Friday, September 29, 2023

மிர்தாதின் புத்தகம் - உரையாடல் -4/இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்/ பகுதி 4//சிவ.கதிரவன்

             இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்

இப்படித்தான் மிர்தாத்தின் புத்தகம் துவங்குகிறது. இந்த இளைஞன் இப்போது அந்த தலைமை துறவியை சந்திக்க வருகிறான். அந்த தலைமை துறவி இந்த இளைஞனை நோக்கி நகர்ந்து வருகிறார். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்தத் தலைமை துறவி நான் இது வரை உனக்காக காத்திருந்தேன். இந்த உயிர் உனக்காக காத்திருந்தது. மிர்தாத் உன்னை சந்திக்க வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டிருந்தார் என்று அழுகையும் கண்ணீருமாக, வருத்தமும் உற்சாகமாக அந்த தலைமை துறவி மிகுந்த வருத்தத்தோடு, மிகுந்த உற்சாகத்தோடு அந்த இளைஞனை வாரி அணைத்துக் கொண்டு அவன் கையில் பெரும் பூரிப்பான செய்திகளை கொடுப்பதற்கான ஆர்வத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேசுவதில்லை என்று கீழே சொன்னார்கள் என்று அந்த இளைஞன் கேட்கிறார். ஆம் நான் பேசுவதில்லை. இந்த மனிதர்கள் மத்தியில் பேசக்கூடாது என்று எனக்கு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. என்னால் பேச முடியாது. என் நா கட்டப்பட்டிருந்தது. என் நாக்கு மொழி எல்லாமும் மறந்திருந்தன. உன்னை பார்த்தவுடன் எனக்கு பேச்சு வந்துவிட்டது. எனவே நான் பேசுகிறேன். மிர்தாத் தான் உன்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று மிர்தாத்தினுடைய கதையை மிர்தாத் இவருக்கு விட்டிருந்த கட்டளையை அந்த இளைஞனுக்கு பகிர்ந்து கொண்டார்.

இருவரும் பேசிக் கொள்கிறார்கள். மிர்தாத் உனக்கு மிக முக்கியமான குறிப்பு ஒன்றை தர வேண்டும் என்று கூறி இருக்கிறார். அந்த குறிப்பை உன்னோடு தந்து விட்டு நான் இந்த இடத்திலிருந்து என் அடுத்த வாழ்வை நோக்கி நகர வேண்டும் என்று மிர்தாத்தின் கட்டளை. அதை செய்ய வேண்டும். என் குறிப்பை நீ வாங்கிக் கொள் என்று அந்த தலைமை துறவி அவருக்கு கூறுகிறார். அப்போது இவன் உடலில் இருந்த எல்லா துணிகளும் எல்லா  அலங்காரங்களும் நீக்கப்பட்ட நிலையில் அவன் கேட்கிறான் நான் இப்படியே இருப்பதா? இல்லை, என் அங்கேயே போட்டுக் கொள். உங்கள் அங்கியும் என் உடல் அமைப்பும் பொருந்தாது என்கிற சந்தேகம் அவனுக்கு இருக்கிற போது நான் சென்ற பிறகு இந்த அங்கி உனக்கான அங்கியாக மாறிப்போகும் என்று வாக்கு கொடுக்கிறார்.

அந்த வகையில் அந்தக் குகையின் உள்ளே சென்று இதுவரை யாரும் எந்த மனிதனும் உள்ளே செல்லாத அந்த குகைக்குள் சென்று ஒரு மஞ்சள் துணி போர்த்திய ஒரு புத்தகத்தை எடுத்து வந்து மிர்தாத்தின் புத்தகமாக கருதப்பட்ட பொக்கிஷமாக கருதப்பட்ட ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அந்த  இளைஞன் கையில் கொடுத்துவிட்டு மிகுந்த கண்ணீரோடு அந்த தலைமை துறவி தன் நிறைவு பயணத்தை தொடங்குகிறார்.  தனது கடைசி பயணத்தை தொடங்குகிறார். அழுது கொண்டே இருக்கிறார். இரண்டு கண்ணீர் துளி அவர் முகத்தின் வழியாக வடிந்து, அவர் முடியின் வழியாக வழிந்து இந்த இளைஞனின் கையில் விழுகிறது. அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு அந்த இளைஞன் அந்தப் புத்தகத்தை பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் அந்த துறவி அவன் முன் இல்லை.

இப்போது அந்த இளைஞன் அந்த துறவியை தேடுகிறான். ஒற்றை நபர் மட்டும் சென்று வருகிற சிறிய வழிப் பாதையில் இவனைத் தாண்டி அந்த துறவி வெளியே செல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆக, துறவி உள்ளே தான் இருக்கிறார் என்று இவனுக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது. உள்ளே சென்று தேடுகிறான். எங்கும் துறவி இல்லை. துறவி போன்றதொரு கற்சிலை மூலையில் இருப்பதை பார்க்கிறான். கற்சிலையின் பக்கத்தில் இவனுக்கே வடிவமைக்கப்பட்ட  ஆடையாக அந்த அங்கி இருக்கிறது. அந்த அங்கியை எடுத்துப் போட்டுக் கொண்டான். இப்போது அந்த மூத்த துறவி சொன்ன அவரது வாக்கு ஞாபகம் வருகிறது. மீண்டும் நினைவூட்டி பார்க்கிறான். அந்த துறவி தமது அடுத்த வாழ்வை நோக்கி நகர்ந்துவிட்டார். இப்போது இவன் கையில் மிர்தாத்தின் புத்தகம் இருக்கிறது.

மிர்தாத்தின் புத்தகம் என்பது ஏழு ஆண்டுகள் முழு மௌனமாக எந்த ஒன்றையும் குறித்து பேசாத மௌனமாக, பேசாமல் இருந்த ஒரு தேவதூதன் வாக்கு போல சேகரிக்கப்பட்ட குறிப்பு. மிர்தாத்தின் புத்தகத்திற்குள் அந்த காலகட்டத்தில் அந்த துறவிகளின் சாம்ராஜ்யத்தில் நடந்த எல்லா கேள்விகளுக்கும் நடந்த எல்லா உரையாடல்களுமான சாரமான செய்திக் குறிப்பை அந்த புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருந்தனர். பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த குறிப்புகளை தொகுத்த வண்ணமாக அந்த புத்தகம் இந்த இளைஞனின் கையில் இருக்கிறது. இப்படி அந்த புத்தகத்திற்குள் இருக்கிற ஒவ்வொரு பக்கத்தையும் அந்த இளைஞன் வாசிக்க துவங்குகிறான். மிர்தாத்தின் புத்தகம் முழுவதுமாக வாசிக்கப்படுகிறது. இப்படித்தான் மிகெய்ல் நைய்மியின் மிர்தாத்தின் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்குள் பயணிக்கிற ஒவ்வொரு இலக்கிய ஆர்வம்  கொண்டவர்களுக்கும் இதற்குள் பயணிக்கிற ஒவ்வொரு மெய்யியல் ஆர்வம் கொண்டவர்களுக்கும் தத்துவ ஆர்வம் கொண்டவர்களுக்கும் இந்த புத்தகம் இலக்கியம் என்கிற தளத்திலிருந்து  வேறொரு பரிணாமத்தை கொடுக்கிறது.

ஓரிடத்தில்அன்பே வாழ்வின் சாறு என்று ஒரு நுட்பமான வரியை மிர்தாத் சொல்வதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அன்பு வாழ்வின் சாறு; வெறுப்பு மரணத்தின் சீல் என்று அந்த வரி சொல்கிறது.

அன்பும் வெறுப்பும் எத்தகைய தன்மையுள்ளதாக வெறும் வாக்கியங்களில் நாம் கவிதை போல் வடித்துக் கொள்ள முடியும். வெறும் வாக்கியமாக வெறும் சொற்றொடராக ஒரு கவிதை போல் வடித்துக் கொள்ள முடியும். ஆனால் மிர்தாத்தின் புத்தகத்தில் வரையப்பட்டிருக்கிற அன்பே வாழ்வின் சாறு; வெறுப்பு மரணத்தின் சீல் என்ற சொல் அப்படியானது அல்ல.

மிர்தாத்தின் புத்தகம் முழுவதும் இன்று மெய்யியல் தேடுபவர்களுக்கு இருக்கிற ஒப்புமையோடும் ஒப்பிடாக  பார்த்தோம் என்றால் இன்று மெய்யியல் தேடுகிற எல்லோரும் குருமார்களைக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ஒரு துறவு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கிறார்கள். மிக முக்கியமான வேறுபாடு இது.

இந்த கதையை நாம் படிக்கிற போது, இந்த குறிப்புகளை நாம் வாசிக்கிற போது மிக முக்கியமான வேறுபாடு ஒன்றை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். யார் ஒருவர் மெய்யியலை தேடுகிற போதும் யார் ஒருவரும் தத்துவத்தை தேடுகிற போதும் யார் ஒருவர் ஆன்மீகத்தை தேடுகிற போதும் அந்த தேடலின் ஊடாக அவர்கள் ஏதாவது ஒரு வகையில் துறவு சாம்ராஜ்யத்தோடு தம்மை இணைத்துக் கொள்வார்கள். இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது.

மெய்யியல் கோட்பாட்டாளர்கள், மெய்யியல் தேடுபவர்கள், மெய்யியல் சார்ந்து முன்னிறுத்திக் கொள்பவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் மெய்யியலுக்கு நெருக்கமான, மெய்யியலுக்கு அன்னியமான ஏதாவது ஒரு துறவு சாம்ராஜ்யத்தோடு தன்னை இணைத்துக் கொள்வது வழக்கமாக இன்றும் இருக்கிறது. அவர்களின் அரிய பணிகளில் ஒன்று மெய்யியல் தேடுபவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயிற்சி கொடுப்பார்கள். அவர்கள் எவ்வாறு உட்கார வேண்டும். அவர்கள் எவ்வாறு படுக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு சுவாசிக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு உணவு உண்ண வேண்டும். எந்த வகை உணவை உண்ண வேண்டும். எந்த வகை உணவை தவிர்க்க வேண்டும் என்று மெய்யியலுக்கு  என்று விதவிதமான பழக்கங்களை பட்டியலிட்டு வைத்திருப்பது மெய்யியல் கோட்பாடு பேசுபவர்கள்  அனைவரது வேலையாக நாம் இன்று பார்க்கிறோம். எல்லா மெய்யியல் கோட்பாடு நெறிமுறைகளும் இப்படித்தான் இருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...