புதிய குழந்தை - ஓஷோ
ஆக, அந்தரங்கமாக வளர்கிற குழந்தை, முழுவதும் அந்தரங்கமாக வளர்கிற குழந்தை மட்டுமே ஆரோக்கியமான முறையில் வளர்ந்து முழு வளர்ச்சியை அடைந்து இந்த உலகத்தை காண்பதற்கு வெளியில் வருகிறது என்கிற துவக்க நிஜத்தில் இருந்து குழந்தைகள் வளர்கிறபோது வாழ்நாள் முழுவதும் அவர்கள் வளர்ச்சிக்குரிய அந்தரங்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனைப் போக்கில் இருந்து நாம் அந்தரங்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான புரிதலில் இருந்து பார்க்கிறபோது மட்டுமே குழந்தைக்கு அந்தரங்கம் எத்தகைய வல்லமையை, வளர்ச்சி போக்கை தருகிறது என்பதை உங்களால் சிந்தித்து அறிய முடியும். கண்டுகொள்ள முடியும்.
இந்த முறைமையை சமூகம் பெற்றோர்களுக்கு குறைத்துக் கொண்டே வந்துவிட்டது அல்லது இல்லாமல் செய்து விட்டது. பெற்றோர்கள் குழந்தைகள் மீது கொடூரமான வன்மத்தோடு நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளாக இருக்கலாம். நன் மதிப்பெண் வாங்காத குழந்தைகளை வளர்கிற பெற்றோர்கள், சமூகத்தின் மீது நம்பிக்கையும் சமூகத்தின் மீது பெரும் மதிப்பையும் வைத்திருக்கிற பெற்றோர்கள் இந்த சமூகத்திற்கு பொருந்துகிற குழந்தைகளாக தம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிற பெற்றோர்கள் குழந்தைகள் மீது கொடூரமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். குழந்தையோடு வன்மமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். இது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
புதிய குழந்தையை வாசிக்கிற போது புதிய குழந்தையின் ஊடாக நம் வீட்டில் வளர்கிற குழந்தையை ஒப்பிட்டு பார்க்கிறபோது நாம் குழந்தையோடு எவ்வளவு இணக்கமாக இருக்கிறோம் இசைவாக இருக்கிறோம் என்பது ஒரு புறம். குழந்தைகள் மீது எவ்வளவு முரட்டுத்தனமாக, வன்மமாக, கொடூரமாக நடந்து கொள்கிறோம் என்பதும் நாம் நியாயமாக மதிப்பளித்துப் பார்க்க வேண்டும் என்கிற ஒரு சுயவிமர்சனமான பகுதி. இந்த சுய விமர்சனமான பகுதியில் நாம் பார்க்கிறபோது சுயவிமர்சனமான பகுதிக்குள் நாம் நம்மை எடை போட்டு பார்க்கிற போது ஒரு நீளஅகலமான ஒன்றை கண்டுபிடிக்க முடிகிறது. நமக்குள் இருக்கிற இயலாமையை, ஏக்கங்களை குழந்தைகள் மீது பொருத்திப் பார்க்கிறோம். குழந்தைகள் மீது அழுத்திப் பார்க்கிறோம். குழந்தைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இதுவே ஒரு பெற்றோருக்கு குழந்தை மீது வன்மத்தையும் கொடூரத்தையும் தருகிறது என்பதை நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படியான அம்சங்களோடு குழந்தையின் மீது குழந்தைக்கும் இந்த சமூகத்திற்கும் அல்லது குழந்தைக்கு பெற்றோருக்கும் இடையே இருக்கிற மென்மையான பகுதிகள் எல்லாமும் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அவை குழந்தையினுடைய வளர்ச்சியை மதிப்பு மிக்கதாக மாற்றுவதில்லை. குழந்தைகளுடைய வளர்ச்சியை மதிப்புமிக்க ஒன்றாக மாற்றுவதற்கு மிகுந்த அக்கறைப்பட வேண்டி இருக்கிறது நாம். குழந்தையினுடைய வளர்ச்சியை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன. குழந்தையினுடைய பிறப்பிலிருந்தே குழந்தைகள் பிறக்கிற போதே நாம் ஒன்றாக அவர்களை பார்க்க வேண்டி இருக்கிறது. ஆனால் நாம் வேறோன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். குழந்தையினுடைய பிறப்பை மென்மையாக மாற்றுவதற்கு இன்று வந்திருக்கிற நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கூட, அணுகுமுறைகள் கூட குழந்தைகளுடைய பிறப்பை ஒரு மருத்துவ ரீதியாக உயிரியல் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே அணுகுகிற அளவிலேயே நிற்கின்றன.
குழந்தையினுடைய வளர்ச்சியை, குழந்தையினுடைய உள்ளடக்கத்தை பார்ப்பதற்குரிய உளவியக்கு உடலியலுக்கு அப்பாற்பட்ட உணர்வு சார்ந்த வேறு ஒரு எல்லை வரை பேசிப் பார்க்கிற முயற்சியை நாம் இன்னும் துவங்கவே இல்லை. இந்த சமூகம் அவற்றைப் பற்றி பார்க்கவே இல்லை. ஓஷோ இந்த புத்தகத்தில் பேசுகிறபோது அப்படியான உணர்வு குறித்து குழந்தைகளுடைய பிறப்பை மென்மையாக்குவது குறித்து வேறொரு பகுதியை நமக்கு அறிமுகம் செய்கிறார். குழந்தைகளுடைய பிறப்பு என்பது சமூகம் வைத்திருக்கிற அல்லது நவீன மருத்துவம் கண்டுபிடித்து வைத்திருக்கிற புதிய எல்லை என்பது மிகச் சிறிய அளவிலானது. இந்த எல்லையை தாண்டி இந்த எல்லைக்கு அப்பாற்பட்டும் குழந்தையினுடைய பிறப்பு அமையப் பெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட பார்வை. உண்மையும் அப்படித்தான் இருக்கிறது. மேலும் உண்மை அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு இருக்கிறது.
குழந்தையின் பிறப்பு என்பது குழந்தையினுடைய முதல் துவக்க வருகை என்பது இன்று நாம் வைத்திருக்கிற எல்லா எல்லைகளையும் எல்லா வரையறைகளையும் கனத்து தூரமாக கடந்து வர வேண்டி இருக்கிறது. ஒரு பெரிய அடர்த்தியோடு கடந்து வர வேண்டியிருக்கிறது. குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள், எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கு பின்னால் இருக்கிற கதைகளை நான் நிறைவாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் குழந்தைகளுடைய வளர்ப்பு அல்லது குழந்தைகளுடைய உள்ளடக்கம் குறித்து நாம் இன்று எட்டி இருக்கிற நிலை என்பது ஒரு போதாமையினுடைய நிலையிலேயே இருக்கிறது. முன்னேற்றம் என்கிற பகுதிகளை பல நேரங்களில் தடையாகவே வைத்திருக்கிறது.
நண்பர்களே மிக முக்கியமான பகுதி இது. குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையினுடைய உரையாடல் துவங்குகிற இடம் அல்ல. குழந்தையினுடைய உள்ளடக்கம் துவங்குகிற இடம். குழந்தையினுடைய உள்ளடக்கம் என்பது குழந்தையினுடைய பிறப்பு அம்சத்தில் இருந்தே துவங்குகிறது என்பதை சிந்தித்து நோக்கினால் மட்டுமே சிந்தித்து ஏற்றுக் கொண்டால் மட்டுமே குழந்தையினுடைய பிறப்பிலிருந்தே குழந்தையினுடைய உள்ளடக்கத்தை போற்றுபவர்களாக பார்ப்பவர்களாக அங்கீகரிப்பவர்களாக மாற முடியும் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். அப்படித்தான் நாம் துவங்க வேண்டியிருக்கிறது.
புதிய குழந்தை புத்தகத்திற்குள் குழந்தைகளுடைய பிறப்பு எவ்வாறு அமையப் பெற வேண்டும் என்கிற சமூகப் பகுதிகளில் இருந்து விஞ்ஞானம் வைத்திருக்கிற இன்றைய நவீன பார்வையில் இருந்து இன்னும் நுட்பமான வேறொரு பகுதியை நாம் பார்ப்பதற்கு ஓஷோ நமக்கு நினைவூட்டுகிறார். அது முழுக்க நாம் பேசிப் பார்ப்பதற்குரிய பகுதியாகவும் இருக்கிறது. மிக நுட்பமான செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு அவர் தன்னைப் பற்றிய தனது வாழ்வியல் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிற வகையில் ஒரு வினா இதற்குள் உரையாடப்படுகிறது. இது தனி. நான் ஓஷோவினுடைய வரலாற்றை நான் இந்த நிகழ்வில் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு காலம் கருதி இன்னொரு நிகழ்வில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு குழந்தையின் சுதந்திரம் என்பது குழந்தையினுடைய வளர்ப்பு முறை என்பது எவ்வாறு என்று பார்க்கிற போது குழந்தை அதன் இயல்பில் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் நாம் இங்கு குழுமி இருக்கிற நாம் சிந்தித்து முடிவு செய்பவர்களாக இருக்க வேண்டும். குழந்தை அதன் இயல்பில் வளர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் நேற்று மகிழ் குழுவில், மகிழ் அரங்கில் நிகழ்ந்த உரையாடலில் நான் சந்தித்த ஒரு வினா இருக்கிறது. சரியான முறையில் குழந்தை வளர்ப்பது எப்படி? என்று கேட்கிற போது நண்பர் ஒருவர் பதில் அளித்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. சரியான முறை என்பது என்ன? என்று ஒரு கேள்வியை அவர் எழுப்பினார். உண்மையிலேயே சரியான முறையில் குழந்தையை எவ்வாறு வளர்ப்பது என்று நமக்கு தெரிவதில்லை. என்னுடைய தனிப்பட்ட பார்வையில் சரியான முறை என்பது இயற்கையான முறை. சரியான முறை என்பது சமூகப் பார்வை இல்லாத முறை. சமூகப் பார்வை கடந்த முறை. ஒரு நாளில் இரவு பொழுது சராசரியாக ஒரு ஆறு மணி, ஆறரை மணி அளவில் துவங்குகிறது. சூரியனுடைய நகர்வின் அடிப்படையில், புவியுனுடைய ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாலை 6 மணி தொட்டு சூரிய மறைவு துவங்குகிறது. அதிகாலை நான்கு மணி 30 நிமிடங்கள் தொட்டு சூரிய வெளிச்சம் படர துவங்குகிறது. மாலை நேரம் இருள் சூழ்கிற துவக்க நேரமும் காலை நேர ஒளி பரவுகிற துவக்க நேரமும் சராசரியாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழன்று கொண்டே இருக்கிற ஒரு இயற்கை நிகழ்வு சரியானது. இந்திய சூழலில் அல்லது தமிழ் சூழலில் இயற்கையினுடைய இயல்புப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் பெய்கிற மழை, தொடர்ந்து வருகிற பனி, தொடர்ந்து வருகிற வெப்பம், தொடர்ந்து வருகிற காற்று, தொடர்ந்து வருகிற மழை என்று சுழல்கிற இயற்கை சுழற்சிமுறை சரியானது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment