சமூகமும் இலக்குகளும் அவசியமானவை என்று கருதுகிற
ஒருவரால் ஜான்ஹோல்டை உள்வாங்கிக் கொள்ள முடியாது என்பது என்னுடைய பணிவான பார்வை. ஜான்ஹோல்டை
படிப்பதற்கு நமக்கு ஒரு நிதானம் தேவை படுகிறது. சமூகத்தைப் பற்றிய, சமூகம் செயல்படுகிற
செயல்பாடு பற்றிய, சமூகம் வெளிப்படுத்துகிற வெளிப்பாடுகள் பற்றிய, போதுமான நிதானம்
இருந்தால் மட்டும்தான் ஜான்ஹோல்ட் போன்ற ஒரு ஆளுமையின் கருத்துக்களை நேர்மையாக நமக்குள்
பொருத்திப் பார்த்து, செய்து பார்த்துக்கொள்கிற வாய்ப்பும் தகுதியும் நமக்கு இருப்பதாக
நான் பார்க்கிறேன். கல்வி, குழந்தை “போனபோது படுச்சுக்கலாம்” என்று கருதுகிற ஒரு சாமானிய
அல்லது இலகுவான மனநிலையை பொறுப்பற்ற மனநிலையாக நான் பார்க்கிறேன். இந்த பொறுப்பற்ற
மனநிலையிலிருந்து கல்வியை புரிந்துகொள்ளவோ, ஜான்ஹோல்டை புரிந்துகொள்ளவோ ஒருபோதும் முடியாது
என்று எனக்கு தோன்றுகிறது.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN? PART -7 // ஜான்ஹோல்ட் - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
அந்த வகையில் இந்தப் புத்தகத்திற்குள் ஜான்ஹோல்ட் குழந்தைகளையும் கல்வியையும் ஏன் இணைக்கிறார் என்பதற்கான செய்தியையும் இந்த உரையாடலுக்குள் நாம் தொடர்ந்து பேசிப் பார்க்கலாம் என்று நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன். இந்தக் குழந்தைகள் பற்றிய புத்தகத்தை, கல்வி குறித்த ஒரு இடதுசாரி அமைப்புகள், மாற்றுக் கல்வி குறித்த விருப்பமுள்ள நண்பர்கள் வெளியில் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு கல்வி குறித்தான அக்கறையும் இந்த சமூகம் குறித்தான மாற்று பார்வையும் இருக்கிறது என்பது என்னுடைய பார்வை. யார் இந்த புத்தகத்தை இந்த சமூகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்ற தளத்திலிருந்து பார்க்கிறபோது நம்பிக்கைக்குரிய இந்த சமூக மாற்றை விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை சமூகத்திற்கு தமிழில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களுடைய தரமும் இவர்கள் பணியாற்றுகிற தளமும் நம்பிக்கைக்குரியதாக அல்லது மாற்றத்தை விரும்புகிற ஒரு தளமாக இருப்பதால் இந்த புத்தகம் நம்பிக்கைக்குரிய புத்தகமாகவும் பார்க்க முடிகிறது.
இந்த அடிப்படையில்
அவர்கள், அவர்களது வெளியீட்டாளர்கள், வெளியீட்டாளர்களினுடைய நோக்கத்திலிருந்து, அவர்களுடைய
பார்வையிலிருந்து இந்த புத்தகத்தை பார்க்கிறார்களா அல்லது ஜான்ஹோல்ட் அவர்களுக்காக
இந்த புத்தகத்தை வடிவமைத்திருக்கிறாரா? ஜான்ஹோல்டினுடைய நோக்கமும் மாற்று சமூகத்தை
விரும்புகிற ஒரு களப் பணியாளரினுடைய நோக்கமும் இசைந்து இருக்கிறதா? என்று பார்க்கிறபோது
அப்படியான ஒற்றுமைகளும் குறைவாகவே இந்த புத்தகத்திற்குள் இருக்கிறது. ஆனாலும் அவர்களை
வெல்லக்கூடிய லாபகரமான சொல்லடையும் ஆய்வுக் குறிப்புகளையும் ஜான் ஹோல்ட் பதிவு செய்து
வைத்திருப்பதால் எல்லா மாற்று ஆய்வாளர்களையும் களப் பணியாளர்களையும் வெற்றிக்கொள்கிற
சாதுரியம் ஜான் ஹோல்டிற்குள் ஒளிந்திருப்பதை நான் ரசனையோடு பார்க்கிறேன். இப்படி ஒரு
விரிவான தளத்தில் ஜான்ஹோல்டினுடைய கல்வி முறை குறித்து இந்தப் புத்தகம் நிறைய சுமந்து
வருகிறது. ஜான் ஹோல்டினுடைய குழந்தை நலம் குறித்து இந்த புத்தகம் நிறைய சுமந்து வருகிறது.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN? PART -6
நாம் துவங்க
வேண்டிய புள்ளி ஜான்ஹோல்ட் கல்வி பற்றி பேசினாலும் சரி, ஜான்ஹோல்ட் குழந்தைகள் பற்றி
பேசினாலும் சரி இந்த இரண்டிற்கும் இடையே பிரதானமாக இருப்பது குழந்தையினுடைய வளர்ச்சி.
குழந்தையினுடைய அகப்பார்வை. குழந்தை தன்னளவில் எவ்வாறு இவ்வுலகத்தில் தன்னை வியாபித்துக்
கொள்கிறது? தன்னை விரிவடையச் செய்கிறது; அதற்கு இந்த உலகம் என்ன வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது?
இந்த உலகம் அப்படி ஒரு வாய்ப்பை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறதா? ஒருவேளை தயாராக இல்லாத
சூழ்நிலையில் அந்த குழந்தை எத்தகைய சிக்கலை எதிர்கொள்கிறது? என்றெல்லாம் கூட இந்த புத்தகத்தின்
வழியாக நாம் பேசி பார்க்க முடியும். இந்த வகையில் முதன்மையாக இந்த புத்தகம் ஒரு சிறந்த
முன்னுரையோடு துவங்குகிறது. இந்த குழந்தையினுடைய கல்வி குறித்து தொடாமல், குழந்தையினுடைய
வெற்றி, தோல்விகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறன? என்று இந்தப் புத்தகத்தின் முன்னுரையின்
முட்பகுதியில் ஜான் ஹோல்ட் உரையாடலைத் தொடங்குகிறார். அதில் மிகக் குறிப்பாக ஒரு செய்தியைப்
பார்க்கிறார்.
குழந்தைகள்
எப்போதெல்லாம் நிர்பந்திக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் வெற்றி அடைவதற்கு
சங்கடத்திற்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளால் நினைவாக இருக்க முடியவில்லை; குழந்தைகளால்
இசைவாக இருக்க முடியவில்லை; குழந்தைகளால் நிதானமாக இருக்க முடியவில்லை; அதற்கு காரணம்
நிர்பந்தங்கள். பள்ளிக்கூடங்கள் நிர்பந்தங்களை முன்வைக்கின்றன என்று தனது முன்னுரையில்
நிர்பந்தங்கள் குறித்து ஒரு முக்கியமான குறிப்பை தொட்டு துவங்குகிறார் ஜான்ஹோல்ட். நிர்பந்தங்கள்
நம்மை என்ன செய்கிறது என்று நிர்பந்தம் குறித்து நமக்கு ஒரு பார்வை தேவைப்படுகிறது.
எப்போதும் நிர்பந்தமாக இருந்தால் பரவாயில்லை என்று நினைத்துக் கொள்கிற சமூக கட்டமைப்பும்
இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாத இடத்தில் நாம் எப்படி வாழ்வது? என்ற பயம் கூட சமூகத்தில்
சிலருக்கு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். யாராவது ஒருவர் நம்மை கட்டுப்படுத்தினால்தான்
நமக்கு சரியா இருக்கும் என்று உரையாடல் வழியாக அவர்கள் வெளிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
ALSO READ:JOHN HOLT - HOW CHILDREN LEARN? PART -5
இந்த வெளிப்பாடு ஒரு வயதுக்குப் பிறகு ஒரு வயது நிறைந்த பிறகு ஒரு நாற்பது வயதில், இருபத்தைந்து வயதில் தொடங்கி முப்பத்தி ஐந்து வயது நாற்பது வயதுகளில் இந்த சமூகத்தை பார்க்கிறபோது சமூகம் ஒரு பெரும் முரட்டுத்தனமான அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பிற்குள் நாம் உயிர் வாழ்வதே சிக்கலாகப்போகிறது என்கிற மன பதட்டத்தில் யாராவது ஒருவர் நமக்கு துணையாக வழிகாட்டுதல் செய்தால் நம்மை தொடர்ந்து நேர்படுத்தினால் நாம் விலகிப் போகிற போது அழுத்தமாக கண்டித்தால் நமக்கு இந்த சமூகத்தில் இன்னும் சௌகரியமாக வாழ முடியும் என்ற மனோபாவம் சமூகத்தில் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. இது ஒரு 35 வயது நபருக்கு 40 வயது நபருக்கு தோன்றினால் அது வரவேற்புக்குரியதாகக் கூட சமூகம் நினைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த கண்டிப்பு, இந்த நிர்ப்பந்தம் வழக்கமாய் இருக்கிற ஒருவருக்கு ஒரு விளைவை தருகிறது அல்லது தருவதில்லை, அது உரையாடல் அல்ல. உரையாட வேண்டிய வேறு தளம் அது. ஆனால் இந்த கண்டிப்பும் அழுத்தமும் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிற போது அந்த குழந்தை என்னவெல்லாம் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று நாம் பார்க்க வேண்டும் என்று ஜான்ஹோல்ட் தன் புத்தகத்தை துவங்குகிறார். கல்வி குறித்து, குழந்தைகள் குறித்து, நாம் பேசுகிற போது குழந்தைகள் நிர்ப்பந்தத்தில் இருந்து இந்த சமூகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்? முழுமையான பார்வையை, முழுமையாக பார்க்கும் திறனை நிர்பந்தத்தின் வழியாக, அழுத்தத்தின் வழியாக இந்த குழந்தைகள் எவ்வாறு இழக்கிறார்கள் என்ற கவலையோடு இந்த முன்னுரையில் நம் குழந்தைகள் பற்றி உரையாடி பார்க்க வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்.
No comments:
Post a Comment