Sunday, August 8, 2021

JOHN HOLT - HOW CHILDREN LEARN? PART -5// ஜான்ஹோல்ட் - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

 

www.swasthammadurai.com

ஜான் ஹோல்டினுடைய ஒவ்வொரு எழுத்தும் மேன்மையானது; ஒவ்வொரு வாக்கியமும் உயர்வானது என்கிற எந்தப் புனிதமும் ஜான்ஹோல்ட் மீது இல்லாமல், உண்மையிலேயே ஜான் ஹோல்டின் பணி ஒரு குழந்தை நலத்தில் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை நேர்மையாக அலசிப் பார்க்கிற ஆய்வுப்பூர்வமான உரையாடலாக இந்த உரையாடலை நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜான் ஹோல்ட் இந்த காலகட்டத்தில் நவீன உலகம் பெரும் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பிறகு மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிற சலிப்பின் விளைவாக பள்ளிக்கூடங்கள் வேண்டாம் என்று ஒரு சிறு குழு முடிவு செய்கிறது.

ALSO READ:OHN HOLT - HOW CHILDREN LEARN - EDUCATION - INTRODUCTION - PART 1

உதாரணமாக, நண்பர்களோடு பேசுகிறபோது எங்கள் குழுவில் இருக்கிற நண்பர்கள் இந்தக் கருத்தை சொல்வதுண்டு. இப்போதெல்லாம் இளம் வயது தம்பதிகள் இளம் வயதிலேயே வெளிநாடுகளுக்குச் சென்று நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். 40 வயதிற்குள்  அவர்களுக்கு மொத்த உலகமும் சலித்துப் போகிறது. உலகில் இருக்கிற எந்த ஒரு அமைப்பும் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கவில்லை. அதே அமைப்புக்குள் குழந்தைகளை திணித்து அவர்களுக்குள் கல்வியைத் திணித்து அவர்களை மறுபடியும் மறுபடியும் நம்மைப்போல் சோர்வாக்க வேண்டாம் என்று கருதுகிற பெற்றோர்களுடைய மனநிலையும் அதிகரித்துக்கொண்டிருக்கிற வேளையில் அவர்கள் பள்ளிக்கூடங்களை புறக்கணிக்க துவங்குகிறார்கள் என்று பள்ளிக்கூடத்திற்கு மாற்றாக சிந்திக்கிற பெற்றோர்களினுடைய மனநிலையை எங்கள் நண்பர்களோடு உரையாடுகிற போது எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த உரையாடலில் நாங்கள் கண்டுபிடித்த உண்மை பல இடங்களில் பொருந்திப் போவதாகவே இருக்கிறது.

ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN? -EDUCATION - INTRODUCTION - PART -2

அமெரிக்கா போன்ற ஐரோப்பிய கண்டங்களில் பணியாற்றுகிற பெற்றோர்களின் மனநிலையில் அவர்களிடம் கல்வி குறித்து கேட்டோம் என்று சொன்னால் இந்த 40 ஆண்டுகாலம் நாங்கள் நன்றாக இந்திய பள்ளிகளில் படித்து இருந்தோம் அந்த கல்வியில் கற்ற பிறகு எங்களுக்கு அழுத்தம் நிறைந்த, பணி சுமை மிகுந்த வேலைகளில் நாங்கள் பணியமர்த்தப்பட்டோம். தொடர்ந்து வேலை பார்த்தோம். எங்கள் வேலைத் தன்மை எப்போது எங்களை விடுதலை செய்யும் என்கிற சோர்வு எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக நாம் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்கு மேலெழுந்தது, வாய்ப்பு கிடைத்தவுடன் நாங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டோம். எங்கள் குழந்தைகளை நாங்கள் படித்தது போல் பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்கக் கூடாது என்று விரும்புகிறோம். எனவே நாங்கள் வீட்டு வழி கல்வியை தேர்வு செய்கிறோம் என்றெல்லாம் கூட பெற்றோர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

எங்கள் குழுவில் நடந்த உரையாடல் வழியாக இவை வெளிப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். பள்ளிக்கல்வி வேண்டாமென்று ஹோம் ஸ்கூலிங் என்று சொல்லப்படுகிற வீட்டு வழிக்கல்வியில் படிக்கிற குழந்தைகள் ஏன் அந்த வீட்டு வழிக்கல்விக்கு வலியுறுத்தப்படுகிறார்கள் என்கிற தளத்தில் பார்க்கிறபோது அந்தப் பெற்றோர்களினுடைய கடந்த கால கல்வி குறித்த, பணி சுமை குறித்த அழுத்தங்களும் சோர்வும் இந்த குழந்தையை பள்ளிக் கல்வியை விட்டு, வீட்டு வழிக்கல்விக்கு இழுத்து வருகின்றன என்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு குழந்தை பள்ளி கல்வியிலிருந்து வீட்டு வழி கல்வி வழியாக படிப்பார் என்று சொன்னால் அந்தக் குழந்தை சம வயது குழந்தைகளோடு பழகுகிற, சமவயது குழந்தைகளின் மத்தியில் ஏற்படுகிற, வயது ஒத்த பிரச்சனைகளும் வயது ஒத்த சந்தோஷங்களும் தவர விடப்படுகின்றன என்கிற விவாதமும் வீட்டு வழிக்கல்வியில் இருக்கிறது என்பதை அந்தப் பெற்றோர்கள் பார்க்க தவறுவதில்லை. இந்தப் பார்வையின் மீது பெற்றோர்கள் புதிய அணுகுமுறையை செய்து பார்க்க முடியுமா என்று வீட்டு வழி கல்வி பேசுகிற பெற்றோர்கள் சில முயற்சிகளை செய்து பார்ப்பதும் உரையாடுவதும் நடக்கிறது.

ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN - INTRODUCTION - PART -3

பல கல்வி குறித்த உரையாடல்களில் நான் தனிப்பட்ட முறையில் பார்ப்பது இந்த நடப்பில் இருக்கிற கல்விமுறையை ஏதாவது ஒரு வகையில் குழந்தைக்கு இசைவாக மாற்றிவிட முடியுமா என்று சொல்லப்பட்டாலும் கூட குழந்தையை இந்த சமூகம் இலக்காக வைத்திருக்கிற ஒரு இலக்கை நோக்கி வேகமாக எதைச் செய்தால் நகர்த்த முடியும் என்கிற தளத்திலேயே அந்த இசைவான உரையாடல்கள் வண்ணம் பூசப்பட்டு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த வண்ணம் பூசப்பட்ட இசைவான பரிந்துரைகள் குழந்தையை வளர்ப்பதை விடவும் இலக்கை நோக்கி குழந்தைகளை தள்ளுவதாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது. தமிழக அரசு, இந்திய அரசு பரிந்துரைக்கிற பல்வேறு கல்வித் திட்டங்கள் வழியாக பார்க்கிறபோது இந்த கல்வித் திட்டங்கள் முன்னோக்கி செல்கின்றன என்ற வாதமும் கல்வித்திட்டங்கள் பின் நோக்கி இழுக்கப்படுகின்றன என்ற வாதமும் அரசியல் தளத்தில் ஒரு முக்கியத்துவமான வாதமாகவும் நான் இந்த சமூகத்தில் உலவுவதைப் பார்க்கிறேன்.

இப்படி கல்வி, குழந்தைகள், கல்விக்கூடங்கள், அரசாங்கம், பெற்றோர்கள் என்கிற பெரும் தளத்தில் கல்வி, குழந்தைகளுக்கு இடையே இருக்கிற உறவை நாம் பேசி பார்ப்பதற்கு ஜான் ஹோல்ட் ஒரு முதன்மையான, வெளிப்படையான, நேர்மையான கருத்தை ஏற்பாடு செய்கிறார் என்று ஜான் ஹோல்டை நான் புரிந்து கொள்கிறேன். ஜான் ஹோல்ட்  வழியாக பேசினாலும் சரி, ஜான் ஹோல்டை மையமாக வைத்து பேசினாலும் சரி, ஜான் ஹோல்டை விசாரணைக்கு உட்படுத்தி பேசினாலும் சரி எல்லாமும் குழந்தைகள் எவ்வாறு இசைவாக, இயல்பாக வளர்வதற்கு நாம் உதவி செய்ய முடியும் என்கிற தளத்திலேயே இந்த உரையாடலினுடைய நோக்கம் அமைந்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையிலேயே இந்த உரையாடலை நாம் தொடர்ந்து செய்யவேண்டும் என்று கருதுகிறேன்.

                                                                                                        தொடரும்...

ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN / ஜான் ஹோல்ட் - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் PART -4

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...