ஜான்ஹோல்ட் - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
நான் சிறுவயதில் இருந்த போது நீங்களும் கூட சிறுவயதில் இருந்த போது இந்த அனுபவத்தை பார்த்திருக்க முடியும். ஒரு 1980-களில் 85 களில் பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அடித்து கை,கால் கட்டி இழுத்து வருகிற சூழலை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் எப்போதும் துறுதுறுப்பாக இருக்கிறார்கள் என்று ஒரு வாதத்தை வைத்துக் கொண்டோம் என்று சொன்னால் 80 களில் வாழ்ந்த குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குள் போவதற்கே அஞ்சி நடுங்குகிற காட்சி ஏன் நிகழ்ந்தது? என்று ஒரு கேள்வியை நாம் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ALSO READ:HAPPY PART - 1 மகிழ்ச்சி பகுதி - 1
என் உடன்
படித்த மாணவர்களை நான் போய் இழுத்து வந்த காட்சிகள் எனக்கு நினைவிருக்கிறது பள்ளிக்கூடத்திற்கு
வரவே மாட்டேன் என்று என் நண்பன் ரோட்டில் விழுந்து உருளுகின்ற காட்சியை இன்றும் என்னால்
நினைவுபடுத்தி சொல்லமுடியும். பின்பு என்னுடன் வந்த நான்கு ஐந்து பேர் ஆசிரியரினுடைய
பரிந்துரையின்படி அவரை கட்டித் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்தில் வந்து விடுவோம். மீண்டும்
நான்கு மணி மூன்றரை மணிக்கு அவர் காணாமல் போய்விடுவார். விசாரித்துப் பார்த்தோமென்றால்
அவர் பாதி பள்ளிக்கூடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு ஓடி விட்டார் என்ற
தகவல் வரும். இப்படி குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்கிற இடமாக பள்ளிக்கூடம் இருக்கும்
என்று சொன்னால் அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை புதிய ஒன்றாக பார்க்கவில்லையா? என்ற
கேள்வி எழுகிறது.
ஆக, பள்ளிக்கூடத்திற்குள்
செல்கிற ஒரு குழந்தையினுடைய மனநிலை, பள்ளிக்கூடத்திற்குள் செல்ல வேண்டும் என்று கருதுகிற
ஒரு குழந்தையினுடைய மனநிலை எவ்வாறு இருக்கிறது? என்பதற்கு நாம் நிறைய உரையாடலை செய்து
பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த சமூகம் குழந்தையை அதிசயத்தை கண்டு வியக்கிறவர்களாகவும்
ஆச்சரியத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவர்களாகவும் ஆன்மீக குருமார்கள் சொல்வது போல்
அடுத்த நிமிடத்தை எந்த யோசனையும் இல்லாமல் சந்திப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டே இருக்கிறார்கள்
என்பது போன்ற புகழுரைகள் குழந்தைகள் மீது சூட்டப்பட்டு கொண்டே இருக்கின்றன. இந்தப்
புகழுரைகளை நான் மறுக்கிறேன். குழந்தைகள் அப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று சொன்னால்
உங்கள் உறவினர்கள் வீட்டுக்குள் அறிமுகமே இல்லாத வேறு ஒரு சூழலுக்குள் நீங்கள் அவர்களை
விட்டு விடும் போது 15வது நிமிடம் 20வது நிமிடம் குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரத்தில்
அந்தக் குழந்தை அந்த வீட்டிற்கு, அந்த புதிய சூழலுக்கு தன்னை இணைத்துக் கொள்கிற சவுகரியத்தை
அனுபவமாக நாம் பார்த்திருக்க முடியும். இந்த சௌகரியங்கள் பள்ளிக்கூடங்களுக்குள் ஏன்
குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ALSO READ:HAPPY l PART - 2 l மகிழ்ச்சி பகுதி - 2
நாமெல்லாம்
பின்னால் இருக்கிறோம். நம் உறவினர்கள் வீடு என்றால் நாம் இருக்கத்தானே செய்வோம் என்றெல்லாம்
கூட நாம் இதை பேச முடியும். நான் பேசி பார்க்க முடியும். ஆனால் இவை அனைத்தும் போதுமான
காரணங்கள் இல்லை. ஒருவர் பின்னால் இருக்கிறார், அப்பாவோ, அம்மாவோ, உறவினரோ, நம் உடன்
இருக்கிற நண்பர்களோ, உடன் அமர்ந்திருக்கிறார்கள் என்ற காரணத்தினால் குழந்தைகள் ஆச்சரியத்துக்கு
தயாராவதில்லை. நமக்கு தெரிந்தவர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதால் குழந்தைகள்
நாற்காலியை கவிழ்த்துப் போட்டு ஏறி அமர்ந்து கொண்டு அதில் புதிய முயற்சிகளை செய்து
பார்ப்பதில்லை. குழந்தைகளினுடைய அகஉலகில் இப்படி ஒரு இயல்பு இருக்கிறது. இந்த இயல்பு
பள்ளிக்கூடத்திற்கு செல்லும்முன் குழந்தைகளிடம் ஏன் வெளிப்படவில்லை என்பது தான் இதனுடைய
சாராம்சமான கேள்வி. இந்தக் கேள்வியிலிருந்து நாம் குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடத்திற்கும்
கற்றல் முறைகளுக்கும் என்ன இருக்கிறது என்பதை பார்க்கத் துவங்கலாம். பள்ளிக்கூடங்கள்
நமக்கு சிறைச்சாலை போல் இருக்கின்றன என்று குழந்தைகள் கருதுகிறார்கள் என்று நாம் குழந்தைகள்
நலம் குறித்து பேசுகிறபோது பலர் கருத்து கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். சிறைச்சாலைகள்
என்பதும் பூந்தோட்டங்கள் என்பதும் பார்ப்பவர்களுடைய பார்வை.
குழந்தைகளினுடைய
அக உலகில் எல்லாமும் புதுமையானது. குழந்தைகளை காலையில் பள்ளிக்கூடத்திற்குள் நீங்கள்
அனுப்பிவிட்டு மாலை பள்ளி வாசலில் காத்திருக்கிற போது கண்ணீர் மல்க கட்டிப்பிடிக்கிற
நிறைய குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு என் மகன் அனுபவத்தில் அப்படி இருக்கிறது.
வேகமாக ஓடிவந்து ஒரு கையில் தண்ணீர் பாட்டிலையும் இன்னொரு கையில் இன்னொரு கையில் புத்தக
பையையும் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தவுடன் என் அருகில் வந்து இரண்டையும் எறிந்துவிட்டு
என்னை கழுத்தோடு கட்டிக்கொண்ட அனுபவம் என் குழந்தை எனக்கு கொடுத்திருக்கிறார். இத்தகைய
அழுத்தத்தை குழந்தைகள் வெடித்து என் மீது சாற்றுகிற அனுபவம் எனக்கு இருக்கிறது. காலை
ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணி, மூன்றரை மணி அளவில் உள்ளுக்குள் நடக்கிற பள்ளிக்கூடத்திற்குள்
நடக்கிற ஒன்றை குழந்தைகள் வேறொன்றாக பார்த்து வைத்து இருக்கிறதா? அல்லது அதில் பொருந்த
முடியாத தகுதியை குழந்தை இழந்து விட்டதா அல்லது பொருந்துவதற்கு தயங்குகிறதா? என்றெல்லாம்
பார்க்க வேண்டிய பெரிய தளம் இருக்கிறது.
ALSO READ:HAPPY PART - 3 l மகிழ்ச்சி பகுதி - 3 l
இந்த அடிப்படை
குழந்தை உளவியல் நாம் பேசப்பட வேண்டிய கல்வி உரையாடலாக நான் பார்க்கிறேன். கல்வி குறித்து
பேசுவதற்கு முன்பு குழந்தைகள் குறித்து பேச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. இந்த
குழந்தைகள் குறித்து பேச வேண்டிய கட்டாயத்திற்கான ஒரு கிரியா ஊக்கியாக, வினையூக்கியாக
ஜான் ஹோல்டினுடைய பதிவுகள் நமக்கு கிடைக்கிறது. ஜான்ஹோல்ட் தன் புத்தகம் முழுவதும்
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? என்பதை தலைப்பாக வைத்துக்கொண்டு வேறு வேறு தளங்களில்
பரிசோதனைகளை பதிவு செய்தாலும் கூட அந்த பரிசோதனைக்குள் அடிப்படையாக நான் பார்ப்பது
குழந்தைகளினுடைய மனநிலை எவ்வாறெல்லாம் பயனப்படுகிறது என்றுதான். ஏன் ஜான்ஹோல்ட் கல்வியோடு
குழந்தைகளை இணைந்து வைத்திருக்கிறார் என்ற கேள்வியும் எனக்கு இந்த புத்தகத்தை பார்க்கிறபோது எழுந்தது.
குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று அந்த புத்தகத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாம்.
ஏனென்றால் அப்படியான ஆய்வுகள் அந்த புத்தகத்திற்குள் இருக்கிறது. குழந்தைகள் எவ்வாறு
பார்க்கிறார்கள் என்று வைத்திருக்கலாம். அப்படியான உளவியல் பார்வை அந்த புத்தகத்திற்குள்
இருக்கிறது. குழந்தைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்று இருக்கலாம். அப்படியான பார்வை
அந்த புத்தகத்திற்குள் இருக்கிறது. குழந்தைகளை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்று புத்தகத்திற்கு
தலைப்பு வைத்திருக்கலாம். அப்படியான ஆய்வுகளும் அந்த புத்தகத்திற்குள் இருக்கிறது.
இவையெல்லாம் கடந்து குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்? என்று ஜான்ஹோல்ட் அந்த புத்தகத்திற்கு
தலைப்பு வைப்பதற்கு காரணம் என்னவென்று எனக்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது. மீண்டும்
மீண்டும் நான் அதை யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
கல்வியும்
குழந்தைகளையும் இணைத்துதான் பார்க்க வேண்டும் என்று சமூகம் பார்ப்பது போல இந்த தலைப்பை
தேர்வு செய்தாரா? அல்லது கல்விக்கும் குழந்தைகளுக்கும் சம்பந்தமில்லை என்பதை குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டும் என்னும் புது முயற்சிக்காக அந்தத் தலைப்பை தேர்வு செய்தாரா? என்றெல்லாம்
கூட அந்த தலைப்பு குறித்தே பேச வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் குழந்தைகள்
என்றவுடன் கல்வி. கல்வி என்றவுடன் அவர்களுடைய இலக்கு. இப்படியான சமூக பார்வையை நாம்
உடைப்பதற்கு மாற்றுவதற்கு அவசியம் இருக்கிறது என்ற முடிவும் விருப்பமும் இருந்தால்
மட்டும் தான் ஜான்ஹோல்டை நம்மால் படிக்க முடியும்.
தொடரும்...
x
No comments:
Post a Comment