Wednesday, November 22, 2023

புதிய குழந்தை - ஓஷோ - பகுதி 4 - சிவ.கதிரவன்

                                                                     புதிய குழந்தை

நண்பர்களே, மிக முக்கியமான பயிற்சிக்குறிய, பயிற்சிக்கு உள்ளடக்கமாக இருக்கக்கூடிய ஒன்றன் மீது எழுப்பப்படுகிற விசாரணை இது. நாம் விசாரிக்கிற தைரியத்தோடு நாம் பார்க்கிறபோது தொடர்ந்து ஒன்றை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்னவென்றால் அது பயிற்சிக்கும் நமக்குமாக இருக்கிற தொடர்பு பயிற்சிக்கும் நமக்குமாக இருக்கிற உரையாடல் வடிவம் இவை எல்லாமும் என்ன செய்கிறது, என்னவாக கடந்து வருகிறது, குழந்தை மீது செயல்படுத்துகிற பொழுது அது என்னவாக விளைகிறது என்கிற பல்வேறு கோணங்களில் இவற்றை நாம் பேசிப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் குழந்தைகள் இன்று முழுவதும் பயிற்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் பயிற்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்தகைய பயிற்சி என்பது குழந்தையினுடைய புத்திசாலித்தனத்தை என்ன செய்கிறது என்பதின் மீது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். மிக முக்கியமான பகுதி இது.

குழந்தைகள் எப்போதெல்லாம் நலமாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் நலமாக இருக்கட்டும் என்று அனுமதிக்கிற பெற்றோராக நாம் இங்கு இருக்கிறோம் என்கிற படியால்  அவற்றை விரும்புகிற பெற்றோராக இருக்கிறோம் என்கிற படியால் நான் இந்த உதாரணத்தை இந்த குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நான் இப்படியான உரையாடலில் இந்த புத்தகம் குறித்து ஏற்கனவே நான் பேசிய கூட்டத்தில் கூட இருந்த பெற்றோர்களும் நண்பர்களும் குழந்தையினுடைய உள்ளடக்கத்தை அப்படியே பாதுகாக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைக் காண முடிந்தது. அவர்கள் அந்த உள்ளடக்கத்தின் மீது மிகப்பெரும் மதிப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை காண முடிகிறது. இந்த உள்ளடக்கமும் அவர்களது செயல்பாடும் மிகுந்த பூரிப்பை கொடுப்பதாக  இருக்கிறது. நான் உங்களைப் பார்க்கிற போதும் அப்படித்தான் உணர்கிறேன். குழந்தைகளின் உள்ளடக்கம் அவ்வாறாக எந்த சிதைவிற்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற படியால் குழந்தைகளுக்கு நீங்கள் தருகிற பயிற்சி முறை என்பது எவ்வாறு இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்கிற முறையில் நான் இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைக்கு பயிற்சி கொடுப்பது என்பது மிகுந்த மந்த நிலைக்கு அவர்களை உள்ளாக்கும்.  அந்த உள்ளடக்கத்தின் வழியாக நாம் குழந்தைகளுக்கு தர வேண்டும் என்று கொடுக்கிற எல்லாமும்  குழந்தைகளை என்ன செய்கிறது என்று நாம் ஒருமுறை திருப்பிப் பார்ப்பதற்காகவே குழந்தைகளுக்கு கொடுக்கிற பயிற்சிகள் குறித்து நாம் பேசிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஓஷோ இந்த புத்தகத்தை துவங்குகிற போது பயிற்சிகள்  குறித்து தான்  இந்த புத்தகத்தை துவங்குகிறார். பயிற்சி கொடுப்பது வழியாக குழந்தைகளின் உள்ளடக்கம் என்னவாக சிதைக்கப்படுகிறது என்பதை இந்த புத்தகத்தில் பேசுகிறார். இது உரையாடலில் பேசுகிறார். இந்த பயிற்சி முறைகள் பெற்றோர்கள் முன் வழங்கப்படுவதற்கும் அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கும் மிக முக்கியமான ஒரு காரணம் குழந்தைகள் சமூகத்தில் பெற்றோர்களினுடைய செயல்பாடுகளை அல்லது குடும்பம் உள்ளிட்ட அமைப்பு முறைகளை சார்ந்து இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த சார்பு நிலையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஏதாவது ஒன்றை அழுத்துகிறார்கள், பரிந்துரைக்கிறார்கள், பயிற்சி முறையாக மாற்றுகிறார்கள். இந்த சுதந்திரம் பெற்றோர்களுக்கு சமூகம் வழங்கி இருக்கிறது. இந்த சுதந்திரம் பெற்றோர்களுக்கு சமூகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழங்கும் முறையை யார் தந்தது என்பது தனி உரையாடல். ஆனாலும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற இத்தகைய சுதந்திரம் போல குழந்தைகளுக்கு சுதந்திரம் உண்டா, அந்தரங்கமாக அவர்கள் வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்கிற ஒரு கேள்வியை இரண்டாவதாக இந்த புத்தகத்தில் நாம் பார்க்க முடிகிறது.

நான் மீண்டும் உங்களுக்கு இப்படியான மிக நுணுக்கமான கேள்விகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு காரணம் குழந்தையினுடைய இயல்பை நீங்கள் போற்றுகிறீர்கள், மதிக்கிறீர்கள் என்கிற அடிப்படையிலேயே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

நண்பர்களே, நமக்கு குழந்தைகள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு ஒரு அதிகாரம் இருக்கிறது. ஒரு வாய்ப்பு இருக்கிறது. நிஜமாகவே இருக்கிறது. இப்படியான ஒரு வாய்ப்பு குழந்தைகளுக்கு நம்மீது செல்வாக்கு செலுத்துவதற்கு இருக்கிறதா என்பதை நாம் சிந்திப்பதே இல்லை. சற்று முற்போக்காக சிந்திக்கிற பெற்றோர்கள் கூட சிந்திப்பதில்லை. செல்வாக்கு செலுத்துவதற்கு அதிகாரம் இருக்கிறதா என்கிற விவாதம் ஒரு புறம். இன்னும் நுட்பமாக ஒன்றை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புவது குழந்தைகள் அவரவர் அளவில் சுதந்திரமாக இருப்பதற்கு அந்தரங்கமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது மிக முக்கியமான கேள்வியாக உங்களோடு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

குழந்தைகள் மீது நீங்கள் செல்வாக்கு செலுத்துவதற்கு எத்தகைய வாய்ப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு உங்கள் மீது குழந்தைகள் செல்வாக்கு செலுத்துவதற்கும் நீங்கள் வாய்ப்பு தர வேண்டும் என்கிற உயர்ந்த நிலை ஒன்று. சராசரியான வேறொரு நிலை குழந்தைகள் அவர்கள் அளவில் சுதந்திரமாக, அந்தரங்க உணர்வோடு இருப்பதற்கு நாம் அனுமதிக்கிறோமா என்றால் நம்முன் இந்த கேள்வி பூதாகரமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. பெரிய கேள்வியாக மாறிக்கொண்டே இருக்கிறது. நாம அப்படி அடிப்படையாக ஒரு சிக்கலோடு இருக்கிறோம். மனிதகுலம் முழுவதும் குழந்தைகள் மீது செல்வாக்கு செலுத்தவே ஆசைப்பட்டு கொண்டிருக்கிறது.  ஒரு பக்குவமான நிதானமான நிலைக்கு குழந்தைகள் வரவேண்டும் என்று விரும்புகிற சிந்தனைப்  போக்கு சமூகத்தில், சமூகப் பொது மனநிலையில் இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒருவேளை குழந்தைகள் தம்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் அவர்கள் அளவில் சுதந்திரமாக இருப்பதற்குமான வாய்ப்பை நாம் உருவாக்குவதற்கு முயற்சிக்கலாம்.

ஆனால் நடப்பில் அப்படி ஒன்று இல்லை அல்லது மிக மிகக் குறைவாகவே குழந்தைக்கான சுதந்திரம் இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த  கட்டமைப்பை யார் உருவாக்கியிருக்கிறார்? யார் செய்து கொண்டிருக்கிறார்? யார் இவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குள் உரையாடிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான உரையாடல் பகுதி.

குழந்தைகள் சுதந்திரமாக இருப்பதற்கும் குழந்தைகள் அவர்களது அந்தரங்கங்களை பராமரித்துக் கொள்வதற்கும்  அந்தரங்கங்கள் என்பது வளர்ச்சிக் குறிப்பாக, இருள் சூழ்ந்த ஒன்றாக அதுவே வளர்வதற்குரிய வாய்ப்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தரங்கம்  என்பது இன்னொரு தனி மனிதனிடமிருந்து மறைத்துக் கொள்வது அல்ல. அந்தரங்கம் என்பது எல்லோருக்கும் தனித்தனியாக இருக்கிற உணர்வான நிலை. எல்லோருக்குள்ளும் அந்த நிலை இருக்கிறது, இருக்க வேண்டும். இந்த புரிதலோடு நாம் அந்தரங்கம்  என்கிற கருத்தை பார்த்தால் மட்டுமே நாம் சிந்திக்கிற சிந்தனையில் நமக்கு அந்தரங்கம் இருப்பது போல குழந்தைகளுக்கும் அந்தரங்கம் இருக்கிறது என்கிற உணர்வைப் பெற முடியும்.

இருளில் ஒன்பது மாதம் தாயின் கருவறையில்  குழந்தை அந்தரங்கமாகத் தான் இருக்கிறது.  யாரும் தலையிட முடியாது. யாரும் பார்க்க முடியாது. யாரும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ள முடியாது. நடப்பதற்கும் இயங்குவதற்கும் அதற்கே தனிப்பட்ட வாய்ப்பும் சுதந்திரமும் வழங்கப்பட்ட ஒரு இயற்கையின் இயக்கவியல் தன்மையோடு குழந்தை  கருப்பைக்குள் வளர்கிறது. இந்த வளர்ச்சியில் குழந்தைக்கு முழுக்க அந்தரங்கம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமை குழந்தை வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிற புரிதலோடு குழந்தையின் மீதான செல்வாக்கை நாம் மதிப்போடு பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த வகையிலேயே குழந்தைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது.

ஒன்பது மாதம், பத்து மாதம் குழந்தை கர்ப்பப்பையில் வளர்கிறபோது நீங்கள் அல்லது ஒரு பெற்றோர் ஒரு அறிவாளி தலையிட்டு இருப்பார், செல்வாக்கு செலுத்தி இருப்பார் என்றால் நிச்சயமாக அந்த வளர்ச்சி தடைப்பட்டு இருக்கும். குழந்தையின் முழுமையான வளர்ச்சிப் போக்கை தடுத்து இருக்கும். இத்தகைய தடையை, இத்தகைய வளர்ச்சி போக்கிற்குரிய உத்தரவாதத்தை நேர்படுத்திக் கொள்வதற்கு நெறிப்படுத்திக் கொள்வதற்கு இருக்கிற ஒரே செயல்பாட்டு வடிவம் குழந்தை அந்தரங்கமாக வளர்வதற்கு நாம் அனுமதித்தது தான். நாம் அனுமதித்தது என்பதை விடவும் இயற்கை அப்படியான ஒரு வாய்ப்பை, அப்படியான ஒரு அமைப்பு முறையை, இயங்கு முறையை வைத்திருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...