Wednesday, October 18, 2023

மிர்தாத் புத்தகத்தின் உள்ளடக்கம் - மிர்தாதின் புத்தகம் - சிவ.கதிரவன்/ பகுதி 3

                                     மிர்தாத் புத்தகத்தின் உள்ளடக்கம் 

www.swasthammadurai.com

அன்பை, அனுபவத்தை நாம் சரியாக பார்ப்பதன் வழியாகவே புரிந்து கொள்ள முடியும். அனுபவங்கள் வழியாக நம்மை கரைத்துக் கொள்வதன் வழியாகவே புரிந்து கொள்ள முடியும். “நான் என்பது என்ன,நான் பேசுகிற பேச்சின் பொருள் என்ன,நான் கேட்கிற கேட்பின், செவி சாய்ப்பின் பொருள் என்ன, எனது நாக்கு உச்சரிக்கிற உச்சரிப்பின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் காண்கிற கண் நமக்கு அவசியமாகிறது, என்பதையெல்லாம் உணர்கிற உணர்வு நிலை நமக்கு அவசியமாகிறது. அதற்கு நாம் துறவு மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் எல்லாவற்றின் மீதும் இருக்கிற பற்றினை புரிந்து கொள்ள வேண்டும். சேகரிக்கப்பட்ட அறிவியல் இருந்து விடுபட வேண்டும்.

சமகாலத்திய தத்துவ ஆய்வாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி சேகரிக்கப்பட்ட அறிவே மனிதர்களை இயக்குகிறது என்கிற கோட்பாட்டை முன் வைக்கிறார். மிகவும் பொருத்தமான கோட்பாடு. மிர்தாதின் வார்த்தைகளில் சொன்ன சொல்லை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நேரடியான விமர்சனத்தில் பார்க்க முடிகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்ன சேகரிக்கப்பட்ட அறிவுதான் இந்த சமூகத்தை ஒவ்வொரு தனி மனிதனையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. இவற்றின் மீது ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற புரிதலின் வழியாகவே ஒரு மனிதன் விடுதலை அடைய முடியும். விடுதலை என்பது அன்பின் பாற்பட்டது. சுதந்திரத்தின் பாற்பட்டது. பொறுப்புணர்வின் பாற்பட்டது. இந்த வகையில் அன்பை, சுதந்திரத்தை, பொறுப்புணர்வை மேற்கொள்ள  வாய்ப்பாய் இருப்பவர்கள், வேண்டுதலாய் இருப்பவர்கள், மிர்தாதை  பின்பற்ற வேண்டும், மிர்தாதின் சொல் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறவர்கள் துறவு நிலை நோக்கி நகர்கிற போது, பற்றினை விடுவதற்கு முயற்சிக்கிற போது, பற்றினை விடுகிற  வேலையை செய்கிற போது அன்பிற்குரியவர்களாக குறிப்பாக மிர்தாதின் அன்பிற்குரியவர்களாக மாறுகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். மாற முடியும் என்று நான் நம்புகிறேன்,  மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தொடர்ந்து பேசுவோம்...  

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...