினைபுரிகிறார்கள்.
அந்த பொருளை மேன்மையாக்குவதற்கு உதவுகிறார்கள். இப்படியான ஒன்றை நாம் இந்த உரையாடல்களின்
வழியாக பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கு தேவை இருக்கிறது என்பதை நான் உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். இது மிக முக்கியமான, துல்லியமான வேறுபட்ட இடம். ஏனென்றால் குழந்தைகளை
நாம் பார்ப்பதற்கு எல்லோருக்கும் சமூக காரணங்கள் தான் இருக்கின்றன. ஒரு குழந்தையை நீங்கள் இப்படித்தான் வளர்க்க வேண்டும்
என்று யார் பரிந்துரை செய்தாலும் அவர்கள் சமூகத்தின் பாற்பட்ட ஏதோ ஒரு காரணத்தோடு நிகழ்த்துகிறார்கள்.
நடக்கிறார்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
என்று நாம் சமரசம் இல்லாமல் மிக வெளிப்படையாக சொல்லும் அளவிற்கு திட்டமிடல்களும் நிகழ்ச்சிகளும்
வடிவமைக்கப்பட்டு சமூகத்தில் இருக்கின்றன.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment