பாயிரம் –கடவுள் வாழ்த்து
ஆக, கடவுள் வாழ்த்து என்று நாம் பேசுகிற போது, கடவுளினுடைய தன்மை என்ன என்று
ஆய்வு செய்கிற போது நிறைய கடவுள் குறித்த தத்துவ, மெய்யியல் கோட்பாடுகள் இருக்கின்றன.
அவற்றை எல்லாமும் ஒரு புறம் வைத்துவிட்டு வள்ளுவர் அறிமுகம் செய்கிற உலகு என்பது ஆதியும்
பகவனும். ஒரு மொழிக்கு முதன்மையாக எழுத்துக்கள் இருப்பது போல இந்த உலகிற்கு ஆதியும்
அதனுடைய நீட்சியுமாக ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது, பார்க்கிறீர்களா! என்று கடவுள்
வாழ்த்தில் நமக்கு உலகை அறிமுகம் செய்வதன் வழியாக கடவுளை அறிமுகம் செய்கிறார் வள்ளுவர்.
இந்த உலகம் பற்றிய புரிதல், இந்த நிஜம் பற்றிய புரிதல் உங்களுக்கு ஏற்படும்
என்றால் அதுவே கடவுள் பற்றிய புரிதலாக மாறும் என்று எனக்குத் தோன்றுகிறது. உனக்கு என்ன
தோன்றலாம் என்று உங்களுடைய கேள்வி எனக்கு கேட்கிறது. எனக்கு என்ன தோன்றலாம் என்றால்
இந்த நிஜத்தை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்த நிஜத்தை யாரும் புறக்கணித்து விட முடியாது.
ஆதியாக செல்கிற ஒன்றும் அதன் பொருள் நீட்சியுமாக இருப்பது தான் இந்த உலகம் என்பதை யாரும்
மறுத்து விட முடியாது என்கிற நேரடியான வாழ்வியல் எதார்த்தத்திலிருந்து நாம் பார்க்க
வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த பார்வையோடு கடவுளை, உலகத்தை நாம் பார்க்க துவங்குகிற
போது நாம் வாழ்வை குறித்து நல்ல நெறிபாட்டை கற்றுக் கொள்ள முடியும் என்று குறள் வழியாக
நாம் அறிய முடிகிறது. பின்பு இந்த குறள் அதிகார வரிசையில் அடுத்தடுத்த பார்க்களை நாம்
பார்க்கிறபோது இன்னும் வியப்பாகவே இருக்கிறது. வியப்பாகவே இருக்கிறது என்றால் என் அறிவுக்கு
என்கிற ஆணவத்தோடு சொல்வதாக பொருள் பட்டுவிடும். அது அதற்கே உரிய அலகோடு நுட்பத்தோடு
வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புத்தகம் நம் கையில் கிடைத்துவிட்டது. இதன் நெறிப்பாடு குறித்து அக்கறையோடு விருப்பத்தோடு பார்க்கவிருக்கிறோம் என்று நமக்கு தோன்றியவுடன் இந்த புத்தகம் நம் கையில் கிடைக்கிறது. அப்போது இந்த புத்தகத்தை நாம் தேடி ஆர்வமாக படிக்க முற்பட்டோம் என்றால் அப்படி படிப்பதினுடைய பயன் என்ன? - மகிழ்வாக வாழ்வது என்று நாம் இந்த உரையாடலை துவங்கி இருக்கிறோம். ஆனால் வள்ளுவர் கற்றதனால் ஆய பயன், படிப்பதனால் என்ன பயன் என்று கேட்கிறார். புத்தகம் படிப்பதனால் என்ன பயன், ஒரு வாகனம் ஓட்டுகிறோம். ஒரு சமையல் செய்கிறொம், என்ன பயன்? என்றால் உடனடியாக பயனை பார்க்க முடியும். எந்த ஒன்றையும் கற்பதனுடைய பயன் என்ன என்று பார்க்கிறபோது மிக நுட்பமான செய்தியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒரு வாகனம் இயக்குகிறீர்கள். தொலைபேசி
பயன்படுத்துகிறீர்கள். அதனுடைய பயன் என்ன? ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொள்வதற்கு தொலைபேசி
பயன்படுகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ஒரு வாகனம் பயன்படுகிறது.
ஒரு நாற்காலியின் பயன் என்ன, நீண்ட நேரம் சௌகரியமாக அமர்ந்திருப்பது. இப்படி ஒவ்வொன்றிற்கும்
ஒரு பயன் இருக்கிறது. அப்படி ஒன்றை படிப்பதன் பயன் என்ன என்று பார்க்கிறபோது, நாம்
இந்த வகுப்பில், உரையாடலில் பார்ப்பது - நாம் திருக்குறளை படிப்பதற்கான பயன் என்ன என்றால்
மகிழ்ச்சியாக நிறைவாக வாழ்வதற்கு. மகிழ்ச்சியாக, நிறைவாக வாழ்வதுதான் வாழ்வின் புத்தகத்தின்
பயன் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆக மகிழ்ச்சியாக, நிறைவாக வாழ்வது என்றால்
என்ன என்றால் மகிழ்ச்சிக்கும் நிறைவிற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான புரிதல் வைத்திருப்போம்.
நீங்கள் எவற்றை மகிழ்ச்சி என்று நினைத்திருக்கிறீர்களோ அந்த எல்லை வரை எவற்றை
வாழ்வு என்று வைத்திருக்கிறீர்களோ அந்த எல்லை வரை இந்த புத்தகம் உங்களுக்கு பயன்படும்.
எல்லா புத்தகமும் எல்லா வாசிப்பும். எல்லா நூல்களும் அதற்கே உரிய வாசிப்பு பயனை தரும்
என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வள்ளுவர் சொல்கிறார் கற்றதினுடைய பயன் என்ன என்றால்
கடவுளை அல்லது வாலறிவனை (வாலறிவன் என்கிற சொல்லுக்கு தமிழ் அறிஞர்கள் அவரவர் சித்தாந்தத்தின்
படி சிறப்பான பதில்களை சொல்கிறார்கள்.) வாலறிவன் என எதை எடுத்துக் கொள்வது. நாம் வாழ்வியல்
நோக்கில் எடுத்துக் கொள்ளலாம். புத்தகத்தின் பயன், வாசிப்பினுடைய பயன், காற்றலின் உடைய
பயன் என்று கடவுள் வாழ்த்தில் சொல்கிறார்.
கற்பதினுடைய பையன் என்ன என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்வதற்காக கடவுள் வாழ்த்தில்
சொல்லப்படுகிற இந்த சொற்குறிப்பை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கற்றதினுடைய பயன் என்ன?
ஒன்றினுடைய பயன் என்ன என்று எளிமையாக சொல்ல முடிகிறது. அறிஞர் பெருமக்கள் பயனை இரண்டாகப்
பிரிக்கிறார்கள். ஒன்று முதன்மை பயன், இன்னொன்று உப பயன். கிளையாக கிடைக்கிற பயன்.
விஞ்ஞானபூர்வமாக சொல்வதாக இருந்தால் கார்பன், ஆக்சிஜன் என்ற இரண்டு பொருட்களை சேர்க்கிற
போது அது இரண்டு பங்காக மாறி கார்பன் டை ஆக்சைடு என்று மாறுகிறது. அதில் கரி மிஞ்சுகிறது.
கார்பன் டை ஆக்சைடு கார்பனினுடைய அளவும் ஆக்சிஜனினுடைய அளவும் சேர்கிற போது மிச்சமாக
கார்பன்-டை-ஆக்சைடு வந்தால் நேரடியாக பயன். ஆனால் இரண்டும் சேருகிறபோது உப விளைவாக
கரி வந்து விடுகிறது. இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு முதன்மைப் பயனும் உப பயனும் இருக்கும்
என்று அறிஞர் பெருமக்கள் ஒரு செய்தியை சமூகத்தில் வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்க்கிறபோது ஒன்றை படிக்கிற போது முதன்மையான பயன் வாலறிவனைத்
தொழுவது. உப விளைவாக இருப்பது நீங்கள் அப்போது என்ன எல்லையில் நின்று படிக்கிறீர்களோ
அந்த எல்லையை நிறைவேற்றிக் கொள்வது என்று இந்த பாடல் அமையப்பெற்று இருக்கிறது. ஆக வாலறிவன்
என்றால் மறுபடியும் ஆணா ,பெண்ணா அதுவா, இதுவா, எல்லாமுமா, ஏதும் இல்லாததா என்று மீண்டும்
கடவுள் பற்றிய பேச்சுக்குள் விழுந்து விடுவோம். கடவுள் என்றால் முதல் குறளில் என்ன
சொல்கிறார் என்று சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகினுடைய இயல்பை
நீங்கள் மதிப்பதும், இந்த உலகினுடைய இருப்பு நிலையை நீங்கள் போற்றுவதும் நீங்கள் கற்பதினுடைய
இறுதி பையன். அதுவே கடவுளை வணங்குவதாக பொருள் கொள்ள முடியும். அந்த பயனே நீங்கள் இந்த
உலகத்தை போற்றுவதற்குரிய பொருளாக எடுத்துக் கொள்ள முடியும் என்று புதிய அணுகுமுறையில்
இதை பார்க்க முடிகிறது. கடவுள் வாழ்த்து என்று
கடவுள் பற்றிய விவாதமாக இவற்றை மாற்றாமல், வாழ்வியல் என்கிற மேன்மையான ஒன்றை புரிந்து
கொள்வதற்கு நாம் செய்கிற தேடுகிற அக்கறையின் பாற்பட்டு குறளினுடைய பகுதிகளை நாம் உரையாடிக்
கொண்டிருக்கிறோம்.
…தொடர்ந்து உரையாடுவோம்…
No comments:
Post a Comment