பாயிரம் –கடவுள் வாழ்த்து
திருக்குறள் வாழ்வியல் குறித்த இந்த தொடர் உரையாடலில் நமக்கு முன்பு இந்த உரையாடலை
காலங்காலமாக செய்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வாழ்வியல் மீது நேசம் கொண்ட பற்றாளர்களும்
அவர்களுடைய சிந்தனைகளை வணங்கி மகிழ்ந்து இந்த உரையாடலை. உங்களோடு செய்வதில் பெரும்
மகிழ்ச்சி.
திருக்குறள் பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். வாழ்வியல் நூல்
என்கிற அடிப்படையில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல்
உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட பாயிரம் முதலில் அமையப்பெற்று இருக்கிறது.
பாயிரம் என்பது ஒரு நூலினுடைய முன்னுரை. ஒரு இலக்கியமோ புத்தகமோ ஒன்றை எழுதத்
துவங்குகிற போது அந்த எழுத்தாளர், அந்த சிந்தனையாளர் அந்த புத்தகத்திற்குள் என்ன எழுதி
இருக்கிறார் என்பதை உள்ளடக்கமாக வைத்து ஒரு முன்னுரையை வரைந்து இருப்பார். அது முன்னுரை
என்றோ பாயிரம் என்றோ. வழங்கப்படுகிறது. அப்படியாக வழங்கப்பட்ட, அமையப்பெற்ற பாயிரம்
என்பது திருக்குறளில் இருக்கிறது.
திருக்குறளின் நோக்கம் ஒரு முழுமையான, செம்மையான வாழ்வியலை வலியுறுத்துகிற அற
சிந்தனையோடு இருக்கிறது என்பதை பாயிரவியலில் நாம் பார்க்க முடியும். பாயிரவியலில் இருக்கிற
நான்கு அதிகாரங்களில் நாம் அதை பார்க்க முடியும். மரபுப்படி எழுத்தாளர்களினுடைய படைப்பின்
படைப்பு மரபுப்படி, இந்த நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்பதை முழுவதும் வாசிப்பதற்கு
முன்பே அந்த நூலின் சாரத்தை நீங்கள் எளிமையாக கண்டு கொள்வதற்கு பாயிரம் படிக்கிற போது
நாம் கண்டுகொள்ள முடியும் என்கிற அடிப்படையில் பாயிரத்தினுடைய தரத்தின் அடிப்படையிலேயே
நூலின் தரத்தையும் நாம் மதிப்பீடு செய்ய முடியும். பாயிரத்தினுடைய அடிப்படையான துவக்கத்தில்
இருந்து பாயிரம் எப்படி துவங்குகிறது என்பதிலிருந்து நாம் இன்றைய உரையாடலை செய்யலாம்.
அப்படி பாயிரத்தினுடைய துவக்கமாக கடவுள் வாழ்த்து இருக்கிறது.
கடவுள் வாழ்த்து என்று பத்து குறட்பாக்களை கொண்ட முதல் அதிகாரம். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் என்று நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். மகிழ்ச்சியான, நெறிப்படுத்தப்பட்ட ஒரு முதிர்ச்சி அடைவதற்குரிய வாழ்க்கை முறையை திருக்குறள் வழிகாட்டுகிறது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதிர்ச்சிக்குரிய, பண்பிற்குரிய, மேன்மைக்குறிய ஒன்றாக திருக்குறள் இருக்கிறது என்பதில் உங்களுக்கு ஏதும் ஐயப்பாடு இருக்காது. அது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் மகிழ்வாக வாழ்வதற்கு ஒருவர் கடவுளை வழிபட வேண்டுமா என்று ஒரு கேள்வி இன்றைய நவீன யுகத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வந்து கொண்டும் இருக்கிறது.
இந்திய சமூகத்தில் இறைவனைப் பற்றியோ இறைவனுடைய இருப்பைப் பற்றியோ இறைவனுடைய
இருப்பின்மை பற்றியோ பேசுவதற்குரிய ஒரு விசாலமான மெய்யியல் தளம் இருக்கிறது. நீங்கள்
சைவ சித்தாந்தம் மீது பற்று கொண்டவர்களாக இருக்கலாம். அல்லது இருத்தலின் இயக்கவியல்
மீது பற்று கொண்டவராக இருக்கலாம். நீங்கள் ஒரு மரபை மறுக்கவும் ஒரு மரபை ஏற்றுக் கொள்ளவும்
முழுமையான சுதந்திரம் பெற்றவராக இருக்க முடியும் என்பது மெய்யியலினுடைய ஒரு மேலான குணம்.
மெய்யியல் பேசுகிறபோது எவற்றையும் நாம் மறுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும்.
மெய்யியல் வழியாக வாழ்வை பார்க்கிறபோது எல்லாவற்றையும் நாம் பார்க்கவும் மறுக்கவும்
முடியும். ஆக, மெய்யியல் பேசுகிற ஒருவர் இறை வழியாக மெய்யியலை புரிந்து கொள்ள வாய்ப்பு
இருக்கிறது அல்லது இறை மறுப்பு வழியாகவும் மெய்யியலை புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது
என்கிற நிஜம் இருக்கிற போது திருவள்ளுவர் வாழ்வை பற்றி பேசுகிறார் என்றால் கடவுளைச்
சொல்லித்தான் வாழ்வைப் பற்றி பேச வேண்டுமா என்று நமக்கு ஒரு குழப்பமோ அல்லது மறுப்போ
வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆக, கடவுளைப் பற்றி பேசுவது என்று பொருள் கொள்ளும் போது கடவுளை வாழ்த்தி ஒன்றை
துவங்குகிற போது, பொதுவாக தமிழ் அறிஞர் பெருமக்கள் சொல்வது கடவுளை வாழ்த்தி நாம் துவங்குவது
என்பது தமிழர் மரபு அல்லது ஒரு இலக்கிய மரபு அல்லது அந்த படைப்பாளரினுடைய பணிவு நிலை
என்று சொல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அறிந்திருக்கிறோம்.
திருவள்ளுவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர் அல்லது கடவுள் மீது நம்பிக்கை
கொள்ளாதவர் என்று பல்வேறு விதமான வாதங்கள் கடவுள் மீது பற்று உள்ளவர் என்றால் அவர்
எந்த கடவுளை முன் வைக்கிறார் என்றெல்லாம் கூட விவாதங்கள் திருக்குறள் பற்றி பேசுகிறபோது
தனியாக நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது நமக்கு முன்னால் இருக்கிற கேள்வி, ஐயப்பாடு
மகிழ்வான வாழ்வை வாழ்வதற்கு திருக்குறள் வழிகாட்டுகிறது என்றால் கடவுள் தொட்டுத்தான்
மகிழ்வான வாழ்வை துவங்க வேண்டுமா என்று நமக்கு ஒரு சிந்தனை வருகிறது. எனக்கு கடவுள்
மீது உணர்வோ, நம்பிக்கையோ இல்லை என்று கருதுகிற ஒருவர் மகிழ்வான வாழ்வை வாழ வேண்டும்
என்று விரும்புகிறார் என்றால் அவருக்கு திருவள்ளுவர் உதவி செய்ய மாட்டாரா என்று நீங்கள்
ஐயப்பட கூடும். இதற்கான எல்லா ஐயப்பாடுகளுக்கும் உரிய விளக்கங்களையும் பார்வையையும்
திருவள்ளுவர் கடவுள் என்கிற அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறார் என்று நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும். மிக முக்கியமான குறிப்பு அது.
ஏனென்றால் கடவுள் என்றவுடன் தமிழில் நிறைய சொற்கள் இருக்கிறது. கடவுளை குறித்து
பேசுவதற்கு நிறைய சொற்கள் இருக்கிறது. தெய்வம் என்று பொருள் சொல்லப்படுவது உண்டு. இறை
என்று சொல்லப்படுவது உண்டு. கடவுள் என்ற சொல்லை திருவள்ளுவர் கையாளுகிறார். எடுத்தாளுகிறார்.
திருவள்ளுவர் எடுத்தாள்வதற்குரிய காரணம் என்னவென்று நமக்கு அறியவில்லை என்றாலும் ஒருவர்
கடவுள் மறுப்பாளராக இருக்கிறார் என்கிறபோது, கடவுள் என்கிற சொல்லை இரண்டாக பகுக்க முடியும்.
இது ஒரு பகுக்கக் கூடிய சொல். கட, உள் என்பது போன்று பகுத்துக் கொள்ள முடியும்.
உள்ளத்தை கடப்பது என்கிற பொருளில் நாம் கடவுள் என்கிற சொல்லை விளக்கம் சொல்லிக்
கொள்வோம் என்றால் கடவுள் மீது மறுப்பு உள்ளவர்களுக்கு கூட இது எளிமையாக புரியும். உளவியல்
பேசி உளவியலினுடைய உச்சபட்சமான ஆய்வு முறைகள் வந்த சூழலில் உள்ளத்தை கடந்து செல்வது,
மனமற்ற நிலை நோக்கி செல்வது என்கிற மெய்யியல் உரையாடல் நடந்து கொண்டிருக்கிற சூழலில்
உள்ளத்தை கடந்து நிற்பது கடவுள் நிலை என்று சொல்பவர்கள் உண்டு. மெய்யியல் ஆய்வாளர்கள்
1900 - ங்களுக்கு பிறகு வந்த இந்திய மெய்யியல் தத்துவ ஆய்வாளர்கள் உள்ளத்தை கடந்து
செல்ல முடியும். உள்ளத்திற்கு அப்பாற்பட்டு, அறிவிற்கு அப்பாற்பட்டு, மனதிற்கு அப்பாற்பட்டு
செல்ல முடியும் என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது போல உள்ளத்தை
கடந்து செல்வது என்றால் அங்கே என்ன இருக்கிறது என்றால் அங்கே ஒரு வெற்றிடம் இருக்கிறது.
சூனியம் இருக்கிறது. ஒன்றுமில்லாத ஒன்று இருக்கிறது. அதுவே கடவுள் என்று அழைக்கப்படுகிறது.
அதை கடவுளின் குணம் என்று வைத்துக் கொள்ளலாம் என்று மெய்யியலாளர்கள் வேறு ஒரு வரையறையை
சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கிற போது கடவுள் என்பது உள்ளத்தை கடந்து செல்கிற
அருஞ்சொற்பொருளிற்கு உகந்ததாகவும் இருக்கிறது.
கடவுளை நம்புகிறவர்களுக்கு கடவுள் என்கிற
வழக்கமான கடவுளுடைய குறிப்பிற்கும் பொருந்திப் போகிற ஒரு பொதுவான சொல்லை, நேர்த்தியான
சொல்லை எல்லா இறை குறித்து அக்கறைப்படுகிற நபர்களுக்கும் உரிய சொல்லாக கடவுள் என்கிற
சொல்லை குறிப்பிட்டு வள்ளுவர் துவங்குகிறார். இப்போது கடவுள் என்றவுடன் நமக்கு வேறொரு
சிக்கல் வருகிறது. அது எப்படி? கடவுள் என்றவுடன் ஒரு சைவ வழிபாடு செய்பவர்கள் சிவனை
கடவுளாக வழிபடுகிறார்கள். வைணவ வழிபாடு செய்கிறவர்கள் கடவுளை ஒன்றாக வழிபடுகிறார்கள்.
சமணர்கள், பௌத்தர்கள் கடவுளை ஒன்றாக வழிபடுகிறார்கள். மேற்குலகத்தைச் சார்ந்த யூதர்கள்,
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கடவுளை ஒருவாறு வழிபடுகிறார்கள். ஆக இப்படி ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாக கடவுளை வழிபடுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
ஆக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடவுளை வழிபடுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
அப்படி என்றால் எல்லா கடவுளுக்கும் இது எப்படி பொருந்தும். கடவுளே இல்லை என்பவருக்கு
எப்படி பொருந்தும் என்று கடவுளுக்குள் அடுத்த கேள்வியை நம் மனம் எழுப்பும். இப்படி
எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறும் வகையிலேயே ஒரு வாழ்வியல் நூலை துவங்க வேண்டும்
என்கிற கவனத்தோடு திருவள்ளுவர் அதற்குள் செய்திகளை வைத்திருக்கிறார். கடவுள் வாழ்த்து
என்பதற்குள்ளேயே செய்திகளை வைத்திருக்கிறார். இப்போது உதாரணமாக கடவுள்
பற்றி புத்தருடைய கருத்து எல்லாமும்
மனம் தான் என்று புத்தர் சொல்கிறார். பிரபஞ்ச வெளி, மனிதன் இரண்டிற்கும் இடையே நடக்கிற
எல்லா சம்பாசனைகளும் எல்லா உரையாடல்களும் மனம் குறித்த வியாக்கியானங்கள் என்று புத்தர்
சொல்கிறார்.
யோகம் பற்றி பேசுகிற இந்திய மரபுகளில் பரமாத்மா - ஜீவாத்மா என்று சொல்கிறார்கள். சைவ வழிபாட்டு முறையில் கடவுளைப்
பற்றி பேசுகிறவர்கள் உருவமானவர், அருவமானவர், அருவுருவமானவர், இறைவன் என்று சொல்கிறார்கள்.
கிறித்தவ, யூத மரபுகளில் பரமபிதா இருக்கிறார். அவரது புதல்வன் இருக்கிறார் என்று பரமபிதாவிற்கும்
புதல்வனுக்கும் இடையே இருக்கிற உறவை சொல்கிறார்கள். எல்லோரும் சொல்வதிலிருந்து நாம் புரிந்து கொள்ள
வேண்டியதாக நான் நினைப்பது ஒன்று. ஒரு பெரும் ஆற்றல் ஒன்று இருக்கிறது. இன்னொன்று அதனுடைய
சிறிய துகளாக இருக்கிறது. இது பொதுவான விளக்கங்கள்தான். ஆனால் இந்த மெய்யியலாளர்களினுடைய
கோட்பாடுகளை பார்க்கிறபோது படிக்கிறபோது அவர்கள் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். எல்லாவற்றிலும்
இறைத்தன்மை இருக்கிறது. சிலவற்றில் வெளிப்படுகிறது சிலவற்றில் வெளிப்படவில்லை என்று
குறிப்பிடுகிறார்கள்.
முழுக்க தர்க்கவியலை மையமாக வைத்து பேசுகிற, சமத்துவம் பேசுகிற தொழில் புரட்சிக்கு
பின் வந்திருக்கிற கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் உள்ளிட்ட மெய்யியலாளர்களினுடைய மெய்யியல்
பார்வையை பார்க்கிற போது அவர்கள் இருத்தலின் இயக்கவியலை பேசுகிறார்கள். பொருட்களே முதன்மையாக
தோன்றி இருக்கின்றன. பொருட்களுக்கு முதன்மையாக ஒரு இயக்கம் இருக்கிறது என்று பேசுகிறார்கள். இவர்களினுடைய கோட்பாடுகளை பார்க்கிறபோது கடவுளினுடைய கோட்பாடு என்பது நேர் எதிரானது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment