மிர்தாதின் புத்தகம் – வாசிப்பின் நோக்கம்
மிர்தாத் அடுத்து அவர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்கிற திசை நோக்கி அவர்களுக்கு வழிகாட்டத் துவங்குகிறார்.
நமது பேச்சுக்குள் அப்படித்தான் இருக்கிறது. ஒரு மெய்யியல் தேடுகிற நபராக இருக்கிற யார் ஒருவரும் அல்லது மெய்யியல் பற்றிய தேடல் இல்லாத நபரும் மெய்யியல் என்கிற கருதுகோள்கள் இருக்கின்றன என்பது குறித்த சிந்தனை இல்லாதவர் கூட பேசுகிறார் என்று நாம் பார்க்க முடியும்.
எல்லோரும் பேசுகிறார்கள். பேசுவதற்கும் மெய்யியலுக்கும் சம்பந்தமே இல்லை. பேசுவதற்கும் மெய்யியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிற அளவிற்கு சமூகம் முழுவதும் உரையாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சமூகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிற உரையாடலின் வழியாக, இந்த சமூகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிற உரையாடல் கேட்பின் வழியாக நடக்கிற குறிப்பு நாம் எல்லோரும் நாமாக இருந்து பேசுகிறோமா, ஒரு தனி மனிதன் தானாக இருந்து பேசுகிறானா - நிச்சயமாக அவர் நினைவுக் குறிப்பிலிருந்து பேசுகிறார். அவரது நினைவு குறிப்பில் இருந்து பேசுவதனாலேயே சிக்கல்கள் ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று உளவியல் மேதைகள் ஆவணம் செய்கிறார்கள். பதிவு செய்கிறார்கள். அவற்றை நீக்குவதற்குரிய ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஒரு தனி மனிதன் தானாக இருந்து பேசுவதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பதுதான். தனி மனிதன் தானாக இருந்து பேசுவதற்கு சாத்தியம் இருக்கிறதா என்கிற விவாதத்திற்கு முன்பு , ஒரு தனி மனிதன் பேசுகிற பேச்சு ஊடாக என்ன இருக்கிறது. ஒரு தனி மனிதன் பேசுகிற பேச்சின் ஊடாக பார்க்கிறபோது ஒவ்வொரு தனிமனிதனுக்குப் பின்னாலும் அவன் பேசுகிற பேச்சிற்கு பின்னாலும் அவன் கேட்கிற கேள்விகளுக்கு பின்னாலும் கேட்பு முறைக்கு பின்னாலும் ஒளிந்திருப்பது அவரது பழைய நினைவுகளும் பழைய அனுபவங்களும்.
பழைய நினைவுகளும் பழைய அனுபவங்களும் வரலாறாக பதிவு செய்யும்போது இன்னும் கப்பல் கரை சேரவில்லை என்கிற ஆர்வத்தோடு ஏக்கத்தோடு நிற்கிற நினைவுகள் அவை. எல்லா நினைவுகளும் நினைவுகள் அல்ல. பழைய நினைவுகள் உங்களுக்கு ஒரு வரலாற்றை முன் வைக்கின்றன. உங்கள் ஏக்கங்களை புதுப்பித்துக் கொள்வதற்கும் உங்கள் ஏக்கங்களை சீர்தூக்கிக் கொள்வதற்கும் உங்கள் ஏக்கங்களை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் புதிய ஒரு நுட்பத்தை கண்டு கொள்வதற்கான காலமாக உங்கள் நினைவுகள் ஒன்றை நோக்கி காத்துக் கொண்டிருக்கிற வேளையில் நீங்கள் பேசுகிறீர்கள். உங்கள் நினைவுகள் தருகிற அழுத்தத்தில் இருந்து நீங்கள் பேசுகிறீர்கள். உங்கள் நினைவுகள் தருகிற அழுத்தத்திலிருந்து நீங்கள் கேட்கிறீர்கள். உங்கள் நினைவுகளுக்குள் இருக்கிற எல்லாமும் உங்கள் பழைய அனுபவத்தின் ஏக்கங்கள், நிறைவின்மைகள் என்ற வகையில் ஒன்றை கவனிக்கிற தன்மையோடு நாம் பார்க்கிறபோது மிர்தாதினுடைய வார்த்தைகள் வெறுமனே வார்த்தைகளாக இல்லை. மிர்தாதினுடைய வார்த்தைகள் எல்லா முத்திரைகளும் நீக்கப்பட்டவை. எல்லா தடைகளும் நீக்கப்பட்டவை. எல்லாமும் நான் என்கிற ஒளிக் கீற்றாக மிர்தாத் பேசும் சொற்கள். இவற்றை கேட்பதற்கு அந்த சபையில் இருப்பவர்கள் போல நமக்கும் தடைகளும் தயக்கங்களும் ஏக்கங்களும் இல்லாத ஒரு நிலைநோக்கி நகர்வதற்குரிய தயாரிப்பு தேவைப்படும் என்றால் செய்து கொள்ள வேண்டும். நாம் பேசுவது எங்கிருந்து பேசுகிறோம். நினைவுக் குறிப்பில் இருந்து பேசுகிறோமா என்கிற கேள்வியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். சேகரிக்கப்பட்ட அறிவில் இருந்து பேசப்படுகிற பேச்சாக நமது பேச்சு இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ள வேண்டும். நான் அழைக்கப்படுகிறேன் என்றால் திரும்பிப் பார்க்கிறேன் என்றால் ஒவ்வொன்றிற்குள்ளும் இருக்கிற நுட்பமான செயல்பாடு என்ன என்பதை நாம் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் மிர்தாத் முன் வைக்கிற நிஜமான முத்திரைகள் அற்ற, கட்டுகள் அற்ற கேட்கும் திறனுக்குரிய வழி. பேசும் திறனுக்குரிய வழி என்று நான் பார்க்கிறேன்.
உங்களது பேச்சுக்கள் நிஜமான பேச்சாக நினைவாற்றலில் இருந்து உருவாகாத பேச்சாக அமையப் பெற வேண்டும் என்று மிர்தாத் வழிகாட்டத் துவங்குகிறார் அந்தக் குழுவினருக்கு. அந்த வழிகாட்டுதலின் வழியாக தொடர்ந்து நிஜமான பேச்சை நோக்கி, நிஜமான நானை நோக்கி, நிஜமான நினைவாற்றல் இல்லாத, நினைவு குறிப்புகள் இல்லாத சேகரிக்கப்பட்ட அறிவிலிருந்து உருவாகாத ஒன்றாக இருந்து நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கு மிர்தாத் அழைக்கிறார். அந்த அழைப்பிற்கு செவி சாய்க்கும் முகமாக நம் கவனம் எங்கிருந்து நாம் பேசுகிறோம், எங்கிருந்து நாம் கேட்கிறோம், எங்கிருந்து நாம் செயல்படுகிறோம் என்கிற உளவியல் சாராம்சத்தோடு, நவீன உளவியல் சாராம்சத்தோடு நம்மைப் பார்க்கிறபோது மிர்தாதின் கரம் பிடித்து செல்கிற வாய்ப்பும் மிர்தாத் வழிகாட்டி செல்கிற பாதையும் நமக்கு எளிமையாக பிடிபடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment