இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்
மிர்தாத் இணைத்துக் கொள்ளப்பட்ட அந்த நாளில் மிர்தாத்தை அங்கு இருக்கிற தலைமை துறவி நீங்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறீர்கள் என்ற எந்த கௌரவ வார்த்தையும் இல்லாமல் எந்த மதிப்பு மிகுந்த வார்த்தையும் இல்லாமல் ஏளனமான சொற்களோடு வரவேற்று இணைத்துக் கொள்கிறார். ஏழு ஆண்டுகள் ஒரு வார்த்தையும் பேசாத மிர்தாத், முழுக்க மவுனமாக ஏழு ஆண்டுகளைக் கடத்திய மிர்தாத் முதல் முதலாக பேச துவங்குகிறார். அப்போதுதான் மிர்தாத்தினுடைய உள் ஒளி பிரகாசமாக வெளிப்படத் துவங்குகிறது. இந்த ஏழு ஆண்டுகள் மிர்தாத்தினுடைய சொல்லை மட்டும், மிர்தாத் என்கிற பெயரை மட்டும் அழைத்து சொல்கிற போது மட்டுமே மிர்தாத் திரும்பிப் பார்ப்பது உண்டு. மிர்தாத் என்று சொல்லாத எந்த வேலைக்காகவும் மிர்தாத் திரும்பிக் கொள்வதில்லை. மிர்தாத் என்று அழைக்காமல் மிர்தாத் செவி சாய்ப்பதே இல்லை. ஏழு ஆண்டுகளும் அப்படித்தான் கடந்தது. இந்த ஏழாவது ஆண்டு இந்த பலிபீடமும் துறவு சாம்ராஜ்யமும் எதிர்பார்க்காத நிகழ்வாக மிர்தாத் வாயைத் திறக்கிறார்.
மிர்தாத் பேச துவங்கிய முதல் வார்த்தை இந்த நாள் இன்று வரும் என்று எனக்கு முன்பே தெரியும். இந்த நாளுக்காக நான் காத்திருந்தேன் என்று தொடர்ந்து தன் உரையாடலை துவங்குகிறார்.
இந்த கதையை கிராம மக்கள், அந்த மலையை சுற்றி இருக்கிற மக்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது மிர்தாத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். மிர்தாத் உலகில் இருக்கிற நன்மை தீமைகள் பற்றி பேசுகிறார். மிர்தாத் இறைவனைப் பற்றி பேசுகிறார். மிர்தாத் ஒற்றைச் சொல்லை பற்றி பேசுகிறார். மிர்தாத் அங்கு இருக்கிற ராஜாங்கத்தை பற்றி பேசுகிறார். மக்களினுடைய இழிநிலை பற்றி பேசுகிறார். அவர்கள் வாங்கிக் கொழுத்து குவித்த செல்வங்களைப் பற்றி பேசுகிறார். பகிர்ந்தளிக்கும் பல்வேறு குணாம்சங்களை பற்றி பேசுகிறார். ஏழு ஆண்டுகள் மிர்தாத்தின் வருகைக்குப் பிறகு செழிம்பாக இருந்த, மிகச் செழிம்பாக இருந்த அந்தத் துறவிகளினுடைய சாம்ராஜ்யம் மிர்தாத்தினுடைய உரையாடலுக்குப் பிறகு ஒரு சமத்துவமான நிலப்பரப்பாக மாறத் துவங்குகிறது. அங்கு இருக்கிற தலைமை துறவிக்கு மிர்தாத்தினுடைய மௌனமான காலங்களில் மிர்தாத்தை மிகுந்த அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லிய துறவி மிர்தாத்தினுடைய உரையாடலுக்குப் பிறகு மிர்தாத்தினுடைய பேச்சுக்கு பிறகு மிர்தாத்தை அதிர்ஷ்டம் கெட்டவர் என்று பரப்புரை செய்யத் துவங்குகிறார். இப்படியாக அந்த கதை தொடர்ந்து மிர்தாத்தினுடைய உரையாடலில் நிரம்பி வழிகிறது.
மிர்தாத் பேசாத, தொடாத செய்திகளே இல்லை என்கிற அளவிற்கு மிர்தாத் பேசி முடிக்கிறார். அப்போது மிர்தாத்தின் மீது விதவிதமான தாக்குதல்களை அங்கு இருக்கிற நிர்வாகமும் ஆட்சி அதிகாரமும் துறவு சாம்ராஜ்யமும் தொடுப்பதற்கு முயற்சி செய்கின்றன. எல்லா கட்டுகளையும் அவிழ்க்கிற பெரும் ஆளுமையாக மிர்தாத்து வலம் வருகிறார். இதற்குப் பிறகு மிர்தாத்தினுடைய காலம் இறுதி நாளை நெருங்குகிற போது மிர்தாத் அங்கே இருக்கிற கிராம மக்களையும் துறவு சாம்ராஜ்யத்தில் இருக்கிற உறுப்பினர்களையும் அழைத்து சிறப்பாக ஒரு உரையாற்றுகிறார். நீங்கள் எல்லோரும் இந்த சபையை கலைத்து விடுங்கள். இந்த துறவு சாம்ராஜ்யத்தை கலைத்து விடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இறைவனின் திருப்பணியை. பரம பிதாவின் ராஜ்யத்தை. உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இன்று நீங்கள் இந்த இடத்தில் இருந்து இறங்குங்கள். தலைமை துறவி ஒருவரை தவிர என்று மிர்தாத் ஒரு முடிவை அறிவிக்கிறார். அப்போது தலைமைத் துறவி கேட்கிறபோது நீங்கள் இன்னும் இந்த அன்பு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்புவதற்குரிய உறுப்பினராவதற்குரிய தகுதியை பெறவில்லை. எனவே உங்களை அழைத்துச் செல்ல முடியாது என்று மிர்தாத் தந்த தலைமை துறவியை அங்கு காவல் வைத்துவிட்டு உங்களைத் தேடி ஒரு இளைஞன் வருவான். உங்களைத் தேடி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இளைஞன் வருவான். அவனிடம் பேசுவதற்காகத்தான் உங்களுக்கு நாக்கு இருக்கிறது. அவனோடு பேசுவதற்காகத்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். அவன் வந்தவுடன் உங்கள் நாக்கு திறக்கப்படும். உங்களுக்கு பேச்சு வரும். அதுவரை நீங்கள் ஊமையாகவே இருப்பீர்கள் என்று மிர்தாத் அந்த உரையை மற்ற சீடர்களோடு நிகழ்த்தி விட்டு, துறவிகளோடு நிகழ்த்திவிட்டு உலகத்திற்கு பயணிக்கிறார் என்று இந்த கிராமத்து கதை முழுவதும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த கதையைக் கேட்ட கிராமத்து இளைஞன் அந்த துறவு சாம்ராஜ்யத்தை பார்க்க வேண்டும். நீண்ட ஆண்டு காலம், நூறு, நூற்று ஐம்பது ஆண்டு காலம் பேசாத அந்த துறவியை சந்திக்க வேண்டும். அந்தத் துறவி அங்கே இருக்கிற கிராம மக்களினுடைய வாசனை பட்டவுடன் தன்னை ஒளித்துக் கொள்வார். தன்னை மறைத்துக் கொள்வார். தான் இல்லாமல் போய்விடுவார் என்கிற கதைகள் கூட இந்த மலை கிராமத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த துறவியை, இந்த சாம்ராஜ்யத்தை பார்ப்பதற்கு ஒரு இளைஞன் முடிவு செய்கிறான். அந்த இளைஞன் மேல் நோக்கி நகர வேண்டும் என்று முடிவு செய்கிறான். இவ்வாறு அந்த இளைஞனும் மிர்தாத்தும் சந்திப்பதற்கான துவக்கமாக மிர்தாத்தின் புத்தகம் துவங்குகிறது.
மிர்தாத்தின் புத்தகத்திற்குள் மிர்தாத் சொன்ன அடையாளங்களோடு இளைஞன் மேலேறி வர வேண்டும். மிர்தாத்தினுடைய வாய்மொழி குறிப்புகளோடு அந்த இளைஞனுடைய அடையாளம் பொருந்தி போக வேண்டும். மிர்தாத் சொன்னது அந்த இளைஞன் மலைக்கு வருகிற எல்லா எளிய பாதைகளையும் விட்டுவிட்டு செங்குத்தாக ஏறி வருகிறன் தான் இந்த மலைக்கு வருகிற மிக முக்கியமான குறிப்போடு வருகிற நபர். அவன் ஏறி வருகிற வழியில் அவன் வழி உணவிற்காக கொண்டு வந்த எல்லா உணவுகளும் சூறையாடப்படும். அவன் கையில் அவன் உண்பதற்கு எந்த வகையிலும் உணவு வாய்ப்பு இருக்காது. மிகுந்த பட்டினியோடு இந்த மழையை நோக்கி நடந்து வருவார். இந்தக் குறிப்பு இரண்டாவது. அவன் கையில் வளமையான உடலில் அழகாக போட்டிருந்த எல்லா ஆடைகளும் கிழித்தெறியப்படும். அவன் கால்களில் செருப்புகள் இருக்காது. வெறும் நிர்வாணமாக எந்த களங்கமும் இல்லாமல் வெறும் நிர்வாணமாக மனிதனாக மேல் ஏறி வருவான். அந்த நிர்வாண மனிதனைப் பற்றி, மிர்தாத்தை தேடி வருகிற மனிதனை பற்றி இருக்கிற அடுத்த குறிப்பு. மூன்றாவது அந்த மனிதன் தனக்கென்று கையில் எந்த பொருளையும் வைத்துக் கொள்ளாத நபராக வந்து சேர்வான். மூன்றாவது இந்த குறிப்போடு ஒரு மனிதன் வருவான். இந்த மூன்று குறிப்புகளையும் உள்ளடக்கிய மூன்று அடையாளங்களையும் உள்ளடக்கிய ஒரு மனிதன் மேலே இருக்கிற துறவு சாம்ராஜ்யத்தை நோக்கி வந்து சேர்வான். அவன் வந்து சேர்கிற நாளிலேயே தலைமை துறவியான நீங்கள் பேசுவீர்கள். அதுவரை உங்கள் வாய் கட்டப்படும் என்று மிர்தாத் அறிவித்து சென்றது போலவே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த இளைஞன் இந்த கதையைக் கேட்டு வலது புறமும் இடது புறமும் இல்லாத செங்குத்து பாதையை யாரும் செல்வதற்கு அஞ்சுகிற, யாரும் சென்று திரும்பாத நீளமான அகலமான எந்த வடிவமும் இல்லாத ஒரு குறுகலான நெருக்கடியான பாதையை தேர்வு செய்கிறான். வழிப்போக்கிற்கு பயன்படாத ஏழு ரொட்டி துண்டுகளோடு, அழகான ஆடைகளோடு, கால்களில் செருப்புகளோடு, கையில் ஒரு கோலோடு மேலே செல்கிறான். செல்கிற வழியில் உணவு பறிக்கப்படுகிறது. ஆடைகள் கிழித்து எறியப்படுகின்றன. நிர்வாணமான மனிதன் கையில் இருந்த ஒற்றைக் கோளும் பறிக்கப்படுகிறது. மிகுந்த பதட்டத்தோடு, மிகுந்த தவிப்போடு மயங்கிய நிலையில் அந்த மிர்தாத்தினுடைய காத்திருந்த துறவினுடைய காலடியில் அந்த இளைஞன் மயங்கி விழுகிறான் என்று மிர்தாத்தின் புத்தகம் அந்த கதை துவங்குகிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment