புதிய குழந்தை
புதிய குழந்தை என்கிற புத்தகத்தை ஏற்கனவே அறிமுகம் செய்து கடந்த ஞாயிறு கோயம்புத்தூர் மகிழ் கூட்ட அரங்கில் குழந்தைகள் குறித்த கற்றல் நிகழ்வில் உரையாடல் செய்திருந்தோம். மீண்டும் அந்த புத்தகம் குறித்து அந்த புத்தகத்தில் உள்ளடக்கம் குறித்து ஒரு விரிவான தன்மையோடு ஒரு சுற்று உரையாடலை விரித்துக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில் நண்பர்களின் கோரிக்கைக்கு இணக்கமாக நான் மீண்டும் ஒருமுறை அந்த புத்தகத்தை உரையாடலாம் என்கிற தன்மையில் இன்று மீண்டும் பேச இருக்கிறோம்.
புதிய குழந்தை என்கிற புத்தகம் குழந்தைகள் குறித்த கற்றல் என்கிற முகாந்திரத்தின் கீழ் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புத்தகம்.
குழந்தைகள் குறித்த உரையாடல் என்பது குழந்தைகள் குறித்து கற்றல் என்கிற திருத்தமான வேறொரு அடர்த்தியோடு நாம் செய்கிறபடியால் புதிய குழந்தை என்கிற புத்தகத்தை ஒரு தத்துவ ஆய்வாளர், தத்துவ அறிஞர் பேசியிருக்கிற தன்மையில் பேசுவதோடு நில்லாமல் இந்த சமூகம் குழந்தைகள் குறித்து என்ன கருத்தாக்கங்களை வைத்திருக்கிறது. மேலும் அது என்னவாக நகர காத்திருக்கிறது என்கிற விரிந்த பார்வையில் இந்த புத்தகத்தை நாம் உரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம்.
குழந்தைகள் பற்றி நாம் பேச வேண்டும் என்று நினைத்த உடனேயே நமக்கு ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. உற்சாகம் ஏற்படுகிறது. ஏன் குழந்தைகள் குறித்து பேசுகிற நேரங்களில் நமக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது என்று நாம் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் குழந்தைகள் எப்போதும் புதியதாகவே இருக்கிறார்கள். பழைய நினைவுகள் அவர்களுக்கு வாய்ப்பாகவே இல்லை. மேலும் அவர்கள் பழைய நினைவுகளை சேர்த்துக் கொள்வதில்லை. இந்த வாய்ப்பு இல்லாத பழைய நினைவுகள் மேலும் புதிதாக நினைவுகளை சேர்த்துக் கொள்ளாத இயல்பும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம். ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல் பழைய நினைவுகளின் சேகரிப்பு ஏதும் இல்லாமல் ஒவ்வொன்றையும் புதிதாக ஒவ்வொரு நேரத்திலும் புதிதாக பார்ப்பதற்கு வாய்ப்பும் முயற்சியும் இருக்கும் என்றால் அது மகிழ்ச்சிக்கான அடிப்படை. இந்த மகிழ்ச்சிக்கான அடிப்படையில் குழந்தைகள் இயங்குகிறார்கள். இயங்குவார்கள் என்கிறபடியால் நாம் குழந்தைகளை பேசுவதற்கு எப்போதும் ஆயத்தமாக இருக்கிறோம். மேலும் இன்னும் நுட்பமாக ஒரு செய்தியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குழந்தைகள் பற்றி பேசுகிறபோது நாம் விவரிக்கிற காரணங்கள் குழந்தைகள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிற அடிப்படையில் நமக்கு உற்சாகமாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் விருப்பம் இருக்கிறது. இந்த விருப்பம் குழந்தைகள் வழியாக பார்க்கிற போது குழந்தைகள் வழியாக நிறைவேறுகிறது என்பதை உணர்கிற போது நாம் அந்த மகிழ்ச்சியை விரித்துக் கொள்வதற்கு அடர்த்தியாக்கிக் கொள்வதற்கு விரும்புகிறோம். அந்த அடிப்படையிலும் நாம் குழந்தைகளைப் பற்றி பேசுவதற்கு, குழந்தைகளைப் பற்றி ஒன்றை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் கொள்கிறோம்.
இத்தகைய ஆர்வமும் இத்தகைய முயற்சியும் குழந்தைகள் குறித்த கற்றல் என்கிற தலைப்பில் நம்மை உரையாட செய்வதற்கு அழைத்து வந்திருக்கிறது நண்பர்களே.
குழந்தைகள் குறித்த கற்றல் என்பது குழந்தைகளைப் பற்றி கற்றுக் கொள்வதாக இருக்கலாம். குழந்தைகள் அவ்வாறே இருக்கட்டும். அவர்களது உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்பதை கற்றுக் கொள்வதாக இருக்கலாம். நாம் அவர்களைப் பற்றி ஏதாவது ஒன்றை செய்து வைத்திருக்கிற வடிவத்தை மாற்றி அமைப்பதற்கு கற்றுக் கொள்வதாக இருக்கலாம் என்று வெவ்வேறு வடிவங்களில் குழந்தைகளைப் பற்றி கற்றுக் கொள்வதற்கு நாம் ஒரு வேலையை துவங்குகிறோம். நண்பர்களே! குழந்தைகளை பற்றிய கற்றல் என்பது, குழந்தைகளைப் பற்றிய பார்வை என்பது நமக்கு எப்போது ஏற்பட்டிருக்கிறது என்பது நம்முன் இருக்கிற இந்த உரையாடலுக்குரிய மிக முக்கியமான வினா.
குழந்தைகளை இந்த சமூகம் எப்போது பேசத் துவங்கியிருக்கிறது என்று பார்க்கிறபோது நம் முன் இருக்கிற ஆர்வமூட்டக்கூடிய செய்திகள் தற்காலத்தில் குழந்தைகளைப் பற்றிய உரையாடல் மிகுந்திருக்கிறது என்று நமக்கு தோன்றக்கூடும். நிறைய நூல்கள், கட்டுரைகள், ஆவணங்கள், ஆய்வு குறிப்புகள் என்கிற வகையில் குழந்தைகள் குறித்த நுட்பமான செய்திகளை நாம் இன்று நேரடியாகவும் புத்தகங்கள் வழியாகவும் வலைதளங்களின் வழியாகவும் பார்க்க முடிகிறது.
நண்பர்கள் பேசுகிறபோது குறிப்பாக இந்த குழந்தைகள் குறித்த கற்றல் என்ற நிகழ்வில் நம்மோடு பயணிக்கிற நண்பர் வெங்கட் மீண்டும் மீண்டும் சொல்வதுண்டு. மரியம் மாண்டிச்சோரி, ஜான் ஹோல்ட், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ உள்ளிட்ட ஆளுமைகள் கல்வி குறித்து பேசுகிற போது குழந்தைகள் குறித்து பேசுகிறார்கள். இந்த நூற்றாண்டில் குழந்தைகள் குறித்த உரையாடல் என்பது இவர்கள் வழியாகவே அதிகமாக பதிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
நண்பர் அவர்களின் பார்வை என்பது ஏகதேசம் பொருத்தமானதாக தோன்றினாலும் கூட உண்மையிலேயே இந்த சமூகம் குழந்தைகளைப் பற்றி எப்போது பேசத் துவங்கி இருக்கிறது என்பது ஒரு பின்னோக்கி பார்க்கிற வரலாற்று ரீதியில் ஆய்வு செய்து பார்க்கிற ஒரு வினா. நண்பர்களே! குழந்தைகளைப் பற்றி இந்த சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசத் துவங்கி இருக்கிறது என்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
மக்கட்பேறு என்கிற அதிகாரத்தில் திருக்குறளில் திருவள்ளுவர் குழந்தைகளை சிலாகித்து பேசுகிறார். குழந்தையின் உள்ளடக்கத்தை விரித்து பேசுகிறார். குழந்தைகள் எவ்வாறு இருக்கிறது? எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து விரிவாக பேசுகிறார். இப்படியான சமூக வரலாற்றுப் போக்கில் பார்க்கிறபோது 2000, 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமூகம் குறிப்பாக இந்திய சமூகத்தில் தமிழ் சமூகம் பேசியிருக்கிறது என்பது நமக்கு வியப்பில்லை என்றாலும் கூட இன்று அது மிக முதன்மையாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்து, செயல்பாட்டு வடிவம். குழந்தைகள் குறித்த உரையாடல் இந்த சமூகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரால் பேசப்பட்டிருக்கிறது என்பது மிக கவனத்திற்குரியது. இந்த உலகம் தமிழ் சமூகம் தோன்றிய காலத்தில் என்று இலக்கியபூர்வமாக அல்லது வேறு நிறுவனங்கள் வழியாக பேசுவதற்கும் தனி தேசியவாத போராட்டங்களுக்குள் வைத்துப் பார்ப்பதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாம். நான் கூறுவது இந்த சமூகத்தில் குழந்தைகள் பற்றிய உரையாடல் எப்போது துவங்கி இருக்கிறது என்பதை நினைவூட்டும் முகமாக இந்த செய்தியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment