கற்றல் நலம்
கற்றல் நலம் குறித்து நாம் பேச வேண்டிய பகுதிகள் மெல்லிய உரையாடலாகவும் கூர்மையான விவாதமாகவும் பயணிக்க வேண்டிய பகுதிகள் நிறையவே இருக்கின்றன.
அடிப்படையில் கற்றல் நலம் என்பது கல்வி கற்றல் என்பதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய சூழலில் என் கண்முன் இருக்கிற கற்றல் என்கிற சொல்லுக்குப் பின்னால் கல்விக்கூடம், குழந்தைகள், அவர்களின் வளர்ச்சிசார் அறிவு, ஒரு குழந்தை சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்கிற முனைப்பு உள்ளிட்ட குழந்தைக்கும் அவர்தம் வாழ்வியலுக்குமான தொடர்பிலேயே கற்றல் என்பது உரையாடப்படுகிறது. வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
கற்றல் என்ற சொல்லுக்கு கற்றுக் கொள்ளுதல் என்று நேரடியாக நம்மால் பொருள் கொள்ள முடியும். என்றாலும்கூட கற்றுக்கொள்ளுதலை இந்த சமூகம் குழந்தைகள் மீது மட்டும் வைத்திருக்கிற, குழந்தைகளுக்காக மட்டும் வைத்திருக்கிற ஆலோசனை வடிவமாக, செயல்பாட்டு வடிவமாக பார்த்துக் கொண்டிருப்பதால் கற்றல் என்பதை குழந்தை, குழந்தையினுடைய வளர்ச்சி என்கிற தளத்தோடு சுருக்கிக் கொள்வது சரியானது இல்லை என்கிற காரணத்தாலும் கற்றலை சமூக எல்லா தனிமனிதனுக்குமான வரையறையாக பார்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த உரையாடலை நாம் செய்கிறோம்.
கற்றல் என்பது நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு அரங்கத்தில் வைத்து நிகழ்த்தப்படுகிற செயல்பாடு அல்ல.
குழந்தைகளுக்கு கல்லூரிகளில், கல்விச் சாலைகளில், பல்கலைக்கழகங்களில் வழிகாட்டப்படுகிற வழிகாட்டும் முறைமை மட்டுமல்ல. கற்றலை நாம் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
குழந்தைகள் நலம் என்று பேசுகிறபோது, குழந்தைகள் நலத்திற்குள் குழந்தைகளின் உடல் மற்றும் உயிரியல் வளர்ச்சி குறித்தான நலம் என்கிற தளத்தில் உரையாட முடியும். வயது வந்தோருக்கான நலம் என்று வயது வந்தோருக்கான உயிரியல் மற்றும் உளவியல் வளர்ச்சி குறித்து நாம் உரையாட முடியும். இவ்வாறே முதியோர் நலம் என்று ஒன்றை சீர்தூக்கிப் பார்க்கிற போதும் கூட அவர்களின் உடலியல், உளவியல், சமூகவியல் காரணங்களை உள்ளடக்கிய பகுதிகளை நாம் உரையாடலுக்கு எடுத்துக்கொண்டு புரிந்து கொள்வதற்கு பேசி பார்க்க முடியும்.
எத்தகைய நலம் என்றாலும் எந்த வயதிற்கு உரிய நபருக்கு நலம் பற்றிய புரிதலை நாம் தேடினாலும் அவற்றிற்குள் நலம் குறித்து நாம் பேசுகிறபோதே கற்றல் சார்ந்த ஒரு விளைவு உப விளைவாக நிகழத்தான்
செய்கிறது.
ஒரு
மனிதனின் உளவியல் நலம் குறித்து பேசுகிற போது ஒரு மனிதன் தன் உளவியல் நலத்தை புரிந்துகொள்வதற்கு அறிந்துகொள்வதற்கு தன்னை நலமாக்கிக் கொள்வதற்கு முயற்சிக்கிறபோது அந்த முயற்சியின் விளைவாக அந்த முயற்சியின் வழியாக அவர் காண்கிற ஒரு அறியாமை கொண்ட பகுதியை அறிந்து கொள்வதன் வழியாக அவர் தனக்குள் இருக்கிற ஒன்றை, பலமற்ற ஒன்றை பலம் செய்ய வேண்டும் என்கிற முயற்சியோடும் பலம் செய்வதற்கான செயல்பாடோடும் இணங்குவது நடக்கும். இது எல்லா வயது உரியோருக்கும் எல்லா
சிக்கல் மீதும்
நடத்தப்படுகிற உரையாடல்களுக்குள்ளும் இது நடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு தனிமனிதர் அவரது வாழ்வியல் சமூகவியல் உறவாடலில் தமக்கு உள்ளும் வெளியுமாக அவர் நடத்துகிற உரையாடலில் அவர் ஒன்றைப் பற்றி, ஒன்றை விடுத்து பேசுகிறபோது தன்னை அறிந்து கொள்கிறார். அந்த அறிதலின் வழியாக தான் பற்றிக் கொள்வதற்கும் பற்றாமல் விடுவதற்கும் செய்கிற செயல்களின் வழியாக தான் மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் இருப்பதை, இருப்பதற்கான வழியை அவர் கண்டு கொள்ள முடியும்.
ஒரு தனி மனிதன் தான் எங்கெல்லாம் பொருந்திப் போகிறோம்? எங்கெல்லாம் பிணக்கு கொள்கிறோம்? என்பதைப் பார்த்து, உணர்ந்து பொருந்திப்போகும் செயல்முறையை அவரது மகிழ்ச்சியின் பொருட்டு நீட்டித்துக் கொள்வதற்கும் பிணக்கு ஏற்படும் செயல்முறையை அவரது மகிழ்ச்சியின் பொருட்டு குறைத்துக் கொள்வதற்கும் அவர் செய்கிற அவர் அறியாமலோ அறிந்தோ செய்கிற ஒரு உள மாற்றத்திற்கு பெயர் கற்றல்.
உடல் நலம் குறித்து நாம் பேசுகிறபோது ஒரு மனிதன் உளம் அல்லது உடல் நலம் குறித்து ஒன்றை அணுகுகிறபோது இந்த கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை அவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிடிலும் உணர்ந்து கொண்டாலும் உணர்ந்து கொள்ளாவிடிலும் அவர் கற்றுக்கொண்டே இருக்கிறார் என்கிற மெய்யான செயல்பாடு மறுக்க முடியாதது.
---தொடர்ந்து பேசுவோம்---
ALSO READ : CHILD HEALTH PART - 15 குழந்தை நலம்
ALSO READ : நரிகள் வடைசாப்பிடுவதில்லை
ALSO READ : திருக்குறள் - வாழ்வியலுக்கான உரையாடல்
No comments:
Post a Comment