மிர்தாதின் புத்தகம் – ‘நான்’ பற்றி உளவியல்
ஒரு உளவியல் பார்வையிலிருந்து இன்று ‘நான்’ எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் ஒரு துறவியின் பார்வையில், துறவிக்கு முன்னால் இருக்கிற சில நூறு ஆண்டுகளுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கிற சமூக மன நிலையோடு ‘நான்’ எவ்வாறு பேசப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்வது இன்னும் எளிமையாக இருக்கும். ‘நான்’ என்பது என்ன என்பதற்குள் இருக்கிற சமகால உளவியல் இப்படியானதாக இருக்கிறது. சமகால உளவியல் என்பது ‘நான்’ ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘நான்’ என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘நான்’ என்று ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் இன்று ‘நான்’ என்று ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் சமூக அளவில், சமூகப் பின்புல அளவில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன உளவியல் ரீதியாக. நான் என்பது ஒரு குறியீடு மட்டுமல்ல. அது ஒரு தனி சமூக குறிப்பு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற சமூகம் சார்ந்த, அவர் பின்னால் இயங்குகிற இயக்குகிற எல்லாமும் உள்ளடக்கிய ஒரு குறிப்பு. நான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிற போது வேறுபாடுகளை மட்டும் சொல்வதில்லை. தான் எவ்வாறு வேறுபட்டு இருக்கிறோம் என்பதன் வழியாக, தான் எவ்வாறு சிறப்படைந்து இருக்கிறோம் என்று தன்னை புகழ்ந்து சொல்கிற ஒரு நுட்பம் அதில் இருக்கிறது. தன்னை உயர்த்தி சொல்கிற ஒரு நுட்பம் அதில் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் தன்னை வேறுபடுத்தி காண்பிப்பதன் வழியாக தான் உயர்வு பெற்றிருக்கிறோம் என்கிற ஒன்று அதில் ஒளிந்து இருக்கிறது. தான் உயர்வு பெற்றிருக்கிறோம் என்கிற கருத்தாக்கம் இந்த சமூகத்தை குறிப்பாக மனித மனங்களில் எவ்வாறு இயங்குகிறது என்பதை உளவியலில் நனவிலி என்கிற பகுதியில் பேசுகிறபோது நாம் விரிவாக பார்க்க முடியும். நனவிலி என்று ஆவணங்களில் படித்துப் பார்க்கிறபோது விரிவாக பார்க்க முடியும் உணர்வு நிலையில் நான் என்பது நான் குறித்த குறிப்புகள் தான் எவ்வாறு சிறப்பாக இருக்கிறவன், தான் எவ்வாறு சிறந்தவன் என்கிற சிறப்புக்குறியீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிற நான் வெளிப்பாடுகளை நனவிலி குறிப்புகள் அடுக்கி வைத்திருக்கிறது.
ஆக, நான் என்பது வெறுமனே வேறுபாட்டு குறியீடு மட்டுமல்ல. நான் என்பது தன்னை சிறப்பாக காண்பித்துக் கொள்வதற்கான குறியீடு. நான் என்று சொல்லுகிற போது நான் உங்களிடமிருந்து என் எதிரே இருக்கிற மற்றவர்களிடமிருந்து சிறப்பான ஒன்றோடு இருக்கிறேன் என்பதற்கான குறியீடு. ஆக, நான் என்பது விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு மடாலயத்தில் உரையாடல் செய்யப்படுகிறது என்றால் என்னுள் சிறப்பான ஒன்று ஏதுமில்லை என்கிற புரிதல் அங்கு நிறுவப்பட வேண்டும் என்று பொருள். நான் மற்றவனை விட சிறந்தவன் அல்ல; எளிமையின் எளிமையானவன்; சாதாரணத்திலும் சாதாரணமானவன் என்கிற மனதிடத்தை, உளவியல் அமைப்பை, மன உள்கட்டமைப்பை ஒரு துறவி கொண்டிருக்க வேண்டும் என்பதன் பொருளாக நான் என்கிற சொல்லை தவிர்க்க வேண்டும் என்று மடாலயத்தின் விதி அமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு வேறு வினாக்கள் இருக்கின்றன. ‘நான் யார்?’ என்று ஒரு ஆன்மீக சாதகர் விசாரணை செய்கிறார். இந்த நான் யார் என்ற வினாவும் உங்களை விடவும் பதவியில் பொறுப்பில் குறைவாக இருக்கிறவர் உங்கள் அலுவலகத்தில் உங்களிடம் விசாரிக்கிற போது நான் யார் தெரியுமா என்று நீங்கள் அவரிடம் கேட்பீர்கள் என்றால் ஆன்மீக சாதகம் செய்கிற நான் யார் என்று கேள்வியும் நீங்கள் உங்கள்
பணிக்கூடத்தில் கேட்கிற நான் யார் என்ற கேள்வியும் சொல்லளவில் ஒன்று. ஆனால் பொருளளவில் வேறுவேறு.
ஆன்மீக தளத்தில் நான் யார் என்று நீங்கள் தேடினீர்கள் என்றால் நான் யார் என்று தேடுகிற திசையே வேறு. ஆனால் பணியிடத்தில் நீங்கள் நான் யார் என்று தேடினீர்கள் என்றால் உங்களை சுற்றி இருக்கிற சிறப்பு தன்மைகளை, புரவியல் கூறுகளை உங்களை சுற்றி பின்னப்பட்டிருக்கிற பிம்பங்களை நீங்கள் அடுக்கிக் கொண்டே போவீர்கள். இந்த இரண்டிற்குமான நான் யார் என்ற கேள்வி பொதுவானது. நான் யார் என்ற கேள்வி இரண்டிற்கும் பொதுவானது. நீங்கள் பணியிடத்தில் பேசுகிறபோது நான் யார் என்று உங்களை விட பணியில் குறைந்த பொறுப்பில் குறைந்தவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வீர்கள் என்றால் அதற்கான பொருளும் நான் யார் என்று நீங்கள் ஆத்மீக சாதனையில், தியானத்தில் நீங்கள் மூழ்குவீர்கள் என்றால் அதற்கான நான் யார் என்ற முயற்சியும் பொருளும் வேறுவேறு. முழுக்க வேறுவேறு.
ஆக, நான் யார் என்பதற்குரிய அடிப்படை என்ன நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னால் இருக்கிற உளவியல் என்ன என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஆன்மீகத்தில், தத்துவத்தில், மெய்யியல் கோட்பாடில் நான் யார் என்று நீங்கள் தேடுவீர்கள் என்றால் அவற்றுக்கு பின்னால் இருக்கிற எல்லாமும் நான் என்பதில் இருக்கிற சிறப்பியல்புகள் உண்மையிலேயே சிறப்பானவையா?. நான் என்று நீங்கள் அறிமுகம் செய்து கொள்கிற பொழுது நீங்கள் வேறுபட்டவர் என்பதை காட்டுகிறீர்கள். ஆம், வேறுபட்டவர் என்பதை காட்டுகிறீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். வேறுபட்டவர் என்று நீங்கள் ஏன் காட்ட வேண்டும், நீங்கள் மற்றவரை விட ஏதோ வகையில் சிறந்தவர் என்பதை காட்டுகிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் சுட்டிக்காட்டுகிற ஒரு குறியீடு, ஒரு குறிப்பு, சிறப்புக்குரியவையா என்பதை நீங்கள் பரிசீலித்து பார்ப்பதற்கு நான் யார் என்கிற ஆன்மீகக் கேள்வி அவசியமாகிறது.
நான் உங்களை விட உயரமாக இருக்கிறேன். அது எனது தனி சிறப்பு என்று நான் அறிமுகம் செய்து கொள்கிறேன் என்றால் உண்மையிலேயே இந்த உலகில் உயரமான ஒரு மனிதன் சிறந்தவனா என்கிற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க வேண்டி இருக்கிறது. உயரம் சிறப்பானதா அல்லது உயரம் குறைவாக இருப்பது சிறப்பு குறைவானதா என்று கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே போக வேண்டி இருக்கிறது. நான் உங்களை விட நிறமாக இருக்கிறேன் என்றால் நிறமாக இருப்பது சிறப்பானதா நான் என்று நான் அறிமுகப்படுத்துகிற போது நான் வேறுபடுத்திக் காட்டுகிற போது அதற்குள் இருக்கிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அதற்குள் இருக்கிற வேறுபாடுகளை தாண்டி நான் சிறந்த ஒன்றாக வெளிப்படுகிறேன். சிறந்த ஒன்றை வைத்து இருக்கிறேன் என்கிற குறியீடு சொல்ல வருவது என்ன என்பதை பகுத்து அதைக் களைத்து போடுவதற்கு இந்த நான் யார் என்கிற உரையாடல் அவசியமாகிறது. துறவிகளுக்கு மிக முக்கியமாக நான் என்கிற சொல் தவிர்ப்பதற்கு காரணம் நான் என்பது வெறுமனே வேறுபாடை சமூகத்தில் இருக்கிற குழு இயக்கத்தில் இருந்து வேறுபட்ட அடையாளத்தை மட்டும் அவை சொல்வதற்கில்லை. அவை வேறுபட்ட அடையாளத்தில் இருந்து வெளியில் வந்து வெளியில் வந்தவுடன் மற்ற யாவற்றையும் விட ஒருபடி சிறப்பான ஒன்று இந்த நானிடம் இருக்கிறது என்கிற வெளிப்பாடாக இருப்பதால் துறவிகள் அப்படி ஒன்றும் சிறப்பானவர்களாக ஒரு மனிதன் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு சிறந்த குணங்கள் ஏதுமில்லை என்பதை உணர்த்தும் விதமாக நான் என்கிற சொல்லை தவிர்ப்பதற்கு அந்த மடாலயத்தில் பரிந்துரை இருந்தது.
நான் என்று சிறப்பாக ஒன்றுமில்லை. சிறந்த ஒன்று நானாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. நான் என்று சொன்னவுடன் ஏதோ ஒரு வகையில் சிறந்தவனாக இருக்கிறேன் என்று வெளிப்படுத்துகிற, வெளிப்படுத்த முயற்சிக்கிற ஒரு வகையை களைத்து போடுவதற்காக ஒரு செயல்பாட்டை ஒரு வெளிப்பாட்டை நிறுத்துவதற்காக மடாலயத்தில் தொடர்ந்து நான் என்கிற சொல் தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
நீண்ட காலமாக ‘நான்’ பயன்படுத்தப்படவே இல்லை எப்போதும் மடாலயங்களில் ‘நான்’ பயன்படுத்தப்படக் கூடாது. ஏனென்றால் மடாலயங்கள் சிறப்பான ஒரு மனிதனை, மனிதர்கள் எப்போதும் சாதாரணமானவர்கள். பணிவானவர்கள். இந்த படைப்பே சிறப்பானது. இந்த படைப்பே பேராற்றலுடையது. இந்த படைப்பின் முன்பு, இந்த இருப்பின் முன்பு மனிதர்களினுடைய துறவிகளினுடைய இந்த உலகில் இருக்கிற எல்லா ஜீவன்களினுடைய எல்லா ஆற்றலும் சொற்பமானது என்று நம்புகிற, என்று பின்பற்றுகிற மடாலயத்தில் நான் என்பது இப்படியான பொருளிலேயே தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த துறவிகளினுடைய புரிதலில் இருந்து சமூகத்தில் பயன்படுத்தப்படுகிற நான் என்பது மிகுந்த வேறுபாடுடையது. சமூகத்தில் பயன்படுத்துகிற நான் முழுவதும் பிம்பங்கள் சார்ந்தது. சமூகத்தில் பயன்படுத்துகிற நான் முழுவதும் புறமதிப்பு சார்ந்தது. சமூகம் என்னை எவ்வாறு மதிக்கிறது. இந்த சமூகம் என் ஆடையை எவ்வாறு மதிக்கிறது. இந்த சமூகம் என் தலை முடியை எவ்வாறு மதிக்கிறது. இந்த சமூகம் என் புறத்தோற்றத்தை எவ்வாறு மதிக்கிறது என்று புரவயப்பட்ட மதிப்பீடுகளின் வழியாக சமூகத்தில் இருக்கக்கூடிய நான் கட்டமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
துறவிகளுக்கு மத்தியில் அப்படியான வாய்ப்பு இல்லை. அது அனுமதிக்கப்படுவதுமில்லை. அதற்குக் காரணம் நான் என்பது சிறப்பின் குறியீடாக சொல்லப்படுவதால் சிறந்த ஒன்று இல்லை என்கிற புரிதலிருந்து அது அனுமதிக்கப்படுவதில்லை. மனிதர்கள் சிறப்பானவர்கள். எல்லா மனிதர்களுக்கும் சிறப்பானவர்கள். எல்லா மனிதர்களுக்கும் சிறப்பான குணம் ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிற போது தனியான சிறப்பு கொண்ட ஒருவர் யாரும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லா மனிதர்களுக்கும் சிறப்பு உண்டு. எல்லா மனிதர்களுக்கும் சிறந்த குணங்கள் உண்டு. ஒரு மனிதனைப் போல் இன்னொரு மனிதன் தனிச்சிறப்புடன் வாழ்வதற்கு உருவாவதற்குரிய தன்மையோடு தான் இருக்கிறார். ஒரு மனிதனினுடைய உடல் அமைப்பு இன்னொரு மனிதனைப் போல் இருப்பதே இல்லை. ஒரு மனிதனினுடைய உள்ளங்கை ரேகை அமைப்பு இன்னொரு மனிதனைப் போல் இருந்ததே இல்லை. இனிமேல் வருவதற்கும் வாய்ப்பில்லை. ஒரு மனிதனுக்கு ஒரு வகைப்பட்ட ரேகை அந்த மனிதனுக்கு மட்டும்தான். இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அப்படித்தான் இருக்கிறது. இப்படி எல்லா மனிதர்களும் அவரளவில் சிறப்பானவர்கள் என்பதை புரிந்து கொண்டால் தனியான சிறந்த ஒருவர் இல்லை என்பது புரிந்துவிடும். இதுதான் துறவிகளின் புரிதல். எல்லா மனிதர்களும் அவரவர் அளவில் சிறப்பான ஒற்றைத் தன்மையோடு இருக்கிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்கிற போது தனியான சிறப்பான ஒருவர் என்று ஒருவரும் இல்லை என்பது வெளிப்படையாக புரிந்து கொள்ள முடியும்.
துறவிகளினுடைய பார்வையில் அது நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அந்த மடாலயத்தினுடைய ஆதித் துறவி எதிர்பார்த்து இருந்தார். ஆதித் துறவி வலியுறுத்திருந்தார். அந்த வலியுறுத்தலின் பெயரிலேயே, அந்த வலியுறுத்தலினுடைய வழிகாட்டிதலிலேயே தொடர்ந்து நான் என்கிற சொல் தவிர்க்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த நான் என்கிற சொல்லினுடைய சிறப்பு, சிறப்பின்மை என்கிற மனப் போராட்டம் இந்த ஏழு ஆண்டுகள் துறவிகளுக்கு ஏற்பட்டிருக்கிற காரணத்தினால் மடாலயம் இந்த மனிதர்களுக்கு இந்த மலையை சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் சிறந்த ஒன்றாக இருந்திருக்கிறது. சிறந்த ஒன்றாக இருக்கப் போகிறது. சிறந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்த மடாலயத்தில் இருக்கக்கூடிய துறவிகள் தம்மை குறித்து, தம் மடாலயம் குறித்து சிறப்பான அபிப்பிராயத்தை மேற்கொண்டு இருக்கிற காரணத்தினால் மிர்தாத் அவர்கள் இந்த ஏழு ஆண்டுகள் இந்த மடாலயத்தினுடைய நடவடிக்கைகளை வேறொன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த மடாலயத்தின் எந்த நடவடிக்கை குறித்தும் அவர் தலையீடு செய்யவில்லை. இந்த மடாலயத்தினுடைய இருண்ட காலமாக அது கடந்திருக்க வேண்டும். அவர்கள் ஏதும் பேசவில்லை. அவர்கள் மடாலயத்தினுடைய கொள்கை கோட்பாடுகளில் இருந்து துறவிகள் என்கிற நிலையில் இருந்து நீண்ட தூரம் விலகி சென்றிருந்த காலம் அது.
தலைமை துறவி தன்னுடைய பொறுப்பினுடைய நியாயம் குறித்து கவலைப்படாதவராக இருந்த காலம் அது. என்றாலும் ஒரு நாள் இவர்கள் இழைக்கிற தவறு இவர்கள் செல்கிற சீரற்ற பாதை மீண்டும் ஒரு இடத்திற்கு வந்து சேரும் என்கிற மெய்யியல் கோட்பாட்டின் அடிப்படையில் மிர்தாத் காத்திருந்தார். அந்த நாள் வருகிறது. அந்த நாளில் நான் குறித்து மிர்தாத் பேசுகிறார். பழைய அனுபவங்களும் சமூக உளவியலும் சேர்ந்திருக்கிற ஒரு வடிவத்தை உடைத்து துறவிக்குள் இருக்கிற நான் எந்த வகைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். அனுபவங்களை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்று பேசுகிறார். நான் என்பது என்னவென்று விளக்குகிறார்.
ஆக, நான் என்பது சமூக பிம்பங்களிலிருந்து விடுபட்ட ஒன்றாக துறவிகளுக்கு அமையப் பெற்றிருக்க வேண்டும். சமூக பிம்பங்களில் இருந்து புரவயப்பட்ட மதிப்பீடுகளில் இருந்து மிக சாதாரணமான மனிதன் என்று நாம் நம்மை பார்க்கத் துவங்குகிறோமோ அப்போதுதான் நாம் வைத்திருக்கிற நம்மைப் பற்றிய அபிப்ராயம் கொண்ட நான் என்கிற பிம்பம் உடைந்து மெய்யாகவே நான் என்கிற ஒன்றை நாம் கற்றுக் கொள்வதற்கும் பார்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.
நவீன உளவியலில் இரண்டு ‘நான்’களை சொல்வார்கள். ஒன்று குறியீடாக சொல்கிறபோது i
மற்றொன்று I. இந்த இரண்டு I, I என்கிற குறியீட்டை ஒப்பிட்டு சொல்வார்கள். i என்பது மனிதனினுடைய நான். I என்பது காஸ்மிக். இப்போதும் அப்படி ஒரு உளவியல் பகுப்பாய்வு கோட்பாடு உண்டு.
மனிதனினுடைய மிகச் சுருக்கமான, பரபரப்பான புற மதிப்பீட்டில் இருந்து உருவாகிற நான் என்கிற உளவியல் சீர் செய்யப்பட்டு, அவர் உள்நோக்கி தேடுகிற போது அகமாக இருக்கிற வேறொரு பேருண்மையை, மெய்யியலை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் குறித்து மிர்தாதினுடைய உரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment