Sunday, October 1, 2023

மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்-உரையாடல் - 6//பகுதி - 3///சிவ.கதிரவன்

                             மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்

www.swasthammadurai.com

“மிர்தாத், நான் என்ற சொல் பற்றி நீ சொல் என்று ஏளனமான பேச்சோடு மிர்தாத்தை நோக்கி திருப்புகிறார். மிர்தாத் பேசத் துவங்குகிறார். நான் என்று பேசுகிற அந்த இடத்திலிருந்து மிர்தாதினுடைய பேச்சு துவங்குகிறது. மிர்தாத் காத்திருந்த ஏழு ஆண்டுகள் இன்று தான் நிறைவடைகிறது என்று கதையின் அம்சம் நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். காத்திருந்த ஏழு ஆண்டுகளுக்கு பின்பு மிர்தாத் பேசுகிறபோது அங்கிருக்கிற எல்லோரும் அனுபவம் பெற்றவர்களாக எல்லா அனுபவத்தின் வழியாகவும் நிறைவின்மையை உணர்ந்தவர்களாக, கடவுள் தன்மையை பார்க்க முடியாதவர்களாக, எல்லாமும் இருக்கிறது ஏதோ ஒன்று குறைகிறது அந்த ஒன்று மிக முக்கியமானதாக இருக்கிறது என்கிற உணர்வு பெற்றவர்களாக இருக்கிற  சூழலில் மிர்தாத் பேசுகிறார்.  இவ்வளவு நாள் தாம் ஏன் பேசாமல் இருந்தோம் என்று மிர்தாத் முன் வைக்கிற காரணம், மிர்தாத் விளக்கம் சொல்கிற காரணம் எல்லாமும் இந்த காத்திருப்பு என்பதை சுட்டிக்காட்டும் தன்மையோடு இருக்கிறது. மிர்தாத் பேசுகிறார்.

நீங்கள் விவாதிக்கிற ஒவ்வொரு சொல்லும் நான் என்கிற சொல் உட்பட நீங்கள் கேட்டிருக்கிற நான் என்கிற சொல்லை நோவா பயன்படுத்தக் கூடாது என்று பரிந்துரைக்கிறார். நோவாவிற்கு இறைத்திருமகன் பரிந்துரைக்கிறார். தொடர்ந்து இந்த சபை நான் என்கிற சொல்லை தவிர்த்து வந்திருக்கிறது. இன்று நான் குறித்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிற சூழலில் மிர்தாத் பேசுகிறேன் என்று ஆரம்பிக்கிறார். நீங்கள் பேசுவதும் ஒரு தனிநபர் பேசுவதும் ஒரு தனி நபரினுடைய பேச்சை இன்னொரு தனி நபர் கேட்பதும் மெய்யானதில்லை, அது உண்மையானது அல்ல. ஒரு தனிநபரினுடைய பேச்சும் இன்னொரு தனிநபரினுடைய கேட்கும் நிலையும் ஒரு உரையாடலின் இலக்கணம்.  உரையாடல் என்பது இரண்டு தனி நபர்கள் இணைந்து பயணிப்பது. ஒருவர் பேசிக் கொண்டிருப்பார். ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பார். மீண்டும் கேட்டவர் பேசுவார்; பேசியவர் கேட்பார் இது உரையாடலின் இலக்கணம்.

உரையாடல் நிகழ்கிற போது எல்லா உரையாடல்களும் இப்படித்தான் இருக்கிறது.  இப்படித்தான் இருக்கும். இந்த உரையாடல் களத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார், இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மீண்டும் கேட்டவர் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற வகையில் உரையாடல் திட்டமிடப்பட்டிருக்கிறது, வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கலகப்பாக சென்று கொண்டிருக்கிறது என்கிற எதார்த்தத்தை கீறிவிடும் முகமாக மிர்தாத் கூறுகிறார், நீங்கள் பேசுவதும் நீங்கள் கேட்பதும் உண்மையானது அல்ல  என்கிறார். அது எப்படி உரையாடலின் இலக்கணம் மீறி மிர்தாத் சொல்லக் கூடும் என்று அங்கு இருக்கிற குழுவினர்கள் ஆச்சரியமாக மிர்தாதை பார்க்கிறார்கள். எவ்வாறு நீங்கள் அப்படி சொல்கிறீர்கள். நாங்கள் பேசுவதை பேசுகிறோம். அவர் கேட்பதை கேட்கிறார். இவற்றிற்குள் பொய்மை எங்கிருக்கிறது என்று கேட்கிறார்கள். மிர்தாத் விளக்கம் அளிக்கிறார். நீங்கள் பேசுவது நீங்கள் அல்ல; உங்களது பொய்யான அனுபவம். நீங்கள் கேட்பது நீங்கள் அல்ல; உங்களது பொய்யான அனுபவம். நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற பொய்யான அனுபவங்களே உங்களைக்  கேட்கச் செய்கின்றன. நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற உங்களது பொய்யான அனுபவங்களே உங்களை பேசச் செய்கின்றன. உங்களது பேச்சும் உங்களது கேட்கும் முறையும் நீங்கள் அல்ல. அவை நீங்கள் சேகரித்து வைத்திருக்கிற முன் அனுபவ குறிப்புகள், முன் நினைவு குறிப்புகள் என்று மிர்தாத் புதிய வெளிச்சத்தை அந்த உரையாடலுக்குள் பாய்ச்சுகிறார். இன்றும் கூட நமக்கு அப்படி பார்க்க முடியும்.

இந்திய சமூகத்தில் மெய்யியல் பேசுகிற எல்லோருக்கும் ஒரு உதாரணம் கூறுவது உண்டு. நீங்கள் பார்க்கிறீர்கள், பார்க்கிறபோது உங்கள் வழிப்பாதையில் ஒரு வளைந்து நெளிந்த தோற்றத்தை பார்க்கிறீர்கள். வளைந்து நெளிந்த தோற்றத்தை பார்த்தவுடன் அது பாம்பு என்று உங்களுக்கு தோன்றுகிறது. உடனடியாக நீங்கள் தாவி, எகிறி குதிக்கிறீர்கள். உங்களது ஓட்டமும் நடையுமாக நீங்கள் நடக்க தயாராகுகிறார்கள். ஆனால் பாம்பு அல்ல, அது கயிறு. ஒரு கயிறை பாம்பாக பார்த்தது நீங்கள்தான். ஒரு தனி மனிதன் தன் முன்னால் இருக்கிற கயிறு துண்டினை பாம்பு என்ற கருதி கொள்வது அந்த தனி மனிதனினுடைய பழைய அனுபவம். இப்போது அந்த தனி மனிதன் தன் பார்வை கொண்டு அந்த கயிறை கயிறாக பார்க்கவில்லை.  பழைய அனுபவம் கொண்டு அந்த கையிறை பாம்பாக பார்க்கிறான். பழைய அனுபவம் அவரை தாவி குதிக்க செய்கிறது. பழைய அனுபவம் அவரை பதற்றமடைய செய்கிறது. பழைய அனுபவங்களே உங்களை தாவிக் கொதிக்க செய்யும். பழைய அனுபவங்களே உங்களை பதற்றம் அடைய செய்யும் என்கிற மெய்யியல் அடிப்படையில் மிர்தாதினுடைய  உரை துவங்குகிறது.

இன்றும் கூட நவீன மருத்துவ உளவியலில் ஹோமியோபதி என்கிற மருத்துவ உளவியலில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஹோமியோபதி மருத்துவம் தனிமனிதனை மூன்று பெரும் கூறுகளாக பிரிக்கிறது. தாவரங்கள், விலங்குகள், கனிமங்கள் என்று மூன்று பெரும் கூறுகளாக பிரிக்கிறது. ஒரு மனிதனினுடைய அக வெளிப்பாடு. இந்த மூன்று கூறுகளுக்குள்ளேயே இருக்கிறது. 

ஒரு மனிதன் தாவர வெளிப்பாடாக இருப்பார் என்றால் அவர் தன்னை தாவரம் போல் வெளிப்படுத்திக் கொள்கிறார். ஒரு மனிதர் விலங்காக இருப்பார் என்றால் அவர் தம்மை விலங்கு போல் வெளிப்படுத்திக் கொள்கிறார். கனிமம் போல் வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று ஹோமியோபதியினுடைய மருத்துவ ஆய்வு மிக நுட்பமான உளவியல் பதிவை ஆவணப்படுத்தி இருக்கிறது.

இந்திய, உலகளாவிய எல்லா உளவியலுக்குள்ளும் இருக்கிற மெய்யியல் உணர்வை மெய்யியல் கோட்பாடை ஹோமியோபதியினுடைய ஆவணக் குறிப்புகளில் விரிவாக நாம் பார்க்க முடிகிறது. ஒரு மனிதன் நான் என்கிற நிஜமான நிலையில் இருந்து, ஒரு மனிதன் தாம் என்கிற நிஜமான உணர்வு நிலையில் இருந்து வேறொன்றாக பழைய அனுபவமாக தம்மை இணைத்து வைத்திருக்கிறான் என்கிற ஒரு மெய்யியல் சாராம்சத்தோடு இருக்கிற உளவியலில் இருந்து இந்த உரையாடலை நாம் புரிந்து கொள்வது அவசியம். அப்படித்தான் இந்த உரையாடலை நாம் புரிந்து கொள்ள முடியும். மிர்தாத் பேச துவங்குகிறார். நீங்கள் பேசுவது நீங்கள் பேசுவது அல்ல என்கிறார். நீங்கள் கேட்பது நீங்கள் கேட்பது அல்ல என்கிறார். அங்கு இருப்பவர்களுக்கு ஆச்சரியம் மேலேழுகிறது. நாங்கள் தான் பேசுகிறோம். ஆம், நீங்கள் தான் பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் பேசவில்லை. நாங்கள் தான் கேட்கிறோம். ஆம், நீங்கள் தான் கேட்கிறீர்கள். ஆனால் நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் பேசுவதற்குள்ளும் நீங்கள் கேட்பதற்குள்ளும் நீங்கள் அல்லாத வேறொன்று இருக்கிறது. அதுவே உங்களை பேசுகிறது. பேசச் செய்கிறது. அதுவே உங்களது கேட்கிறது. கேட்கவும்  செய்கிறது என்று மிகவும் நுட்பமான உளவியலை, மிக நுட்பமான கோட்பாடுகளை வார்த்தைகளின் வழியாக மிர்தாத் இந்த சபையில் உடைக்கிறார்.

கேட்பதெல்லாம் கேட்கப்படுபவை அல்ல. பேசுவதெல்லாம் பேசப்படுபவை அல்ல. பேச்சு என்பது பேசுபவர்களுடைய நினைவு, கேட்பது என்பது கேட்பவர்களினுடைய நினைவு. இவை இரண்டும் உரையாடலாக மாறிக் கொண்டிருக்கிறது என்று நினைவுகளே உரையாடலாக மாறிக் கொண்டிருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக ஒரு புதிய பார்வையை இந்த உரையாடலுக்குள் வைக்கிறார் மிர்தாத். 

மிர்தாதினுடைய இத்தகைய கருத்தை எல்லாமும் மாயை என்று இந்திய மெய்யியல் கோட்பாடுகள் வரையறுப்பதுண்டு. எல்லாமும் மாயை என்று இந்திய மெய்யியல் கோட்பாடுகளில் ஒரு கோட்பாட்டு குறிப்பு உண்டு. எல்லாமும் மாயை என்று அந்த கோட்பாட்டு குறிப்பு விரிவாக சொல்கிறது. எல்லாமும் மாயை என்றால் என்ன? எல்லாவற்றையும் எப்படி மாயை என்று நாம் கருதி கொள்வது என்றால் எல்லாமும் அப்படியே இருக்கிறது. அப்படியே மாறுகிறது என்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.  மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் உள்ளுக்குள் பாதிக்கப்படாத ஒரு நபராக இருக்கிறீர்கள். நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். உங்கள் நினைவு குறிப்புகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மாறிக்கொண்டே இருக்கிற நினைவுக் குறிப்புகளின் வழியாக நீங்கள் பார்க்கிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கிற நினைவுக் குறிப்புகளின் வழியாக நீங்கள் கேட்கிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கிற ஒன்றை வைத்துக்கொண்டே நீங்கள் இயங்குகிறீர்கள். எனவே உங்களது இயக்கம் மாயையானது. அந்த வகையில் எல்லாமும் மாயை என்று கிழக்கத்திய உளவியல் மெய்யியல் கோட்பாடுகள் வரையறுக்கின்றன.

மெய்யியல் பேசுகிற பலரும் எல்லாமும் மாயை என்கிறார்கள். எல்லாமும் மாயை என்கிற கோட்பாட்டிற்கு பின்னால் இருக்கிற நிஜம் மிர்தாத் சொல்கிற நிஜம்.  நான் என்கிற ஒருவர் இருக்கிறார். அவர் அவரைப் பற்றிய அபிப்பிராயங்களோடு இருக்கிறார். அவரைப் பற்றிய கற்பனைகளோடு இருக்கிறார். அவரைப் பற்றிய சிந்தனைகளோடு இருக்கிறார். அவரைப் பற்றிய  விருப்பங்களோடு இருக்கிறார். அவரைப்  பற்றிய ஏக்கங்களோடு இருக்கிறார். இந்த கற்பனையும் சிந்தனையும் ஏக்கங்களும் அறிவும் ஆசையும் அவராக வெளிப்படுகிறது. அதுதான் பேசுகிறது. அவற்றை  கட்டுகள் என்றும் முத்திரைகள் என்றும் மிர்தாத் குறிப்பிடுகிறார். உங்கள் நாக்கு கட்டப்பட்டிருக்கிறது உங்கள் ஆசைகளால், உங்கள் அனுபவங்களால், உங்கள் நினைவு குறிப்புகளால். உங்கள் நாக்கு பேசவில்லை. உங்கள் நாக்கின் வழியாக உங்கள் நினைவு குறிப்புகள் பேசுகின்றன. உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. உங்கள் கண்கள் பார்க்கவில்லை. உங்கள் கண்கள் வழியாக உங்கள் நினைவு குறிப்புகள் பார்க்கின்றன. ஒரு கயிறினை உங்கள் நினைவு குறிப்பு உங்கள் கண்கள் வழியாக பாம்பு என்று பார்க்கிறது. ஒரு நீரோடையை உங்கள் நினைவு குறிப்புகள் கண்கள் வழியாக கானல் நீராகப் பார்க்கிறது. பார்ப்பது என்பது உங்கள் கண்கள் தான் என்றாலும் பார்வைக்குள் ஊடாக பார்வையின் ஆழத்தில் உங்கள் நினைவுக் குறிப்புகளே இருக்கின்றன. எனவே நீங்கள் பேசுகிற பேச்சு, நீங்கள் பேசுகிற வார்த்தைகள், நீங்கள் கேட்கிற பேச்சு, நீங்கள் கேட்கிற வார்த்தைகள் எல்லாமும் நினைவு குறிப்புகளின் பாற்பட்டே இருக்கின்றன என்கிற வகையால் நீங்கள் பேசுவது முத்திரை இடப்பட்ட பேச்சு. நீங்கள் பேசுவது கட்டப்பட்ட சொற்கள் என்று அழுத்தம் திருத்தமாக மிர்தாத் அவர்களின் உரையாடலின் ஊடாக இருக்கிற ஒன்றை சுட்டுக்காட்டுகிறார்.

 இதுவரை அந்த சபை இப்படியான ஒரு கூர்மையான பேச்சைக் கேட்டதில்லை. இந்த பேச்சின் ஊடாக நுட்பமான தீப்பொறி ஒன்று இருக்கிறது என்பதை அந்த சபை உணர்கிறது. அந்த சபை உணர்வதற்கு காரணம் ஏழு ஆண்டுகள் அந்த சபை நீண்ட காலமாக வைத்திருந்த எல்லா செல்வங்களையும் அதிகமாக்கி மிர்தாதின் வருகைக்குப்பின் கொண்டாட்டமாக மாறி பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு அந்த அனுபவங்களின் ஊடாக இருக்கிற திருப்தியின்மையோடு காத்திருந்த காரணத்தால் இந்த நுட்பமான தீப்பொறியை அந்த சபையால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.  அந்த சபை ஏற்றுக் கொள்கிறது.  நாங்கள் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை அந்த சபையால் பார்க்க முடிகிறது. எங்கள் கண்கள் திரையிடப்பட்டிருக்கின்றன என்ற அந்த சபையால் பார்க்க முடிகிறது. எங்கள் வார்த்தைகள் முத்திரையிடப்பட்டிருக்கின்றன என்ற இந்த சபையால் பார்க்க முடிகிறது. ஒன்றைப் பார்ப்பதற்கு, கேட்பதற்கு, முத்திரையிடப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கு அந்த சபைக்கு ஒரு அனுபவம் இருக்கிறது. அந்த சபைக்கு போதுமான காலம் எடுத்துக்கொண்ட அனுபவம் அந்த சபைக்குள் இருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதன் பாற்பட்டே அவர்கள் ஒன்றை புரிந்து கொள்கிறார்கள். மிர்தாதின் வார்த்தையை வார்த்தையாக இல்லாமல் சொற்றொடரை சொற்றொடராக இல்லாமல், புதிய வெளிச்சம் பாய்ச்சுகிற ஒளிக்கீற்றாக புரிந்து கொள்கிறார்கள்.

மிர்தாதிடம் மீண்டும் கேட்கிறார்கள், எந்த வகையில் இவற்றை நீங்கள் சொல்கிறீர்கள் என்று. மிர்தாத் சொல்கிறார், உங்கள் அனுபவங்களே உங்களை பார்க்கச் செய்கின்றன. உங்கள் அனுபவங்களே உங்களைக் கேட்கச் செய்கின்றன. அவற்றைத்தான் நான் உங்களது முத்திரைகள் என்றும் உங்களது கட்டுக்கள் என்றும் குறிப்பிடுகிறேன் என்று விவரித்து சொல்கிற மிர்தாத், மிர்தாதின் வார்த்தைகளின் வழியாக அவர்களுக்குள் இருக்கிற மாயை குறித்து, அனுபவம் குறித்து, நினைவுக் குறிப்புகள் குறித்து, தன்னை பற்றி இருக்கிற தனது ஏக்கங்கள் குறித்து எல்லாமும் விடை பெற தொடங்குகிறது. நான் எவ்வாறு பேச வேண்டும் என்று அவர்கள் மிர்தாத்தை நோக்கி கேட்கிறார்கள் மிர்தாத் அடுத்து அவர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்கிற திசை நோக்கி அவர்களுக்கு வழிகாட்டத் துவங்குகிறார்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...