வாழ்விற்கு உதவும் அறிவு
![]() |
இன்னொருபுறம்
தனிப்பட்ட நான் என்கிற அம்சத்தில் குழந்தைகளை நாம் பார்க்கிறபோது குழந்தைகள் ஏற்படுத்துகிற
விசேஷமான, மிகப் பிரத்யேகமான ஒரு விளையாட்டுத்தனம், ஒரு துடுக்குத்தனம், கடுமையான நிலைப்பாடு,
நெருக்கடியான நிலைப்பாடு என்னை என்ன செய்கிறது என்று எனக்குள் பார்க்கிற ஒரு பார்வையை
செய்ய வேண்டி இருக்கிறது. எங்கிருந்து துவங்குவது என்றால் அதை குழந்தைகளிடமிருந்து
ஒரு புள்ளியாக துவங்கிக் கொள்ளலாம். ஆனால் குழந்தைகள் வளர்கிறபோது இந்த வளர்ச்சி போக்கில்
அவர்களைப் பின்பற்றி செல்வதற்கு நமக்கு வாய்ப்பில்லை. அவர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக்
கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் இன்னும் வளர்ச்சி நிலையில் இருக்கிறார்கள்.
அறிவை சேகரிக்கிறபோது தான் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த சேகரிப்பு நிதானத்தில் அவர்கள் தொடர்ந்து குழந்தைத்தனத்தோடு இருப்பார்கள் என்றால் அவர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ள முடியும். நான் எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒருவேளை சேகரிக்கப்பட்ட அறிவு அவர்களுக்கும் துயரமாக, அவர்களைப் பின்பற்றுகிறவர்களுக்கும் துயரமாக மாறும் என்றால் அந்த அறிவு சேகரிப்பை புறக்கணிக்க செய்ய வேண்டும். அந்த அறிவு சேகரிப்பின் மீது நாம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
ஆக,
குழந்தைகளை பார்ப்பதற்கு முன்பு, குழந்தைகளை உரையாடுவதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது,
துவங்க வேண்டியது என்னில் இருந்து நான் எவற்றை துறக்க வேண்டும். என்னில் இருந்து நிகழ்கிற
அதிர்வுகளுக்கு என்ன காரணம் என்கிற ஒரு அக உரையாடலை நாம் நடத்த வேண்டும் என்பதற்குரிய
வெவ்வேறு அம்சங்களை இந்த உரையாடல் வழியாக இந்த புத்தகத்தின் முதல் பகுதியில் மாணவர்களோடு
பேசுகிற கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதிவு செய்கிறார். இந்த புத்தகத்தில் இருக்கிற தனித்தனியான
பகுதிகளை நான் பேசுவதற்கு அவகாசம் எடுத்துக் கொள்ள முடியும். பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பயம் குறித்து, பொறாமை குறித்து. காழ்ப்புணர்வு குறித்து, ஏற்படுகிற துயரங்கள் குறித்து,
வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, எவ்வாறு கோபப்படாமல் இருப்பது என்பது
குறித்து மாணவர்கள் எழுப்புகிற எல்லா விதமான கேள்விகளுக்கும் திருமிகு. கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் விரிவான, தத்துவார்த்த ரீதியிலான பதில்களை சொல்கிறார். அவை எல்லாமும் கேள்வியும்
பதிலுமாக இருந்தாலும் கூட அவற்றிற்கு உள்ளாக இருக்கிற சாராம்சமான செய்திகளை நான் பார்க்கிற வகையில் புரிந்து கொள்ள வேண்டும்
என்று நினைக்கிறேன்.
குழந்தைகளைப்
பற்றிய நம் பார்வை என்பது நம்மை நாம் எவ்வாறு பார்க்கிறோம். குழந்தைகள் ஏற்படுத்துகிற
அதிர்வு நமக்குள் எவ்வாறு வெளிப்படுகிறது. நம்மை என்ன செய்கிறது என்கிற நிலை ஒன்று.
குழந்தைகளை நாம் பின்பற்றுகிற போது குழந்தைகளை நாம் ஒப்பிட்டு பார்க்கிற போது குழந்தைகள்
மேன்மையாக தெரிகிறார்களா என்றால் ஆம் தெரிகிறார்கள். அவர்கள் இன்னும் அறிவை சேகரிக்கப்படாத
நிலையில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் மேன்மையாக தெரிகிறார்கள். தற்கப்பூர்வமான உலக
வளர்ச்சி பாதையில், உடல் வளர்ச்சி பாதையில், உயிர் வளர்ச்சி பாதையில் அவர்கள் அறிவை
சேகரித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அப்படி அறிவை சேகரித்துக் கொண்டு அவர்கள் நகர்கிறபோது அவர்கள் சேகரிக்கப்பட்ட அறிவு
அவர்களது உள்ளுணர்வை, அவர்களது அக உணர்வை சிதைவிற்கு உள்ளாக்கும் என்கிற வாய்ப்பும்
இருக்கிறது. பின்பு ஒரு காலத்தில் சிதைவிற்கு உள்ளான பிறகு அவர்கள் மீது நடத்தப்படுகிற
இந்த சமூக நெருக்கடியில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு அவர்கள் சேகரிக்கப்பட்ட அறிவே முதன்மையானதாக இருக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடிக்க
வேண்டும். அந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட அறிவில இருந்து அவர்கள் விடுதலையாக
வேண்டும். பின்பு அந்த விடுதலைக்கு பின்பே
அவர்கள் மீண்டும் குழந்தையாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு சக்கரச்
சுழற்சிக்கு பிறகு அவர்களுடைய முழுமையான வடிவத்தை முழுமையான மையத்தை
ஒரு ஒப்பாய்விற்கு நாம் எடுத்துக் கொள்ள முடியும். இத்தகையை இரண்டு வேறுபட்ட பார்வை
நம் முன்னே இருக்கிறது. இவற்றிலிருந்து ஒரு குழந்தையை மெய்யாகவே இணங்கி அணுகுவதற்கு
என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை நம்மை நாம் பார்ப்பதன் வழியாகவே கண்டுபிடிக்க முடியும்
என்று நான் கருதுகிறேன்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment