Friday, September 29, 2023

மிர்தாதின் புத்தகம் - உரையாடல் -4/இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்/ பகுதி 5//சிவ.கதிரவன்

                                     இலக்கியம் - மெய்யியல் பற்றிய புரிதல்

எந்த வகையான மெய்யியல் கோட்பாடு நெறிமுறைகளும் இப்படித்தான். மோசஸினுடைய மெய்யியல் கோட்பாடு 10 கட்டளைகளை உள்ளடக்கியது. இயேசு கிறிஸ்துவின் மெய்யியல் கோட்பாடு அத்தகைய அம்சங்களை உள்ளடக்கியது. புத்தர் மெய்யியல் கோட்பாடுகளை வரையறுக்கிறார். அவரும் நெறிப்படுத்தும் கோட்பாடுகளை வைத்திருக்கிறார். கிருஷ்ண பரமாத்மா மெய்யியல் கோட்பாடுகளை  வரையறுக்கிறார். அவரும் நெறிமுறைகளை  வரையறுக்கிறார். 

எல்லா மெய்யியல் பேசுபவர்களும் ஏதாவது ஒரு வகையில் நெறிமுறையை, ஒரு சங்கடம் தவிர்க்கிற சொற்றொடர்களை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்கிறார்கள். ஒரு அமைப்பு முறையை வைத்திருக்கிறார்கள். ஒரு செயல்பாட்டு முறையை வகுத்திருக்கிறார்கள். இப்படித்தான் மெய்யியல் தத்துவார்த்த அமைப்பு முறைகள் இருக்கின்றன.

ஆனால் மிர்தாத்தின் மிக நுட்பமான பகுதி எந்த செயல்பாடு முறையும் அங்கு கிடையாது. எந்த பயிற்சி முறையும் கிடையாது. மிர்தாத்தை பின்பற்றுபவர்கள் எந்த பயிற்சியும் செய்ய அவசியம் இல்லாதவர்கள். எந்த பயிற்சி யாருக்கும் அவசியமில்லை என்கிற தன்மையிலேயே மிர்தாத் புத்தகம் முழுவதும் வாசிக்கிற போது புத்தகம் முழுவதும் மிர்தாத்தின் பேச்சை கேட்கிற போது ஒரு இடத்தில் கூட மிர்தாத் இந்த பயிற்சியை செய்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கவில்லை. இந்த உணவை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கவில்லை. இவரோடு உறவு பாராட்டுங்கள் என்று சொல்லவில்லை. ஒருவரைப் புறக்கணியுங்கள் என்று மேற்கோள் காட்டவில்லை. மிர்தாத் முழுமையை அனுமதிக்க வரையறுக்கிறார். முழுமையை அனுமதிக்க வற்புறுத்துகிறார். இப்படித்தான் மிர்தாத்தினுடைய மெய்யியல் நெறிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மெய்யியல் நெறிமுறைக்கான மிக நுட்பமான வேறுபாடு. மற்ற எல்லா மெய்யியல் கோட்பாடுகளும் மற்ற எல்லா தத்துவ கோட்பாடுகளும் அவற்றிற்கே உரிய நெறிமுறைகளை சாதக, பாதக அம்சங்களை, வகுப்புகளை, கோட்பாடுகளை என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கின்றன.

ஒருவர் சைவ உணவில் ஆர்வமாக இருக்கிறார் என்றால் அவர் ஒரு மெய்யியல் தேடுகிறபோது போது நீ சைவ உணவு சாப்பிட கூடாது என்று பரிந்துரை இருக்கும். ஒருவர் அசைவ உணவில் விருப்பம் உள்ளவராக இருந்தால் அவர் மெய்யியல் தேடுகிற போது அவருக்கு அசைவ உணவு மறுக்கப்படும். நீங்கள் அமர்ந்து கொண்டு சுவாசிப்பது உங்களுக்கு  வசதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அமர்ந்து கொண்டு சுவாசிக்க முடியாத பரிந்துரை மெய்யியல் உங்களுக்கு சொல்லும். இன்றும் அப்படியான மெய்யியல் கோட்பாடுகளை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். மிர்தாத்தின் புத்தகத்திற்குள் அப்படி எந்த மெய்யியல் கோட்பாடுகளும் கிடையாது. எந்த மெய்யியல் வரையறைகளும் கிடையாது. எந்த மெய்யியல் நெறிப்படுத்துதலும் கிடையாது.

மிர்தாத் நேரடியாக பேசுகிறார். உள்ளுணர்வோடு பேசுகிறார். அப்படித்தான் புத்தகம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கிறார்.அப்படியான புத்தகத்திற்கு இப்படியான நெறிப்பாடுகள் எங்கிருந்து வந்தன. அவை முழுவதும் அன்பில் இருந்து வந்தன என்று புத்தகத்தை  படிக்கிற போது நானும் நீங்களும் எல்லோரும் உணர்ந்து கொள்ள முடியும். இந்த புத்தகம் ஏன் நெறிப்பாடுகள் ஏதுமில்லாதவர்களுக்காக படைக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தின் வழியாக ஏன் எந்த நெறிப்பாடுகளும் வழங்கப்படவில்லை என்பது மிக முக்கியமான காரணமாக நான் பார்க்கிறேன். உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இந்த உலகில் இருக்கிற எல்லா பாகுபாடுகளுக்கும் எல்லா இணக்கமான பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது உங்களது விருப்பங்கள், கற்பனைகள், ஆசைகள்.

எப்போது நீங்கள் ஆசைகளை கடந்து, எப்போது நீங்கள் உங்கள் விருப்பங்களை விடுத்து, எப்போது உங்கள் கற்பனைகளில் இருந்து விடுபடுகிறீர்களோ அப்போதுதான் நீங்கள் புரிதலை நோக்கி நகர்கிற நபராக இருப்பீர்கள்.

புத்தரினுடைய கோட்பாட்டில் மிக நுட்பமான ஒரு பயிற்சி முறை இருக்கிறது. மெய்யியல் கோட்பாட்டில் பலரும் பேசியிருக்கிறார்கள். புத்தரும் பேசியிருக்கிறார். புத்திரனுடைய மெய்யியல் கோட்பாட்டில் ஒரு மனிதன் மெய்யியல் பயிற்சி துவங்குவதற்கு முன்பு ஏகதேசம் ஒரு மணி நேரமாவது அவன் அசையாமல் இருக்க வேண்டும். கண்களை மூடி வசதியான இருப்பு நிலையில் அமர்ந்து கொண்டு ஒரு மணி நேரம் அசையாது இருக்கிற மனிதன் மெய்யியலுக்கு  அடிப்படை  தகுதியோடு இருக்கிறான் என்று புத்தர் ஒரு வரையறையை வைப்பதை நாம் பார்க்க முடியும். அது நமது பார்வை தான். புத்தர் எந்த நோக்கத்தில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனாலும் புத்தரினுடைய  நெறிப்பாடுகளில் ஒரு மனிதன் ஒரு மணி நேரமாவது எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்திருக்க வேண்டும். கண்களை மூடி இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீங்கள் அமர வேண்டும் என்று முடிவு செய்த உடனேயே உங்கள் மனம் பதற ஆரம்பிக்கும். நீங்கள் வீட்டில் செய்து பார்க்கலாம். ஒரு மணி நேரம் கண்களை மூடிக்கொண்டு வசதியான இருப்பில் அமர்ந்து கொண்டு நீங்கள் அசைவு இல்லாமல் இருப்பீர்கள் என்றால் மூன்றாவது நிமிடத்தில் மூக்கு அரிக்கும். நான்காவது, ஐந்தாவது நிமிடத்தில் குறுக்கெலும்புகள் வலிக்கத் துவங்கும். ஒரு அரை மணி நேரம் கடந்த பின்பு இரண்டு கால்களும் இல்லை என்ற உணர்வு வந்துவிடும். பயமும் பதட்டமும் இருட்டுமான ஒரு உலகில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து கொள்வீர்கள். ஒரு 40 நிமிடங்கள் கடப்பது என்பது மிகப்பெரிய சிக்கலான உளவியல் பிரச்சனையை உங்களுக்கு உண்டாக்கிவிடும். அப்படியான கடுமையான செயல்பாடுகளை இந்த பயிற்சி உங்களுக்கு வழங்கும்.

புத்தரின் இந்த பயிற்சிக்குள் நீங்கள் இவ்வளவு சோர்வாவதற்கு காரணமாக கூறுகிற கதை என்னவென்றால் நீங்கள் ஆசையோடு இருந்தீர்கள் என்றால் உங்கள் ஆசை உங்கள் மூக்கில் அரிப்பாக வெளிப்படும். உங்கள் கற்பனை உங்கள் முதுகு தண்டுவடத்தில் வழியாக வெளிப்படும். உங்கள் விருப்பம் உங்கள் கால்களை இல்லாமல் செய்து விடும். எனவே விருப்பத்தை கடக்க வேண்டும். கற்பனையில் இருந்து விடுபட வேண்டும். ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று புத்தர் அடையாள குறிப்பாக இந்த பயிற்சியின் வழியாக கூறுவதாக நான் பார்க்கிறேன். அப்படி எல்லாவற்றையும் விடுத்து எல்லாவற்றையும் எல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட ஒரு  மனிதன் மிகுந்த நிதானத்தோடு எந்த கவனச் சிதறலும் இல்லாமல் இருக்கிற மனிதன்  பேசுவதைக் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

யார் ஒருவர் பேசுவதை கேட்க வாய்ப்பு இருக்கிறது. புரிதல் உள்ளவன் பேசுவதை கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த மனிதன் புரிதலுக்கு காத்திருக்கிறானோ, புரிதலை நோக்கி நகர்கிறானோ, குறைந்தபட்ச புரிதலோடு கற்பனைகள் இல்லாமல், ஆசைகள் இல்லாமல் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு காத்திருக்கிறானோ அவன் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவனே புரிதலுக்கு தயாராய் இருக்கிற மனிதன். அந்த மனிதனுக்கு எந்த வகையான பயிற்சியும் அவசியமில்லை. எந்த வகையான பயிற்சியும் பயன்படாது.

எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு பெரும் அன்பை பகிர்ந்து அளிப்பதற்கு காத்திருக்கிற மனிதர்களைத் தேடி மிர்தாத் பேசத் தொடங்குகிறார். மிர்தாத் தேர்வு செய்து இருக்கிற அந்த எட்டு நபர்கள் கொண்ட  பலிபீடம் அத்தகைய புரிதலோடு காத்திருந்த பலிபீடம். அந்த பலிபீடத்தினுடைய சிக்கலான காலத்தில் அந்தப் பலிபீடம் தனது கொள்கை கோட்பாடுகளில் இருந்து சிதறி வெளிச் செல்கிறது. அந்த வெளிச் சென்ற காலத்தை உடைத்து விட்டு மிர்தாத் மீண்டும் கட்டமைக்கிறார். இப்படியான ஒரு மனிதனுக்குள் இருக்கிற ஆசைகள், கற்பனைகள், சமூக  ஒழுங்குப்பாடுகள் யாவையும் கடந்து நிற்கிற புரிதலுக்காக காத்திருக்கிற நிலையிலிருந்து மிர்தாத் பேசுவது கேட்பதற்குரிய பொருளாக மாறுகிறது. இதுதான் மிர்தாத்தின் புத்தகம் என்கிற இலக்கிய நூல் மெய்யியல் கோட்பாட்டு நூலாக மாறுகிற இடம் என்று நான் பார்க்கிறேன்.

 நீங்கள் மிர்தாத்தை இலக்கியம் போல் வாசிக்க முடியும். இலக்கியப் போல் சிலாகிக்க முடியும். இலக்கியம் போல் மூடி வைக்க முடியும்.   ஆனால் எப்போது இந்த உலகம் வைத்திருக்கிற எல்லா கோட்பாடுகளில் இருந்தும் எல்லா ஆசைகளில் இருந்தும் எல்லா விருப்பங்களில் இருந்தும் எல்லா கற்பனைகளில் இருந்தும் இன்ன பிற உங்களுக்கு ஊறு செய்கிற எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் எப்போது விடுபடுகிறீர்களோ அப்போதுதான் புரிதலை தேடுகிற நபராக மாறுவீர்கள். அப்போது புரிதலை தேடுகிற நபராக மாறி நிற்கிற உங்களுக்கு காத்திருப்பு என்பது இயல்பாக மாறிவிடும். யார் ஒருவர் காத்திருப்பாக ஒன்றை கேட்க துவங்குகிறாரோ யார் ஒருவர் காத்திருப்புக்குறிய நபராக மாறுகிறாரோ யார் ஒருவர் தானே காத்திருப்பாக உருவகப்படுத்திக் கொள்கிறாரோ அவரே மிர்தாத்தின் சொல்லை கேட்பதற்கு வாய்ப்பு உள்ளவர். அவருக்குத்தான் மிர்தாத் பேசுகிற சொற்கள் வெறும் சொற்களாக இருப்பதில்லை. வேறொன்றை சொல்கிறது. அவர்களுக்குத்தான் மிர்தாத்தினுடைய  புன்னகை வெறும் புன்னகையோடு நின்று விடுவதில்லை. வேறொன்றை பகிர்ந்து அளிக்கிறது. அவர்களுக்குத்தான் மிர்தாத் இலக்கியத்தை மையமாக வைத்துக் கொண்டு இதை கடந்த ஒன்றை சொல்கிறார். இப்படித்தான் மிர்தாத்தின் புத்தகத்திற்குள் நாம் பயணிக்க போகிறோம்.

மிர்தாத் இலக்கியமாக துவங்குகிறது. புரிதல் உள்ள மனிதர்களுக்கு, புரிதலை தேடுகிற மனிதர்களுக்கு, மெய்யியலை கொண்டாடுகிற மனிதர்களுக்கு, ஆசைகளில் இருந்து கற்பனைகளில் இருந்து விருப்பங்களில் இருந்து விடுபட்ட மனிதர்களுக்கு ஒரு  மெய்யியலுக்குறிய குறிப்பேடாக மாறுகிறது. இலக்கியம் ஒரு மெய்யியலுக்குரிய குறிப்பேடாக மாறுகிற முக்கியமான வேறு எங்கும் இல்லாத மிகச் சிறந்த புள்ளி இது.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...