Friday, September 29, 2023

மிர்தாதின் புத்தகம் - உரையாடல் -4/இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்/ பகுதி 2//சிவ.கதிரவன்

 

                            இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்

உலகம் முழுவதும் மழை பெய்கிறது நீண்ட நாள் ஓர் இரவு, இரண்டு இரவு, மூன்று இரவு என்று நாற்பது இரவுகளுக்கு மேலாக மழை பெய்கிறது. உலகம் முழுவதும் மழை பெய்கிறது. ஏறத்தாழ உலகம் துவங்குகிற மழையாக அந்த மழை இருக்கிறது. திரு விவிலியம் அப்படித்தான் அந்த மழையை வர்ணிக்கிறது. அந்தக் கப்பலுக்குள் இருக்கிற அந்த குடும்பத்தினரையும் விலங்குகளையும் தானியங்களையும் தவிர வேறு யாரு ஒருவரும் இந்த உலகத்தில் இல்லை. அவ்வளவு நபர்களும் உயிரினங்களும் இந்த மழையில் அழிந்து பரமபிதாவின் மாற்றுத்திட்டத்திற்காக இந்த உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் மழை. மழையின் இறுதியாக மழை நின்ற பின், இந்த கப்பல் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. மழையால் நிரம்பிய மேடுகளில் பள்ளங்களில் என்று இந்த கப்பல் சுற்றி வருகிறது.

150 நாட்களுக்கு பிறகு இந்தக் கப்பல் ஓரிடத்தில் தேங்கி நிற்கிறது. தரை தட்டி நிற்கிறது. இந்த இடத்தைப் பற்றி குறிப்புகளை என்ன சொல்ல வேண்டும் என்று பரமபிதா நோவாவிற்கு கற்பித்துக் கொடுக்கிறார். இந்தக் கப்பலின் வாழ்விற்கு பிறகு யார் ஒருவரும் இந்த கப்பலை விட்டு வெளியே வரவே இல்லை. இது கப்பலுக்குள்ளேயே நோவாவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த  கப்பலுக்கு உள்ளேயே அவர்களது மொத்த வாழ்வும் நகர்கிறது. நீண்ட காலம் நோவா அந்த கப்பலுக்குள் உயிர் வாழ்ந்தார். பின்பு நோவாவினுடைய இறுதி நாளில் தான் மரணிக்க போகிறோம்.  காலமாகிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தவுடன் நோவா தன் பிள்ளைகளிடம் ஒரு ரகசியத்தை பரமபிதா தமக்கு அளித்த வாக்குறுதியை, தனக்கு பகிர்ந்து கொடுத்த திட்டத்தை விரிவாக பேச முன் வருகிறார். அந்த திட்டம் ஏற்கனவே பரமபிதா நோவாவிற்கு  கட்டளை இட்டபடி அந்த கப்பல் என்னவாக இருக்க வேண்டும் என்று அப்போது நோவா அறிவிக்கிறார்.

இந்தக் கப்பல் ஒரு கூடாரமாக, பலிபீடமாக மாற்றப்பட வேண்டும். அன்பை போதிப்பதற்காக இந்தக் கப்பலுக்குள் எப்போதும் பிரார்த்தனைகளும்  செயல்பாடுகளும் செய்யப்பட வேண்டும். இங்கு நாம் எட்டு பேர் இருக்கிறோம். இன்னொருவர் நம்மோடு வாழ்ந்தார். அவர் யாருக்கும் தெரியாதவர். என் கண்ணிற்கு மட்டும் தெரிந்தவர். அவர் ஒன்பதாவது நபர். இந்த எட்டு பேரில் ஒருவர் இறக்கிற பட்சத்தில் இன்னொருவரை இறைவன் அனுப்பி வைப்பார். இந்த பலிபீடத்தின் செயல்பாடுகளை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதற்கு இந்த குழு தொடர்ந்து இயங்க வேண்டும். அன்பை போதிக்க வேண்டும் என்று நோவா தன் பிள்ளைகளுக்கு அந்த செய்தியை பகிர்ந்து அளித்துவிட்டு உயிர் நீர்க்கிறார். அந்த உயிர் நீர்த்தலிற்கு பிறகு தொடர்ந்து நோவாவினுடைய பலிபீடம் இயங்குவதாக திருவிவிலியம் பதிவு செய்கிறது. இது திருவிவிலியத்தினுடைய கிளைக் கதை.

இந்த கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சொல்லப்பட்ட எல்லாமும் திருவிவிலியத்திற்குள் சொல்லப்படுகிற செயல்களாக, புனைவுகளாக, இலக்கியப் பரப்பில் விவாதிக்கிறவர்கள் பேச முடியும். அது ஒருபுறம் இருக்கட்டும். இந்த கதையின் நிறைவிலிருந்து மிகெய்ல் நைமி ஒரு கதையை வந்து விழுந்ததாக, உருவாக்க பணிக்கப்பட்டதாக முன்  வைக்கிறார். அந்தக் கதை

 மிர்தாத்தின் புத்தகம். இப்போது அந்த பலிபீடம் அங்கேயே இருக்கிறது. அந்த பலிபீடத்தில் எப்போதும் 9 பேர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஒருமுறை அந்த பலிபீடத்தில் ஒருவர் இறந்த பின்பு எட்டு பேர் அதற்குள் இருக்கிறார்கள். அந்த பலிபீடம் அங்கு இருக்கிற மக்களுக்கு, அந்த பலிபீடத்தை சுற்றி இருக்கிற அந்த சிறிய குன்றை, மலையை சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு வெவ்வேறு விதமான அருளாசிகளை புரிந்து கொண்டே இருக்கிறது. தந்து கொண்டே இருக்கிறது. இந்த வகையில் அந்த பலிபீடத்திற்குள் இருந்தவர்களுடைய எண்ணிக்கை எட்டாக குறைகிறது. பலிபீடம் மிகுந்த வசதியோடு மிகுந்த செல்வ செழிப்போடு இருக்கிற காலகட்டத்தில் ஒரு நபர் குறைவாக இருக்கிறார் என்பது அந்த பலிபீடத்தில் இருக்கிற தலைமை துறவிக்கு எண்ணமாக, கவலையாக இருந்து கொண்டே இருக்கிறது.

அப்போது ஒரு நபர், ஒரு மனிதர் அந்த பலிபீடத்தினுடைய கதவை தட்டுகிறார். பலிபீடத்தினுடைய கதவைத் தட்டுகிற அந்த நபர் இந்த பலிபீடத்தினுடைய நாகரீகமான, வளர்ச்சி அடைந்த செழிப்பான தன்மைக்கு பொருந்தாத தோற்றத்தோடு இருக்கிறார். இந்த பலிபீடம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. அந்த மனிதர் வறுமையோடு காட்சியளிக்கிறார். இந்தப் பலிபீடம் மூன்று வேலை வகை வகையான உணவுகளை உட்கொண்டு வாழ்கிறது. அந்த மனிதர் யாசகம் கேட்டு நிற்கிறார். அந்தப் பலிபீடத்தில் சுனை போல் நீர்க்கொட்டி வழிகிறது. இந்த புதிய மனிதருக்கு தாகத்திற்கு தண்ணீர் இல்லை. இந்த மனிதர் பலிபீடத்தினுடைய கதவை தட்டுகிறார். எனக்கு உணவு கிடைக்குமா என்று கேட்கிறார்.

பலிபீடத்தினுடைய தலைமை துறைவிக்கு அவரை சந்திக்க முடியவில்லை.  நாங்கள் யாசகம் தருவதில்லை என்று பலிபீடத்தினுடைய நிர்வாக ஒழுங்கு முறைக்கு எதிரான ஒரு வார்த்தையை உதிர்க்கிறார். யாசகம் தருவதில்லை என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டு அந்த எளிய இளைஞன் அங்கிருந்து நகரவில்லை. எனக்கு உணவு வேண்டும் என்று உரிமையோடு கேட்பதாக அந்த தலைமை துறைவிக்குப்படுகிறது. அந்த உரிமையான குரலை மறுக்க முடியாமல் அவனை உள்ளே அழைக்கிறார்.

ஒருவாராக அந்த பலிபீடத்தில் இருக்கிற மற்ற துறவிகளோடு உரையாடி ஒரு முடிவை எடுக்கிறார்கள். அந்த முடிவின் அடிப்படையில் எட்டு துறவிகள் இருப்பது இந்த புதிய நபரை, யாசகம் கேட்டு வந்த நபரை துறவியாக சேர்த்துக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக இங்கே இருக்கிற ஒரு வேலையாளாக வைத்துக் கொள்வோம் என்று தீர்மானிக்கிறார்கள். அப்போது வேலையாளாக வைத்துக் கொள்கிற நபராக இருந்தாலும் போதும் என்று அந்த யாசகம் கேட்டு வந்த நபர், அந்த மனிதர், அந்த எளிய உருவம் தன்னை மிர்தாத் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறது.

அந்த பலிபீடத்தில் இருக்கிற அந்த துறவு சாம்ராஜ்யத்திற்குள் இருக்கிற புதிய யாசகனாக, புதிய எளிய மனிதராக மிர்தாத் வேலையாள் போல் தொடர்ந்து பணிபுரிகிறார். ஏழு ஆண்டுகள்.  ஓராண்டு, இரண்டு ஆண்டு என ஆண்டுக் கணக்கில் அவர்களது நடவடிக்கை பெரும் செல்வத்தை ஈட்டுவதற்காக இருக்கிறது. பெரிய பிற்போக்கான கருத்துக்களை முன் வைக்கின்றனர். விரிவாக விரிவாக வளர வேண்டிய அன்பு சாம்ராஜ்யம் அவ்வாறு வளரவில்லை. தொடர்ந்து அந்த பலிபீடம் அதற்கே உரிய தன்மையில் சேதமுற்றுக் கொண்டடே இருக்கிறது.  அவர்கள் தன்னளவில் பலிபீடத்தை மிகுந்த மகிழ்ச்சியாக, மிகுந்த உயர்வாகக் கொண்டு செல்கிறோம் என்கிற தன்மையோடு இருக்கிறார்கள். அப்படியே அந்த பலிபீடத்தினுடைய செயல்பாடு தொடர்கிறது. எட்டு பேர் துறவிகளாக ஒருவர் வேலையாளாக 9 பேர் உள்ளே இருக்கிறார்கள்.

 ஏழு ஆண்டுக்கு பிறகு அற்புதமான நாள் ஒன்று பூக்கிறது. அந்த நாளில் எட்டு துறவிகளும் கூடி விவாதிக்கிறார்கள். ஒன்பதாவது நபராக இறைவன் இதுவரை யாரையும் அனுப்பவில்லை. இந்த ஒன்பதாவது நபராக யாரையாவது ஒருவரை நாம் நம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அது குறித்து நாம் பேசலாம் என்று அங்கு விவாதம் நிகழ்கிறது. அந்த விவாத நிகழ்வில் அங்கே ஏழு  ஆண்டுகள் வேலையாளாக இருந்த மிர்தாத்தை இணைத்துக் கொள்ளலாம் என்று எட்டு பேர் கொண்ட குழு முடிவு செய்கிறது. அந்த வகையில் மிர்தாத் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

                     தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...