Monday, November 13, 2023

திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம் - பகுதி 1 // சிவ.கதிரவன்

திருக்குறள் வாழ்வியல் - அறிமுகம்

www.swasthammadurai.com


திருக்குறள் வாழ்வியல் பற்றி ஒரு தொடர்ந்த உரையாடல் செய்ய வேண்டும் என்று நண்பர்கள் பலரும் பெற்றுக் கொண்டார்கள். ஆர்வலர்கள் நமது பார்வையில் திருக்குறளை உரையாடல் போல செய்ய வேண்டும் என்று விரும்பி கேட்டுக் கொண்டார்கள். பெரும் மதிப்புமிக்க திருக்குறளினுடைய மேலான மாண்புகளை நமக்கு முன்னால் இந்த சமூகத்தில் பெரும்பெரும் சிந்தனையாளர்களும் அறிவாற்றல் மிக்கவர்களும் பேசி இருக்கிறார்கள். சொல்லி இருக்கிறார்கள். பகிர்ந்தளித்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வியல் கோட்பாடுகளை, ஒரு சிந்தனை செம்மையான சிறப்புக்களை, சிந்தனையின் சிறப்புகளை போற்றி, வணங்கி அவர்களது சிந்தனையினுடைய வழியொற்றி நம்முடைய அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சி.

 திருக்குறள் என்பது மிகுந்த மதிப்பிற்குரிய, மிகுந்த ஞானத்திற்குரிய ஒரு நூல் என்று நாம் அறிந்தது தான். அறிவார்ந்த பலரும் பேசியிருக்கிறார்கள் என்கிற அச்சமும் மதிப்பும் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது. திருக்குறளை நாம் பேச வேண்டும், உரையாட வேண்டும் என்கிற நினைப்பு வருகிற போது எல்லாம் நமக்கு திருக்குறளை பற்றி தெரிந்ததை விடவும் நாம் சொல்லப் போகிற, சொல்ல விரும்புகிற கருத்துக்களை விடவும் திருக்குறள் குறித்த பெரும் அறிவாளிகளினுடைய கருத்துக்களும் மேன்மையான செய்திகளும் சமூகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை ஒரு நல்ல வாழ்வியல் தளத்தை, வாய்ப்பை, வாழ்வியல் நினைவூட்டலை இந்த சமூகத்திற்கு தந்திருக்கிறது என்றெல்லாம் எனக்கு திருக்குறளைப்  பற்றி சிந்திக்கிற போது, குறிப்பாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிந்திக்கிற போது நினைவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

 ஆனாலும் உங்களுக்கு தெரிந்த செய்திகளை அறிவாளிகள் பலரும் முன்னமே உங்களுக்கு சொல்லி இருந்தால் அவர்கள் கருத்தை இசைத்து, அவர்கள் கருத்தை ஒருங்கே இணைத்து நான் சொல்வதில் அவர்கள் ஒருபோதும் கோபம் கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கிற திருக்குறள் பற்றிய செய்திகளை ஒரு முறை மீண்டும் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அது பிழையாகாது. நல்ல சிந்தனைகளை மீண்டும் ஒருமுறை கேட்பதில் பிழை ஒன்றும் இல்லை. நமது அனுபவமும் நம் முன்னோர்களினுடைய அனுபவங்களும் இணைத்து சொல்லும் போது அவர்களின் அனுபவங்களை, அவர்களின் அறிவு செழுமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அவர்களும் கோபம் கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

அந்த வகையில் திருக்குறள் இன்றைய காலத்தினுடைய தேவை. திருக்குறள் என்பது வெறும் வாழ்வியல் புத்தகம், இலக்கிய நூல் என்று அறிந்ததுதான். அது வாழ்வியல் புத்தகம், இலக்கிய நூல், மறை நூல் என்றெல்லாம் புகழ்மிக்க வாசகங்களால் போற்றுவதை விடவும் மிக முக்கியமான பகுதி திருக்குறளுக்கு இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

பெரும் அறிவுப் பொக்கிஷமாய் இருக்கிற திருக்குறளை வாசிப்பதற்கு, நடைமுறைப்படுத்துவதற்கு, ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு அமைய வேண்டும். திருக்குறள் வாழ்வியல் நூல், திருக்குறளை பின்பற்றி நீங்கள் வாழ்ந்தால்  மேன்மையாக மாறிவிடலாம் என்று சொல்லுகிறபோது அதன் அர்த்தம் என்னவென்றால் திருக்குறளில் உங்கள் வாழ்க்கைக்கு உரிய எல்லாம் இருக்கிறது என்று அர்த்தப்படுகிறது. அப்படி என்றால் நான் வாழ்க்கைக்கு உரிய எல்லாமும் இருக்கிறது என்று கேட்டுக் கொண்ட ஒருவர், நான் எப்படி பல்துலக்க வேண்டும் என்று திருக்குறளில் இருக்குமா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் தினசரி நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து குளித்தால்  நல்லா இருக்குமா என்கிற செய்திகள் திருக்குறளில் காண முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். ஆக, வாழ்க்கைக்கு தேவை என்றவுடன் என்ன படிப்பு படிக்கலாம், அதற்கான செய்திகள் திருக்குறளில் இருக்குமா. எப்போது தூங்குவது, எப்போது எழுவது அதற்கான செய்திகள் திருக்குறளில் இருக்குமா என்று அவரவர் வாழ்க்கையை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த வகையில் திருக்குறளில் செய்திகள் இருக்கிறதா என்று பார்க்கிற பார்வை இருக்கிறது. அப்படி உங்களுக்கு அல்லது நீங்கள் வாழ்க்கையை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அதற்குரிய செய்திகளை திருக்குறள் வைத்திருக்குமா என்றால் அப்படி பொருள் கொள்ள முடியாது.

நண்பர்களே! திருக்குறள் நிஜமாகவே வாழ்க்கைக்கு உரியது. நிஜமான வாழ்க்கை என்பது என்ன என்பதை முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். நிஜமான வாழ்க்கை என்பது குறிப்பிட்ட சமூக அமைப்பிற்குள் இருந்து கொண்டு, குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து வருகிற போது அதற்குள் ஏற்படுகிற ஏற்ற இறக்கங்களை, மனதில் ஏற்படுகிற சஞ்சலங்கள், கவலைகளில் இருந்து விடுபடுவதற்குரிய கேள்விகளும் பதிலுமாக நாம் வாழ்கிற போது அந்த கேள்விகளுக்குள் பதில்களுக்குள் கடந்து வந்து நிற்கிற இடம் நிஜமான வாழ்க்கை துவங்குகிற இடமாக நான் கருதுகிறேன்.

என் சிற்றறிவைப் பொருத்தவரை ஒரு வாழ்விற்கு தேவையானது நீங்கள் செய்துதான் பார்க்க வேண்டும். நான் தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். நான் வாழ்க்கையை வாழ்கிறேனா என்று உங்களுக்கு வினா எழும்புமென்றால் தினமும் காலை எழுந்தவுடன் நீங்கள் உடற்பயிற்சி செய்துதான் பார்க்க வேண்டும். ஐந்து ,பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டே இருக்கிறேன். எனக்கு வாழ்ந்த வாழ்வினுடைய அல்லது வாழ்க்கையை வாழ்கிறேன் என்கிற திருப்தி எனக்கு வரவில்லை என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கை வாழ வில்லை. வாழ்க்கை என்பது உடற்பயிற்சியில் இல்லை என்பதை கண்டு கொள்வீர்கள்.நான் தினமும் இரண்டு வேளை, மூன்று வேளை பல் துலக்குகிறேன். நான் வாழ்க்கையை வாழ்கிறேனா என்று உங்களுக்கு ஐயப்பாடு ஏற்படுகிற போது நீங்கள் மூன்று முறை, நான்கு முறை பல் துலக்கி 5, 6 ஆண்டுகளுக்கு பின்பும் கூட நான் வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி ஏற்படவில்லை என்று நீங்கள் உணர்கிறபோது வாழ்க்கை வாழ வில்லை என்பதை கண்டு கொள்ள முடியும்.

ஆக, வாழ்க்கை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு செயல்பாடுகளை தொடர்ந்து ஆண்டுக் கணக்கில், மாதக் கணக்கில், வாரக் கணக்கில், நாட்கணக்கில், மணிக் கணக்கில் செய்து பார்ப்பீர்கள் என்று வைத்துக்கொண்டு, செய்து பார்த்த பின்பு, நான் சொன்னது போல, நான் நினைத்தது போல நான் பல்துலக்கி, பயிற்சிகள் செய்து, சாமி கும்பிட்டு ஒரு குறிப்பிட்ட கருத்துக்களை பின்பற்றி, இவை எல்லாமும் செய்து கொண்ட பின்பும் கூட எனக்கு வாழ்க்கை வாழ்ந்த திருப்தி இல்லையே என்று நீங்கள் கருதுவீர்கள் என்று சொன்னால் அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதற்கு நிறைய மறைநூல்கள் இருக்கின்றன. அப்போது வழிகாட்டுவதற்குரிய நூல்கள் தான் மறைநூல்கள். வாழ்க்கை வாழ்வதற்கு இதை செய்தால் நன்றாக இருக்கும். அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று நாம் கருதிக் கொண்டே இருக்கிறோம். நமக்கு மீண்டும் மீண்டும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த படிப்பை படித்தால் வாழ்க்கை நன்றாக வாழ்ந்துவிடலாம் என்றால் அந்த படிப்பை முதன் முதலில் படித்தவர் என்னவாக இருக்கிறார் என்பது நீங்கள் தேடிப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த செயலை செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமென்று என்று ஒவ்வொரு கருத்துக்களும் வாழ்க்கை குறித்து நமக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை போக்குவதாக இருக்கும் என்றால் அந்த கருத்துக்களை நீங்கள் செய்து பாருங்கள். செய்து பார்த்து, நீண்ட காலம் ஆனதிற்குப் பிற்பாடு இந்த கருத்துக்களை நான் நினைத்தேன்; நினைத்தபடி செய்தேன்; செய்தபடி பார்க்கிறபோது எனக்கு வாழ்வை வாழ்ந்த திருப்தி வந்து சேரவில்லை என்று நீங்கள் கருதுவீர்கள் என்று சொன்னால் அந்த கருத்துக்களை கைவிட்டு வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று பார்ப்பதற்கு உங்களுக்கு திருக்குறள் உதவி செய்யும்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...