ஜான்ஹோல்ட் - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
ஒரு குழந்தை ஒரு பள்ளிக்கூடத்திற்குள் செல்கிறபோது ஒரு புதிய இடத்திற்கு செல்கிற மகிழ்வோடு செல்கிறாரா? அல்லது தவிப்போடு செல்கிறாரா? என்று நாம் பார்த்தோம் என்று சொன்னால் நகைச்சுவையாக நம் சொந்த வாழ்வில் பொருத்திப் பார்த்தோம் என்று சொன்னால் நாம் அனைவருமே செல்லும்போது கவலையோடு சென்ற அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. சில குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு மகிழ்ச்சியாக சென்றதையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிற 31/2 வயது 41/2 வயது காலகட்டம் என்பது குழந்தைகளினுடைய மனதில் என்னவாக பதிவு செய்யப்படுகிறது என்பது முக்கியமான உரையாடல் பகுதி.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN - EDUCATION - INTRODUCTION - PART 1
ஆனால் குழந்தைகள்
பற்றி பேசுகிற ஒவ்வொருவரும் குழந்தைகள் விசாலமான பார்வை உடையவர்கள் குழந்தைகள் புதிய
ஒன்றை செய்து பார்க்கக் கூடியவர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
குழந்தைகள் புதிய தளத்திற்கு நகர தயாராக இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மையாக
இருக்கும் என்றால் இந்த சமூகம் சொல்வது உண்மையாக இருக்கும் என்றால் இலக்கியங்கள் வழியாக
நாம் படிக்கிற போது குழந்தைகள் புதிய ஒன்றை செய்து பார்ப்பதில் அலாதியான விருப்பம்
உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது உண்மையாக இருக்கும் என்று சொன்னால் புதிய பள்ளிக்கூடத்திற்கு
குழந்தைகளை அனுப்புகிற போது ஏன் குழந்தைகள் அழுகிறார்கள் என்கிற கேள்வியை நாம் கேட்டுப்
பார்க்க வேண்டியுள்ளது.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN? -EDUCATION - INTRODUCTION - PART -2
குழந்தைகள்
பள்ளிக்கூடத்துக்கு இசைவாக, கொண்டாட்டமாக செல்வது என்பது அரிதிலும் அரிது. ஒருவேளை
குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்ற பிறகு இந்த அழுகை நிற்கக் கூடும் அல்லது அழாத
குழந்தைக்கு அழுகை வரக்கூடும். இந்த மனநில எவ்வாறாக இருக்கிறது? இந்த மனநிலையில் குழந்தைகள்
எவ்வாறு இருக்கிறார்கள்? என்பது இந்த உரையாடல் துவங்க வேண்டிய இடமாக நான் நினைக்கிறேன்.
ஒரு குழந்தையை இந்த சமூகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கு ஆவணங்களை, உரையாடலை
துவங்கி பார்க்கிறபோது யார் ஒருவரும் குழந்தையை கண்டவுடன் அது உற்சாகமானது, அது பளபளப்பானது,
அது வேகமானது, அது துறுதுறுப்பானது என்று ஒரு விளம்பர பதாகையை கையில் வைத்துக்கொண்டு
பேசுவதாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு குழந்தை எந்த ஒன்றையும் புதிதாக செய்து பார்ப்பதற்கு
ஆர்வமாக இருக்கிறது என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். நான் பார்த்தும் இருக்கிறேன்.
இன்றும்
உங்கள் வீடுகளில் இருக்கிற குழந்தையை ஒரு நாற்காலியை முன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்
என்று சொன்னால் அந்தக் குழந்தை சிறிது நேரம் அந்த நாற்காலியை உற்றுப் பார்க்கிறது.
பின்பு அதன் மீது ஏறி அமர்கிறது. பின்பு அந்த நாற்காலியை இழுத்து பார்க்கிறது; பின்பு
சாய்த்துப் பார்க்கிறது; பின்பு தலைகுப்புற நிறுத்தி பார்க்கிறது; அதை அடித்து பார்க்கிறது;
தன் மேல் போர்த்தி கொண்டு படுத்து இருக்க பார்க்கிறது, இப்படி விதவிதமான உறவை அந்த
நாற்காலியுடன் அந்தக் குழந்தை எழுதிக் கொள்கிறது. நாம் எந்த தலையீடும் இல்லாமல் தொடர்ந்து
அந்த நிகழ்வைப் பார்த்து நாம் இந்தக் குழந்தை எவ்வாறெல்லாம் சிந்திக்கிறது என்று ஆச்சரியப்பட்டுக்
கொள்வோம். அப்படி ஆச்சரியத்தின் விளைவாக குழந்தைகள் புதிய ஒன்றை செய்வதற்கு ஆர்வமாக
இருக்கிறார்கள் என்று கருதிக் கொள்வோம். இந்தக் கருதுகோளின் அடிப்படையில் குழந்தை புதிய
ஒன்றை செய்வதற்கு ஆர்வமாக இருக்கும். புதிய சூழலை சந்திப்பதற்கு எப்போதும் எத்தணிப்போடு
காத்திருக்கிறது என்று ஒரு ஆய்வுக் கருதுகோளை கையில் வைத்துக்கொண்டு குழந்தையை பள்ளிக்
கூடத்திற்கு போய்விட்டீர்கள் என்று சொன்னால் அந்த பள்ளிக்கூடம் அந்த குழந்தையை என்ன
பாடு படுத்துகிறது என்பதை மறுநாள் காலை குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது நான்
கண்டுபிடித்துவிட முடியும்.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN - INTRODUCTION - PART -3
நேற்று
நாற்காலியை புதிதாக அசைத்துப் பார்த்த ஒரு குழந்தை, பள்ளிக்கூடத்திற்குள் இருக்கிற
ஒரு சூழலை அவ்வாறு சந்திப்பதற்கு விரும்பவில்லை என்று நான் பார்க்கிறேன். அவ்வாறு சந்திப்பதை
குழந்தைகள் பதட்டத்தோடு பார்க்கிறது. நாற்காலியோடு அல்லது ஒரு புதிய வீட்டிற்குள் அல்லது
புதிய உறவினர் வீட்டிற்குள் அமைதியாக ஒரு பத்து பதினைந்து நிமிடம் அமர்ந்திருக்கிற
குழந்தை பின்பு மெதுவாக பெரியப்பாவின் மடியில் ஏறி உட்காருகிறது. பின்பு பெரியப்பாவின்
பையில் இருக்கிற பேனாவை எடுக்கிறது. அதை திறக்கிறது; பெரியப்பாவின் முகத்தில் கிறுக்குகிறது;
பின்பு மூடி வைக்கிறது; தன் முகத்தில் கிறுக்குகிறது; பெரியப்பாவின் கண்ணாடியை இழுக்கிறது;
பெரியப்பாவின் சட்டை மீது அமர்கிறது. பெரியப்பாவின் மூக்கை திருகுகிறது; பெரியப்பாவின்
மீசையை இழுத்துப் பார்க்கிறது, இவ்வாறு ஒரு பதினைந்து நிமிடத்திற்குள் புதிய சூழலை
கடந்து போக முடியும் என்று குழந்தையினுடைய அனுபவத்திலிருந்து காட்சியாக நாம் பார்க்கிறோம்.
இந்தக் குழந்தை பள்ளிக்கூடத்திற்குள் செய்கிறதா? எளிய பள்ளிக்கூடங்கள் மாண்டிச்சோரி
பரிந்திரைக்கிற பள்ளிக்கூடமோ, ஜெ.கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைக்கிற பள்ளிக்கூடமோ,அரவிந்தர்
பரிந்துரைக்கிற பள்ளிக்கூடமோ அல்லது நவீன சிந்தனையாளர்களாக இருக்கக்கூடியவர்களின் சிந்தனையில்
விளைந்த பள்ளிக்கூடங்களோ குழந்தைகளை எல்லா குழந்தைகளையும் இல்லாவிட்டாலும்கூட சில குழந்தைகளையாவது
இத்தகைய துருதுருப்புக்குரிய தன்மையில் அனுமதிக்கிறார்களா? அப்படி அனுமதிக்கிற பட்சத்தில்
அந்தக் குழந்தைகள் ஏன் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் முன் அழுது கொண்டே செல்கிறார்கள்
என்பதை நான் கேட்டுப் பார்க்கிறேன். அதை ஒரு பொது வெளியில் உரையாடலாக மாற்ற முயற்சி
செய்கிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment